அல்மாத்தி

அல்மாத்தி (Almaty) மத்திய ஆசியாவின் நாடுகளில் ஒன்றான கசக்ஸ்தான் நாட்டின் மிகப் பெரிய நகராகும்.[3] கசக்ஸ்தானின் அல்மாத்தி நகரம் மிகப்பெரிய வணிகம் மற்றும் பண்பாட்டு மையமாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். தெற்கு கசக்ஸ்தானில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. 1997க்கு முன்னர் கசக்ஸ்தான் நாட்டின் தலைநகராக விளங்கியது அல்மாத்தி நகரம். பட்டுப் பாதையில் அமைந்த பெரிய நகரமாகும்.

அல்மாத்தி
Алматы
அல்மாத்தி-இன் கொடி
கொடி
அல்மாத்தி-இன் சின்னம்
சின்னம்
நாடுகசக்ஸ்தான்
மாகாணம்அல்மாத்தி
முதலில் நிறுவப்பட்டதுகி மு 10–9வது நூற்றாண்டு
பின்னர் நிறுவிய ஆண்டு1854
நகரானது1867
பரப்பளவு
 • மொத்தம்682 km2 (263 sq mi)
ஏற்றம்500–1,700 m (1,640–5,577 ft)
மக்கள்தொகை (2015-03-10)[1]
 • மொத்தம்1,552,349
 • அடர்த்தி2,300/km2 (5,900/sq mi)
நேர வலயம்UTC+6 (ஒசநே+6)
அஞ்சல் சுட்டு எண்050000–050063
தொலைபேசி குறியீடு+7 727[2]
ISO 3166-2ALA
வாகன குறியீடு02 (A - on older plates)
இணையதளம்http://www.almaty.kz

அல்மாத்தி பெயர்க் காரணம்

அல்மாத்தி நகரத்திற்கு அருகில், மத்திய காலத்தில் அல்மாட்டு எனும் குடியிருப்பு பகுதியின் பெயரே தற்போதைய அல்மாத்தி நகரத்தின் பெயராயிற்று.

தலைநகர தகுதிநிலை

1929 முதல் 1991 முடிய, அல்மாத்தி நகரம் சோவியத் ஒன்றியத்தின் தன்னாட்சி நாடான கசக்ஸ்தானின் தலைநகராக விளங்கியது. 1991இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி இறையாண்மை கொண்ட நாடாக மாறிய பின்னரும் கசக்ஸ்தானின் தலைநகராக அல்மாத்தி விளங்கியது.

1997ஆம் ஆண்டில் கசக்ஸ்தானின் தலைநகரம் அல்மாத்தியிலிருந்து, அஸ்தானா நகரத்திற்கு மாறியது. இருப்பினும் அல்மாத்தி நகரம் தெற்கு கசக்ஸ்தானின் தலைநகராக கசக்ஸ்தான் மக்கள் கருதுகிறார்கள்.

மக்கள்

அல்மாத்தி நகரத்தில் கசக்ஸ்தானியர்கள் தவிர ருசியா, உய்குர், கொரியா, தார்த்தர் மற்றும் உக்ரேனிய இனக் குழுக்கள் வாழ்கின்றனர்; (2010)[4]

  1. கசக்ஸ்தானியர்கள்: 51.06%
  2. ரஷ்யர்கள்: 33.02%
  3. உய்குர் மக்கள்: 5.73%
  4. கொரியர்கள்: 1.9%
  5. துருக்கியர்கள்: 1.82%
  6. உக்ரேனியர்கள்: 1.24%
  7. மற்றவர்கள்: 5.23%

1989ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அல்மாத்தி நகர மக்கட்தொகை 10,71,900 ஆகும். சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிந்த பின், 1999ஆம் ஆண்டு கசக்ஸ்தான் நாட்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அல்மாத்தியின் மக்கட்தொகை 11,29,400 ஆகும்.[5]

சமயங்கள்

அல்மாத்தி நகரில் பெருமளவு இசுலாமியர்களும், கிறித்தவர்களும் வாழ்கிறார்கள்.

பொருளாதாரம்

கசக்ஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% விழுக்காடு (36 பில்லியன் அமெரிக்க டாலர்) அல்மாத்தி நகரம் பங்களிக்கிறது.[6] அல்மாத்தி நகரம் ஒரு நிதித் துறையில் மிகச்சிறந்து விளங்குகிறது.

பிரபலமானவர்கள்

போலினா லெட்கோவா-சமையல் புத்தக ஆசிரியர், உணவு பதிவர்

நடாலியா நசரோவா-நாடக மற்றும் திரைப்பட நடிகை

டிமாஷ் அடிலெட்-தொழிலதிபர், பதிவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்

விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கி-அரசியல் மற்றும் அரசியல்வாதி

இரினா லிண்ட்-நடிகை

ரேடியோனோவா ஸ்வெட்லானா-ரோஸ்பிரோட்னாட்ஸரின் தலைவர்[7][8][9]

கல்வி

அல்மாத்தி நகரத்தில் பன்னாட்டுப் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளும், ஆய்வுக் கழகங்களும் அமைந்துள்ளன.

பள்ளிகள்

  • தியான் ஷான் பன்னாட்டு பள்ளி.
  • அல்மாத்தி பன்னாட்டுப் பள்ளி.
  • ஹைய்ல்பரி அல்மாத்தி பள்ளி.
  • கசக்ஸ்தான் பன்னாட்டுப் பள்ளி, அல்மாத்தி.
  • மிராஸ் பன்னாட்டுப் பள்ளி, அல்மாத்தி.
  • குடியரசின் இயற்பியல் மற்றும் கணித சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளி.
  • கியுஎஸ்ஐ அல்மாத்தி பன்னாட்டுப் பள்ளி.
  • பன்னாட்டு தொடர் கல்வி கல்லூரி.

பல்கலைக்கழகங்கள்

  • அல்மாத்தி மேலாணமைப் பல்கலைக்கழகம்.
  • பன்னாட்டு தகவல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்.
  • கசக்-பிரித்தானிய தொழிநுட்ப பல்கலைக்கழகம்,
  • பன்னாட்டு வணிகப் பல்கலைக்கழகம்.
  • கசக் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம்.
  • அல்மாத்தி ஆற்றல் சார் பொறியியல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனம்.
  • கசக்ஸ்தான் தேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகம்.
  • அல்-ஃபராபி கசக் தேசிய பல்கலைக்கழகம்.
  • சுலைமான் டெமிரெல் பல்கலைக்கழகம்.
  • கசக்ஸ்தான் மேலாண்மை, பொருளாதார மற்றும் போர்த்திறஞ் சார்ந்த ஆய்வுக் கழகம்.
  • கசக்-அமெரிக்கன் பல்கலைக்கழகம்.
  • கசக் தேசிய கலைகள் கழகம்.
  • கசக் அறிவியல் கழகம்.
  • கசக் தொழிலாளர் மற்றும் சமூகத் தொடர்பான கழகம்.
  • கசக் தேசிய ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்.
  • துரான் பல்கலைக்கழகம்.
  • கசக் பன்னாட்டு உறவுகள் மற்றும் உலக மொழிகளுக்கான பல்கலைக்கழகம்.
  • மத்திய ஆசியா பல்கலைக்கழகம்.
  • கசக்-ஜெர்மன் பல்கலைக்கழகம்.
  • கசக் கட்டிடம் மற்றும் கட்டிடக் கலைக் கழகம்
  • கசக் பொருளாதாரப் பல்கலைக்கழகம்.
  • கசக் தேசிய வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
  • பன்னாட்டு வணிகக் கழகம்.

பருவ நிலை

அல்மாத்தி நகரம் கோடையில் அதிக வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரையும் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Almaty
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)18.2
(64.8)
19.0
(66.2)
28.0
(82.4)
33.2
(91.8)
35.8
(96.4)
39.3
(102.7)
43.4
(110.1)
40.5
(104.9)
38.1
(100.6)
31.1
(88)
25.4
(77.7)
19.2
(66.6)
43.4
(110.1)
உயர் சராசரி °C (°F)0.7
(33.3)
2.2
(36)
8.7
(47.7)
17.3
(63.1)
22.4
(72.3)
27.5
(81.5)
30.0
(86)
29.4
(84.9)
24.2
(75.6)
16.3
(61.3)
8.2
(46.8)
2.3
(36.1)
15.8
(60.4)
தினசரி சராசரி °C (°F)-4.7
(23.5)
-3.0
(26.6)
3.4
(38.1)
11.5
(52.7)
16.6
(61.9)
21.6
(70.9)
23.8
(74.8)
23.0
(73.4)
17.6
(63.7)
9.9
(49.8)
2.7
(36.9)
-2.8
(27)
10.0
(50)
தாழ் சராசரி °C (°F)-8.4
(16.9)
-6.9
(19.6)
-1.1
(30)
5.9
(42.6)
11.0
(51.8)
15.8
(60.4)
18.0
(64.4)
16.9
(62.4)
11.5
(52.7)
4.6
(40.3)
-1.3
(29.7)
-6.4
(20.5)
5.0
(41)
பதியப்பட்ட தாழ் °C (°F)-30.1
(-22.2)
-37.7
(-35.9)
-24.8
(-12.6)
-10.9
(12.4)
-7.0
(19.4)
2.0
(35.6)
7.3
(45.1)
4.7
(40.5)
-3.0
(26.6)
-11.9
(10.6)
-34.1
(-29.4)
-31.8
(-25.2)
−37.7
(−35.9)
பொழிவு mm (inches)34
(1.34)
43
(1.69)
75
(2.95)
107
(4.21)
106
(4.17)
57
(2.24)
47
(1.85)
30
(1.18)
27
(1.06)
60
(2.36)
56
(2.2)
42
(1.65)
684
(26.93)
ஈரப்பதம்77777159564946454964747962.2
சராசரி மழை நாட்கள்4511141515151091086122
சராசரி பனிபொழி நாட்கள்1113820.2000.10.1261153.4
சூரியஒளி நேரம்1181191471942412803062942451841271012,356
Source #1: Pogoda.ru[10]
Source #2: NOAA (sun 1961–1990)[11]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Almaty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அல்மாத்தி&oldid=3924535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை