உமரு யராதுவா

உமரு முசா யராதுவா (Umaru Musa Yar'Adua, 16 ஆகஸ்ட் 1951 – 5 மே 2010),[1][2][3] நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவராக 2007 முதல் 2010 வரை இருந்தவர். இவர் 1999 முதல் 2007 வரை கட்சினா மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் 2007 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, 2007 மே 29 அன்று அரசுத்தலைவரானார். இவர் ஆளும் “மக்களின் மக்களாட்சிக் கட்சியின்” உறுப்பினர் ஆவார்.

உமரு யராதுவா
Umaru Yar'Adua
நைஜீரியாவின் அரசுத்தலைவர்
பதவியில்
29 மே 2007 – 5 மே 2010
Vice Presidentகுட்லக் ஜொனத்தன்
முன்னையவர்ஒலுசேகுன் ஒபசானியோ
பின்னவர்குட்லக் ஜொனத்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-08-16)16 ஆகத்து 1951
கட்சினா, நைஜீரியா
இறப்பு5 மே 2010(2010-05-05) (அகவை 58)
தேசியம்நைஜீரியர்
அரசியல் கட்சிமக்களின் மக்களாட்சிக் கட்சி(1998–இன்று)
துணைவர்(s)துரை யராதுவா (1975-2010)
ஹாவுவா உமர் ரடா (1992-1997)
முன்னாள் கல்லூரிபெரெவா கல்லூரி
அகமாது பெல்லோ பல்கலைக்கழகம்

அரசுத்தலைவர் யராதுவா சுகவீனம் காரணமாக 2009 நவம்பர் 23 இல் நாட்டி விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்றார். அன்றில் இருந்து அவர் பொதுவாழ்வில் தோன்றவில்லை. அத்துடன் அவரது வெளியேற்றம் அரசுத்தலைவர் பதவிக்குப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது[4]. 2010 பெப்ரவரி 9 இல் யராதுவா திரும்பி வரும் வரையில், உதவி சனாதிபதி குட்லக் ஜொனத்தன் பதில் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்[5].

2010 பெப்ரவரி 24 இல் யராதுவா நாடு திரும்பினார். ஆனாலும் அவரது உடல்நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை[6]. 2010 மே 5 இல் யராதுவா இரவு 09:00 மணிக்கு இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[7].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உமரு_யராதுவா&oldid=3235398" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை