மைக்கேல் வாரன் யங்

மைக்கேல் வாரன் யங் (பிறப்பு மார்ச் 28, 1949) ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் உயிர்பியலாளர். டிராசோபிலா என்றழைக்கப்படும் ஈக்களின் தூக்கம் மற்றும் விழித்திருப்பதற்கு காரணமாக இருக்கும் மரபணுக்கள் குறித்து சுமார் மூன்று தசாப்பதங்கள் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அவர் வாழநாளை அர்ப்பணித்தார்.[2] அவர் ராக்ஃபெள்ளர் பல்கலைகழகத்தில் இருந்த காலத்தில், அவருடைய ஆய்வுக்கூடம் குறிப்பிட்ட வகையில் உயிர் கடிகாரம் சம்பந்தமான மரபனுக்கலை கண்டறிவதில் மரபு உயிரியல் துறையில் ஒரு சிறப்பான பங்களிப்பை வழங்கியது. மேலும் அவரால் ஈக்களின் சாதாரண தூக்கச் சுழற்சிகளை காரணமாக இருக்கும் கால மரபணுவின் சீரான சுழற்சி செயல்பாட்டை தெளிவுபடுத்த முடிந்தது, யங்கின் ஆய்வுக்கூடம் காலமற்ற மற்றும் இரட்டை நேர மரபணுக்களின் சீரான சுழற்சிக்கு காரணமானக இருக்கும் புரதங்களின் அவசியத்தை கண்டுபிடிக்க உதவியது.  ஜெஃப்ரி ச.ஹால் மற்றும் மைக்கேல் ரோபாஸ் உடன் இனைந்து யங் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார். [3][4]

மைக்கேல் W. யங்
மைக்கேல் வாரன் யங்,நோபல் பரிசி விழாவில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017
பிறப்புமைக்கேல் வாரன் யங்
மார்ச்சு 28, 1949 (1949-03-28) (அகவை 75)
மயாமி, புளோரிடா, அமெரிக்கா
துறைபரபணூயிரியல்
உயிரியல்
பணியிடங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
ஸ்டான்போர்டு மருத்துவ பல்கலைக்கழகம்
ராக்பெள்ளர் பல்கலைக்கழகம்
கல்விடெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) (B.A., PhD[1])
ஆய்வு நெறியாளர்Burke Judd
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Leslie B. Vosshall
அறியப்படுவதுசீரான உயிர்மரபணு சுழற்சி
விருதுகள்நோபல் பரிசு (2017)

வாழ்க்கை

ஆரம்ப வாழ்க்கை

மைக்கேல் வாரன் யங் புளோரிடா, மயாமியில் மார்ச் 28, 1949 ஆம் ஆண்டு பிறந்தார்.[5] இவருடைய தந்தை ஒலின் மாதீசன் இராசயன் நிறுவனத்தில் அலுமினிய இங்கட் விற்பனை அதிகாரியாக தென் கிழக்கு அமெரிக்காவில் பணிபுறிந்தார். இவரது தாய ஒரு சட்ட அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்தார். ஆகயால் அவர் எந்தவொரு அறிவியல் பின்புலம் இல்லாத குடும்ப சூழலில் இருந்து வந்தாலும் அவரது பெற்றோர் இவரின் அறிவியல் ஆர்வத்தை புறிந்து அவருக்கு எல்லா வகையில் ஊக்கமளிப்பவராக இருந்தனர்.[6]

அவரது குடும்பம் பின்னாளில் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர்.[2] அங்கு இவர் L.D.பெல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[7] அவரது இளம் பருவத்திலேயே, மைக்கேலின் பெற்றோர்கள் அவரை பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் மர்மங்கள் பற்றிய டார்வினின் புத்தகங்களில் ஒன்றை பரிசாக அளித்தனர். அதன் மூலம் அவருக்கு உயிர்பியலில் ஆர்வம் அதிகமானது.[6]

திருமண வாழ்க்கை

டெக்சாஸ் பல்கலைகழகம் இளங்கலை பட்டப்படிப்பு மாணவராக இருந்த சமயத்தில் தனது எதிர்கால மனைவி லாரல் எக்கார்டை சந்தித்தார். பின்னர் இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மாறினர். அங்கு மைக்கேல் முனைவர் பட்டத்திற்குப் பிந்தய ஆய்வாளராக சேர்ந்தார் மற்றும் அவரத மனைவி அங்கு லென் ஹெசன்பர்க்கிடம் ஆய்வு மாணவராக சேர்ந்தார். இவர்களுக்கு நாடாலி மற்றும் அரிசா என் இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு.[6]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மைக்கேல்_வாரன்_யங்&oldid=3568949" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை