பென் பெரிங்கா

பென் பெரிங்கா அல்லது பெர்னார்டு இலூக்காசு பெரிங்கா (Bernard Lucas "Ben" Feringa, டச்சு ஒலிப்பு: [ˈbɛrnɑrt ˈlykɑs ˈbɛn ˈfeːrɪŋɣaː], பிறப்பு: மே 18, 1951) ஓர் கரிம வேதியியலாளர். இவர் மூலக்கூற்று நானோ நுட்பியலிலும் ஒரே நிலைமுகம் கொண்ட தூண்டலியலிலும் (homogenous catalysis) சிறப்பான ஆய்வுக்குவியம் கொண்டவர். இவர் நெதர்லாந்தில் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் இசுற்றாடிங்குக் கழகத்தில் வேதியியல் துறையில் மூலக்கூற்று அறிவியல் பிரிவில் யாக்கோபசு வான்.ட்டு கோஃபு (Jacobus Van't Hoff) சிறப்பெய்திய பேராசிரியராக இருக்கின்றார்[2][3][4]. இது தவிர நெதர்லாந்திய வேந்திய அறிவியல் அக்காதெமியில் பேராசிரியராகவும் அறிவியல் ஆயத்தின் தலைவராகவும் இருக்கின்றார்.[5] இவர் 2016 ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை மூலக்கூற்று இயந்திரங்களுக்காக இழான் பியர் சோவாழ்சு, பிரேசர் இசுட்டோடார்ட்டு ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.[1][6]

பென் பெரிங்கா
பிறப்புபெர்னார்டு
இலூக்காசு பெரிங்கா
Bernard Lucas Feringa
மே 18, 1951 (1951-05-18) (அகவை 72)
பார்கர்-கொம்பாசுக்குவம்,
நெதர்லாந்து
வாழிடம்குரோனிங்கன் நெதர்லாந்து
தேசியம்இடச்சு (நெதர்லாந்தியர்)
துறைகரிம வேதியியல்
பொருள் அறிவியல்
நானோ நுட்பவியல்
ஒளிவேதியியல்
பணியிடங்கள்குரோனிங்கன்
பல்கலைக்கழகம், 1984-தற்பொழுதுவரை
இரோயல் இடச்சு செல்,
1979-1984
கல்வி கற்ற இடங்கள்குரோனிங்கன்
பல்கலைக்கழகம், PhD
குரோனிங்கன்
பல்கலைக்கழகம், BS
ஆய்வேடுபீனால்களின் சமனற்ற ஆக்சிசனேற்றம்.
அட்ரோபிசோமரிசம்
மற்றும் ஒளி இயக்கம்
 (1978)
ஆய்வு நெறியாளர்பேராசிரியர் அன்சு வியின்பெர்கு
அறியப்படுவதுமூலக்கூற்றுத் தொடுப்பி
(மூலக்கூற்று நகர்வியக்கி,
ஒரே நிலைமுகம் கொண்ட தூண்டலியல்,
ஒத்தொருங்கு வேதியியல், ஓளிவேதியியல்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2016)[1]
துணைவர்பெட்டி பெரிங்கா
இணையதளம்
benferinga.com
மூலக்கூறு அளவினான மகிழுந்து. நானோ மகிழுந்து. இவ்வண்டியின் சக்கரங்கள் கரிமக் கூண்டு (C60 ) போன்ற புல்லரீன் மூலக்கூறு[7]

இவருடைய மூலக்கூறு அளவினதாகிய தொடுப்பி (switch), புறவயமாக நகரும் அமைப்புடைய மூலக்கூறு போன்ற ஆய்வின் பயனாய் மின்னாற்றலால் நிறம் மாறக்கூடிய கருவி, மருந்தை செலுத்தக்கூடிய, ஒளியின் இயக்கத்தால் நிலைமாறக்கூடிய, புரத ஓடை (protein channel) போன்ற பற்பல ஒளியியக்கத்தால் மூலக்கூறளவில் மாற்றம் செய்யக்கூடிய முற்றிலும் புதிய இயக்கங்களை அமைக்க இயலுகின்றது.[8][9]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பென்_பெரிங்கா&oldid=3915211" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை