அக்சும் பேரரசு


அக்சும் பேரரசு (Kingdom of Aksum) வடக்கு எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா பகுதிகளை, கிபி 100 முதல் கிபி 960 வரை ஆண்ட அக்சும் அரச மரபினர் ஆவார்.[2][3]வலிமை வாய்ந்த அக்சும் பேரரசர்கள் தங்களை மன்னர்களின் மன்னர் என அழைத்துக் கொண்டனர்.[4]

அக்சும் பேரரசு
மன்கிஸ்த அக்சும் இராச்சியம்
கிபி 100–கிபி 960
நீலநிறத்தில் அக்சும் இராச்சியம்
நீலநிறத்தில் அக்சும் இராச்சியம்
தலைநகரம்அக்சும்
பேசப்படும் மொழிகள்கீயஸ்
சமயம்
பல கடவுள் வழிபாடு
(கிபி 4-நூற்றாண்டு வரை)
யூதம்
(கிபி 330க்கு முன்னர்)
கிறித்துவம்(கிபி 300-க்குப் பிறகு)
அரசாங்கம்முடியாட்சி
நெகூஸ் 
• கிபி 100
சஹக்லா (முதல்)
• கிபி 940
தில் நவோத் (இறுதி)
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம் முதல் துவக்க நடுக்காலம் வாரை
• தொடக்கம்
கிபி 100
• தெற்கு எத்தியோப்பியாவின் ராணி குடித் அக்சும் அரசை கைப்பற்றுதல்
கிபி 960 கிபி 960
பரப்பு
350[1]1,250,000 km2 (480,000 sq mi)
நாணயம்அக்சும் நாணயம்
முந்தையது
பின்னையது
திம்மத்
கிமைரட்டு இராச்சியம்
மேத்திரி பகாரி
சக்வே வம்சம்
மகுரியா
அலோதியா
சாசானியப் பேரரசு
அக்சும் இராச்சியம் (கரும்பச்சை நிறத்தில்

அக்சும் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்த போது தற்கால எரித்திரியா, சீபூத்தீ, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், எகிப்து மற்றும் யேமன் வரை அக்சும் பேரரசு பரவியிருந்தது. இதன் தலைநகரான அக்சும் நகரம் தற்கால எத்தியோப்பியாவில் உள்ளது. அக்சும் பேரரசில் முதலில் பல கடவுள் வழிபாடு இருந்தது. பின்னர் யூதம் மற்றும் கிறித்தவதமும் பரவியது.

ரோமப் பேரரசுக்கும், பண்டைய இந்தியாவிற்கும் இடையே அக்சும் பேரரசு முக்கிய வணிக மையமாக விளங்கியது. [5] நாடுகளுக்கு இடையேயான வணிகத்திற்கு உதவியாக தேவையான தங்க நாணயங்களை அக்சும் இராச்சியத்தினர் வெளியிட்டனர். [6][7]

பேரரசர் எசுன்னாவின் கல்வெட்டு, கிபி 330, குஷ் இராச்சியம்

கிபி 330-இல், அக்சும் பேரரசர் எசுன்னா [8] கிபி 330-இல் தற்கால சூடானில் இருந்த குஷ் இராச்சியத்தை கைப்பற்றியதன் அடையாளமாக, கற்பலகையில் தன் வெற்றி குறித்து கல்வெட்டு குறிப்பு ஒன்றை நிறுவியுள்ளார்.[9][10]மேலும் அக்சும் ஆட்சியாளர்கள் அரேபியத் தீபகற்ப பகுதிகளின் அரசியலில் தொடர்ந்து தலையிட்டதுடன், சவூதி அரேபியாயின் ஹெஜாஸ் பகுதியை ஆண்ட ஹிமைரைட்டுகளின் இராச்சியத்தைக் கைப்பற்றி ஆட்சிப்பரப்பை விரிவுப்படுத்தினர்.

மானி சமயத்தை நிறுவிய இறைத்தூதர் மானி (இறப்பு:கிபி 274) தனது குறிப்பில், தம்காலத்தில் சிறப்புடன் விளங்கிய நான்கு பேரரசுகளில் அக்சும் பேரரசும் ஒன்று எனக்குறித்துள்ளார். மற்றைய பேரரசுகள் பாரசீகப் பேரரசு, உரோம் மற்றும் சீனப் பேரரசு ஆகும்.[2][11]

எத்தியோப்பாவில் கிறித்துவம் பரவுவதற்கு முன்னர், அக்சும் இராச்சியத்தினர் சமய வழிபாட்டிற்கு பல உருவச்சிலைகளை நிறுவியிருந்தனர். அவைகளில் ஒன்று 90 அடி உயரச் சிலையாகும். [6][7][12] அக்சும் ஆட்சியாளர் எசுன்னாவின் (320–360) ஆட்சிக்காலத்தில், கிபி 320-இல் கிறித்தவம் அரச சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.கிபி 4-ஆம் நூற்றாண்டு முதல் அக்சும் இராச்சியம், எத்தியோப்பியா என அழைக்கப்பட்டது. [13][14]

கிபி 622-இல் முகமது நபித் தோழர்களை, குறைசி மக்கள் சவூதி அரேபியாவின் ஹெஜாஸ் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது, அக்சும் இராச்சியத்தில் அடைக்கலம் அடைந்தனர்.[15][16]

குதிரை மீது எதியோப்பியா அரசி சிபா

இறைவன் வழங்கிய உடன்படிக்கைப் பெட்டி தமது நாட்டிற்குரியது என்றும், சிபா அரசி தமது நாட்டு அரசி என்று அக்சும் இராச்சியத்தினர் உரிமை கோருகிறார்கள்.[17]

கிபி 520-இல் அக்சும் பேரரசர் கலேப் யேமன் மீது படையெடுத்து, கிறித்துவர்களை பழிவாங்கிக் கொண்டிருந்த யூதர்களின் ஹிமையாரைட்டு இராச்சிய மன்னர் தூ நுவாசை வென்றார். 50 ஆண்டுகள் அரேபிய இராச்சியம் அக்சும் இராச்சியத்தின் பாதுகாப்பில் இருந்தது.[18]

வீழ்ச்சி

மத்திய கிழக்கில் இசுலாமின் எழுச்சிக்குப் பின், வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா இராச்சியங்கள், இசுலாமிய கலீபாக்களால் வீழ்த்தப்பட்ட போது, அக்சும் இராச்சியம், கலீபாக்களின் சிற்றரசாக விளங்கியது. கிபி 940-இல் அக்சும் இராச்சியம் கலீபகத்தால் உள்வாங்கப்பட்டு முடிவிற்கு வந்தது.[19]

இதனையும் காண்க

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kingdom of Aksum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அக்சும்_பேரரசு&oldid=3699852" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை