பிரான்செசு ஆர்னோல்டு

பிரான்செசு ஆமில்டன் ஆர்னோல்டு (Frances Hamilton Arnold, பிறப்பு: சூலை 25, 1956)[1] அமெரிக்க வேதிப் பொறியியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் வேதிப் பொறியியல், உயிரிப்பொறியியல், உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் பேராசிரியராக உள்ளார். நொதியங்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தமைக்காக இவருக்கு 2018 வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் வேதியியலுக்கான நோபல் பரிசு பெறும் ஐந்தாவது பெண்ணும், முதலாவது அமெரிக்கப் பெண்ணும் ஆவார்.[2][3] இவருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், ஏனைய பாதி ஜார்ஜ் சிமித், கிரெக் வின்டர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[4]

பிரான்செசு ஆர்னோல்டு
Frances Arnold
பிறப்புபிரான்செசு ஆமில்ட்டன் ஆர்னோல்டு
சூலை 25, 1956 (1956-07-25) (அகவை 67)[1]
எட்ச்வுட், பென்சில்வேனியா, அமெரிக்கா
துறைவேதிப் பொறியியல்
உயிரிப்பொறியியல்
உயிர்வேதியியல்
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) முனைவர்)
ஆய்வேடு (1985)
ஆய்வு நெறியாளர்ஆர்வி பிளாஞ்சு
அறியப்படுவதுநொதியங்களின் திசைப் படிமலர்ச்சி
விருதுகள்டிரேக்கர் பரிசு (2011)
அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் (2013)
சேக்கிலர் பரிசு (2017)
வேதியியலுக்கான நோபல் பரிசு (2018)

ஆரம்பகால வாழ்க்கை

பிரான்செஸ் ஆமில்டன் அர்னால்டு சூலை 25, 1956 இல் பிறந்தார். இவரின் தாய் ஜோசபின் இன்மான் (நீ ரூத்தோ) தந்தை, அணு இயற்பியலாளரான வில்லியம் ஹோவர்ட் அர்னால்டு ஆவர். இவர் லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் ஹோவர்ட் அர்னால்டின் பேத்தி ஆவார்.[5] இவர் பிட்ஸ்பர்க் புறநகர்ப் பகுதியான எட்ஜ்வுட் , ஷாடிசைட் மற்றும் ஸ்குரில் ஹில்லின் பிட்ஸ்பர்க் சுற்றுப்புறங்களில் வளர்ந்தார். 1974 இல் நகரத்தின் டெய்லர் ஆல்டர்டிஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[6] பின்னர் இவர் வாஷிங்டன் டி.சி.க்குச் சென்றார். மேலும் உள்ளூர் ஜாஸ் சங்கத்தில் ஒரு பணியாளராகவும், ஒரு வண்டி ஓட்டுநராகவும் பணியாற்றினார்.[7]

அர்னால்ட் 1979 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் பி.எஸ் பட்டம் பெற்றார். அங்கு இவர் சூரிய ஆற்றல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்.[8]இத்தாலிக்குச் சென்று அணுக்கரு உலை பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது பிரின்ஸ்டன் பலகலைக் கழகத்தில் இருந்து ஒரு வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டார்.பின்னர் தனது படிப்பை முடிக்க திரும்பினார். [9] மீண்டும் பிரின்ஸ்டனில், இவர் பிரின்ஸ்டனின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான மையத்துடன் இணைந்து படிக்கத் தொடங்கினார்.ராபர்ட் சோகோலாவின் தலைமையில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய அந்தக் குழு நிலையான எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குவதற்காகப் பணிபுரிந்தது.

1979 இல் பிரின்ஸ்டனில் பட்டம் பெற்ற பிறகு, அர்னால்ட் தென் கொரியா மற்றும் பிரேசில் மற்றும் கொலராடோவின் சூரிய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். [10] சூரிய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சூரிய ஆற்றல் வசதிகளை வடிவமைப்பதில் பணியாற்றினார். தற்போது இந்த நிறுவனம் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகமாகச் செயல்படுகிறது.தொலைதூர இடங்களுக்கான சூரிய ஒளி சக்திகளை அளிப்பதற்கான பணிகளில் இவர் ஈடுபட்டு வந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) நிலை ஆவணங்களை எழுத உதவினார். [11]

பின்னர் இவர் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் 1985 ஆம் ஆண்டில் வேதியியல் பொறியியலில்முனைவர் பட்டம் பெற்றார் [12] அந்த ஆய்வின் போது உயிர் வேதியியலில் ஆழ்ந்த ஆர்வம் காட்டினார். [13] [14] ஹார்வி வாரன் பிளாஞ்சின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட இவரது ஆய்வறிக்கையானது வண்ணப்படுவுப்பிரிகை உத்தியின் உறவு பற்றி ஆராய்ந்தது. [15]

தனிப்பட்ட வாழ்க்கை

அர்னால்ட் கலிபோர்னியாவின் லா கசாடா பிளின்ட்ரிட்ஜில் வசிக்கிறார். இவர் ஜேம்ஸ் ஈ. பெய்லியை மணந்தார்.2001 ஆம் ஆண்டில் இவர் புற்றுநோயால் இறந்தார். [16] [17] இவர்களுக்கு ஜேம்ஸ் பெய்லி என்ற மகன் இருந்தான். [18] அர்னால்டுக்கு 2005 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.பின்னர் 18 மாதங்களுக்கு சிகிச்சை பெற்றார். [19] [20]

அர்னால்ட் 1994 இல் கால்டெக் வானியற்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ ஈ. லாங்கேவை மணந்தார், இவர்களுக்கு வில்லியம் மற்றும் ஜோசப் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். [21] [22] லாங்கே 2010 இல் தற்கொலை செய்து கொண்டார், இவர்களது மகன்களில் ஒருவரான வில்லியம் லாங்கே-அர்னால்ட் 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இறந்தார். [23]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை