புரோமித்தியம்

அணு எண் 61 ஐக் கொண்ட வேதி தனிமம்.

புரோமித்தியம் அல்லது புரோமீத்தியம் (ஆங்கிலம்: Promethium (prəˈmiːθiəm/, /proʊˈmiːθiəm) ஒரு வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள தனிமம். இதன் வேதியியல் குறியீடு Pm, இதன் அணுவெண் 61. இதன் அணுக்கருவில் 84 நொதுமிகள் உள்ளன.

புரோமித்தியம்
61Pm
-

Pm

Np
நியோடைமியம்புரோமித்தியம்சமாரியம்
தோற்றம்
உலோக தோற்றம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்புரோமித்தியம், Pm, 61
உச்சரிப்பு/pr[invalid input: 'ɵ']ˈmθiəm/
pro-MEE-thee-əm
தனிம வகைஇலாந்தனைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழுn/a, 6, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[145]
இலத்திரன் அமைப்பு[Xe] 6s2 4f5
2, 8, 18, 23, 8, 2
Electron shells of Promethium (2, 8, 18, 23, 8, 2)
Electron shells of Promethium (2, 8, 18, 23, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்புசியென் ஷியிங் யு, எமீலியோ சேக்ரே, ஹான்ஸ் பெத் (1942)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
சார்லஸ் கோரியெல், ஜேகப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிலென்டெனின், ஹாரல்டு ரிச்டர் (1945)
பெயரிட்டவர்கிரேஸ் மேரி கோரியெல் (1945)
இயற்பியற் பண்புகள்
நிலைதிண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)7.26 g·cm−3
உருகுநிலை1315 K, 1042 °C, 1908 °F
கொதிநிலை3273 K, 3000 °C, 5432 °F
உருகலின் வெப்ப ஆற்றல்7.13 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்289 கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்3 (குறைந்த கார ஆக்சைடு)
மின்னெதிர்த்தன்மை? 1.13 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்1வது: 540 kJ·mol−1
2வது: 1050 kJ·mol−1
3வது: 2150 kJ·mol−1
அணு ஆரம்183 பிமீ
பங்கீட்டு ஆரை199 pm
பிற பண்புகள்
படிக அமைப்புhexagonal
புரோமித்தியம் has a hexagonal crystal structure
காந்த சீரமைவுparamagnetic[1]
மின்கடத்துதிறன்(அ.வெ.) மதி. 0.75 µΩ·m
வெப்ப கடத்துத் திறன்17.9 W·m−1·K−1
வெப்ப விரிவு(அ.வெ.) (α, poly)
மதி. 11 µm/(m·K)
யங் தகைமை(α form) மதி. 46 GPa
நழுவு தகைமை(α form) மதி. 18 GPa
பரும தகைமை(α form) மதி. 33 GPa
பாய்சான் விகிதம்(α form) மதி. 0.28
CAS எண்7440-12-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: புரோமித்தியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
145Pmசெயற்கை17.7 yε0.163145Nd
146Pmசெயற்கை5.53 yε1.472146Nd
β1.542146Sm
147Pmtrace2.6234 yβ0.224147Sm
·சா

குறிப்பிடத்தக்க பண்புகள்

புரோமீத்தியத்தின் நீண்ட வாழ்வுக்காலம் கொண்ட ஓரிடத்தான் 145Pm பீட்டாத் துகள் வெளியிடும் பொருள். இதன் அரை-வாழ்வுக்காலம் 17.7 ஆண்டுகளாகும். இது காமாக் கதிர்களை வெளியிடுவதில்லை என்றாலும் வெளிவிடும் பீட்டாத் துகள்கள் அதிக அணுவெண் கொண்ட தனிமங்களின் மீது விழுந்தால் அவை புதிர்க் கதிர்கள் (X-கதிர்கள்) வெளிவிடும். 145Pm என்னும் பொருள் எக்ஸ் கதிர்களும் பீட்டாக் கதிர்களும் வெளிவிடுகின்றன.

பயன்பாடுகள்

வரலாறு

பொகுஸ்லாவ் பிரௌனர் என்பவர் 1902இல் இத்தனிமம் இருக்கவேண்டும் என்பதை முன்கூறினார். ஹென்றி மோஸ்லி என்பவரும் 1914 ஆம் ஆண்டு, தனிம அட்டவணையில் உள்ள இடைவெளியைக் கொண்டு (61 ஆம் அணுவெண்ணுக்கான இடைவெளி) இக்கருத்துக்கு வலுவிருப்பதாகக் கூறினார். கடைசியாக 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் ஜாக்கப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிளெண்டனின், சார்லஸ் கோர்யெல் ஆகியோர் யுரேனிய சிதைவு இயக்கத்தின் விளைபொருட்களை ஆய்வு செய்தபொழுது புரோமித்தியத்தைக் கண்டுபிடித்து தனியே பிரித்தெடுத்துக் காட்டி நிறுவினார்கள். எனினும் 19477 இல்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர் [2] புரோமித்தியம் என்னும் பெயர் கிரேக்கத் தொன்மக் கதைகளில் வரும் புரோமீத்தியஸ் என்னும் டைட்டன் இனத்தவன் ஒலிம்ப்பஸ் மலையில் இருந்து நெருப்பை எடுத்து வந்து மாந்தகுலத்திற்குத்தந்தவன் என்பதில் இருந்து எடுத்து இட்டப் பெயர். இப்பெயரைச் சார்லஸ் கோர்யெல்லின் மனைவி மேரி கோர்யெல் பரிந்துரைத்தார் என்பர்.

1963ல், மின்மவணு-பரிமாற்ற முறை (ion-exchange methods) வழி அணு உலையின் கழிவுப்பொருளில் இருந்து 10 கிராம் புரோமித்தியத்தை அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் உருவாக்கினார்கள்.

கிடைக்கும் அளவு (மலிவு)

புரோமித்தியம் யுரேனிய சிதைவு அல்லது பிளவில், விளைபொருளாகக் கிடைக்கின்றது. மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாகவே இயற்கையில் கிடைக்கின்றது. யுரேனியக் கனிமமாகிய யுரேனினைட் என்னும் கனிமத்தில் நிறையளவில் குவிண்ட்டில்லியனில் ஒரு பங்களவே (1018) கிடைக்கின்றது. யுரேனினைட் என்னும் கனிமம் பிட்ச் பிளெண்டு என்றும் பரவலாக அறியப்படும் கனிமம் ஆகும்[3].

புரோமித்தியம் ஆண்ட்ரொமெடா நாள்மீன்பேரடையில் உள்ள HR 465 என்னும் விண்மீனில் இருந்து வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்தும் (ஒளி முதலான மின்காந்த அலைகள்), பிரிசிபைலிஸ்கி விண்மீன் என்னும் HD 101065 விண்மீனில் இருந்தும், HD 965. என்னும் விண்மீனில் இருந்தும் வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்து அங்கெல்லாம் புரோமித்தியம் இருப்பதற்கான தடயம் இருப்பதாக விண்ணியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புரோமித்தியம்&oldid=3221974" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை