மாந்தக் கடத்துகை

மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வணிக நோக்கத்திற்காக, குறிப்பாக கடத்துபவர் அல்லது மற்றவர்களின் பாலியல் அடிமைகள், கொத்தடிமைகள் ஆக வைக்க அல்லது பாலியல் தொழிலில் உட்படுத்துவதற்காகக் கடத்துவதாகும்.[1][2] கட்டாயத் திருமணம் புரியும் நோக்கத்துடன் மனிதர்களைக் கடத்துவதும் இதன் பாற்படும்.[3][4][5] இது தவிர, உறுப்புகள் மற்றும் திசுக்களை களவாடும் பொருட்டு கடத்துவதும்,[6][7] மற்றும் வாடகைத் தாயாக பயன்படுத்துவதற்காக மற்றும் கருப்பையைத் திருடுவதற்காக பெண்களைக் கடத்துவதும் மாந்தக் கடத்துகை ஆகும்.[8] மாந்தக் கடத்துகையானது குறிப்பட்ட நாட்டினுள்ளும் அல்லது நாடுகளுக்கிடையேயும் நடைபெறலாம். இது கடத்தப்படும் மனிதருக்கெதிரான குற்றமாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் கடத்தப்படுபவரின் இருப்பிட விருப்புரிமையானது, அவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு வணிகப் பொருளாகப் பாவிப்பதின் மூலம் மீறப்படுகிறது. மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வைத்துச் செய்யும் வணிகமாகும். எனவே, ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லாமல், வணிகப் பொருளாகப் பாவிக்கப்பட்டாலும் அதுவும் மாந்தக் கடத்துகை என்றே கருதப்படுகிறது. மாந்தக் கடத்துகையானது உலக அளவில் தோராயமாக ஆண்டுக்கு 31.6 பில்லியன் டாலர் அளவு பெருமானமுள்ள ஒரு வணிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9]நாடுகளுக்கிடையேயான குற்றவாளிகளிடையே வளர்ந்து வரும் முக்கிய குற்றங்களில் ஒன்றாக மாந்தக் கடத்துகை கருதப்படுகிறது.[10]இது உலக அளவில் ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறது.[11]

அமெரிக்க & ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தல்

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற நினைப்பவர்களை, கடத்தல்காரர்கள் பலமடங்கு தொகை வசூலித்து, முறையற்ற முறைகளில் அழைத்துச் செல்கின்றனர்.[12][13]

வெளி இணைப்புகள்

உசாத்துணைகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாந்தக்_கடத்துகை&oldid=3851951" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை