எலன் ஜான்சன் சர்லீஃப்

எலன் ஜான்சன் சர்லீஃப் (Ellen Johnson Sirleaf, பிறப்பு: 29 அக்டோபர் 1938) லைபீரிய அரசியல்வாதியும் லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவராக 2006 முதல் 2018ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் ஆவார். இவரே ஆப்பிரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசத்தலைவர் ஆவார்.

எலன் ஜான்சன் சர்லீஃப்
லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவர்
பதவியில்
16 சனவரி 2006 – 22 ஜனவரி 2018
Vice Presidentஜோசஃப் போகாய்
முன்னையவர்குயூடெ பிரியண்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 29, 1938 (1938-10-29) (அகவை 85)
மொன்ரோவியா, லைபீரியா
அரசியல் கட்சிஒற்றுமைக் கட்சி
முன்னாள் கல்லூரிகொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்)
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
தொழில்பொருளியலாளர்
வர்த்தகர்
செயல்முனைப்பாளர்

இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு வெளியேறினார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு தேர்தல்களில் இரண்டாவதாக வந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சனவரி 16, 2006இல் ஆபிரிக்காவின் முதலாவதும் மற்றும் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் லேமா குபோவீ மற்றும் தவக்குல் கர்மானுடன் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.[1]

12 செப்டம்பர் 2013 அன்று அமைதிக்கான "இந்திரா காந்தி அமைதிப் பரிசினை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முக்கர்ஜி இவருக்கு வழங்கினார்.

டிசம்பர் 2021 இல், எலன் சர்லீஃப்பின் மகன்களில் ஒருவரான ஜேம்ஸ் சர்லீஃப் லைபீரியாவில் உள்ள அவரது இல்லத்தில் அறியப்படாத சூழ்நிலையில் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

மேடைப்பேச்சுக்கள்
அறிமுகங்களும் நேர்காணல்களும்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை