முதல் துருக்கியக் ககானரசு

முதல் துருக்கியக் ககானரசு[10] (First Turkic Khaganate) என்பது கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவான அசீனா இனத்தவர்களால் நிறுவப்பட்ட ஒரு துருக்கியக் கானரசு ஆகும். இது நடுக்கால உள் ஆசியாவில் பூமின் ககான் மற்றும் அவரது சகோதரர் இசுதமியின் தலைமைத்துவத்தின் கீழ் நிறுவப்பட்டது. மங்கோலியப் பீடபூமியில் ஆதிக்கம் வாய்ந்த சக்தியான உரூரன் ககானரசுக்குப் பிறகு முதல் துருக்கியக் ககானரசு வந்தது. இந்த அரசு நடு ஆசியாவில் தனது பகுதிகளை வேகமாக விரிவாக்கியது. கண்டங்களில் பரவி இருந்த முதல் நடு ஆசியப் பேரரசாக இது திகழ்ந்தது. மஞ்சூரியா முதல் கருங்கடல் வரை பரவியிருந்தது.[4]:49[11]

முதல் துருக்கியக் ககானரசு
552–603
பொ. ஊ. 576இல் இதன் உச்ச பட்ச பரப்பளவின் போது முதல் துருக்கியக் ககானரசு.
பொ. ஊ. 576இல் இதன் உச்ச பட்ச பரப்பளவின் போது முதல் துருக்கியக் ககானரசு.
நிலைகானரசு (நாடோடிப் பேரரசு)
தலைநகரம்
  • ஒதுகென் (கிழக்கு)
  • சுயப் (மேற்கு)
பேசப்படும் மொழிகள்
  • பழைய துருக்கியம் (அலுவல், அரசமரபு மற்றும் பொது மொழி)[2][3][4]:37
  • சோக்தியம் (அலுவல், தூதரகம், நாணய மொழி)[5][6]
  • ருவான்ருவான் (அலுவல் மொழி)[7]
சமயம்
தெங்கிரி மதம்
மக்கள்துருக்
துர்க்
ககான் 
• 552
பூமின் ககான் (முதல்)
• 599–603
தர்து (கடைசி)
யப்கு 
• 552–575
இசுதமி (முதல்)
• 575–599
தர்து (கடைசி)
வரலாற்று சகாப்தம்பிந்தைய பாரம்பரியம்
• உரூரன் ககானரசுக்கு எதிராக பூமின் ககான் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்
542
• தொடக்கம்
552
• கோக் துருக்கிய உள்நாட்டுப் போர்
581
• குறுகிய காலத்திற்கு மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது
603
• மேற்கு மற்றும் கிழக்கு துருக்கியக் ககானரசுகளாகப் பிரிகிறது
603
பரப்பு
557[8][9]6,000,000 km2 (2,300,000 sq mi)
முந்தையது
பின்னையது
உரூரன் ககானரசு
ஹெப்தலைட்டுகள்
கிழக்கு துருக்கியக் ககானரசு
மேற்கு துருக்கியக் ககானரசு

கோக் துருக்கியர்கள் பழைய துருக்கிய மொழியைப் பேசிய போதிலும், ககானரசின் ஆரம்பகால அலுவல் ரீதியான நூல்கள் மற்றும் நாணயங்கள் சோக்திய மொழியைப் பயன்படுத்தின.[5][12] அரசியல் ரீதியாகத் துருக்கியர் என்ற பெயரைப் பயன்படுத்திய முதல் துருக்கிய அரசு இது தான்.[13] பழைய துருக்கிய எழுத்துமுறை 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது.[14][15]

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை