விக்டோரியா, சீசெல்சு

விக்டோரியா அல்லது விக்டோரியா துறைமுகம் (Victoria) சீசெல்சின் தலைநகரமும், மாஹே தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுப்பகுதியும் ஆகும். முதன்முதலாக பிரித்தானியக் குடியேற்ற அரசு இந்த நகரில் ஏற்படுத்தப்பட்டது. 2010 இல், நாட்டின் மொத்த மக்கள் தொகை 90,945 ஆகும். இதில் விக்டோரியா நகரத்தின் மக்கள் தொகை (புறநகர் உட்பட) 26,450. [2]

விக்டோரியா
Skyline of விக்டோரியா
அடைபெயர்(கள்): விக்டோரியா துறைமுகம்
மாகே தீவில் விக்டோரியாவின் அமைவிடம்
மாகே தீவில் விக்டோரியாவின் அமைவிடம்
நாடுசீசெல்சு
தீவுமாகே
பரப்பளவு
 • மொத்தம்20.1 km2 (7.8 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்26,450

விக்டோரியாவின் முக்கிய ஏற்றுமதி வெனிலா, தேங்காய், தேங்காய் எண்ணெய், மீன் மற்றும் கடற் பறவைகளின் எச்சத்தில் உருவாக்கப்படும் இயற்கை உரம் ஆகும்.[3]

இலண்டனில் உள்ள வாக்ஸ்ஹால் கடிகார கோபுரம் போன்று, வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு விக்டோரியா நகருக்கு ஈர்ப்பினைத் தருகின்றது.

விக்டோரியா மணிக்கூண்டு

இந்நகரத்தில் ஒரு தேசிய விளையாட்டரங்கு, சீசெல்சு பன்னாட்டுப் பள்ளி மற்றும் ஒரு பலதொழில்நுட்பப் பயிலகமும் உள்ளது. 1971 இல் கட்டி முடிக்கப்பட்ட, சீசெல்சு பன்னாட்டு விமான நிலையம் விக்டோரியா நகரத்தில் பயன்பாட்டில் உள்ளது.[3] நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் உள்துறைமுகம் சூரை மீன் பிடிதொழிலுக்கும், பதப்படுத்துதல் தொழிலுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. 2004 இல் இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் விக்டோரியாவின் மிகப்பெரிய பாலம் ஒன்று அழிந்துவிட்டது.[4]

வரலாறு

1756 இல் பிரான்சு உரிமை கொண்டாடி அதன் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த இப்பகுதி 1778 இல் விக்டோரியா பகுதியானது. 1814 பாரிசு உடன்படிக்கையின் படி இன்றைய நவீன விக்டோரியா பிரித்தானியர்களால் நிறுவப்பட்டது.[5][6]

மாவட்டங்கள்

சீசெல்சின் மூன்று மாவட்டங்களின் பகுதிகளை விக்டோரியா கொண்டுள்ளது:

  1. ஆங்கிலம் நதி (La Rivière anglaise) (ஆழ்மனதின் பகுதி)
  2. செயின்ட் லூயிஸ்
  3. மோண்ட் பிலெரி

மேற்கண்ட மூன்றைத் தவிர சீசெல்சுவின் 25 மாவட்டங்களில் கீழ்கண்ட ஐந்து மாவட்டங்களும் உள்ளடங்கியுள்ளது.

  • மோண்ட் பக்ஸ்டன்
  • பெல் ஏர்
  • ரோச் கேமென்
  • லெஸ் மமிலெஸ்
  • பிலாய்சன்ஸ்

இரட்டை நகரங்கள் மற்றும் சகோதரி நகரங்கள்

விக்டோரியா பின்வரும் நகரங்களின் சகோதரி நகராக உள்ளது.

நாடுநகரம்
சீபூத்தீ குடியரசு சீபூத்தீ (நகரம்)
வியட்நாம்ஹனோய்[7]

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், விக்டோரியா (விமானநிலையம்)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)29.8
(85.6)
30.4
(86.7)
31.0
(87.8)
31.4
(88.5)
30.5
(86.9)
29.1
(84.4)
28.3
(82.9)
28.4
(83.1)
29.1
(84.4)
29.6
(85.3)
30.1
(86.2)
30.0
(86)
29.8
(85.6)
தினசரி சராசரி °C (°F)26.8
(80.2)
27.3
(81.1)
27.8
(82)
28.0
(82.4)
27.7
(81.9)
26.6
(79.9)
25.8
(78.4)
25.9
(78.6)
26.4
(79.5)
26.7
(80.1)
26.8
(80.2)
26.7
(80.1)
26.9
(80.4)
தாழ் சராசரி °C (°F)24.1
(75.4)
24.6
(76.3)
24.8
(76.6)
25.0
(77)
25.4
(77.7)
24.6
(76.3)
23.9
(75)
23.9
(75)
24.2
(75.6)
24.3
(75.7)
24.0
(75.2)
23.9
(75)
24.4
(75.9)
பொழிவு mm (inches)379
(14.92)
262
(10.31)
167
(6.57)
177
(6.97)
124
(4.88)
63
(2.48)
80
(3.15)
97
(3.82)
121
(4.76)
206
(8.11)
215
(8.46)
281
(11.06)
2,172
(85.51)
ஈரப்பதம்82807980797980797879808279.8
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)171111141110101011121418149
சூரியஒளி நேரம்153.3175.5210.5227.8252.8232.0230.5230.7227.7220.7195.7170.52,527.7
Source #1: World Meteorological Organization[8]
Source #2: NOAA[9]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை