இராபர்ட் வில்லியம் பாயில்

ஆங்கிலேய-ஐரிஷ் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர்

இராபர்ட்டு பாயில் [2] (Robert Boyle, 25 சனவரி 1627 – 31 திசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்த இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாகக் கருதப்படுகிறது. இவர் இறைபக்தி நிறைந்து விளங்கியவர் என்பதை இறையியல் சார்ந்த அவரது எழுத்துக்கள் மூலம் அறியலாகிறது.

இராபர்ட்டு பாயில்
இராபர்ட்டு பாயில் (1627–91)
பிறப்பு25 சனவரி 1627
இலிசுமோர், வாட்டர்போர்டு கவுண்ட்டி, அயர்லாந்து
இறப்பு31 திசம்பர் 1691(1691-12-31) (அகவை 64)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஐரிசுக்காரர்
துறைஇயற்பியல், வேதியியல்
கல்விஈட்டன் கல்லூரி
குறிப்பிடத்தக்க மாணவர்கள்இராபர்ட்டு ஊக்கு
அறியப்படுவது
பின்பற்றுவோர்ஐசாக் நியூட்டன்[1]

இளமைக் காலம்

1627 சனவரி 25 அன்று இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் (அயர்லாந்து நாட்டின் மாநில செயலராக இருந்த சர் ஜாப்ரி பென்றன் மற்றும் ஆலிஸ் வெஸ்டன் இவர்களின் மகள்) தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக அயர்லாந்து நாட்டில், வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இரிச்சர்டு பாயில் அயர்லாந்தில் உள்ள டூடர் தோட்டங்களில் துணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக 1588ல் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக்கு வந்தார். இரிச்சர்ட்டு பாயில் நில சுவானாக இருந்த காலத்தில் தான் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது தன் மூத்த சகோதரர்களைப் போன்று அயர்லாந்து குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டார். பாயில் தனியார் பாடசாலை மூலம் இலத்தீன், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இவர் தனது எட்டாவது அகவையில் தாயை இழந்தார். இவரது தந்தையின் நண்பரான சர்.ஹென்றி வோட்டன் இங்கிலாந்தில் உள்ள ஈட்டன் கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்காலத்தில் இராபர்ட்டு காரே என்னும் தனியார் பயிற்றுநரை ஐரிசு மொழியறிவை இராபர்ட்டு வில்லியம் பாயில் பெற்றுக் கொள்ளுவதற்கு அவரது தந்தை பணி அமர்த்தினார். இருப்பினும் இவருக்கு ஐரிசு மொழியில் ஆர்வம் ஏற்படவில்லை. மூன்று ஆண்டுகள் ஈட்டனில் கழித்த பிறகு பிரெஞ்சு பயிற்றுநருடன் வெளிநாடு சென்றார். 1641ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டினைப் பார்வையிட்டனர். அந்நாட்களில் வாழ்ந்த கலீலியோ கலிலி என்பவரின் பெரு நட்சத்திரங்களின் முரண்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும்படி குளிர்காலத்தில் பிளாரன்ஸ் மாகாணத்தில் தங்கினார்.

விருதுகள்

2014 ஆம் ஆண்டுக்கான பகுப்பாய்வு அறிவியலுக்கான ராபர்ட் பாயில் பரிசு

இராயல் சொசைட்டி என்னும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவராய் இருந்த பாயில் 1663-ஆம் ஆண்டில் இவ்வமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[2] பாயில் விதி என்பது இவரது பெயரை ஒட்டி வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை