என்றி பெக்கெரல்

பிரெஞ்சு இயற்பியலாளர்

அந்துவான் என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel, டிசம்பர் 15, 1852 - ஆகஸ்ட் 25, 1908) ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு 1903 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அந்துவான் என்றி பெக்கெரல்
Antoine Henri Becquerel
அந்துவான் பெக்கெரல், பிரான்சிய இயற்பியலாளர்
பிறப்பு(1852-12-15)திசம்பர் 15, 1852
பாரிசு, பிரான்சு
இறப்புஆகத்து 25, 1908(1908-08-25) (அகவை 55)
பிரித்தானி, பிரான்சு
இருப்பிடம்பிரான்சு
தேசியம்பிரான்சியர்
படித்த கல்வி நிறுவனங்கள்École Polytechnique
École des Ponts et Chaussées
அறியப்படுவதுகதிரியக்கம்

கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

பெக்கெரல் பாரிசு நகரத்தில் பிறந்தவர். இவர் மற்றும் இவரது மகன் சீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது.

1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும் பின்னர் 1894இல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார்.

கதிரியக்கம்

பெக்கெரல் 1896 இல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence ஐ) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் ரோண்ட்கனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், பெக்கெரல் ஒளிப்பாயப் பொருளான பொட்டாசியம் யூரனைல் சல்பேற்றை ஒளிப்படத் தட்டுக்களில் (photographic plates) வைத்து, தட்டுகளை கருப்புக் காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார். யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.

1903, மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மறைவு

1908 இல் பெக்கெரல் அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அதே ஆண்டில் தனது 55வது அகவையில் காலமானார்.

பெற்ற விருதுகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=என்றி_பெக்கெரல்&oldid=3461065" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்