எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு

பிலிப்பு V (Philip V,எசுப்பானியம்: Felipe V, பிரெஞ்சு மொழி: Philippe, இத்தாலியம்: Filippo; 19 திசம்பர் 1683 – 9 சூலை 1746) எசுப்பானியாவின் அரசராக இருந்தவர். நவம்பர் 1, 1700 முதல் சனவரி 15, 1724 வரையும் பின்னர் செப்டம்பர் 6, 1724 முதல் சூலை 9, 1746 வரையும் இரு பதவிக்காலங்களில் அரசராக இருந்தார். முதல்முறை தனது மகன் லூயிக்காக பதவி துறந்தார்; ஆனால் அதே ஆண்டு அவர் மரணமடைந்ததால் மீண்டும் அரசராகப் பதவி ஏற்றார்.[1][2][3]

பிலிப்பு V
ஜீன் ரான்க் வரைந்த ஓவியம், 1723
padding-top:0.2em
முதலாம் ஆட்சிக்காலம்6 நவம்பர் 1700 –
15 சனவரி 1724
முன்னையவர்சார்லசு II
பின்னையவர்எசுப்பானியாவின் முதலாம் லூயி
இரண்டாம் ஆட்சிக்காலம்6 செப்டம்பர் 1724 –
9 சூலை 1746
முன்னையவர்எசுப்பானியாவின் முதலாம் லூயி
பின்னையவர்எசுப்பானியாவின் ஆறாம் பெர்டினான்டு
பிறப்பு19 திசம்பர் 1683
வெர்சாய் அரண்மனை, பிரான்சு
இறப்பு9 சூலை 1746(1746-07-09) (அகவை 62)
மத்ரித், எசுப்பானியா
புதைத்த இடம்
லா கிரான்கா டெ சான் இல்டெபோன்சோ அரச மாளிகை
துணைவர்சவாயின் மாரியா லூயிசா
எலிசபெத் பார்னெசு
குழந்தைகளின்
#Marriages
லூயி I
எசுப்பானியாவின் ஆறாம் பெர்டினான்டு
எசுப்பானியாவின் மூன்றாம் சார்லசு
மாரியானா விக்டோரியா (போர்துகல் அரசி)
பிலிப்பு
மாரியா தெரெசா ரபேலா
லூயிசு
மாரியா அன்டோனியா பெர்னான்டா, சார்தீனியா அரசி
மரபுபூர்பூன் அரசமரபு
தந்தைலூயி, பிரான்சின் டாஃபின்
தாய்பவேரியாவின் மாரியா அன்னா விக்டோரியா
மதம்உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்பிலிப்பு V's signature

தாம் எசுப்பானியாவின் அரசராவதற்கு முன்பாக பிரான்சின் அரச குடும்பத்தில் முதன்மையான இடத்தில் இருந்தார். அரசர் பதினான்காம் லூயியின் பேரனாவார். அவரது தந்தை, லூயி, பெரும் கோமானுக்கு எசுப்பானியாவின் மன்னராவதற்கு முழுமையான மரபணுவழி உரிமை இருந்தது; ஆனால் அவரும் அவரது முதல் மகன் பர்கண்டி பிரபு, லூயியும் பிரான்சு அரியணை ஏற வாரிசுரிமைப் பெற்றிருந்ததால் எசுப்பானிய அரசர் இரண்டாம் சார்லசு பிலிப்பை தமது உயிலில் வாரிசாக அறிவித்தார். ஆனால் இவர் முடி சூடினால் பிரான்சும் எசுப்பானியாவும் இணைந்து ஒரே அரசரின் கீழாக வல்லரசு ஆகும் எனவும் ஐரோப்பிய அதிகார சமநிலை பாதிக்கப்படும் எனவும் மற்ற ஐரோப்பிய நாடுகள் இதைத் தடுக்க முயன்றன. பிலிப்பு அரசரானதும் அதனை எதிர்த்து இந்நாடுகள் 14-ஆண்டு எசுப்பானிய மரபுரிமைப் போர் நடந்தன; உத்ரெக்ட் உடன்பாடு மூலம் வருங்காலத்தில் பிரான்சும் எசுப்பானியாவும் இணையும் வாய்ப்பை தடுக்கும்வரை இப்போர் நடந்தது.

பூர்பூன் அரசமரபிலிருந்து எசுப்பானியாவின் அரசராக பொறுப்பேற்ற முதல் நபராக பிலிப்பு இருந்தார். இரு பதவிக்காலங்களில் இவர் ஆட்சி புரிந்த 45 ஆண்டுகள், 21 நாட்கள் தற்கால எசுப்பானிய வரலாற்றில் நீண்ட ஆட்சிக்காலம் ஆகும். தவிரவும் எசுப்பானியாவின் மூன்று அரசர்களுக்கு தந்தையாக இருந்தார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை