கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோகம் அல்லது மாழையிலி (non-metal) என்பது வேதியியலின்படிஉலோகப் பண்புகளைப் பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் ஆகும். அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும்மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக அயனியாக்கும் ஆற்றல் மற்றும் இலத்திரன் கவர் ஆற்றல் மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் ஏனைய தனிமங்கள் அல்லது சேர்மங்களுடன் வினைபுரியும் போது இலத்திரன்களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன.
தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் இயற்பியல்வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஒன்று உலோகமாகவோ அல்லது அலோகமாகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன. அவை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
இவை காடி ஆக்சைடுகளாகும் (ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)
திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)