ஹுக்கா

ஹூக்கா (இந்துஸ்தானி: हुक़्क़ा (தேவநாகிரி), حقّہ (நாஸ்டலீக்) ஹுக்கா )[1] அல்லது வாட்டர் பைப் [2] என்றழைக்கப்படும் இது ஒரு ஒற்றை அல்லது பல-தண்டு (கண்ணாடி போன்ற) அமைப்பைக் கொண்ட கருவியாகும். தண்ணீரால் கடத்தப்பட்டு குளிரான புகையைக் கொடுக்க, புகையிலையைப் புகைப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவியாகும்.[3] இந்திய நாட்டின் மூலமே,[4][5][6][7] ஹூக்கா பிரசித்தி அடைந்தது அதிலும் குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதி மற்றும் வட அமெரிக்கா , ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் நாளடைவில் பிரபலமடைந்தது.[1]

எகிப்திய நாட்டு ஹூக்காகள் (ஷிஷா), பௌலின் மேலே காற்று அடைப்பானைக் கொண்டிருக்கும்

பெயர்கள்

இருப்பிடத்தைப் பொறுத்து, ஹுக்காகள் அல்லது ஷிஷாக்கள் பல பெயர்களால் அழைக்கப்பட்டன: அரேபிய மொழியில் ஷிஷா (شيشة) அல்லது நர்கீலா (نرجيلة) அல்லது அர்கீலா (أرغيلة\أرجيلة) என்றும், அரபு உலகம் முழுவதும் அதையே பயன்படுத்தினர்; நர்கீலா (ஆனால் சில நேரங்களில் அர்கீலா என்றும் பரவலாக அழைக்கப்படும்) என்ற பெயரே துருக்கி, சைப்ரஸ், அர்மேனியா, அஸர்பெய்ஜான், லெபனான், ஈராக், ஜோர்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[8]நர்கீலே என்ற பெயரானது, பெர்சியன் சொல்லான நர்கீலே என்பதிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் தேங்காய் என்பதாகும். இதுவே நாளடைவில் சமஸ்கிருத சொல்லான நரிகேலா என்பதிலிருந்து மருவியது(नारिकेला). பழங்கால ஹூக்காகள், தேங்காய் மட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்டதையே இது விளக்குகிறது.[9]

அல்பேனியா, போஸ்னியா, குரோஷியா போன்ற நாடுகளில், "லுலா" அல்லது "லுலாவா" என்ற பெயர்களால் ஹூக்கா அழைக்கப்படுகிறது. ரோமானி, மொழியில் இதன் பொருள் "பைப்," மேலும் "ஷிஷே" என்பது நிஜமான பாட்டில் துண்டைக் குறிக்கிறது.[சான்று தேவை]

மலேசியாவிலும் 'ஷிஷா' என்ற பெயரில் இளைஞர்களிடையே பயன்பாட்டில் உள்ளது.

செர்பியாவில், ஸ்ர்ப்ஸ்கா ரெபப்லிக்க ஆட் போஸ்னா ஐ ஹெர்செகோவினா (Srpska Republika od Bosna i Hercegovina) என்றும், அழைப்பர். பெரும்பாலும் கிழக்கத்திய மற்று வடக்கத்திய யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த விவசாயிகள் "நர்கிலே"(Наргиле) அல்லது "நகிலே"(Нагиле) என்றும் பைப்பைக் குறிக்கப் பயன்படுத்துவர். நிகோடின் மற்றும் தார் கலக்காத புகையிலையைக் கொண்டு புகைக்கப்படுவதை "šiša" (шиша) என்று வழக்கமாக குறிப்பர். அந்த பைப்கள் ஒன்று அல்லது இரண்டு வாய்க்கருவிகள் இருக்கலாம். இருவர் பயன்படுத்தும்படி அவை அமைக்கப்பட்டிருக்கும். மணம் கொண்ட புகையிலையினாது, தண்ணீருக்கு மேலே வைக்கப்பட்டு, ஓட்டையாக்கப்பட்ட ஃபாயில் தாளால் மூடப்பட்டு அதன் மேல் சூடான நிலக்கரியை வைத்து, குளிரான தண்ணீர் வழியாக அதைப் பாய்ச்சி வடிகட்டுவர்.

ஷிஷா (شيشة) என்ற சொல்லானது, பெர்ஷிய சொல்லான ஷிஷே (شیشه) என்பதிலிருந்து வந்ததாகும் இதன் பொருள்,கண்ணாடி என்பதாகும், இதுவே ஹூக்காவின் பொதுவான சொல்லாக எகிப்து மற்றும் பெர்ஷியன் வளைகுடா (குவைத், பஹ்ரைன், கத்தார், ஒமன், ஐஅஎ, மற்றும் சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகள் உள்பட), மற்றும் மொராக்கோ, துனிஷியா, சோமாலியா மற்றும் ஏமன் நாடுகளில் பரவலாக அழைக்கப்படுகிறது. "கொச்சிம்பா" என்று ஹூக்காவை அழைப்பது, ஸ்பெயின் நாட்டில் வழக்கமான ஒன்றாகும்.[சான்று தேவை]

ஈரானில், ஹூக்காவை غلیون "கல்யோன்" என்றழைப்பர். உஸ்பெகிஸ்தானில், "சில்லிம்" என்றழைப்பர். இந்தியா மற்றும் பாகிஸ்தானில், ஆங்கில வார்த்தையில் குறிக்கப்படும் ஹூக்கா என்பதாகவே அழைப்பர்: ஹூக்கா (हुक़्क़ा /حقّہ).[சான்று தேவை]

இந்திய சொல்லில் உள்ள பொதுத்தன்மை என்னவென்றால், "ஹூக்கா" என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இது பிரித்தானிய ராஜ்ஜியத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது, இந்திய பிரித்தானிய பகுதியில் (1858–1947), பெரும்பாலான அரச வம்சத்தினர் வாட்டர் பைப்பை முதன்முதலில் பயன்படுத்த தொடங்கினர். வில்லியம் ஹிக்கி என்பவர் 1775 ஆம் ஆண்டு இந்தியாவின், கொல்கொத்தா நகருக்கு வந்தபோது அவரது மெமொயர்ஸ் படைப்பில் இதுகுறித்து கூறியுள்ளார்:

வரலாறு

இந்திய நாட்டில், மொகலாய அரசர் அக்பர் (1542 - 1605 AD) ஆண்ட காலத்தில் இருந்தே இப்பெயர் வழங்கப்படுகிறது.[11][12][13] இந்தியாவில் ஐரோப்பியர்கள் புகையிலையை அறிமுகப்படுத்திய பின்னர், அப்துல் காதிர் அல்-கிலானி வழிவந்த ஹக்கிம் அப்துல் பதே கிலானி என்பவர் பாக்தாத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார். பின்னர் அவர் முகலாயர்கள் எழுப்பிய அமைப்புகளில் மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது இந்திய மேல்தட்டு ஆண்களிடையே புகைப்பழக்கம் பிரபலமடையத் தொடங்கியது மற்றும் புகையானது 'சுத்திகரிக்கப்பட' நீருக்குள்ளே செலுத்தும் முறையும் பிரபலமடைந்தது.[11] ஆசாத் பெக்கிற்கு பிறகு, ஹூக்காவை கிலானி அறிமுகப்படுத்தினார், பிறகு பிஜப்பூரின் தூதர், இதைப் பயன்படுத்தும்படி அக்பரை ஊக்குவித்தார.[11] அரசு மரியாதைக்குரியவர்களால் பயன்படுத்தப்படுவதால் பிரபலமடைந்த இந்த புதிய சாதனமானது, இந்திய உயர்மட்டக்குடி மற்றும் அதிகாரம் மிக்க அரசியலாளர்களால் புகைப்பதற்கான மரியாதையின் சின்னமாக வெகுவிரைவில் மாற்றம் பெற்றது.[11][13]

கலாச்சாரம்

மத்திய கிழக்கு

Arab world

1920களில், யூப்ரடீஸ் நதிக்கு அருகில் உள்ள டியர்-எஸ்சோரில் உள்ள ஒரு காஃபி ஹவுஸில் ஹூக்கா புகைக்கும் பெடோயின், உள்ளூரில் அர்கிலே என்றழைக்கப்படுகிறது.

அரபு நாடுகளில் உள்ள மக்கள் இதை புகைப்பதை தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். ஒற்றை அல்லது இரு குழல் வழியாக சமூக புகைப்படித்தல் என்பது கடைபிடிக்கப்பட்டது இன்னும் சிலநேரங்களில் மூன்று அல்லது நான்கு குழல்களை கொண்டு, விழாக்கள் அல்லது சிறிய ஒன்றிணைவு நிகழ்ச்சிகளில் ஹூக்காவைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. புகைப்பிடிப்பவர் அதைப் பயன்படுத்தி முடித்ததும், குழலானது அடுத்தவர் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது என்பதைக் குறிக்க மேஜையின் மீது வைக்கப்படும் அல்லது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு (அதாவது அடுத்து வாங்குபவரை நோக்கி) வாய்க் கருவி இல்லாதவாறு இருக்கும்படி மடித்து மாற்றி கொடுக்கப்படும். உலகத்திலேயே அரபு நாடுகளில் தான் அதிகளவில் ஷிஷா புகைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், அதிகளவில் ஷிஷா கடைகள் இருப்பதாகவும் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, பெரும்பாலான கஃபேக்கள் (அரபிக்: مقهىً, ஒலிபெயர்ப்பு: மக்ஹா , மொழிபெயர்ப்பு: காஃபிஷாப்) ஷிஷாஸை வழங்குகின்றன.[சான்று தேவை] அரபு நாடுகளில், கஃபேக்கள் மிகவும் பரவலாகவும் முக்கியமான சந்திப்பு இடமாகவும் இருக்கின்றன (பிரிட்டன் நாட்டில் உள்ள பொது விடுதிகள் போன்றது).[சான்று தேவை] சில பிரிட்டனிலிருந்து மத்திய கிழக்கிற்கு வரும் சிலர், இந்த பகுதிகளில் பப்கள் இல்லாத குறையை ஷிஷா கஃபேக்களுக்கு வருவதன் மூலம் சரி செய்து கொள்கின்றனர், குறிப்பாக மது விலக்கு அமல்படுத்தப்பட்ட இடங்களில்.

ஈரான்

பெர்ஷிய பெண் ஒருத்தி, கஜ்ஜாரி உடையில் பாரம்பரிய கல்யானை இங்கே புகைத்துகொண்டிருப்பதைக் படம் காட்டுகிறது.(1850களில்)

ஈரானில், இதை கல்யான் என்றும், (பெர்ஷிய மொழியில்: قليان, قالیون, غلیون, என்றும் கல்யன் , கால்யான் அல்லது கெல்யன் ) என்றும் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. இது பல வகைகளில் அரபு நாட்டின் ஹூக்காவைப் போன்றதே, ஆனாலும் இதற்கென்று சில தனிப்பட்ட சிறப்பம்சங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, கல்யானின் மேல் பகுதி (புகையிலை வைக்கப்படும் பகுதி) 'சார்' என்று அழைக்கப்படும். (பெர்ஷிய மொழியில் இதன் பொருள்: سر=தலை), அதாவது துருக்கியில் காணப்படுவதைவிட பெரிய அளவில் இருக்கும். குழாயில் முக்கிய பகுதியானது, எளிதில் வளையத்தக்கதாகவும், மென்மையான பட்டு அல்லது துணியினால் சுற்றப்பட்டதாக இருக்கும். ஆனால் எளிதில் நெகிழக்கூடிய அந்தப் பகுதியை மரத்தினால் ஆன பகுதியாகவும் துருக்கியர்கள் உருவாக்குவர்.

ஒவ்வொருவரும் தனது சொந்த வாய்க் கருவியை (அம்ஜித் எனப்படும்) (امجید), இதற்கு பயன்படுத்துவர். அம்ஜித் ஆனது மரம் அல்லது உலோகம் அல்லது விலை மதிப்புள்ள பிற கற்களைக் கொண்டும் வழக்கமாக தயாரிக்கப்படும். ஒவ்வொருவரின் ஸ்டைலின் வெளிப்பாட்டிற்கு மட்டுமே அம்ஜித்கள் பயன்படுத்தப்படும். எனினும், எல்லா ஹுக்கா பார்களிலும் பிளாஸ்டிக்கால் ஆன வாய்க்கருவிகள் இருக்கும்.[சான்று தேவை]

ஈரானில், வாட்டர் பைப்களின் பயன்பாடானது, கஜ்ஜார் காலத்தைப் பின்தொடர்ந்து ஏற்பட்டதாகும்.[சான்று தேவை] அந்த காலங்களில் கரும்பைக் கொண்டு குழல்களை உருவாக்கினர். ஈரானியர்கள் கான்சார் (خانسار, இது தோன்றிய நகரத்தின் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது) என்று அழைக்கப்படும் சிறப்பு புகையிலை ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். மென் தகடு ஏதுமின்றி, கன்சாரின் மேல் மரக்கரி வைக்கப்படும். கன்சார் ஆனது, சாதாரண புகையிலையை விடக் குறைவான புகையை தரக்கூடியது. நசர் அல்-தின் கஜ்ஜார், பெர்ஷியாவின் ஷா (1848-1896) என்பவர், ஹூக்காவின் வாய்க் கருவியை தன்னை நோக்கி இருப்பதைக் கூட அவமானமாக எண்ணினார்.[சான்று தேவை]

ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் ஹூக்காகளைப் புகைப்பது என்பது மிகவும் பிரபலமடைந்த ஒன்றாகும். உள்ளூரில் உள்ள டீ கடைகளுக்குச் சென்று அதை புகைக்கும் அளவிற்கு ஹூக்காவின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.[சான்று தேவை]

அனைத்து வயதினரும் பயன்படுத்தும்படியே ஹூக்கா இருந்தது என்றாலும், அதை 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பயன்படுத்த ஈரான் நாட்டு அரசு அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

இஸ்ரேல்

ஜெருசலேம் நகரில் சவுக்கில் விற்பனைக்கு உள்ள நர்கிலாக்கள்.

இஸ்ரேலிய மொழியில் ஹூக்காவை நர்கிலா என்றழைப்பர் நர்கிலா புகைத்தலானது, ஈரான், ஈராக், துருக்கி மற்றும் ஏமன், மொராக்கோ (மொத்தமாக மிஸ்ராஹி யூதர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.) மிஸ்ராஹி யூத குடியேறிகளிடயே மிகவும் பொதுவாக காணப்படுகிறது.[சான்று தேவை] நர்கிலாக்கள், இஸ்ரேலில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது, குறிப்பாக சுற்றுலா பயணிகளிடையே.[சான்று தேவை] பெரும்பாலான தெருக்கள் மற்றும் சந்தைகளில் பரபெர்னலியாவை விற்கும் கடைகளை காண முடியும்.[சான்று தேவை] இதன் பயன்பாடானது இளைஞர்கள் மத்தியில் மிகவும் அதிகரித்த காரணத்தால், 2005 ஆம் ஆண்டு, இஸ்ரேலிய புற்றுநோய் கழகத்தால் ஒரு பேரணி நடத்தப்பட்டது. அதில் நர்கிலாவை புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஐடிஎஃப் ஆனது, நர்கீலாவை சிப்பாய்கள் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்தது.[சான்று தேவை]

தெற்காசியா

இந்தியா

மலபார் ஹூக்காவை அமைக்கும் சிக்கலான பணி
ஹூக்கா குடும்பம்

ஹூக்காவின் அறிமுகம் முதன்முதலில் இந்தியாவில் தான் தொடங்கியது[14], செல்வாக்கு மிகுந்த அரசாங்கத்தினால் இது மிகவும் பிரபலமடைந்தது குறிப்பாக மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் எனலாம். அதன் பின்னர் ஹூக்காவின் பிரபலம் மெல்ல மெல்ல குறைவடையத் தொடங்கியது, பின்னர் மீண்டும் தற்போது பெருமளவில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது, கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் இதனை ஒரு முக்கியமான பொருளாக வழங்கத் தொடங்கியுள்ளனர். பழங்காலத்தில் ஹூக்காகளைப் பயன்படுத்துவது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இருந்தது என்பதை விட, அது கௌரவமாகவே கருதப்பட்டது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைத்து வகுப்பினரும் பாரபட்சமின்றி ஹூக்காகளைப் புகைத்தனர்.

பாரம்பரிய வழக்கப்படி, பெரும்பாலான கிராமங்களில் ஹூக்கா மூலமாக புகையிலைப் புகைக்கப்பட்டது. இன்றைய இந்திய இளைஞர்களிடையே புகையிலை மோலாஸாஸ் ஷிஷா புகைப்பது என்பது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல கிளப்கள், காஃபி கடைகளில் இன்றும் பல வகைகளில் முசேல்கள், புகையிலையின்றி புகைப்பதற்கு வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோயிலாண்டி என்ற சிறிய மீன்பிடி நகரத்தில், ஹூக்காகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டது இவற்றை மலபார் ஹூக்காக்கள் அல்லது கோயிலாண்டி ஹூக்காக்கள் என்று அழைக்கின்றனர். ஆனால் இன்று, ஹூக்காகளை கோயிலாண்டிக்கு வெளியில் காண்பது அபூர்வமாகிவிட்டது இது மட்டுமல்லாமல் கோயிலாண்டியிலும் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.

இந்தியாவில் ஹூக்காவைத் தயாரிப்பது தடைசெய்யப்பட்டதும் பல ரெய்டுகளும் ஹூக்கா புகைப்பதை தடைசெய்யவும் சட்டம் கொண்டுவரப்பட்டது அதிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில்தான் இதை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது[15]

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில், பாரம்பரியமாக சில கிராமப்புறங்களில் இவை பிரபலமாக இருந்தாலும் கூட,[16] தற்போது அவை காஸ்மோபாலிட்டன் நகரங்களில் அதிக பிரபலமடைந்து உள்ளன. பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான கிளப்கள் மற்றும் கடைகளில் ஹூக்காவை வழங்குவதால், அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் இது பிரபலமடைந்துள்ளது. சமூக கூடுகைகள், விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் இவ்வகை புகைப்பிடித்தல் மிகவும் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. பல வகையான ஹூக்காகளை, பெரும்பாலான கேஃப்களும், ரெஸ்டாரண்ட்களும் வழங்குகின்றன. இந்த தொழிலில் கராச்சி மாநிலம் மிகவும் வளர்ச்சி கண்டது.

தென் கிழக்கு ஆசியா

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹூக்காவானது சிறுபான்மையின அரபு பிலிப்பினோ சமூகத்தினரிடையே மற்றும் இந்திய பிலிப்பினோ சமூகத்தினரிடையேயும் பிரபலமாக உள்ளன, ஆனாலும் பூர்வீக முஸ்லீம் பிலிப்பினோ மக்களிடையே, மத்திய கிழக்கில் தொடங்கப்பட்ட வரலாற்று ரீதியான சமூக, கலாச்சார நடத்தைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, இதனால் ஹூக்கா புகைப்பது அரிதாக இருந்தாலும், மேன்மக்களுக்கு ஒரு மதிப்பு வாய்ந்த சமூக நடத்தையாக கருதப்படுகிறது. குறிப்பாக வணிக நகரங்களான கோட்டாபாடோ அல்லது ஜோலோ போன்ற நகரங்களில்.

20வது நூற்றாண்டுக்கு பிற்காலம் வரை ஹூக்கா கிறிஸ்தவ பிலிப்பினோக்களால் அறியப்படவில்லை, ஆனாலும் தற்கால இளவயது கிறிஸ்தவர்களிடையே இந்த பழக்கம் அதிக வேகமாக வளர்ந்து வருகிறது. தலைநகரத்தின், மிகவும் அதிகபட்ச காஸ்மோபாலிட்டன் பகுதியான, மகாத்தியில்; பல மேல்தட்டு பார்கள் மற்றும் கிளப்கள் ஹூக்காக்களை வழங்குகின்றன.

நூறு ஆண்டுகளாக ஹூக்காவை அனைத்து வயதினரும் பயன்படுத்திக்கொண்டு வந்திருந்தாலும், சமீபத்தில் இளைஞர்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக இதை பயன்படுத்தும் காலமும் வந்துவிட்டது சிகரெட்களை வாங்கி புகைக்கும் வயது வரம்பை அடையாத கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர்கள் மத்தியில் ஹூக்கா மிகவும் பிரபலமடைந்த ஒன்றாக இருக்கிறது.[17]

தென்னாபிரிக்கா

தென்னாப்பிரிக்காவில், ஹூக்காவை ஹப்ளி பப்ளி அல்லது ஒக்கா பைப் என்று அழைப்பர், கேப் மலாய் மற்றும் இந்திய மக்களிடையே, ஹூக்காவைப் பயன்படுத்துவது சமூக பொழுதுபோக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.[18] எனினும், இது வெள்ளை தென்னாப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த இளைஞர்களால் மிகவும் பிரபலமடைந்துவருகிறது. ஹூக்காவை கூடுதலாக வழங்கும் பார்கள் தற்போது அதிகரித்துள்ளன, ஆனாலும் புகைத்தலானது பொதுவாக வீடு அல்லது கடற்கரை, சுற்றுலா இடங்கள் போன்ற பொது இடங்களிலேயே பொதுவாக செய்யப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில், ஹூக்காவில் கலக்கப்படும் பொருட்கள் மற்ற நாடுகளை விட வித்தியாசமானதாகும். களிமண் "தலை/பௌல்" பகுதி, "களிமண் பானை" என்றும் அழைக்கப்படும். ஹோஸ்களை "குழாய்கள்" என்றும், அதிலிருந்து காற்று வெளியேறும் பகுதியை, "கிளட்ச்" என்றும் அழைப்பர்.

சில விஞ்ஞானிகள், ஹூக்காவின் ஆப்பிரிக்க பூர்விகமாக டாக்கா குழாயைக் குறிப்பிடுகின்றனர்[19]

அமெரிக்கா மற்றும் கனடா

சமீபத்தில் பல நகரங்கள், மாகாணங்கள் மற்றும் நாடுகள், உள்ளரங்க புகைப்பிடித்தல் தடையை அமல்படுத்தியுள்ளன. சில சட்டவரம்புகளில், ஹூக்கா வர்த்தகமானது விசேஷ அனுமதிகளின் மூலம் கொள்கைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த அனுமதிகளில் சிலவற்றில் ஆல்கஹால் அல்லது புகையிலையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் வருவாய் இருக்க வேண்டும் என்பது போன்ற ஷரத்துகள் உள்ளன.

உள்ளரங்க புகைத்தல் தடை உள்ள நகரங்களில், ஹூக்கா பார்கள் மூடும்படி கட்டாயப்படுத்தப்பட்டன அல்லது புகையிலை அற்ற முவாசல்களுக்கு மாறும்படி கட்டாயப்படுத்தப்பட்டன. ஆனாலும் பல நகரங்களில், ஹூக்கா மையங்கள் பிரபலமடைந்து வருகின்றன. 2000 ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை புதிய ஹூக்கா கேஃப்கள் வணிகத்திற்காக திறக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இளைஞர்களை குறிவைத்தே ஆரம்பிக்கப்பட்டது[20] அதிலும் குறிப்பாக கல்லூரி வளாகங்கள் அல்லது மத்திய கிழக்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்ட நகரங்களில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேல்நிலை பள்ளி முடித்த மாணவர்கள் மத்தியில் இந்த பிரபலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

கட்டமைப்பு மற்றும் செயல்பாடு

ஆக்கக்கூறுகள்

குரோமட்கள் தவிர, ஐந்து அல்லது ஆறு பொருட்களால் ஹூக்கா தயாரிக்கப்படுகிறது, அதில் நான்கு பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

பௌல்

ஹூக்காவின் தலைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது, பௌல் என்பது ஒரு கொள்கலனாகும். இது பொதுவாக களிமண் அல்லது மார்பலால் தயாரிக்கப்படும். புகை பிடிக்கும்போது நிலக்கரி மற்றும் புகையிலையை தாங்குவதும் இதுதான். நிலக்கரிகள் இதன் மேல் பகுதியில் வைக்கப்பட்டு, சரியான வெப்பநிலையில் புகையிலையானது சூடாக்கப்படும்.

பாரம்பரியம் மிக்க மண் பாண்டம் மட்டுமின்றி பழத்தைக் கொண்டும் ஹூக்காவின் தலைப்பகுதியை வெவ்வேறான வடிவங்களில் உருவாக்குவர். பழமானது, உள்ளீடற்றதாக மாற்றப்பட்டு, துளையிடப்பட்டு, களிமண் சாடியின் வடிவம் மற்றும் அமைப்பை ஒத்ததாக மாற்றப்படுகிறது, பின்னர் அது அதே முறையைப் பயன்படுத்தி, வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக, புதிய வடிவங்களில் புகையிலையினுள் சாறுகளை பத்திரப்படுத்தி வைக்கக்கூடிய வகையில் பௌல்கள் பயன்படுத்துகின்றனர். டான்கியரின் ஃபனல் பௌல் மற்றும் சஹாரா வொர்டெக்ஸ் பௌல் இந்த இரண்டும் புதுவிதமாக மாற்றி அமைக்கப்பட்ட ஹூக்கா பௌல்களுக்கான உதாரணமாகும்.

காற்றுத்திரை (மாற்றுக் கருவி)

ஹூக்கா கவர் காற்றுத்திரை என்ற ஒரு வகையான மூடியாது, பௌல் பகுதியின் மேல் வைக்கப்படுவது. அதில் சின்னஞ்சிறிய காற்றுத்துளைகளும் இருக்கும். தீ அதிகமாகாமல் இருக்கவும், நிலக்கரியின் வெப்பத்தைச் சீராக வைக்கவும் காற்றை சரியான அளவில் உட்செலுத்த இது உதவுகிறது இதோடு மட்டுமில்லாமல் எரியும் பொருட்கள் எதுவும் தூசியாக பறந்து வெளிப்பகுதியை மாசுபடுத்தாதபடியும் இருக்க உதவுகிறது. ஹூக்காவானது பல்கி பெரும்போது நிலக்கரியானது வெளியில் தள்ளப்படாமல் தடுக்க தீயிலிருந்து பாதுகாக்கவும் இது உதவுகிறது.

ஹோஸ்

தொழில்நுட்பமாக சொல்லப்போனால், ஹோஸ் இருக்கக்கூடிய பைப்பானது, "ஹூக்கா" ஆகாது —வரலாற்றுரீதியாக அதை நேர்-கழுத்து டியூப் என்றே அழைப்பர். இன்றைக்கு, ஹோஸ் (ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட) ஆனது வளைந்து நெளியக் கூடிய தன்மையுடன், தூரத்தில் இருந்து புகைக்கும்போது, அதை இழுப்பதற்கு முன்னரே குளிர்ச்சி தரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். அதன் முனைப்பகுதியானது உலோகம், கட்டை அல்லது பிளாஸ்டிக் வாய்ப்பகுதியினால் பொருத்தப்பட்டு வெவ்வேறான வடிவம், அளவு, வண்ணம் அல்லது பொருளின் தன்மை அடிப்படையில் அமைந்திருக்கும்.

அங்கம் மற்றும் கேஸ்கட்கள்

ஹூக்காவின் அங்கமானது, துளையுள்ள பைப்பால் ஆனது. பௌலானது, மேல் பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலநேரங்களில், ஐஸ் பக்கெட்டானது அங்கத்திற்கும் பௌலிற்குமிடையில் இணைக்கப்பட்டு, புகைக்கு குளிரூட்டும்படி அமைக்கப்பட்டிருக்கும். அதன் கீழ்பகுதியானது, மெல்லிய குழாயினால் (the downstem) செய்யப்பட்டு, நீருடன் பிணைக்கப்பட்டிருப்பதுபோல இருக்கும் இந்த பாகமானது நீர் ஜாடியைத் தொடும் இடமானது ஒரு கேஸ்கட்டைக் கொண்டு சீல் செய்யப்பட்டுள்ளது. அதன் அருகில், குறைந்தது இரண்டு துளைகளாவது இருக்கும். அந்த துளைகள் நீரின் மேலே திறந்திருக்கும் நிலையில் அமையப்பெற்றிருக்கும். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவை ஹோஸுடன் பொருந்தும்.

பெருகும் வால்வு (விருப்பத்துக்கு ஏற்ற கருவி)

பெரும்பாலான ஹூக்காகளானது, பெருகும் வால்வுடன் இணைக்கப்பட்டு, வாட்டர் ஜாரில் உள்ள காற்றுபரப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். நீண்ட நேரம் ஆகியும் பயன்படாமல் இருக்கும் புகையை வெளியேற்ற இது உதவும். இந்த ஒருவழி வால்வானது, பொதுவாக ஒரு எளிய பந்து சிறிய துளையை புவியீர்ப்பு விசையினால் மட்டுமே மூடியிருக்கும் அமைப்பைக் கொண்டதாக இருக்கும். குழாயில் ஊதுவதன் மூலம் உருவாகும் நேர்மறை அழுத்தத்தின் காரணமாக திறக்கும். பியரிங்கானது, மூடியுடன் ஒரு திருகாணியின் மூலம் அசையாமல் பிணைக்கப்பட்டிருக்கும். சரியாக சீல் செய்யப்படுவதை உறுதிப்படுத்த, மூடியானது திறக்கப்பட்டு, பியரிங் மற்றும் அதனுடைய சீட் ஆகியவை சுத்திகரிக்கப்பட்டு அதன் தேய்மானங்கள் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்.

நீர் ஜாடி

19 ஆம் நூற்றாண்டில், ஹூக்காவுக்கான மரங்களை உருவாக்கும் பணியில் டாமாஸீன் மரதச்சர்கள்

நீர் ஜாடியின் மேல்பகுதியில், ஹூக்காவின் முக்கிய பகுதி அமைந்துள்ளது. கீழ்நோக்கிய தண்டானது, ஜாடியில் உள்ள நீருக்கு கீழே தொங்கிக்கொண்டிருக்கும். புகையானது, இந்த பகுதியின் வழியே வந்து, கீழ்நோக்கிய தண்டின் வழி வெளிவந்து, நீரில் குமிழிகளைத் தோற்றுவிக்கும். இது புகையை குளிர்வித்து, ஈரப்பதம் மிக்கதாக மாற்றுகிறது. பழச்சாறு போன்ற திரவங்கள், நீரில் சேர்க்கப்படும் அல்லது மாற்றுப்பொருளாகப் பயன்படும். பழம், புதினா இலைகள் மற்றும் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகள் போன்றவற்றின் துண்டுகளும் சேர்க்கப்படக்கூடும்.

தட்டு

நிலக்கரியிலிருந்து வெளியேறும் சாம்பல்களைத் தாங்குவதற்கென்றே, ஒரு தட்டு அல்லது ஆஷ்ட்ரே ஆனது பௌலின் கீழே அமைந்திருக்கும்.

குரோமேட்கள்

பௌல் மற்றும் முக்கிய பகுதி ஆகியவற்றுக்கு இடையே குரோமேட்கள் வைக்கப்படுகின்றன, மேலும் பகுதியின் கேஸ்கட் மற்றும் நீர் ஜாடி மற்றும் ஜாடி மற்றும் குழாய் ஆகியவற்றுக்கு இடையேயும் வைக்கப்படுகின்றன. குரோமேட்களின் பங்கு இதில் முக்கியமானது இல்லையென்றாலும், (தாள் அல்லது டேப் போன்றவையின் பயன்பாடும் பொதுவானதே) பகுதிகளின் இடையில் மூடுவதற்கு உதவும். மேலும் உள்வரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி புகைக்கப்படும் புகையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.

இயங்குமுறை

ஹூக்கா குறுக்கு வெட்டுத்தோற்றம்

ஹூக்காவின் கீழ்பகுதியில் உள்ள ஜாடி போதுமான அளவு தண்ணீர் ஊற்றப்பட்டு, குழாய் ஒரு சில சென்டிமீட்டர்கள் மூழ்கி இருக்கும்படி வைக்கப்படுகிறது, இது மிகவும் இறுக்கமாக சீல் செய்யப்படுகிறது. நீரின் ஆழத்தை அதிகரிப்பதால், அதை பயன்படுத்துவதற்கான இழுத்தல் ஆற்றல் அதிகம் தேவைப்படும். புகையிலையானது, ஹூக்காவிற்கு மேல்பகுதியில், எரியும் நிலக்கரிக்கு மேலே உள்ள குடுவையின் உள்ளே வைக்கப்படுகிறது. சில கலாச்சார வழக்கப்படி, குடுவையில் புகையிலை மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பிரிப்பதற்கு, ஈய ஜல்லி அல்லது உலோக திரையைப் பயன்படுத்துவார்கள், இது நிலக்கரி சாம்பல் அதிகமாக உள்ளிழுக்கப்படுவதைக் குறைக்கும். இது புகையிலை ஆளாகும் வெப்பநிலையையும் குறைக்கும், இதனால் புகையிலை நேரடியாக எரிக்கப்படுவதும் தடுக்கப்படும்.

ஒருவர் குழாய் மூலம் இழுக்கும்போது, காற்றானது நிலக்கரி மற்றும் புகையிலையைத் தாங்கியுள்ள குடுவை ஆகியவற்றின் வழியே வருகிறது. நிலக்கரியால் சூடாக்கப்பட்ட சூடான காற்றானது புகையிலையை காற்றுடன் கலக்க வைக்கும் (எரிக்காது) அதாவது அங்கத்தின் குழாயின் வழியே கடத்தப்பட்டு ஜாரில் உள்ள நீர் வரை நீட்டிக்கும். நீரின் மூலமாக கொப்பளிக்கப்பட்டு, சூட்டை இழந்து ஜாரின் மேல் பகுதியை நிரப்பும். இதில் தான் ஹோஸ் இணைக்கப்பட்டிருக்கும். ஹோஸிருந்து புகைக்காற்றை புகைப்பிடிப்பவர் உள்ளிழுக்கும்போது, நுரையீரலின் வழியாக அது பாய்ந்து ஜாரின் அழுத்தத்தில் மாற்றத்தைக் கொடுத்து நிலக்கரியின் மூலம் கூடுதலான காற்றை இழுக்கும். இவ்வாறே தொடர்ந்து செயல்படும்.

ஹூக்காவை புகைப்பதற்கு திறந்து குறிப்பட்ட காலம் வரை அதை உறிஞ்சாமல் இருந்தால், வாட்டர் ஜாரின் உள்ளே இருக்கும் புகையானது, "மணமற்றதாய்", விரும்பத்தகாததாய் மாறிவிடும். இவ்வாறு தேங்கும் புகையை, வெளியேற்றுதல் வால்வு இருந்தால் அதன் மூலம் வெளியேற்றலாம். இந்த ஒரு வழி வால்வானது, குழாயில் மெதுவாக ஊதுவதன் மூலமாக உருவாகும் அழுத்தத்தின் காரணமாக திறக்கிறது. பிற அனைத்து ஹோஸ்களும் செருக்கப்பட்டிருந்தால் ஒழிய, பல ஹோஸ் கொண்ட ஹூக்காகளில் இது வேலைசெய்யாது. கைமுறையாக ஹோஸ்களை செருகுவதை தடுப்பதற்கு, ஒரு வழி வால்வுகள் ஹோஸின் சாக்கெட்களில் சிலநேரங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

சுகாதாரத் தாக்கங்கள்

மேலும் தகவல்களுக்கு: Health effects of tobacco

சிகரெட்களில் இருந்தும் வரும் புகையை விட, இதிலிருந்து வெளியேறும் புகை குறைந்த ஆபத்தையே ஏற்கபடுத்தும் என்பது இதைப் பயன்படுத்துபவர்களின் மத்தியில் இருக்கும் பொதுவான நம்பிக்கையாகும்.[21] ஹூக்காவினால் தூண்டப்படும் நீர்ம ஈரப்பதம் இந்த புகையானது குறைவான எரிச்சலைத் தரக்கூடும், இதனால் உண்மையான உடல்நல ஆபத்துக்கள் பற்றிய கருத்துக்கள் குறைந்து தவறான பாதுகாப்பு உணர்வு ஏற்படக்கூடும்.[22] நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் ,மேயோ கிளினிக் நிறுவனம் உட்பட கூறுவது என்னவென்றால், ஹூக்காவைப் பயன்படுத்துவது சிகரெட் புகைப்பதற்குச் சமமாகும் என்றும், சிகரெட்டால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படும் என்கின்றனர்[23][24] இதை வேல்ர்டு ஹெல்த் ஆர்கனைசேஷனும் அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.[25]

ஹூக்காவை புகைக்க குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் வரை தேவைப்படும் அதாவது 50 முதல் 200 வரை புகையை உள்ளிழுக்க வேண்டியிருக்கும் ஒவ்வொன்றின் வரம்பும் 0.15 முதல் 0.50 லிட்டர் புகையாகும்.[26][27] வேல்ர்டு ஹெல்த் ஆர்கனைசேஷன் மற்றும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி நிறுவனத்தில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு மணிநேரம் ஹூக்காவைப் புகைப்பது என்பது 100 முதல் 200 வரை அவர்கள் புகையை உள்ளிழுக்கிறார்கள் இதனால் ஒரு சிகரெட்டில் அவர்கள் பெறும் நிகோட்டினை இதில் 70 முறை அவர்கள் பெறுகின்றனர் என்பது தான் அது.[28]

2005 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது, வாட்டர் பைப்பைப் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்கள், ஐந்து சதவீதத்திற்கும் மேல் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் ஈறு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என்பதுதான் அது. வாட்டர் பைப்களைக் கொண்டு புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் ஐந்து சதவீதத்திற்கு நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.[29]

வேதிபொருட்களை வடிகட்டப் பயன்படும் நீரானது, முழுவதுமாக தீங்கு தரக்கூடிய வேதிப்பொருட்களை அகற்றாது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.[30]

ஹூக்கா புகைப்பது குறித்த ஆய்வின் முடிவில் பாகிஸ்தானில் புற்றுநோயை ஏற்படுத்தி இருப்பதாக 2008 ஆம் செய்தி வெளியானது.[31] இதன் நோக்கம் என்னவென்றால் "சீரம் சிஈஏ நிலைகளை வழக்கமான/விசேஷ ஹூக்கா புகைப்பவர்களிடமிருந்து எடுப்பதே ஆகும், அதாவது, ஹூக்கா மட்டும் புகைப்பவர்கள் (சிகரெட்கள், பீடிகள் முதலியவற்றைப் புகைக்காதவர்கள்.), ஒரு நாளுக்கு 1 முதல் 4 முறைகள் 120 கிராம் புகையிலை-மொலாசாஸ் கலவயைப் பயன்படுத்தி (அதாவது, புகையிலையின் எடையானது, 1கி எடையுள்ள 60 சிகரெட்களுக்கு சமமானது) 1 முதல் 8 முறைகள் உட்கொள்பவர்கள்". கார்சினோஎம்பிராயினில் ஆன்டிஜென் (சிஈஏ) என்பது, பல்வேறான புற்றுநோயில் கண்டறியக்கூடிய அடையாளமாகும். சிகரெட் புகைப்பவர்களை விட விசேஷ ஹூக்கா புகைப்பவர்களிடையே அளவுகள் குறைவாகவே இருந்தன, ஆனாலும் இந்த வித்தியாசம் புள்ளியல் ரீதியாக ஒரு ஹூக்கா புகைப்பவர் மற்றும் புகைக்காதவர் இடையே பெருத்த வேறுபாடு எதையும் தரவில்லை. மிகத் தீவிரமாக ஹூக்காவுக்கு அடிமையானவர்களுக்கு (அதாவது ஒரு நாளைக்கு 2 முதல் 4 தடவை; 3 இலிருந்து 8 தடவை; 2 மணிநேரத்தில் இருந்து 6 மணிநேரம் வரை) பயன்படுத்துபவர்களுக்கு சிஈஏ நிலைகள் நிச்சயமாக அதிகரிக்கும் என்பதே அது.

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hookahs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹுக்கா&oldid=3925767" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை