ஐமன் அழ்-ழவாகிரி

ஐமன் முகம்மது ரபீ அழ்-ழவாகிரி (Ayman Muhammad Rabaie al-Zawahiri[6]; 19 சூன் 1951 – 31 சூலை 2022)[7] என்பவர் எகிப்தில் பிறந்த மருத்துவரும், இறையியலாளரும், 2011 முதல் 2022 சூலையில் இறக்கும் வரை அல் காயிதா தீவிரவாதக் குழுவின் தலைவராகவும் இருந்தவர்.[8] இவர் எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின் தலைவர் அப்த்-அல்-சுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் அமீராக இருந்தார். உசாமா பின் லாதின் நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பின்னர் அல்கைதாவின் தலைவரானார். இவர் முன்னதாக ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்திய இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் மூத்த உறுப்பினராக இருந்தார். 2012 இல், இவர் முசுலிம் நாடுகளில் உள்ள மேற்குலகத்தவரைக் கடத்துமாறு முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டவர்.[9]

ஐமன் அழ்-ழவாகிரி
Ayman al-Zawahiri
أيمن الظواهري
ஐமன் அழ்-ழவாகிரி காபுலில், நவம்பர் 2001
அல் காயிதாவின் 2-வது தளபதி அமீர்
பதவியில்
சூன் 16, 2011[1] – சூலை 31, 2022
முன்னையவர்உசாமா பின் லாதின்
துணை அமீர், அல் காயிதா
பதவியில்
1988–2011
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்நாசிர் அழ்-வுகைசி
அமீர், எகிப்திய இசுலாமியப் போராட்டம்
பதவியில்
1991–1998
முன்னையவர்முகம்மது அப்தல் சலாம் பராச்
பின்னவர்அல் காயிதாவுடன் இணைப்பு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஐமன் முகம்மது ராபி அழ்-ழவாகிரி

(1951-06-19)சூன் 19, 1951
கீசா, Egypt
இறப்புசூலை 31, 2022(2022-07-31) (அகவை 71)
காபுல், ஆப்கானித்தான்[2]
காரணம் of deathஆளில்லா வானூர்தித் தாக்குதல்[2]
தேசியம்எகிப்தியர்
துணைவர்(s)
அசா அகமது
(தி. 1978; இற. 2001)

உமைமா அசன்
பிள்ளைகள்7
முன்னாள் கல்லூரிகெய்ரோ பல்கலைக்கழகம்
வேலைஅறுவை மருத்துவர்
இராணுவப் பணி
சார்பு எகிப்து இராணுவம் (Surgeon)[3]
(1974–1977)[4]
எகிப்திய இசுலாமியப் போராட்டம் (1980–1998)[5]
அல் காயிதா
(1988–2022)
சேவைக்காலம்1980–2022
தரம்செனரல் அமீர். அல் காயிதா
போர்கள்/யுத்தங்கள்சோவியத்–ஆப்கான் போர்
ஆப்கானித்தான் போர் (2001–2021)

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் பின்னர், இவரைக் கைது செய்யத் தகவல் தருவோருக்கு 25 மில்லிய அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளிப்பதாக அமெரிக்க அரசுத் திணைக்களம் அறிவித்திருந்தது.[10][11] 1999 இல், இவர் மீது ஐக்கிய நாடுகளின் அல்-கைதா தடைகள் குழு உலகளாவிய தடைகளை விதித்திருந்தது.[12]

அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை 1986ஆம் ஆண்டு ஜித்தாவில் சந்தித்தார்.[13] அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு அரபி , ஆங்கிலம் [14][15] மற்றும் பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி உண்டு.

1998ஆம் ஆண்டு அல் சவாகிரி எகிப்திய இசுலாமிய ஜிகாத் இயக்கத்தை அல்காயிதாவுடன் முறையாக இணைத்தார். அல்காயிதாவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, அல் ழவாகிரி அல்காயிதாவின் நிறுவன காலத்திலிருந்தே பணி புரிந்தவர் என்றும் அதன் ஆலோசனை அவையின் மூத்த உறுப்பினராக விளங்கினார் என்றும் அறியப்படுகிறது. பின் லாதினின் "தளபதி" என்று இவர் குறிப்பிடப்பட்டாலும், பின் லாதினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் இவரை அல்காயிதாவின் உண்மையான "அறிவுத்திறன்" எனக் குறிக்கிறார்.[16]

2022 சூலை 31 அன்று, அழ்-ழவாகிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றின் மூலம் காபுல் நகரில் வைத்துக் கொல்லப்பட்டார்.[17]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

நிகழ்படம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐமன்_அழ்-ழவாகிரி&oldid=3792206" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை