யூசேபியஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை

திருத்தந்தை யூசேபியஸ் (Pope Saint Eusebius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 309 ஏப்பிரல் 18ஆம் நாளிலிருந்து 309 அல்லது 310 ஆகத்து 17ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் முதலாம் மர்செல்லுஸ் என்பவர்.[2] திருத்தந்தை யூசேபியஸ் கத்தோலிக்க திருச்சபையின் 31ஆம் திருத்தந்தை ஆவார்.[3]

  • எஉசேபியோஸ் (பண்டைக் கிரேக்கம்Εὐσέβιος; இலத்தீன்: Eusebius) என ஒலிக்கும் கிரேக்கப் பெயருக்கு "பக்தர்", "அடியார்" என்பது பொருள். அது எஉ (εὖ = நன்கு), செபெய்ன் (σέβειν = மதித்தல்) என்னும் கிரேக்கச் சொற்களை மூலமாகக் கொண்டது.
திருத்தந்தை யூசேபியஸ்
Saint Eusebius
31ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்ஏப்பிரல் 18, 309
ஆட்சி முடிவுஆகத்து 17, 309 அல்லது 310
முன்னிருந்தவர்முதலாம் மர்செல்லுஸ்
பின்வந்தவர்மில்த்தியாதேஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்யூசேபியஸ்
(Eusebius)
பிறப்புதெரியவில்லை
சார்தீனியா
இறப்பு310
சிசிலி, மேற்கு உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாசெப்டம்பர் 26
ஏற்கும் சபைஉரோமன் கத்தோலிக்கம்; மரபுவழித் திருச்சபை
பகுப்புஆயர், திருத்தந்தை

யூசேபியசின் பணிக்காலம்

திருத்தந்தை யூசேபியஸ் பற்றிய குறிப்புகள் திருச்சபையின் 37ஆம் திருத்தந்தையான முதலாம் தாமசுஸ் என்பவர் பொறித்த கல்லறைக் கல்வெட்டிலிருந்து தெரியவருகின்றன. அதன்படி, திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் காலத்தில் இருந்த நிலை யூசேபியஸ் ஆட்சியின்போதும் தொடர்ந்தது.[4]

தியோக்ளேசியன் மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்தியபோது அவர்களுள் பலர் தம் உயிரைக் காக்கும் பொருட்டு கிறித்தவ மதத்தை மறுதலித்திருந்தனர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கலாமா என்பது பெரிய பிரச்சினை ஆயிற்று. சிலர் தவறிப்போன கிறித்தவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கக்கூடாது என்று வாதாடினர். சிலர் அவர்களை நிபந்தனையின்றி ஏற்கவேண்டும் என்றனர். மேலும் சிலர் தவறிழைத்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றுக்கு மனம் வருந்தி, தகுந்த ஒறுத்தல் முயற்சி மேற்கொண்டால் அவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கலாம் என்றனர். இக்கருத்தைத் திருத்தந்தை யூசேபியஸ் ஆதரித்தார்.

ஆனால் ஹெராக்ளியஸ் என்றொருவரும் அவருடைய குழுவினரும் யூசேபியசின் அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்தனர். திருச்சபையை விட்டுச் சென்றவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதாடியதாகத் தெரிகிறது. இதனால் கட்சிப் பிளவுகளும் பெரும் குழப்பமும் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. பலர் உயிரிழந்தனர். நாட்டில் ஒழுங்கு ஏற்படுத்தும் சாக்கில் மக்சேன்சியுஸ் மன்னன் ஹெராக்ளியசையும் யூசேபியசையும் சிசிலித் தீவுக்கு நாடு கடத்தினான். வன்முறையைப் பயன்படுத்தி குழப்பத்தை அடக்கினான்.

இறப்பும் திருவிழாவும்

நாடுகடத்தப்பட்ட நிலையில் யூசேபியஸ் இறந்தார். அவர் இறந்த நாள் 309 (அல்லது) 310, அக்டோபர் 21 என்று கணிக்கப்படுகிறது. வத்திக்கான் பட்டியல் கணிப்புப்படி, அவர் 309/310 ஆகத்து 17ஆம் நாள் இறந்தார்.

அவருடைய உடல் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டு, கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

புனித யூசேபியசின் திருவிழா செப்டம்பர் 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
யூசேபியஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
முதலாம் மர்செல்லுஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

309–310
பின்னர்
மில்த்தியாதேஸ்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை