பனாமா நகரம்

பனாமா நகரம் (Panama City, எசுப்பானியம்: ciudad de Panamá) பனாமா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[2][3] இதன் மக்கள்தொகை 880,691 ஆகும்; பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,440,381.[4] பனாமா கால்வாயின் அமைதிப் பெருங்கடலோரத்தில் பனாமா மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அரசியல், நிர்வாக மையமாக விளங்கும் இந்த நகரம் பன்னாட்டு வங்கி மற்றும் வணிகத்திற்கும் மையமாக விளங்குகின்றது. [5] உலக நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நகரம் இவ்வாறான மூன்று மத்திய அமெரிக்க நகரங்களில் ஒன்றாகும்.[6]

பனாமா
நகரம்
Nuestra Señora de la Asunción de Panamá
பனாமா உருவாக்கத்தின் நம் திருவாட்டி
வலமிருந்து இடம், மேலிருந்து: பனாமா கால்வாய், வான்வரை, அமெரிக்காக்களின் பாலம், தி போவெடாசு, காசுக்கோ வீகோ (பழைய பேட்டை), பனாமாவின் பெருநகர பெருங்கோவில்.
வலமிருந்து இடம், மேலிருந்து: பனாமா கால்வாய், வான்வரை, அமெரிக்காக்களின் பாலம், தி போவெடாசு, காசுக்கோ வீகோ (பழைய பேட்டை), பனாமாவின் பெருநகர பெருங்கோவில்.
பனாமா-இன் கொடி
கொடி
பனாமா-இன் சின்னம்
சின்னம்
மாவட்டம்பனாமா மாவட்டம்
நிறுவப்பட்டதுஆகத்து 15, 1519
தோற்றுவித்தவர்பெத்ரோ அரியாசு டெ அவிலா
அரசு
 • அரசுத் தலைவர்யுவான் கார்லோசு வரேலா
 • நகரத் தந்தைஒசே இசபெல் பிளான்டன் பிகுரோவா
பரப்பளவு
 • நகரம்275 km2 (106 sq mi)
 • Metro2,560.8 km2 (988.7 sq mi)
ஏற்றம்2 m (7 ft)
மக்கள்தொகை (2013)
 • நகரம்880,691
 • அடர்த்தி5,750/km2 (7,656/sq mi)
 • பெருநகர்1,501,381
தொலைபேசி குறியீடு(+507) 2
மமேசு (2007)0.780 – high[1]
இணையதளம்www.visitpanama.com
பனாமா நகரத்தின் காட்சி - விண்வெளி வீரர் எடுத்தது.

பனாமா நகரத்தின் சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $15,300 ஆகும்.[7] அதியுயர் கட்டிடங்கள் மிகுந்த பனாமா நகரைச் சுற்றிலும் வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவிலேயே மிகவும் போக்குவரத்து மிக்க பனாமாவின் டோக்குமென் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து உலகின் பல முதன்மை இடங்களுக்கும் நாள்தோறும் வானூர்தி சேவைகள் இயக்கப்படுகின்றன. பிரேசிலின் குரிடிபேயுடன் பனாமா நகரமும் 2003ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பண்பாட்டுத் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பன்னாட்டு வாழ்க்கை இதழின் ஆய்வுப்படி பணி ஓய்விற்குப் பிறகு வாழ்வதற்கான இடங்களில் உலகின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக பனாமா நகரம் விளங்குகின்றது.

பனாமா நகரம் ஆகத்து 15, 1519இல் எசுப்பானிய தேடலாய்வாளர் பெத்ரோ அரியசு தெ அவிலாவால் நிறுவப்பட்டது. இங்கிருந்துதான் பெருவின் இன்கா பேரரசை தேடும் பயணங்கள் துவங்கின. அமெரிக்க கண்டங்களின் வரலாற்றின் பல வணிகத்தடங்களுக்கு நிறுத்தல் இடமாகவும் இருந்துள்ளது. இதன் மூலமாகவே தங்கமும் வெள்ளியும் எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியானது.

சனவரி 28, 1671 அன்று என்றி மோர்கன் என்பவரால் பனாமா நகரம் தீயிடப்பட்டு அழிந்தது. இரண்டாண்டுகள் கழித்து சனவரி 21, 1673இல் முதல் குடியிருப்பிலிருந்து 8 km (5 மைல்கள்) தொலைவிலிருந்து மூவலந்தீவில் மீளமைக்கப்பட்டது. முன்பு தீயிடப்பட்டு அழிப்பட்ட நகரத்தின் இடுபாடுகள் இன்னமும் உள்ளன; இவை பனாமா வீகோ எனப்படுகின்றன; சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக உள்ளது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பனாமா_நகரம்&oldid=3575533" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை