உலக எயிட்சு நாள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம்

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது[2] ,இதில் 270,000 குழந்தைகள்.[3]

வரலாறு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.[4][5] . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

டிசம்பர் முதலாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.

எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது[6]. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின[6][7].

முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.[6][7][8]

ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்[9][10][11][12][13][14].

நோக்கம்

எயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும்.எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.

எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்

எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).

இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்

  • எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.

தமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்

  • 2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.

கருப்பொருட்களை தேர்ந்தெடுத்தல்

30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா
2005-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்காக விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர் உயரமுள்ள ஆணுறை

1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (உலக எய்ட்ஸ் பிரச்சாரம் பரணிடப்பட்டது 2016-01-25 at the வந்தவழி இயந்திரம்) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2015
1988தொடர்பாடல்
1989இளைஞர்
1990எய்ட்சும் பெண்களும்
1991சவாலை பகிர்ந்து கொள்ளல்
1992சமூகத்தின் ஈடுபாடு
1993செயலாற்றுதல்
1994எய்ட்சும் குடும்பமும்
1995உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்
1996ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்
1998மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
1999செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
2000எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்
2001நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
2002வடு மற்றும் பாகுப்பாடு
2003வடு மற்றும் பாகுப்பாடு
2004பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
2005எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2006எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability
2007எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2008எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2009எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2010எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2011பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்[15]
2012ஒன்றாய் இணைந்து எய்ட்ஸை ஒழிப்போம் [16]
2013பூஜ்ஜிய பாகுபாடு [17]
2014இடைவெளியை குறைப்போம்[18]
2015விரைவான வழியில் எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம் [19]

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உலக_எயிட்சு_நாள்&oldid=3599378" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை