பிரேசர் இசுட்டோடார்ட்டு

சர் சேம்சு பிரேசர் இசுட்டோடார்ட்டு (Sir James Fraser Stoddart, பிறப்பு: மே 24, 1942[2]) ஓர் இசுக்காட்டுலாந்திய வேதியியல் அறிஞர். இவர் தற்பொழுது (as of 22 மார்ச்சு 2014) அமெரிக்காவின் வடகிழக்குப் பல்கலைக்கழக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார்[5] இவர் பெருமூலக்கூற்று வேதியியல் (supramolecular chemistry) துறையிலும் நானோதொழினுட்பத் துறையிலும் ஆய்வு செய்கின்றார். இசுட்டோடார்ட்டு அவர்கள் புறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள் அமைப்பதிலும், அதுவும் பயன்திறன்மை முறையில் அமைப்பதிலும் புகழீட்டியுள்ளார். இவற்றுள் மூலக்கூற்றுப் போரோமிய வளையங்கள், காட்டனேன்கள் (catenanes), உரோட்டாசேன் (rotaxane) குறிப்பிடத்தக்கன. மூலக்கூறுகளைத் தானாகவுணர்ந்து தாமாக கட்டமைத்துக்கொள்ளும் தன்மைகளைப் பயன்படுத்தி இவை அமைகக்ப்பெறுகின்றன. இந்த இடவியல் அமைப்புகளைப் பயன்படுத்தி மூலக்கூறு தொடுப்பிகள் (molecular switches), மூலக்கூற்று நகர்வியக்கிகள் (motor-molecules) செய்யமுடியும் எனக் காட்டியுள்ளார்.[6] இவருடைய ஆய்வுக்குழு இவற்றைப் பயன்படுத்தி நானோ நுண்மின்கருவிகளையும், நானோ மின்னகர்விய ஒருங்கியங்களையும் (nanoelectromechanical systems, NEMS) செய்துகாட்டியுள்ளது.[7] இவருடைய ஆய்வுச்செயற்பாடுகள் பல பரிசுகளையும் பெருமைகளையும் ஈட்டுத்தந்துள்ளது. 2007 இல் இவருக்கு அறிவியலுக்கான அரசர் பைசல் அனைத்துலகப் பரிசு [King Faisal International Prize)[8][9] வழங்கப்பெற்றது. 2016 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் பெர்னார்டு பெரிங்கா, இழான் பியர் சோவாழ்சு ஆகியோருக்குமாகச் சேர்த்து வழங்கப்பெற்றது.[1][10][11][12]

சர் பிரேசர் இசுட்டோடார்ட்டு
Sir Fraser Stoddart
பிறப்புசேம்சு பிரேசர் இசுட்டோடார்ட்டு
24 மே 1942 (1942-05-24) (அகவை 81)
எடின்பர்கு, இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
வாழிடம்ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா
தேசியம்பிரித்தானியர்
துறைபெருமூலக்கூறு வேதியியல்
பணியிடங்கள்குயின்சு பல்கலைக்கழகம் (1967–70)
செஃபீல்டு பல்கலைக்கழகம் (1970–1990)
பர்மிங்காம் பல்கலைக்கழகம் (1990–1997)
கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலசு (1997–2008)
நார்த்துவெசிட்டர்ன் பல்கலைக்கழகம் (2008– )
கல்வி கற்ற இடங்கள்எடின்பர்கு பல்கலைக்கழகம் (B.S., 1964, Ph.D., 1966)
ஆய்வு நெறியாளர்எடுமண்டு இலாங்கிலி கிர்சிட்டு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
தாவீது இலை
அறியப்படுவதுபுறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள்
விருதுகள்
  • வேந்தியக் குமுகப் பேராளர் (1990)
  • வேந்தியக் குமுகப் பேராளர், எடின்பர்கு
  • Knight Bachelor (2007)
  • ஆல்பர்ட்டு ஐசுட்டீன் உலக அறிவியல் விருது (2007)
  • தேவி பதக்கம் (2008)
  • வேதியியலுக்கான நோபல் பரிசு (2016)
[1]
துணைவர்
Norma Agnes Scholan
(தி. 1968; her death 2004)
[2][3][4]
பிள்ளைகள்2[2]
இணையதளம்
stoddart.northwestern.edu
இசுட்டோடார்ட்டு அறிவித்த பெருவளையத்துடனான (cyclobis(paraquat-p-phenylene) macrocycle) உரோட்டோக்சேன் (rotaxane) கட்டமைப்பு. (Eur. J. Org. Chem. 1998, 2565–2571.)
இசுட்டோடார்ட்டு அறிவித்த பெருவளையத்துடனான (cyclobis(paraquat-p-phenylene) macrocycle) காட்டனேனின் (catenane) கட்டமைப்பு (Chem. Commun., 1991, 634–639.)
இசுட்டோடார்ட்டு அறிவித்த மூலக்கூற்றுப் போரோமிய வளையங்களின் கட்டமைப்பு (Science 2004, 304, 1308–1312.)

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை