இசுட்ரோன்சியம்

இசுட்ரோன்சியம் அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium (IPA: /ˈstrɒntiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 38; இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Sr. இது ஒரு காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த வெள்ளி போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் செலஸ்டைன் மற்றும் இசுட்ரோன்சியனைட் என்னும் கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது கால்சியத்தைவிட மென்மையான (மெதுமையான) பொருள், நீருடன் வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடும் ஐதரசனும் உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லையாதலால், அறைவெப்பநிலையில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க மண்ணெணெய் (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை வானவேடிக்கை காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர்.

இசுட்ரோன்சியம்
38Sr
Ca

Sr

Ba
ருபீடியம்இசுட்ரோன்சியம்இயிற்றியம்
தோற்றம்
வெள்ளி உலோக நிறம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்இசுட்ரோன்சியம், Sr, 38
உச்சரிப்பு/ˈstrɒnʃ[invalid input: '(i)']əm/
STRON-sh(ee)-əm;
/ˈstrɒntiəm/
STRON-tee-əm
தனிம வகைகாரக்கனிம மாழைகள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு25, s
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
87.62
இலத்திரன் அமைப்பு[Kr] 5s2
2, 8, 18, 8, 2
Electron shells of Strontium (2, 8, 18, 8, 2)
Electron shells of Strontium (2, 8, 18, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்புவில்லியம் குருயிக்சாங்க் (1787)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
ஹம்பிரி டேவி (1808)
இயற்பியற் பண்புகள்
நிலைதிண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)2.64 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்2.375 g·cm−3
உருகுநிலை1050 K, 777 °C, 1431 °F
கொதிநிலை1650 K, 1377 °C, 2511 °F
உருகலின் வெப்ப ஆற்றல்7.43 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்136.9 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை26.4 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)796882990113913451646
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்2, 1[1] (கார ஆக்சைடு)
மின்னெதிர்த்தன்மை0.95 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்1வது: 549.5 kJ·mol−1
2வது: 1064.2 kJ·mol−1
3வது: 4138 kJ·mol−1
அணு ஆரம்215 பிமீ
பங்கீட்டு ஆரை195±10 pm
வான்டர் வாலின் ஆரை249 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்புface-centered cubic
இசுட்ரோன்சியம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவுparamagnetic
மின்கடத்துதிறன்(20 °C) 132 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்35.4 W·m−1·K−1
வெப்ப விரிவு(25 °C) 22.5 µm·m−1·K−1
யங் தகைமை15.7 GPa
நழுவு தகைமை6.03 GPa
பாய்சான் விகிதம்0.28
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
1.5
CAS எண்7440-24-6
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இசுட்ரோன்சியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
82Srசெயற்கை25.36 dε-82Rb
83Srசெயற்கை1.35 dε-83Rb
β+1.2383Rb
γ0.76, 0.36-
84Sr0.56%-β+β+1.786784Kr
85Srசெயற்கை64.84 dε-85Rb
γ0.514D-
86Sr9.86%Sr ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
87Sr7.0%Sr ஆனது 49 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
88Sr82.58%Sr ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
89Srசெயற்கை50.52 dε1.4989Rb
β0.909D89Y
90Srtrace28.90 yβ0.54690Y
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
·சா

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இசுட்ரோன்சியம்&oldid=2943589" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை