பனிக்காலப் போர்

பனிக்காலப் போர் (Winter War) என்பது சோவியத் ஒன்றியத்துக்கும், பின்லாந்துக்கும் இடையே நடைபெற்ற போரை குறிக்கும். இப்போர் நடந்த போது, வெப்பநிலை சராசரியாக −43 °செ (−45 °ப) அளவு இருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய மூன்று மாத காலத்தில், 1939 நவம்பர் 30 அன்று சோவியத்து ஒன்றியம், பின்லாந்து மீது ஆக்கிரமிப்பு செய்ததால், இப்போர் தொடங்கிற்று. மூன்றரை மாதங்கள் கழித்து 1940 மார்ச்சு 13 அன்று மாசுக்கோ அமைதி உடன்பாடு ஏற்பட்டதனால், இப்போர் முடிவுக்கு வந்தது. உலக நாடுகள் சங்கம் இப்போர் முறையற்றது எனக் கருதியதால், சோவியத் ஒன்றியத்தை சங்கத்திலிருந்து விலக்கியது.

பனிக்கால போர்
இரண்டாம் உலகப்போரின் பகுதி
பின்லாந்து வீரர்கள், சோவியத்து வீரரின், பிணத்தை பிடித்திக்கின்றனர் (1940).
பின்லாந்து வீரர்கள், சோவியத்து வீரரின், பிணத்தைப் பிடித்திக்கின்றனர் (1940)
நாள்30 நவம்பர் 1939 – 13 மார்ச்சு 1940
(3 மாதம்-கள், 1 வாரம் and 6 நாள்-கள்)
இடம்கீழை பின்லாந்து
மாசுக்கோ அமைதி உடன்பாடு
நிலப்பகுதி
மாற்றங்கள்
பின்லாந்து வளைகுடாத் தீவுகளை விட்டுக்கொடுத்தல், இலகோடா கேரலியா, கேரலியன் திமசு, சால்லா, ஐமாச்சி மூவலந்தீவு, கன்கோ நகரத்தை, சோவியத்து ஒன்றியத்துக்குக் குத்தகைக்கு விடுதல்
பிரிவினர்
 பின்லாந்து
  • வெளிநாட்டு தன்னார்வலர்கள்
 சோவியத் ஒன்றியம்
பலம்
300,000–340,000 படை வீரர்கள்[F 1]
32 பீரங்கி வண்டிகள் [F 2]
114 வானூர்திகள்[F 3]
425,000–760,000 படை வீரர்கள்[F 4]
2,514–6,541 பீரங்கி வண்டிகள்[F 5]
3,880 வானூர்திகள்[10]
இழப்புகள்
25,904 காணாமல் போனவர்கள் அல்லது இறந்தவர்கள் [11]
43,557 காயம்பட்டவர்கள்[12]
800–1,100 பிடிபட்ட வீர்ர்கள் [13]
20–30 பீரங்கி வண்டிகள்
62 வானூர்திகள்[14]

70,000 மொத்த இழப்புகள்
126,875–167,976 காணாமல் போனவர்கள் அல்லது இறந்தவர்கள்[15][16][17]
188,671–207,538 காயம்பட்டவர்கள்[15][16]
5,572 பிடிபட்ட வீர்ர்கள் [18]
1,200–3,543 பீரங்கி வண்டிகள்[19][20][21]
261–515 வானூர்திகள் [21][22]

321,000–381,000 மொத்த இழப்புகள்

சில பின்லாந்து பகுதிகளை சோவியத் ஒன்றியம் பெற்ற பிறகு சில சலுகைகளைகளுடன் பின்லாந்து குறிப்பிடத்தகுந்த எல்லைப்புற பகுதிகளை கேட்டது அந்த நிலத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் கொடுக்கப்படும் நிலத்தை ஒதுக்கப்படும் என்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லைப்புற நிலத்தை கேட்டது. குறிப்பாக பின்லாந்து எல்லையிலிருந்து 32 கிமீ தொலைவிலுள்ள சென் பீட்டர்சுபெர்க் பாதுகாப்புக்காக கேட்டது. நிலத்தை தர பின்லாந்து மறுத்த காரணத்தால் சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது படையெடுத்தது. பின்லாந்து முழுவதையும் சோவியத் ஒன்றியம் தன் ஆளுகைக்கு கீழ் கொணடுவர திட்டமிட்டிருந்தது சில ஆதாரங்கள் மூலம் தெரியவந்த்து. பின்லாந்தை முழுவதும் வெற்றிகொண்ட பின் தன் கைப்பாவை அரசை அங்கு நிறுவ திட்டமிட்ருந்தது மோலோடோவ்- ரிப்பன்டிராப் உடன்பாடு சாட்சியாகும். மற்ற சில ஆதாரங்கள் சோவியத் ஒன்றியம் பின்லாந்து முழுவதையும் கைப்பற்ற நினைக்கவில்லை என்கின்றன.

சோவியத்தின் தாக்குதலை பின்லாந்து இரண்டு மாத காலத்துக்கு முறியடித்தது, பின்பு சோவியத் படை போர் உத்தியை மாற்றி தாக்குதலை தொடர்ந்தார்கள் புதிய உத்தியால் பின்லாந்து தற்காப்பை முறியடித்தார்கள். 1940 மார்ச்சில் படை நடவடிக்கை மாசுக்கோ அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. பின்லாந்து 11% நிலங்களை விட்டுக்கொடுக்க இசைவு தெரிவித்தது. இப்பகுதியில் பின்லாந்தின் 30% பொருளாதாரம் இருந்தது. சோவியத்தின் இழப்புகள் அதிகமாக இருந்தன மேலும் அந்நாட்டின் மதிப்பு உலக நாடுகளிடம் சரிந்தது. போருக்கு முன் கோரிய நிலத்தை விட அதிகமாக பெற்றது. சோவியத் வட பின்லாந்திலுள்ள ஐரோப்பாவின் பெரிய நன்னீர் ஏரியான லடோகா ஏரியை பெற்றது. பின்லாந்து தன் இறையாண்மையை தக்கவைத்து கொண்டதுடன் உலக நாடுகள் மத்தியில் மதிப்பை பெற்றது.

சோவியத் படைகளின் மோசமான நடவடிக்கையால் அடால்ப் இட்லர் சோவியத்தை தாக்கி வெற்றி பெறலாம் என எண்ணி சோவியத் படைகள் வலுவற்றவை என்ற மேலைநாடுகளின் கருத்தை உறுதி செய்தார். 15 மாதங்கள் அமைதிக்கு பின் சூன் 1941 பின்லாந்து நாசி செர்மனி [[பார்போசா நடவடிக்கை]]யை சோவியத்துக்கு எதிராக தொடங்கியது பின்லாந்து அதனுடன் சேர்ந்து சோவியத் மீது தாக்குதலை தொடுத்தது இது பனிப்போரின் தொடர்ச்சியான போர் என அழைக்கப்பட்டது..

பின்னணி

சோவியத் ஒன்றியம் - பின்லாந்தின் உறவும் அரசியலும்

1939 நவம்பரில் முதல் உலகப்போரில் வட ஐரோப்ப நாடுகள் நிலை
   நடுநிலை நாடுகள்
   செருமனி இணைத்துக் கொண்ட நாடுகள்
  சோவியத் இணைத்துக் கொண்ட நாடுகள்
  சோவியத் படைத்தளத்தை கொண்ட நடுநிலை நாடுகள்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பின்லாந்து சுவீடன் அரசாட்சியின் கிழக்கு பகுதியாக இருந்தது. தன் அரச தலைநகர் சென் பீட்டர்சுபெர்க் ஐ சுவீடனின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற 1809இல் உருசிய பேரரசு பின்லாந்தை கைப்பற்றி அதை தன்னாட்சியுள்ள அரசாக இடைப்படு நாடாக மாற்றியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் முடிவு வரை பின்லாந்து உருசி பேரரசில் அதிக தன்னாட்சியுள்ள பகுதியாக இருந்தது. உருசியப் பேரரசு பேரரசை மேலும் வலுவாக்க பின்லாந்தை தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தவுடன் பின்லாந்தின் தன்னாட்சி முடிவு பெற்றது. பின்லாந்தை பேரரசுடன் இணைக்க எடுத்த முடிவு சில எதிர்ப்புகளால் கைவிடப்பட்டாலும் இது உருசிய பின்லாந்தியர்கள் உறவை கடுமையாக பாதித்ததுடன் பின்லாந்து தன்னாட்சி இயக்கங்கள் பெரும் ஆதரவை பெற காரணமாகவும் இருத்தது.[23]

1914ஆம் ஆண்டு ஏற்பட்ட முதலாம் உலகப் போர் காரணமாகவும் 1917இல் ஏற்பட்ட உருசிய புரட்சி காரணமாகவும் 1917-20 ஆண்டுகளில் நடந்த உருசிய உள்நாட்டு போரின் காரணமாகவும் உருசியப் பேரரசு உருக்குலைந்தது. இது பின்லாந்துக்கு வாய்ப்பை ஏற்படுத்தியது, 1917 டிசம்பர் 6இல் பின்லாந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது. புரட்சியாளர்களால் புதிதாக அமைந்த அரசு நிலையற்தாக இருந்ததுடன் உள்நாட்டு போரும் நவம்பர் 17இல் தொடங்கியது. புரட்சியாளர்கள் உருசிய பேரரசின் ஓரத்திலிருந்த பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியாது என தீர்மானித்ததால் புதிய உருசிய அரசு புதிதாக அமைந்த பின்லாந்து அரசை அது அமைந்த மூன்று வாரம் கழித்து ஏற்றுக்கொண்டது. [23] பின்லாந்து உள் நாட்டு போர் முடிவடைந்த 4 மாதம் கழித்து மே 1918ஆம் ஆண்டு பின்லாந்து இறையாண்மை உள்ள அரசு என்ற தகுதியை பெற்றது.

பின்லாந்து முதலாம் உலகப்போரின் முடிவில் பாரிசு அமைதி கூட்டத்தால் உருவான நாடுகளின் சங்கத்தில் 1920ஆம் ஆண்டு சேர்ந்து பாதுகாப்புக்கான உறுதியை கோரியது. ஆனால் பின்லாந்த்து சங்கத்தில் இணைந்ததிற்கு எசுக்காண்டினாவியா நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே நோக்கமாகும். பின்லாந்திய சுவீடிய இராணுவங்கள் பெரிய அளவிலான ஒத்துழைப்பில் ஈடுபட்டன ஆனால் இராணுவ பயிற்சியில் ஈடுபடாமல் ஓலந்து தீவுகள் பாதுகாப்பு திட்டம் பற்றியும் தகவல் பரிமாற்றத்திலும் ஒத்துழைத்தன. இராணுவ ஒத்துழைப்பு இருந்தாலும் பின்லாந்தின் வெளியுறவு கொள்கையை பற்றி கவனமாக எதுவும் கூறாமல் சுவீடன் தவிர்த்தது. பின்லாந்து கள்ளத்தனமான முறையில் எசுடோனியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டது.

1930இல் ஏற்பட்ட பின்லாந்து உள் நாட்டு போரின் காரணமாக பின்லாந்திய அரசு நிலையற்ற தன்மையுடன் இருந்தது. 1931இல் பின்லாந்து பொதுவுடமை கட்சி தடைசெய்யப்பட்டது. தேசியவாத லப்புவா இயக்கம் 1932இல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி செய்த பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக போராடியது. லப்புவா இயக்கத்தின் தொடர்ச்சியாக பின்வந்த நாட்டுபற்றாளர் மக்கள் இயக்கம் தேசிய அரசியலில் பின்லாந்தின் 200 நாடாளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளியே வென்று சிறிய பங்கே வகிக்க முடிந்தது. 1930 களின் பிற்பகுதியில் பின்லாந்திய பொருளாதாரம் ஏற்றுமதி பொருளாதாரமாக வளர்ச்சியடைந்ததுடன் நாட்டின் தீவிர அரசியல் இயக்கங்கள் மறைந்தன.

1918இல் நடந்த பின்லாந்து உள் நாட்டு போரில் சோவியத்தின் தலையீடு காரணமாக எந்த அமைதி உடன்பாடும் ஏற்படவில்லை. 1918, 1919 ஆகிய இரு ஆண்டுகளில் பின்லாந்து சோவியத்தின் எல்லைப்புறமான கரலியன் பகுதியை கைப்பற்றி அனைத்து பின்லாந்திய மொழி மக்களும் உள்ளடங்கிய பெரும் பின்லாந்து நாட்டை உருவாக்கும் நோக்கத்தோடு எடுத்த வியன்னா படையெடுப்பும் அனுசு படையெடுப்பும் தோல்வியில் முடிவடைந்தது. 1920இல் சோவியத்தில் இருந்த பின்லாந்து பொதுவுடைமை கட்சியினர் வெள்ளை பாதுகாவல் கட்சியின் படைத் தலைவர் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டனர். 14 அக்டோபர் 1920இல் பின்லாந்துக்கும் சோவியத்துக்கும் டார்டு உடன்படிக்கை கையெழுத்தானது. இதன் படி புது பின்லாந்து நாட்டுக்கும் சோவியத்துக்குமான எல்லையானது தன்னாட்சி பின்லாந்துக்கும் உருசிய பேரரசுக்கும் இருந்தது தான் என உறுதிபடுத்தப்பட்டது. மேலும் பெட்சுமோ பகுதியும் பனியற்ற அதன் ஆர்க்டிக் பெருங்கடல் துறைமுகமும் கிடைத்தது. உடன்படிக்கை ஏற்பட்ட போதும் இரு நாடுகளுக்குமான உறவில் முறுக்கல் நிலை தொடர்ந்தது. பில்லாந்து அரசு1921இல் உருசிய பகுதியான கீழை கரலியனில் ஏற்பட்ட புரட்சிக்கு உதவும் நோக்கத்தில் வந்த தன்னார்வலர்களை தன் பகுதியில் இருந்து உருசிய பகுதிக்கு வர அனுமதித்தது. சோவியத்தில் இருந்த பின்லாந்திய பொதுவுடைமைவாதிகள் 1922இல் பின்லாந்து மீது எல்லை தாண்டி தாக்குதல் மேற்கொண்டனர், அது பன்றி கறி கலகம் எனப்பட்டது. 1932இல் இரு நாடுகளும் வலுச்சண்டைக்கு போவதில்லை என உடன்பாடு கண்டனர். வெளிநாட்டு வணிகம் பின்லாந்தில் பெரும் வளர்ச்சி கண்டாலும் சோவியத் உடனான அதன் வணிகம் ஒரு விழுக்காட்டும் குறைவேயாகும். 1934இல் சோவியத்த நாடுகளின் சங்கத்தில் இணைந்தது.

சோவியத் பின்லாந்திய புரட்சியை தடுக்க தவறி யது யோசப் இசுடாலினுக்கு மனவருத்தத்தை கொடுத்தது. அவர் கரலியாவில் ஏற்பட்ட பின்லாந்துக்கு ஆதரவான இயக்கம் லெனின் கிரேடாக இருந்த செயிண்ட் பீட்டர்சுபேர்க்குக்கு நேரடி ஆபத்து என எண்ணினார். கரலியாவும் பின்லாந்தின் பாதுகாப்பு அரணும் சோவியத் மீது படையெடுக்கவும் அல்லது கடற்படை கப்பல்கள் இயக்கத்துக்கு தடையாக இருக்குமென எண்ணினார். யோசப் இசுடாலின் ஆட்சியில் பின்லாந்து தலைமை தீய பிற்போக்கான பாசிச குழு என பரப்புரை செய்யப்பட்டது. 1938இல் இசுடாலின் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதும் பின்லாந்துடனான சோவியத்தின் வெளியுறவு கொள்கை மாற்றமடைந்தது. அது இரு பத்தாண்டுகளுக்கு முன் அக்டோபர் புரட்சியின் போதும் உருசிய உள்நாட்டு போரின் போதும் இழந்த சார் கால உருசியாவின் நிலங்களை மீட்க எண்ணியது. உருசிய தலைமை பழைய உருசிய பேரரில் எல்லையோரங்களின் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவும் புதிய உலக சக்தியாக உருவாக வரும் நாசி செருமனிக்கு எதிராக அதே போன்ற பாதுகாப்பை செயிண்ட் பீட்டர்சுபேர்க்குக்கு வழங்க எண்ணி அது பின்லாந்து எல்லையில் இருந்து 32 கிமீ தொலைவில் அமைக்க எண்ணியது.

பேச்சுவார்த்தை

சோவியத்தின் உள்துறை அதிகாரி போரிசு யார்சேவ் பின்லாந்து வெளியுறவு அமைச்சர் ருடால்ப் ஓல்சுடியையும் பிரதமர் ஐமோ காசன்டரையும் ஏப்பிரல் 1938இல் சந்தித்து சோவியத்தானது செருமனியை நம்பவில்லையென்றும் இரு நாடுகளுக்கும் போர் நடக்கலாம் என்றும் கூறினார். செஞ்சேனை எல்லைக்கு பின்னால் காத்திருக்காமல் எதிரியை முன்னதாக சந்திக்குமென்றார். பின்லாந்து நடுநிலை கொள்கையுடன் உள்ளது என்றும் எந்த நாடும் தன் எல்லைவழியாக ஊடுறுவதை எதிர்க்கும் என்றும் பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். போரிசு லெனின்கிராடை கடல்வழியாக தாக்காமல் இருக்க பின்லாந்து வளைகுடாவில் உள்ள சில தீவுகளை உருசியாவுக்கு விட்டுத் தருமாரும் இல்லையென்றால் குத்தகைக்கு தருமாரும் கேட்டார். பின்லாந்து இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.[24][25]

எந்தவித முன்னேற்றமும் இன்றி பேச்சுவார்த்தை 1938 முழுக்க தொடர்ந்தது. இசுடாலினின் பெரும் துப்புரவாக்கும் நடவடிக்கையின் போது பின்லாந்து பொதுவுடைமை கட்சியின் மேல் தட்டு மக்கள் கொல்லப்பட்டது சோவியத்தின் புகழை பின்லாந்தில் மேலும் சிதைத்தது. அதேநேரம் சுவீடனுடன் இராணுவ ஒத்துழைப்பிற்கு பின்லாந்து பேச்சு வார்த்தையை நடத்திக்கொண்டிருந்தது. ஓலந்து தீவை சுவீடனுன் இணைந்து காக்க நம்பிக்கை கொண்டிருந்தது.[26]

சோவியத்தும் நாசி செருமனியும் மால்டோவ் - ரிப்பன்டிராப் உடன்படிக்கையில் ஆகத்து 1939இல் கையெழுத்திட்டார்கள். இது பெயரளவில் வலுச்சண்டைக்கு போகக்கூடாது என்று இருந்தாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இரு நாடுகளுக்குமான மண்டலங்களாக பிரிக்கும் நெறிமுறை இருந்தது. இதன் படி பின்லாந்து சோவியத்துக்கான மண்டலத்தில் வந்தது. செப்டம்பர் 1, 1939இல் செருமனியானது போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு இரு நாட்கள் க.ழித்து பிரித்தானியாவும் பிரான்சும் செருமனி மீது படையெடுப்பதாக அறிவித்தன. செப்டம்பர் 17இல் சோவியத் போலந்து மீது படையெடுத்தது. பால்டிக் நாடுகளை சோவியத் தன் படை வீரர்களையும் படை தளங்களையும் அமைத்துக்கொள்ள உடன்படிக்கையில் கையெழுத்திட வற்புறுத்தியது.[27] எசுட்டோனியா அதை ஏற்று செப்டம்பரில் கையெழுத்திட்டது. லாத்துவியாவும் லித்துவேனியாவும் அக்டோபரில் கையெழுத்திட்டன. பால்டிக் நாடுகள் போல் அல்லாமல் பின்லாந்து புது பயிற்சி என்று கூறி தன் படைகளை திரட்டியது. [28] பின்லாந்து எல்லையில் 1938-39 ஆண்டுகளில் சோவியத் தன் படைகளை குவித்தது. ஆனால் படையெடுப்புக்கு தேவையான தாக்குதல் படைப்பிரிவை அக்டோபர் 1939 வரை எல்லையில் குவிக்கவில்லை. செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட படையெடுப்பு திட்டம் நவம்பரில் பின்லாந்து மீது படையெடுக்க முடிவெடுத்தது. [29][30]

1939 அக்டோபர் 10 இல் கரலியன் இதமுசு பகுதியில் புது பயிற்சி களத்தில் காலையுணவு பெறும் பின்லாந்து படைவீரர்கள்.

1939 அக்டோபர் 5 இல் சோவியத் பேச்சுவார்த்தைக்கு பின்லாந்தை அழைத்தது. சுவீடனின் பின்லாந்து தூதர் பேச்சுவார்த்தைக்காக மாசுக்கோவுக்கு அனுப்பப்பட்டார். [28] சோவியத்தானது பின்லாந்தின் எல்லையை கிழை விபோக்கிலிருந்து 30 கிமீ தள்ளி வைக்குமாறும் கரலியன் இதமுசுவிலுள்ள அனைத்து பாதுகாப்பு அரண்களையும் தகர்த்துவிடுமாறும் கூறியது. மேலும் பின்லாந்து வளைகுடாவிலுள்ள ரிபாசி மூவலந்தீவை விட்டுத்தருமாறும் என்கோ மூவலந்தீவை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு தருமாறும் என்கோவில் படைத்தளத்தை அமைக்க அனுமதி தருமாறும் கோரியது. இதற்கு ஈடாக கிழை கரலியாவில் உள்ள ரமோலா, பொரோசொசிரோ நகராட்சிகளை தருவதாக கூறியது. பின்லாந்துக்கு சோவியத் தருவதாக கூறியது பின்லாந்திலிருந்து பெறுவதை காட்டிலும் இரு மடங்கு நிலம் ஆகும். [28][31]

இக்கோரிக்கை மாறுபட்ட கருத்துக்களை பின்லாந்து அரசில் ஏற்படுத்தினாலும் பொதுமக்களின் நாடாளுமன்றத்தின் கருத்துக்கேற்ப இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அக்டோபர் 31 அன்று சோவியத்தின் வெளியுறவு துறை அமைச்சர் மால்டோவ் சோவியத்தின் உயர்ந்த அமைப்பில் சோவியத் கேட்டதுக்கு மாற்றாக பின்லாந்து வேறு நிலத்தை தருவதாக கூறினார். இதன் படி பின்லாந்து வளைகுடாவையும் [32] வெனின்கிரேடிலிருந்து பின்லாந்து எல்லையிலிருந்து கீழை விலோக்கை விட இருமடங்கு தூரத்திலுள்ள டெரிசோக்கி நிலப்பகுதியை தருவதாக கூறியுள்ளது என கூறினார்.[33]

சோவியத்தின் நோக்கம்

பின்லாந்துக்கும் சோவியத்துக்கும் பனிக்கால போர் ஏற்படக் காரணமான மைனிலாவில் தாக்குதல் நடந்த இடத்தில் நவம்பர் 29, 1939இல் வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்ள படம்

நவம்பர் 26, 1939இல் பின்லாந்து எல்லையை ஒட்டிய மைனிலா என்ற சிற்றூரில் அடையாளம் தெரியாத ரோந்து படை தாக்கியதில் நான்கு படைவீரர்கள் இறந்ததாகவும் ஒன்பது பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சோவியத் அறிக்கை கூறியது. பல பின்லாந்து, சோவியத் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மைனிலாவில் தாக்குதல் நடைபெறவில்லை எனவும் பின்லாந்துக்கும் சோயத்துக்கும் இடையேயான வலுச்சண்டைக்கு போவதில்லை என்ற உடன்பாட்டை குலைத்து சோவியத்தானது பின்லாந்தை தாக்க இவ்வாறு சோவியத் உள்துறை செய்தி பரப்பியதாகவும் கூறுகிறார்கள்.[34] [F 6]

மால்டோவ் பின்லாந்து படைகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதனால் பின்லாந்து இத்தாக்குதலுக்காக மன்னிப்பு கேட்பதுடன் தன் படைகளை எல்லையை விட்டு 20 கிமீ தூரம் உள்வாங்க வேண்டுமென்றார்.[37] பின்லாந்து தாக்குதலை தான் நடத்தவில்லையென்றும் இத்தாக்குதலை பின்லாந்து-சோவியத் கூட்டு ஆணையம் விசாரிக்க வேண்டுமென கூறியது. சோவியத்தானது பின்லாந்தின் பதில் தன்னை காயப்படுத்துவதாக உள்ளது எனக்கூறி வலுச்சண்டைக்கு போவதில்லை என்ற உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொண்டதுடன் பின்லாந்துடனான தூதரக உறவையும் நவம்பர் 28இல் துண்டித்துக்கொண்டது. அதை தொடர்ந்த ஆண்டுகளில் சோவியத் வரலாற்றாளர்கள் அத்தாக்குதலை பின்லாந்தின் தூண்டுதல் என்றார்கள். 1980ஆம் ஆண்டே இத்தாக்குதல் குறித்து அதிகாரபூர்வ சோவியத் பதிப்பு ஐயம் கொண்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் உருக்குலைந்த பின்னும் இத்தாக்குதல் நடவடிக்கை உருசிய வரலாற்றாளர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. [38][39]

2013இல் உருசிய அதிபர் விளாடிமிர் புதின் பனிக்கால போரை சோவியத் 1917 நடந்த தவறை சரி செய்ய தொடங்கியதாக உருசிய இராணுவ வரலாற்று அறிஞர்களிடம் கூறினார். [40] சோவியத் படையெடுப்பின் நோக்கம் பற்றி மாறுபட்ட கருத்துகள் நிழவுகிறது. [F 7] அங்கேரியன் வரலாற்றாளர் 1939ஆம் ஆண்டு சோவியத் பொதுவுடைமை கட்சி தலைமை பின்லாந்தையையும் உள்ளடக்கிய சார் அரசு கால எல்லையை மீண்டும் கொண்டு வர 1939ஆம் ஆண்டு மைனிலா தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார். [43] அமெரிக்க அரசியல் ஆய்வாளர் டான் ரெய்ட்டர் பின்லாந்தில் தன் பேச்சை கேட்கும் பொம்மை அரசை நிறுவ சோவியத் முயன்றதாக மைனிலா தாக்குதல் குறித்து கூறும் போது கூறுகிறார், மேலும் அங்கு சோவியத் அரசை நிறுவுவதை விட லெனின்கிரேடுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துவதே அவர்கள் நோக்கமாக இருந்ததும என்கிறார். [46] அமெரிக்க வரலாற்றாளர் வில்லியம் டிராட்டர் இசுடாலின் பின்லாந்து முழுவதையும் கைப்பற்ற நினைக்கவில்லை என்றும் எதிர்பார்க்கப்படும் செருமன் படையெடுப்பிலிருந்து லெனின்கிரேடை பாதுகாக்கே பின்லாந்தை தாக்க திட்டமிட்டார் என்கிறார். "[47] பிராட்லி என்பவர் முழு சோவியத்தின் எல்லையின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதே சோவியத்துகளின் நோக்கம் என்கிறார்."[48] உருசிய வரலாற்றாளர் சுபர்யன் 2002இல் சோவியத்தானது பின்லாந்தை இணைந்துக்கொள்ள முடிவு செய்தாதிற்கு ஆதரவாக எந்த ஆவணமும் ஆவண கிடங்கில் இல்லை என்றும் அதற்கு பதில் இந்த நடவடிக்கை சோவியத்தின் செல்வாக்கை பின்லாந்து பகுதியில் செலுத்துவதற்காக இருந்திருக்கும் என்கிறார். [49]

இரு தரப்பு படைகளின் உத்தி

கிழை போலந்தில் 4,000 இக்கும் குறைவான படைவீரர் இழப்புகளுடன் அப்போது தான் வெற்றிபெற்று இருந்ததால்சோவியத் தலைமை சில வாரங்களிலேயே பின்லாந்து உடனான போரில் வென்று விடலாம் என்று நினைத்தது. விரைவாக வெல்லவேண்டும் என்ற இசுடாலினின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அரசியல்வாதி ஆண்டிரேய் சொதனோவ்வும் இராணுவ உத்தி வகுப்பாளர் கிளிமென்ட் வொரொசிலோவ்வும் நடக்குமென கூறினார்கள். இராணுவ தளபதிகள் அதில் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தார்கள். செஞ்சேனையின் முதன்மை தளபதி படைவீரர் குவிப்பும் முப்படைகளின் தீவிர தாக்குதலும் தளவாடங்களின் பராமரிப்பும் மேலாண்மையும் சிறந்த இராணுவ அணிகளும் வேண்டும் என்றார். சொதனோவின் இராணுவ தளபதி கிரில் மெரிட்கோவ் படையெடுப்பு பகுதி காடுகளை உடையது என்பதால் படைகளை சரிவர பயன்படுத்துவது சிரமம் என்றார் ஆனால் பொதுவில் இரண்டு வாரத்திற்குள் படையெடுப்பு முடிந்து விடும் என்றார். சோவியத் வீரர்கள் தவறியும் சுவீடன் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். [50]

இசுடாலினின் 1930ஆம் ஆண்டு நடந்த துப்புரவு நடவடிக்கையால் செஞ்சேனையின் அதிகாரிகள் பெரிதும் பாதிக்கபட்டிருந்தனர். பாதிக்கும் சற்று அதிகமானோரே பணியில் இருந்தனர்.[51][52] பணியில் இல்லாதவர்களுக்கு பதிலாக மேலதிகாரிகளுக்கு அடிபணியாத படைவீரர்கள் நியமிக்கப்பட்டனர். படைப்பிரிவு அலகுகளின் தளபதிகள் அக்குழுவின் அரசியல் அதிகாரிகளிடம் எந்த திட்டத்துக்கும் அனுமதி பெறவேண்டும். குழுவில் இரு தலைமைகள் இருந்தது சோவியத்தின் கட்டளைத்தொடரில் சிக்கலை ஏற்படுத்தியது.[53][54] சோவியத்தின் கிழக்கு எல்லையில் நிப்பானுக்கு எதிராக சோவியத் பெற்ற வெற்றிக்கு பிறகு சோவியத் தலைமை இரு பிரிவுகளாக பிரிந்தது. ஒரு பிரிவு எசுப்பானிய உள் நாட்டுப் போரில் பட்டறிவு பெற்றவர் தளபதிகளும் [55] மற்ற பிரிவில் உள்ளோர் நிப்பானுக்கு எதிராக போராடியர்களுமாக இருந்தனர். [56] நிப்பானுடனான போரில் நோமோன்யன் சிற்றூரில் சோவியத் பெருமளவிலான பீரங்கி வண்டிகளையும் வானூர்திகளையும் தாக்குதல் படைகளையும் பயன்படுத்தியது. [57] ஆனால் உருசிய வேக பீரங்கி வண்டியான பிடி பீரங்கி வண்டி பனிக்கால போரில் பெரிதும் உதவவில்லை. நிப்பானுடனான போரில் 10 நாட்களில் துகோவ் பெற்ற வெற்றியை பெற மில்லியன் வீரர்ககளுக்கு மேல் உள்ள படை மூன்று மாதங்கள் போராடி பெற்றது. [57][58]

லடோகா கரலியாவில் உள்ள கோல்லாவின் அடர் காடு. சாலையில் பீரங்கி வண்டி செல்வதாக புகைப்படக்காரர் கூறுகிறார்.

செருமனியின் பிளிட்ச்கிரிங் இராணுவ உத்தி சோவியத் தளபதிகளை கவர்ந்திருந்தது. பிளிட்ச்கிரிங் நல்ல சாலை வசதிகள் உடைய நடு ஐரோப்பாவுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டது. பின்லாந்தின் இராணுவ மையங்கள் நாட்டின் உள்புறம் இருந்தன, அவைகளை அடைய சாலை வசதிகள் மிக குறைவாக இருந்தன மேலும் அப்பகுதி நிலம் காடுகளாகவும் சதுப்பு நிலங்களாகவும் இருந்தது. டிராட்டரின் கூற்றுப்படி பின்லாந்து பகுதியில் செஞ்சேனையின் ஒருங்கிணைவு மோசமாக இருந்தது, இதனாவும் பிளிட்ச்கிரிங் உத்தி தோல்வியுற்றது.

டிராட்டரின் கூற்றுப்படி நவம்பர் 30, முதல் டிசம்பர் 22,1939 வரையான சோவியத்தின் நான்கு படை அணிகள் தாக்குதல் சிவப்ப குறியிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது </ref>[59]

பின்லாந்தின் உத்தி நில அமைப்பை பொருத்திருந்தது. பின்லாந்துக்கும் சோவியத்துக்கும் இடையிலான எல்லை 1340 கிமீ, இதில் பெரும்பாலானவை கடக்க முடியாதவை சில இடங்களில் உள்ள மோசமான சாலைகளே கடக்க உதவும். பின்லாந்தின் பாதுகாப்பு கட்டளை எல்லையிலிருந்து தோராயமாக 100 கிமீ தொலைவிலுள்ள மிக்கேல் நகரில் அமைக்கப்பட்டது.[60] போருக்கு முநதி சோவியத்தின் படைப்பிரிவு ஏழுக்கு மேல் கரலியன் துமசு பகுதியில் இருக்காது எனவும் லடோகா ஏரியின் வடபுறம் முழுவதும் ஐந்து படைப்பிரிவுகளுக்கு மேல் இருக்காது எனவும் பின்லாந்தின் கணக்கிட்டது. இதன் படி சோவியத் பின்லாந்து படைவீரர் விகிதம் 3 இக்கு 1 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டது. ஆனால் சோவியத் லடோகா ஏரியின் வடபுறம் 12 படைப்பிரிவுகளை கொண்டு வந்தது. [61]

படை வீரர்கள் குறைவாக இருந்ததை விட ஆயுதங்களின் பற்றாக்குறையே பெரிய சிக்கலாக உருவெடுத்தது. பீரங்கி எதிர்ப்பு வெடி வானூர்திகள் போன்றவை குறைவாகவே வெளிநாடுகளில் இருந்து வந்தன. கையில் உள்ள வெடிபொருட்கள் 19-60 நாள்களுக்கே வரும் என்ற நிலை உருவானது. வெடி பொருட்கள் பற்றாநிலையால் தீவிர எதிர்தாக்குதல் பாதிக்கப்பட்டது மேலும் பீரங்கி வண்டிகள் பிரிவு இயங்கா நிலையில் இருந்தது. [61]

சோவியத் படையெடுப்பு

கரலியன் துமசிலுள்ள மன்னர்யிம் கோட்டை டிசம்பர் 7 இல் சோவியத் படைகள் அடைந்தன.
  பின்லாந்திய படைப்பிரிவு (XX), (XXX)
  சோவியத் படைப்பிரிவு (XX), (XXX), (XXXX)
நவம்பர் 30, 1939 நடந்த வான் வழித்தாக்குதலால் எல்சிங்கி தெருக்கள் எரியும் காட்சி

21 படைப்பிரிவுகளுடன் சோவியத் நவம்பர் 30, 1939 அன்று பின்லாந்தின் மீது படையெடுத்தது. தாக்குதலில் பலத்த சேதமும் உயிர்பலியும் ஏற்பட்டது, எல்சிங்கியும் தாக்கப்பட்டது [62]. பலத்த பன்னாட்டு விமர்சனத்துக்கு சோவியத் வானூர்திகள் குண்டுகளை போடவில்லையென்றும் பசியால் வாடும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொட்டலங்களையே போடுவதாகவும் சோவியத்தின் வெளியுறவு அமைச்சர் கூறினார். இதை கிண்டலாக மால்டோவின் உணவு கூடை என்று பின்லாந்திய மக்கள் கூறினர். [63][64]

பின்லாந்து ராசதந்திரி சோவியத் போர் சாற்றுதல் செய்யாமல் தாக்கியது இரு நாடுகளும் செய்து கொண்ட 1920 டார்டு உடன்படிக்கை 1932, 34இல் செய்து கொண்ட வலுச்சண்டைக்கு போகாதிருத்தல் ஆகிய மூன்று உடன்படிக்கைகளின் படிக்களில் உள்ளவற்றை மீறியதும் சோவியத் 1934இல் நாடுகளின் சங்கத்தில் செய்த உடன்பாட்டையும் மீறுவது என்கிறார்.[36]மன்னார்கிம் பின்லாந்தின் தற்காப்பு படைகளின் தளபதியாக ஆக்கப்பட்டார். மேலும் பின்லாந்தின் அமைச்சரவையிலும் மாறுதல் நடைபெற்றது.[65] பின்லாந்து நாடுகளின் சங்கத்தில் சோவியத்தின் தாக்குதல் குறித்து முறையிட்டது. சோவியத்தை டிசம்பர் 14, 1939 அன்று சங்கத்திலிருந்து விலக்கியதல்லாமல் உறுப்பு நாடுகள் பின்லாந்துக்கு உதவவும் நாடுகளின் சங்கம் கேட்டுக்கொண்டது. [66][67] கைப்பற்றப்பட்ட பின்னிய கரலியாவில் பொம்மை அரசாங்கத்தை சோவியத் டிசம்பர் 1, 1939 அன்று அமைத்தது. போருக்கு பின் இந்த அரசு கலைக்கப்பட்டது. போரின் போது பாட்டாளி வர்க்கம் எல்சங்கியில் இருந்த அரசையே ஆதரித்தனர்.[66] இப்போரினால் பின்லாந்தர்களின் ஒற்றுமை படையைடுப்புக்கு எதிராக கூடியது. [68]

எல்லையிலிருந்து 30-75 கிமீ தள்ளி கரலியன் துமசில் இருந்த மன்னர்யிம் கோட்டில் பாதுகாப்பு அரண்கள் வரிசையாக இருந்தன. துமசில் செஞ்சேனையின் வீரர்ள் பின்லாந்து வீரர்களை விட 100,00 அதிகமிருந்தனர். [69]பின்னால்ந்திய படை 21,000 வீரர்களுடன் தற்காப்பு தாக்குதலை நடத்தி செஞ்சேனை மன்னர்யிம் கோட்டுக்கு வருவதற்கு முன் பாதிப்பை உருவாக்கினர். [70] பின்லாந்திய படைகள் பீரங்கி வண்டி எதிர்ப்பு வெடிகள் இல்லாததாலும் பீரங்கி வண்டி எதிர்ப்பு உத்தியில் போதுமான பயிற்சி பெறாததாலும் பீரங்கி வண்டிக்கு எதிரான சண்டையில் பெரும் குழப்பத்துக்குள்ளாயினர். டிராட்டரின் கூற்றுப்படி இது சோவியத் படைகளுக்கு சாதகமாக இருந்தது. பின் பீரங்கி வண்டியின் பலவீனம் அறியப்பட்டு 80 பீரங்கி வண்டிகள் அழிக்கப்பட்டன. [71]

பின்லாந்திய படைகள் மன்னர்யிம் கோட்டிலிருந்து டிசம்பர் 6 விலக்கிக்கொள்ளப்பட்டனர். செஞ்சேனை லடோகா ஏரியின் கரையிலுள்ள தாய்பலேயிலும் தாய்பலே ஆற்று ஓரத்திலும் சுவன்டோ நீர்வழியை ஒட்டியும் தன் முதல் பெருந்தாக்குதலை தொடுத்தது. சுவன்டோ பகுதியிலும் லடோகா ஏரியின் வடபுறத்திலும் உள்ள நிலவமைப்பு பின்லாந்து படைகளுக்கு சாதகமாக இருந்தது. சோவியத் படைகள் கடும் தாக்குதலை நடத்தின அதை பின்லாந்து படை முறியடித்ததோடு சோவியத் படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 6லிருந்து 12 வரை சோவியத்தின் செஞ்சேனை ஒரு படைப்பிரிவையே பயன்படுத்தியது. பின்பு பீரங்கி வண்டிகளையும் துப்பாக்கி படைப்பிரிவையும் தாய்பலே பகுதியில் பயன்படுத்தியது. டிசம்பர் 14 அன்று தீவிரமான தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. மூன்றாவது படைப்பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது ஆனால் இப்பிரிவு நன்றாக செயல்படவில்லை. செஞ்சேனையின் தாக்குதல் பலத்த இழப்புகளுடன் தொடர்ந்தது. பொதுவாக சோவியத்தின் தாக்குதல் ஒரு மணி நேரம் நீடிக்கும் அதில் சுமார் 1000 பேர் இறப்பும் 27 பீரங்கி வண்டிகள் பனித்துகள் குழம்பில் சிக்கிக்கொள்ளும்.[72] தாக்குதல் நடத்தும் இடங்களில் சாலை வசதிகள் பெரிதும் இல்லாததால் [73] சோவியத்தின் ஒரு படைப்பிரிவு எல்லை வரை இருப்புப்பாதையை நீடித்தது. இதனால் படைகளுக்கு வெடி பொருட்கள் உணவு கிடைப்பது வழங்குவது இருமடங்காகியது. டிசம்பர் 12 அன்று சோவியத்தின் 139வது படைப்பிரிவு முன்னேறியது இது டோல்வாஞிவியில் முறியடிக்கப்பட்டது பின்லாந்தியர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். [74] நடு , வட பின்லாந்தில் சாலைகள் குறைவாக இருந்ததுடன் அந்நிலம் சோவியத்துகளுக்கு சாதகமாக இல்லை. சோவியத்துகள் எட்டு படைப்பிரிவுகளுடன் பீரங்கிகளின் துணையுடன் நிலம், கடல் மார்க்கமாக பெரும் தாக்குதலை தொடுத்தனர், இதை பின்லாந்தியர்கள் எதிர்பார்க்கவில்லை.. [75]

டிசம்பர் முதல் சனவரி வரையான போர்

காலநிலை

கரலியன் துமசில் 1939-40 ஆண்டு குளிர்காலம் கடுமையாக இருந்தது. சனவரி 16, 1940இல் இது வரை இல்லாத அளவான -46 டிகிரி செல்சியசு பதிவாகியது.[76] போரின் ஆரம்ப கட்டத்தில் பணியிலிருத்த படைவீரர்களிடம் மட்டுமே சீருடையும் ஆயுதங்களும் இருந்தன. மற்ற படைவீரர்கள் தாங்களே சீருடை தைய்க்க வேண்டி இருந்தது. பின்லாந்து வீரர்கள் நெடுந்தூர பனிச்சறுக்கில் வல்லவர்களாக இருந்தனர். [77] குளிரும் பனியும் காடும் நீண்ட நேர இருட்டும் பின்லாந்தியர்களுக்கு சாதகமாக இருந்தது. பின்லாந்தியர்கள் பனிச்சறுக்கு வீரர்களைப்போல் பல அடுக்கு உடையையும் பனித்தூவிக்கான வெள்ளை நிற குல்லாவையும் அணிந்திருந்தது உருமறைப்பாக பயன்பட்டு கரந்தடிப் போர் முறைக்கு பயன்பட்டது. போரின் ஆரம்பத்தில் சோவியத் பீரங்கி வண்டிகள் ஆலிவ் நிறத்தில் வண்ணமடிக்கப் பட்டிருந்தன படை வீரர்கள் வழக்கமான காக்கி நிற சீருடை அணிந்திருந்த்தார்கள். 1940 சனவரி பிற்பகுதியிலேயே தங்கள் வண்டிகளுக்கு வெள்ளை நிறமும் தாக்குதல் படைகளுக்கு பனிக்கான உடுப்பும் கொடுத்தார்கள். [78]

பெரும்பாலான சோவியத் வீரர்களுக்கு நல்ல பனிக்கால உடைகள் கிடைத்தாலும் அது கிடைக்கப்பெறாதவர்களும் பல பிரிவுகளில் இருந்தனர், அவர்கள் போரின் போது உறைபனிக்கடியால் இறந்தனர். சோவியத் படைகள் பனிச்சறுக்கில் சிறப்பானவர்களாக இல்லாததால் அவர்களின் நடமாட்டம் சாலைகளிலேயே இருந்தது. செஞ்சேனையினர் குளிர்கால கூடாரம் அமைப்பதிலும் ஆற்றல் அற்றவர்களாக இருந்தனர், இதனால் வீரர்கள் மோசமான உறையுளிலில் உறங்கினர். [79] கடும் குளிரால் சோவியத்தின் பீரங்கி வண்டிகள் சேற்றிலும் சதுப்பு நிலத்திலும் செல்வதற்கு பதிலாக உறைந்த நிலத்தின் வழியாகவும் நீர்நிலைகள் வழியாகவும் சென்றதால் அவற்றின் ஆற்றல் குறைந்தது. [79]


பெட்சமோ துறைமுகத்திற்கான போர்

உறை ஏரியில் காணப்படும் சோவியத் வீரர்களின் காலடி தடம்.

ஆர்டிக் துறைமுக நகரனான பெட்சமோவிற்காக நடந்த லடோகா கரலியா போரின் போது பின்லாந்தியர் கரந்தடிப் போர் முறை உத்தியை கடைபிடித்தனர். செஞ்சேனையினருக்கு சாதகமாக அதிகளவிலான படைவீரர் எண்ணிக்கையும் அதிக தளவாடங்களும் இருந்தன. பின்லாந்தியர்களுக்கு வேகமும், சூழ்ச்சித்திறனும் செயலாற்றுதலும் சாதகமாக இருந்தது. பல சோவியத் வீரர்கள் 1 கன மீட்டர் குழியில் கடும் குளிரையும் மற்ற இன்னல்களையும் எதிர்கொண்டது சண்டை இடுவதை விட கடினமாக இருந்தது. செஞ்சேனையினர் சண்டையிட மறுத்தால் சுட்டு கொல்லப்படுவார்கள், காடுகளில் தப்பிச்செல்ல முயன்றால் குளிரில் உறைந்து விடுவார்கள், பின்லாந்தியர்கள் அடைக்கலம் அடைந்த வீரர்களை சித்திரவதைபடுத்தி பின் கொன்றுவிடுவார்கள் என்ற சோவியத் பரப்புரையால் அடைக்கலம் அடைவதற்கும் வழியில்லை என வரலாற்றாளர் வில்லியம் டிராட்டர் கூறுகிறார்."[80]

மன்னர்யிம் கோட்டு அரணில் போர்

கரலியன் துமசு நிலப்பரப்பு கரந்தடிப் போர் முறைக்கு உகந்ததாக இல்லாததால் பின்லாந்தியர்கள் மன்னர்யிம் கோட்டு அரணில் வழக்கமான போர் முறையை தேர்ந்தெடுத்தார்கள். இந்த அரண் பெரிய நீர்நிலையால் பாதுகாக்கப்பட்டிருந்தது. சோவியத் இந்த அரண் மிகவும் வலிமையானது எனவும் மாகினோட் அரணைவிட வலிமையானது எனவும் பரப்புரை செய்தனர். பின்லாந்து வரலாற்றாளர்கள் இந்த அரண் வலிமையற்றது எனவும் வழக்கமான பதுங்கு குழிகளையும் தடுப்பு கட்டைகளையும் கொண்டது தான் எனவும் கூறுகின்றனர்.[81] கரலியன் துமசில் 1920ஆம் ஆண்டு பல அரண்களை கட்டிய பின்லாந்தியர் அதை 1930 இன் பிற்பகுதியில் விரிவாக்கினர். மொத்தம்ல 221 பாதுகாப்பு அரண்களை கட்டியிருந்தனர். ஒரு பகுதியில் மட்டும் கிமீக்கு ஒன்று என்ற அளவில் பைஞ்சுதையால் ஆன வலிமையான பதுங்கு குழிகளை அமைத்திருந்தனர். பொதுவாக இது ஐரோப்பாவிலிருக்கும் மற்ற வலிமையற்ற அரண்களை போலத்தான் இருந்தது என பின்லாந்திய வரலாற்றார்கள் கூறுகின்றர்..[82]

டிசம்பர் 16 அன்று கீழை கரிலியன் துமசில் செஞ்சேனை மன்னர்யிம் அரணை உடைக்க தைபாலேவில் சண்டையிட்டது மேற்கு புறம் வீபுரிக்கு அருகே சண்டையிட்டது. மேற்கு புறம் பைஞ்சுதையால் ஆனா 41 பதுங்கு குழிகளை பின்லாந்தியர்கள் அமைத்திருந்த்தால் அப்பகுதி பாதுகாப்பு மற்ற பகுதிகளை விட வலிமையாக இருந்தது. திட்டமிடலில் ஏற்பட்ட தவறு காரணமாக ஒரு கிமீ இடைவெளி முனசுவோ சதுப்பு நில அரணில் ஏற்பட்டிருந்தது.[83] டிசம்பர் 19 அன்று அப்பகுதியில் ஏற்பட்ட போரில் அந்த இடைவெளியால் அப்பகுதி அரணை சோவியத் உடைத்தாலும் சரியான ஒத்துழைப்பு படைபிரிவுகளிடம் இல்லாததால் அதை முழுவதும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியவில்லை. பின்லாந்தியர்களிடம் பீரங்கி வண்டி எதிர்ப்பு வெடிகள் இல்லாததால் பதுங்குகுழிகளிலேயே இருந்தனர், அதனால் சோவியத் பீரங்கி வண்டிகள் பின்லாந்தியர்களை பின்னுக்கு விட்டு விட்டு முன்னேறி சென்றது. சோவியத்தின் முதன்மையான தாக்குதலை பின்லாந்தியர்கள் முறியடித்திருந்தார்கள். பின்லாந்தியர்கள் பின்புறம் இருந்ததால் சோவியத் பீரங்கி வண்டிகளை தாக்கி 20 வண்டிகளை அழித்தார்கள். 22 டிசம்பர் இப்போரில் பின்லாந்தியர்கள் வென்றார்கள். [84]சோவியத் வீரர்களின் உள்ளவுறிதியும் வெடி பொருட்கள் கையிருப்பும் குறைவாக இருந்ததால் அவர்கள் மன்னர்யிம் அரண் கோட்டில் முன்கள தாக்குதலில் ஈடுபட மறுத்தார்கள். இதை பயன்படுத்தி பின்லாந்தியர்கள் சோவியத்தின் வீரர்கள் மீது மேற்கொண்ட எதிர் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. பின்லாந்தியர்கள் 1300 வீரர்களை இழந்தார்கள். [85]

லடோகா கரலியாவில் போர்

சோவியத்தின் 1937ஆம் ஆண்டு வகை பீரங்கி வண்டி டி-26 யின் கோல்லா போரில் கிழக்கு கோல்லா ஓடையருகே தீரத்துடன் சண்டையிட்டது

லடோகா கரலியாவிலிருந்த லடோகா ஏரியின் வடபுறம் செஞ்சேனையின் வலிமை பின்லாந்திய தலைமையை வியக்க வைத்தது. பின்லாந்து 2 படைப்பிரிவுக்களும் 3 துணைப் படைப்பிரிவுகளும் அங்கு கொண்டிருந்தது. சோவியத்தானது பின்லாந்து எல்லையை நோக்கி செல்லும் எல்லா சாலைகளிலும் படைப்பிரிவை நிறுத்தியிருந்தது. சோவியத்தின் நோக்கம் லடோகா கரலியாவிலிருந்த பின்லாந்து படைகளை அழித்துவிட்டு சோர்டாவலாவுக்கும் யூனாசுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு 10 நாள்களில் அடைய வேண்டும் என்பதே.

பின்லாந்திய படைகள் சோவியத்தின் பெரும்படையை பார்த்து மிரண்டு பின்வாங்கின. டிசம்பர் 7இல் பின்லாந்திய படைப்பிரிவின் அலகுகள் சிறிய ஓடையான கோல்லா பாதுகாப்பு தராது என்பதால் அதனருகில் பின்வாங்கின. ஆனால் அவ்வோடைக்கு அருகில் 10 மீட்டர் உயர சிறு மேடு இருந்தது. இது ஆண்டு இறுதி வரை கோல்லா போர் நீடிக்க காரணமாக இருந்தது.

லடோகா ஏரிக்கு வடக்கே சோவியத் படைப்பிரிவு பின்லாந்திய பாதுகாப்பு படைபிரிவால் டிசம்பர் 12, 1939 தடுக்கப்பட்டுள்ளது.[86]
  பின்லாந்திய துணை படைப்பிரிவு (X) or படைப்பிரிவு(XX)
  சோவியத் படைப்பிரிவு (XX)

தெற்கில் இரு சோவியத் படைபிரிவுக்கள் வடபுறத்திலிருந்து வந்து இணைந்து கொண்டன. டிசம்பர் அன்று பின்லாந்திய படைகள் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி சனவரி காலப்பகுதியில் மீண்டும் தாக்குதலை தொடங்கி சோவியத் படைபிரிவுகளை சிறு அணிகளாக பிரித்தன. [87] பின்லாந்தியர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக சோவியத் படைப்பிரிவிகள் கிழக்கு பக்கம் ஓட்டம் எடுக்காமல் எதிர்த்து போரிட்டன. அவர்கள் போர் தளவாடங்களை வான் வழியாக எதிர்பார்த்திருந்தனர். பின்லாந்திய படைகளிடம் பெரும் ஆயுதங்கள் இல்லாததால் மிகவும் ஆபத்தான சிறு அணிகளை தேடி அழித்தனர்.[88] சோவியத் வீரர்கள் பனி போன்ற இடர்களுக்கு மத்தியிலும் தீரத்துடன் சண்டையிட்டார்கள். பின்லாந்தியர்கள் சிறப்பு பிரிவு அழைத்து மிகவும் ஆபத்தான சிறு அணிகளை மட்டும் தாக்கி அழிக்கும் உத்தியை பின்பற்றினார்கள்.

வடக்கு கரலியாவில் சோவியத் வீரர்களை விட பின்லாந்தியர்கள் திறம்பட செயலாற்றினார்கள். பின்லாந்தியர்கள் கரந்தடிப் போர் முறையையும் தங்களின் மேம்பட்ட பனிச்சறுக்கு திறனையும் பயன்படுத்தி சோவியத் வீரர்களை திணறடித்தனர். டிசம்பர் இறுதியில் சோவியத் படைகளை விலக்கிக்கொண்டு படைகளையும் தளவாடங்களையும் வேறு முக்கிய போர் முனைக்கு அனுப்பியது. [89]


கைனு போர்

இறந்த சோவியத் வீரர்களின் உடலுமும் அவர்களின் ஆயுதங்களும் ராட்டே சாலையில் இருக்கும் காட்சி

சுமுசால்மி நகர ராட்டே சாலையில் நடந்த போர் பெரிய படையை சிறப்பாக வழிநடத்தப்படும் சிறு படை எப்படி புதிய உத்திகளால் வீழ்ந்தமுடியும் என்பதை படை வீரர் பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் பாடமாக பின் மாறியது. 4,000 மக்களையுடைய சுமுசால்மி ஏரிகளும் காடும் சில சாலைகளும் கொண்ட நகரமாகும். பின்லாந்தியர்கள் இங்கு சோவியத் தாக்குதல் இருக்காது என நினைத்தனர். ஆனால் சோவியத் அப்பகுதிக்கு இரு படைப்பிரிவுகளை அனுப்பியது. சிமுசால்மி நகரருக்கு வடபுறம் யூன்டிசுரான்டா சாலையு தென் புறம் ராட்டே சாலையு என இரு சாலைகள் சென்றன. [90] சுமுசால்மி நகரை கைப்பற்ற ராட்டே சாலையில் ஒரு மாதத்துக்கும் மேல் போர் நடைபெற்றது. பனிக்காலப் போரில் இதிலேயே சோவியத் அதிக இழப்புகளை சந்தித்தது [91] காடுகளில் வந்த படைப்பிரிவின் பெரும்பகுதி திடீர் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது. சோவியத் படைகள் முன்னேறுவதை பின்லாந்தின் சிறிய படையணி தடுத்தது போலவே அவர்கள் பின்வாங்குவதையும் ஒரு அணி தடுத்தது. அவர்கள் சோவியத் படைகளை சிறு அணிகளாக பிரித்து தாக்குதல் நடத்தினர். 7000-9000 வீரர்கள் [92] உயிரிழந்தார்கள் பின்லாந்தியர்கள் 400 வீரர்களை இழந்தார்கள். [93]

பின்லாந்தின் லாப்லேண்டில் நடந்த போர்

சனவரி 1940 அன்று ஆர்டிக் பகுதியில் காணப்படும் புதிய உடையுடன் சோவியத் போர்க் கைதி

பின்லாந்தின் வடகோடியிலுள்ள லாப்லேண்டிலுள்ள காடுகள் வடக்கே செல்லச்செல்ல குறைவாக இருந்தன, சொல்லப்போனால் வடக்கில் மரங்களே இல்லை. அது பீரங்கி வண்டிகள் செல்லவும் திறனுடன் போர் செய்யவும் உகந்ததாக இருந்தது. ஆனால் அப்பகுதியில் மக்கள் மிகக்குறைவாக பரவலாக வசித்ததுடன் அப்பகுதி மிக அதிக பனிப்பொழிவை பெறுவதாகவும் இருந்தது. பின்லாந்தியர்கள் அங்கு சிறு சோவியத் அணியை தான் எதிர்பார்த்தார்கள் ஆனால் சோவியத் முழு படை பிரிவையே அங்கு அனுப்பியது.[94] அதனால் பின்லாந்தியர்கள் டிசம்பர் 11 அன்று லாப்லேண்டின் பாதுகாப்பு அரணை மாற்றியமைத்தார்கள்.

தென் லாப்லேண்டில் 88 & 122 என்ற இருபடைப்பிரிவுகள் 35,000 வீரர்களுடன் சல்லா என்ற சிற்றூரை கடந்து சென்று வடக்கு தெற்காக பிரிந்து சென்றன. டிசம்பர் 17 அன்று வடக்கு பக்கம் சென்ற படைகள் பின்லாந்தியர்களால் கடுமையாக தாக்கப்பட்டன. வடக்கு புறம் சென்ற 122வது படைப்பிரிவு ஆயுதங்களை விட்டு விட்டு பின்வாங்கியது. இவ்வெற்றியால் ஊக்கமடைந்த பின்லாந்தியர்கள் தெற்கு பகுதி பாதுகாப்பு அரணுக்கு மேலும் பல வீரர்களையும் ஆயுதங்களையும் அனுப்பினார்கள். சோவியத்தின் படைகள் தென் பகுதி அரணை முறியடிக்க முயன்றும் அது பின்லாந்தியர்களால் முறியடிக்கப்பட்டது.

பின்லாந்தின் வடக்கில் ஆர்ட்டிக் பகுதியிலிருந்த அதன் ஒரே பனி உறையாத துறைமுகமான பெட்சமோவை பாதுகாக்க பின்லாந்தியர்களிடம் போதிய வீரர்கள் இல்லை. பின்லாந்தியர்கள் அத்துறைமுக நகரை கைவிட்டுவிட்டு சோவியத்படைகளுக்கு உணவு ஆயுதம் கொண்டுவரும் படைகளை கரந்தடி தாக்குதல் முறையில் தாக்கினார்கள்.

வான் தாக்குதல்

சோவியத் வான்படை

சோவியத் வான்படையானது பின்லாந்திய படைகளை விட போர் காலம் முழுவதும் வானத்தில் செல்வாக்கு செலுத்தியது. தரைப்படைகளின் தாக்குதலுக்கு தன் 2,500 விமானங்களை பயன்படுத்தி உதவியது, அவர்களின் உதவியானது தரைப்படையினர் எதிர்பார்த்த அளவு இல்லை. சோவியத்தின் வான் தாக்குதலில் சேதமடைந்தவை பின்லாந்தின் மதிப்பு மிக்க இலக்குக்களாக அல்லாமல் இருந்தது. உள்ளூர் கிடங்குகள் போன்ற மதிப்பு குறைந்த இலக்குகளே அதிகம் தாக்கப்பட்டது. பின்லாந்தின் உள்பகுதியில் தரமான சாலைகள் குறைவாக இருந்ததால் இருப்புப் பாதைகளே அதிகம் தாக்கப்பட்டன. இருப்புப்பாதை துண்டிக்கப்பட்ட போதும் பின்லாந்தியர்கள் விரைவாக செயல்பட்டு செப்பனிட்டு இருப்பபுப்பாதை போக்குவரத்தை சில மணித்துளிகளில் தொடர்ந்தனர். [95] சோவியத் வான்படை தன் முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்று பிப்பரவரி இறுதியில் புதிய வழிமுறைகளை செம்மையாக கையாண்டது. [96]

போர் தொடங்கியதும் முதல் நாள் பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கி கடுமையாக தாக்கப்பட்டது, போரில் அதுவே பெரிய அளவிலான தாக்குதலாகும். அதன் பின் எல்சிங்கி மீது சில முறையே வான் தாக்குதல் நடைபெற்றது. சோவியத்தின் வான் தாக்குதல்களால் குடிமக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். 957 பேர் வரை இறந்தனர். [97] 516 இடங்களில் 2075 முறை வான் தாக்குதல் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் 400 வானூர்திகளை சோவியத் வான் படை இழந்தது. தோராயமாக சோவியத் வானூர்திகள் 44,000 முறை போரின் போது பறந்தன.[96]


பின்லாந்து வான்படை

பின்லாந்தின் பிரித்தானிய இலகு ரக வானுர்தி மார்ச்சு 1940இல் திக்காகோசுகி வான் படை தளத்தில் எரிபொருள் நிரப்பும் காட்சி

போரின் தொடக்கத்தில் பின்லாந்திடம் பறக்க்க்கூடிய நிலையில் 114 வானூர்திகளை கொண்ட சிறிய வான் படையே இருந்தது. அதனால் அவர்கள் மெதுவாக பறக்கும் சோவியத் வானூர்திகளை மறித்து திருப்பி அனுப்புவதிலும் ஈடுபட்டதுடன் முக்கியமான இலக்குகளை மட்டுமே தாக்கினார்கள். இழப்புகளை சந்தித்தாலும் போரின் முடிவில் இவர்கள் வான் படை 50% பெருகியிருந்தது. .[98] பிரித்தானியா, சுவிடன், அமெரிக்கா, பிரெஞ்சுகளிடமிருந்து வானூர்திகளை பெற்றார்கள்.[99]

கடற் போர்

டிசம்பர் இறுதிக்குள் பால்டிக் கடல் முழுவதும் உறைந்துவிடும் என்பதால் அனால் போர்க்கப்பல்களின் நகர்வு தடை செய்யப்படுவதால் கடற்பகுதியில் போர் நடவடிக்கை சிறிதே இருந்தது. பனிக்கட்டி உடைக்கும் கப்பல்களும் நீர்மூழ்கிகளுமே அந்த உறைபனிக் கடலில் நகர்ந்தன. மேலும் பால்டிக் கடல் பகுதியிலிருந்த சோவியத் படைகள் கடற்கரையை பாதுக்கும் வகையில் தற்காப்புக்காக இருந்தன, அவைகள் தாக்குதல் படையெடுப்புக்கான பயிற்சியையும் அதற்கான கட்டமைப்புகளையும் கொண்டிருக்கவில்லை. பின்லாந்து படைகளும் கடற்கரையை பாதுகாக்கும் வகையிலேயே இருந்தன. பின்லாந்து படைகள் பின்லாந்துக்கு வரும் வணிக கப்பல்களை பாதுகாக்கவும் செய்தன. [100]தட்பவெப்பம் நன்றாக இருந்த டிசம்பர் 1 முதல் கடற்போர் நடைபெற்றது.

பிப்ரவரியில் நடந்த சோவியத்தின் மடைமாற்றம்

போரில் கைப்பற்றப்பட்ட சோவியத் வீரர்களின் பனிச்சறுக்கு கையேட்டை ஆராயும் பின்லாந்து அதிகாரிகள்

டிசம்பரில் பின்லாந்து போரில் சோவியத்தின் நடவடிக்கைகள் யோசப்பு இசுதாலின் சரியான திக்கில் செல்லவில்லை என கருதினார். அப்போது செஞ்சேனை பல மோசமான தோல்விகளை சந்திருந்தது. பின்லாந்து போரின் முழு அதிகாரம் பெற்றிருந்த போரிசு செப்போசுனிக்கோவ் டிசம்பர் இறுதியில் சோவியத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தச்சொன்னார். தாக்குதலின் பெரும்பகுதி கெரலின் திமசு பகுதியை நோக்கி திருப்பிவிடப்பட்டது. கெரலின் திமசு பகுதில் டிசம்பரை விட சனவரியில் படை நடவடிக்கை குறைவாக இருந்த போதிலும் சோவியத் அப்பகுதியிலுள்ள பாதுகாப்பு அரணை தகர்க்கும் நோக்கில் அப்பகுதியை கடுமையாக தாக்கியது. இந்நடவடிக்கையால் பின்லாந்து வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.[101] பிப்ரவரி 1 இல் சோவியத் மேலும் பலமாக தாக்கியது.[102] டிசம்பர் போல் அல்லாமல் பிப்பரவரியில் சோவியத் தனது பீரங்கி வண்டிகளை சிறிய தொகுதிகளாக அனுப்பியது. 10 நாள் கடும் தாக்குதலுக்கு பின் சோவியத் மேற்கு கெரலின் திமசு பகுதியில் வெற்றியை பெற்றது. [103] சோவியத்தின் தாக்குதலில் மேற்கு கெரலின் திமசு சிறிது சிறிதாக வீழ்ந்தது. ஆனால் கிழக்கு கெரலின் திமசு பகுதியில் பின்லாந்தியர்கள் சோவியத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டனர். [104]


அமைதி பேச்சுவார்த்தை

போர் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் பின்லாந்து மாசுக்கோவை அமைதி பேச்சுவார்த்தைக்காக தொடர் கொண்டது. மாசுக்கோ அதற்கு பதில் தெரிவிக்கவில்லை. பின்லாந்தின் பொதுவுடமை கட்சி தலைமை மாசுக்கோவுடன் பேசுவதாக கூறியது. அவர்கள் சுவிடனின் சோவியத் தூதரை சந்தித்தனர். மால்டோவ் ரய்டி-டான்னர் அரசு ஏற்றுக்கொண்டு முன்பு சோவியத் ஆதரவு பெற்றிருந்த டெரிசோக்கி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டனர்.[105] பிப்ரவரி நடுவில் பின்லாந்து வேகமாக தோல்வியை நோக்கி செல்வது தெரிந்தது. இந்தப் போரில் செஞ்சேனையினர் அதிக வீரர்களை இழந்திருந்தனர். இப்போரின் நிலையால் உருசிய அரசுக்கு அரசியல் இக்கட்டு ஏற்பட்டது, பிரித்தானிய பிரெஞ்சு அரசுகள் கூட்டாக இப்போரில் பின்லாந்துக்கு ஆதரவாக படைகளை அனுப்ப திட்டமிட்டுக்கொண்டிநத இடரையும் உருசிய அரசு சந்திக்க வேண்டியதாக இருந்தது. மேலும் வேனிற் காலமும் நெருங்கிக் கொண்டிருந்தது வேனிலில் காடுகளில் உள்ள பனி விலகி அங்குள்ள வீரர்கள் சேற்றில் அமிழும் இடரும் சேர்ந்து கொண்டது. பிப்ரவரி 12 இல் பின்லாந்து வெளியறவு அமைச்சர் சுவீடனின் தலைநகருக்கு அமைதி உடன்பாட்டின் நிபந்தைனைகளை இறுதி செய்ய விரைந்தார். அமைதிப்பேச்சுவார்த்தை நடப்பதை அறியாத செருமனி பிப்பரவரி 17 அன்று இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர கூறியது. [106] செருமனி சுவீடன் இருவரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் குறியாய் இருந்தனர். சுவீடனின் அரசர் பிப்பரவரி19 அன்று இப் போரில் சுவீடன் இராணுவம் பின்லாந்துக்கு துணையாய் வராது என்றார். பிப்பரவரி 25 அன்று சோவியத் அமைதிப்பேச்சுவார்த்தையின் நிபந்தனைகளை அறிவித்தது. பிப்பரவரி 29 அன்றி பின்லாந்து அவற்றை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.[107]

மார்ச்சில் போர் முடிவு

கெரலியா திமசில் 13 மார்ச்சு 1940 (போரின் இறுதி நாளில்) படைகளின் நிலை. [108]
  பின்லாந்திய படைகள் (XXX)
  Sசோவியத் படைகள் (XXX) & (XXXX)

மார்ச்சு 5 அன்று வீபுரியின் புறநகரப்பகுதியில் பல கிலோமீட்டர்களை சோவியத் கைப்பற்றியது. 6ந்தேதி அப்பகுதியில் சண்டை நிறுத்தம் செய்ய பின்லாந்து கூறியதை பின்லாந்து அரசுக்கு அழுத்தம் தருவதற்காக சோவியத் ஏற்க மறுத்தது. 7ந்தேதி பின்லாந்திய பேச்சுவார்த்தை குழு சுவீடன் வழியாக மாசுக்கோ விரைந்தது. 9ந்தேதி பின்லாந்திய இராணுவம் கெரலியா திமசு பகுதியில் பெரும் இழப்பை சந்தித்தாலும் பிரித்தானிய - பிரெஞ்சு இராணுவ உதவி நேரத்துக்கு கிடைக்காது என்பதாலும் நார்வேவும் சுவீடனும் மற்ற நாட்டு படைவீரர்கள் தங்கள் நாட்டு வழியே செல்ல அனுமதிப்பதில்லை என்ற முடிவாலும் சோவியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது.[109]

மாசுக்கோ அமைதி உடன்பாடு

13 மார்ச்சு 1940, 11:45 காலை வியுபுரியில் இருந்து வெளியேறும் காட்சி

மாசுக்கோ அமைதி உடன்பாடு மார்ச்சு 12,1940இல் கையெழுத்தானது. இதன் படி அடுத்த தாள் 12 மணியிலிருந்து போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. [110] உடன்பாட்டின் படி பின்லாந்து கெரலியாவின் பகுதிகளையும், கெரலியா துமசின் முழு நிலப்பரப்பையும் லடோகா ஏரிக்கு வடக்கில் உள்ள நிலங்களையும் பின்லாந்து வளைகுடாவில் உள்ள நான்கு தீவுகள், சல்லாலா பகுதியின் ஒரு பகுதி, பேரண்ட் கடலில் உள்ள ரைபாசி மூவலந் தீவு, ஆகியவை சோவியத்துக்கு கொடுக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 11% பின்லாந்து நிலப்பரப்பும் பின்வாந்தின் 30% பொருளாதார இடங்களும் ஆகும். ref name="Edwards_18" /> ஆன்கோ மூவலந்தீவு 30 ஆண்டு சோவியத் படை தளத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. சோவியத் கைப்பற்றிய பெட்சுமோ நிலப்பரப்பு பின்லாந்துக்கு அளிக்கப்பட்டது. [111]

உடன்பாட்டின் படி சோவியத்துக்கு தரப்பட்ட பின்லாந்து நிலப்பகுதி சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவை போருக்கு முன் சோவியத் கேட்டதை விட அதிகமாகும். கீழை கெரலியாவில் உள்ள ரெபோலா, போராசர்வி நிலப்பகுதிகளை சோவியத் பின்லாந்துக்கு அளித்தது. இது பின்லாந்து கேட்டதை விட இரு மடங்கு அதிகமாகும்.[112][113][114]

அயல்நாட்டு உதவி

சுவீடனில் இருந்து இரு தொகுதிகளாக 8,760 தன்னார்வலர்கள் பின்லாந்துக்காக போரிட்டார்கள். சுவீடன், நார்வே, அமெரிக்கா, அங்கேரி, நெதர்லாந்து, இத்தாலி, எசுட்டோனியா நாட்டு குடிமக்கள் தன்னார்வலர்களாக போரிட்டார்கள். மொத்தம் 12,000 தன்னார்வலர்கள் பின்லாந்துக்காக போரிட்டனர். அதில் 50 பேர் போரில் இறந்தனர்.

பிரெஞ்சு போரின் தொடக்கம் முதலே பின்லாந்துக்கு ஆதரவாக இருந்த போதிலும் அதற்கு வேறு நோக்கங்களும் இருந்தது. பிரெஞ்சு மண்ணில் போர் நடப்பதற்கு பதிலாக ஐரோப்பாவில் தூரத்தில் போர் நடப்பது நல்லது என அது எண்ணியது. பின்லாந்துக்கு உதவுவதன் மூலம் செருமனியின் நட்பு நாட்டை வலுவிழக்க செய்ய எண்ணியது. துருக்கி துணையுடன் காக்கேசிய எண்ணெய் வயல்களை தாக்கவும் திட்டமிட்டிருந்த்து.

செருமனிக்கு அதன் 40% இரும்பு தாதுக்கள் சுவீடனில் இருந்து வருவதால் இப்போரில் கலந்து கொள்வதன் மூலம் செருமனிக்கு இரும்பு தாது கிடைக்காமல் செய்ய திட்டமிட்டது.

போர் பாதிப்புகள்

105 நாட்கள் நடந்த போரினால் பின்லாந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அயல்நாட்டு உதவி குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கவில்லை, கிடைத்ததும் போரின் போது கிடைக்காமல் தாமதமாக கிடைத்தது. கெரலின் துமசில் இருந்த பின்லாந்து படைவீரர்களை பற்றி கடும் வாக்கு வாதம் நிகழ்ந்தது. போர் முடிந்ததும் பின்லாந்து 19,576 பேர் இறந்ததாக அறிவித்தது. 2005இல் மீளாய்வு செய்தததில் 25,904 பேர் இறந்ததாக அறிவித்தது. சோவியத் படைத்தலைவர்கள் இப்போரிலிருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டு படைப்பிரிவில் தேவையான மாற்றங்களை செய்தார்கள். 48,745 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997இல் கிரிகோரி 126,875 பேர் இறந்ததாக கணித்துள்ளார். 1200 இக்கும் அதிகமான பீரங்கி வண்டிகள் போரினால் அழிந்தன.

செருமனியே இப்போரினால் அரசியல் அளவில் அதிக பயன் பெற்றது. போருக்கு பின் பின்லாந்துடன் அதிகமாக நெருங்கி வந்தது. சோவியத்தின் படைநடவடிக்கை இப்போரில் மோசமாக இருந்ததால் இட்லர் சோவியத்தை தாக்கி வெற்றி கொள்ள முடியும் என எண்ணினார். பிரித்தானியா- பிரெஞ்சு கூட்டு படை திட்டமிடலில் அவர்களுக்குள் இருந்த முரணை காட்டியது.

மேற்கோள்களும் ஆதாரமும்

மேற்கோள்

ஆதாரம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பனிக்காலப்_போர்&oldid=2752892" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை