பெயரடை

சொற்றொடரின் பகுதியான இவை பெயர் அல்லது சுட்டுப்பெயரினை விளக்குகின்றது.

பெயரடை (adjective சுருக்கமாக adj.) என்பது ஒரு பெயர்ச்சொல் அல்லது பெயர்த் தொடரை விவரிக்கும் அல்லது வரையறுக்கும் ஒரு சொல் ஆகும். பெயர்ச்சொல்லால் கொடுக்கப்பட்ட தகவல்களை மாற்றுவதே இதன் சொற்பொருள் பங்காகும்.

பாரம்பரியமாக பெயரடைகள், சொற்களின் வகைகளில் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன, இருப்பினும் வரலாற்று ரீதியாக அவை பெயர்ச்சொற்களுடன் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டன.[1] தற்போதைய காலகட்டங்களில், அந்த, இது, என்னுடைய.... உள்ளிட்ட சில சொற்கள் பெயரடைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், இவை இனஞ்சுட்டிகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

சில உதாரணங்கள்

  • இது ஒரு வேடிக்கையான யோசனை. (முன்பெயரடை)
  • அந்த யோசனை வேடிக்கையானது. (பின் பெயரடை)
  • ஏதேனும் ஒரு வேடிக்கையான யோசனையினைக் கூறு. (பின்வரு பெயரடை)
  • நல்லவை, கெட்டவை, வேடிக்கையானவை. (பெயராக்கப் பெயரடை)

சொற்பிறப்பியல்

பெயரடை எனும் சொல் இலத்தீனின் nōmen adjectīvum,[2] பண்டைக் கிரேக்கம்ἐπίθετον ὄνομα (surname) epítheton ónoma "additional noun" எனும் பெயர்ப்புறு கடன்சொல்லில் இருந்து வந்தது, நேரடி மொழிபெயர்ப்பு 'கூடுதல் பெயர்ச்சொல்' (ஆங்கில அடைமொழிச் சொல்லாக இருக்கும் போது).[3][4] இலத்தீன் மற்றும் கிரேக்க இலக்கணப் பாரம்பரியத்தில், பெயரடைகளானது, பாலினம், எண், பெயர்ச்சொற்களுக்கு மாற்றப்பட்டதால் (வேற்றுமையுருபு) இவை ஒரு வகைப் பெயர்ச்சொல்லாகக் கருதப்பட்டன. இன்று பொதுவாக பெயர்ச்சொற்கள் என்று அழைக்கப்படும் சொற்கள் முன்பு அசல் பெயர்ச்சொற்கள் என அழைக்கப்பட்டன (nōmen substantīvum).[5] இவை, அசல் பெயர்ச்சொல் மற்றும் பெயர்ச்சொல் பெயரடை என்று முன்னர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது இவை வழக்கற்றுப் போய்விட்டன.[6]

பயன்பாட்டு வகைகள்

மொழியைப் பொறுத்து, ஒரு பெயரடையானது தொடர்புடைய பெயர்ச்சொல்லுக்கு முன் பெயரடையாகவோ அல்லது பின் பெயரடையாகவோ வரலாம். கட்டமைப்பு, சூழல், பாணி கருத்தாய்வுகள் ஆகியன ஒரு பெயரடை நிகழ்வின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் அதன் முன் அல்லது பிந்தைய நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆங்கிலத்தில், பெயரடை நிகழ்வுகளை பொதுவாக மூன்று பிரிவுகளில் ஒன்றாக வகைப்படுத்தலாம்.

  • "பண்புக்கூறுப் பெயரடைகள்" எனவும் அழைக்கப்படும் முன் பெயரடைகளை, பெயர்ச்சொல் சொற்றொடர்களுக்குள் முன்மை நிகழ்வாக நிகழ்கின்றன.[7] எடுத்துக்காட்டாக: "நான் என் மகிழ்ச்சியான குழந்தைகளை காரில் ஏற்றுகிறேன்", இதில் மகிழ்ச்சியானது பெயர்ச்சொல் சொற்றொடருக்குள் ஒரு முந்தைய அடிப்படையில் நிகழ்கிறது.
  • பின்னொட்டுப் பெயர்ச்சொற்கள்: ஒரு பெயர்ச்சொல் சொற்றொடருக்குள் ஒரு பெயர்ச்சொல்லுக்கு உடனடியாக அடுத்ததாக வரலாம். எ. கா. "என் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இங்கு மகிழ்ச்சி என்பது பின் பெயரடையாக வந்துள்ளது.[8]
  • பெயர்ச்சொற்களாக செயல்படும் பெயராக்கப் பெயரடை. எடுத்துக்காட்டு: "நான் அவர்களுக்கு இரண்டு புத்தகங்களைக் கொடுத்தேன். அவர் சோகமான புத்தகத்தை விரும்பினார், ஆனால் அவள் மகிழ்ச்சியானதை விரும்பினாள்" இங்கு மகிழ்ச்சியானது என்பது மகிழ்ச்சியான புத்தகத்தைக் குறிக்கிறது.

வடிவம்

பல மொழிகளில், பண்புக்கூறு பெயரடைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வரிசையில் நிகழ்கின்றன. பொதுவாக, ஆங்கிலத்தில் பெயரடை பயன்படுத்தப்படுபவை பின்னருமாறு: கருத்து, அளவு, வயது அல்லது வடிவம், நிறம், தோற்றம், பொருள், நோக்கம்.[9][10][11]

  1. கருத்து - வரம்புக்குட்பட்ட பெயரடைகள் (எ. கா. ஒரு உண்மையான நாயகன், ஒரு சரியான முட்டாள்) மதிப்பு (நல்ல, கெட்ட)
  2. அளவு - இயற்பியல் அளவைக் குறிக்கும் பெயரடைகள் (எ. கா. சிறிய, பெரிய, விரிவான)
  3. வடிவம் அல்லது உடல் தரம் - ஒட்டுமொத்த அளவை விட விரிவான உடல் பண்புகளை விவரிக்கும் பெயரடைகள் (எ. கா. சுற்று, கூர்மையான, வீங்கிய, மெல்லிய)
  4. வயது - வயதைக் குறிக்கும் பெயரடைகள் (எ. கா. இளம், பழைய, புதிய, பண்டைய, ஆறு வயது)
  5. நிறம் - நிறம் அல்லது வடிவத்தைக் குறிக்கும் பெயரடைகள் (எ. கா. வெள்ளை, கருப்பு, வெளிர்)
  6. தோற்றம் - மூலத்தைக் குறிக்கும் பெயரளவுப் பெயரடை (எ. கா. சப்பானிய, எரிமலை, வேற்றுக் கிரக)
  7. பொருள் - எதன் மூலமாக தயாரிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் பெயரிடல் பெயரடை (எ. கா. கம்பளி, உலோகம், மர)
  8. தகுதி/நோக்கம் - இது சில நேரங்களில் கூட்டுப் பெயர்ச்சொல்லாகப் பயன்படுகிறது. (எ.கா: பயனணிகள் பேருந்து, புத்தக அட்டை)

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெயரடை&oldid=3923261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை