ஒளி உமிழ் இருமுனையம்

ஒளி-உமிழ் இருமுனையம் அல்லது ஒளிகாலும் இருமுனையம் அல்லது ஒளியீரி (இலங்கை வழக்கு: ஒளிகாலும் இருவாயி, light-emitting diode) என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இது இருமுனையக் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.[7] இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். பொருத்தமான மின்னழுத்தம் இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், எதிர்மின்னிகள் புரைமின்னிகளுடன் மீள்சேர்வால் உருவாகும் ஆற்றல் ஒளியணுக்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு மின்ஒளிர்வு எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறைகடத்தியிலுள்ள ஆற்றல் இடைவெளியைப் பொறுத்துள்ளது.

ஒளி-உமிழ் இருமுனையம்
5 மிமீ ஒளிவிரவிய உறைகளில் நீலம், தூய பச்சை, சிவப்பு ஒளியீரிகள்
வகைமுனைப்பற்ற, ஒளி மின்னணுவியல்
செயல் கோட்பாடுமின்ஒளிர்வு
கண்டுபிடித்தவர்ஒலெக் இலோசெவ் (1927)[1][2][3]
ஜேம்சு ஆர். பியர்டு (1961)[4]
நிக் ஓலொன்யக் (1962)[5]
முதல் தயாரிப்பு1968[6]
Pin configurationநேர் மின்முனை, எதிர் மின்முனை
இலத்திரனியல் குறியீடு
ஒளியீரியின் பாகங்கள்.
Modern LED retrofit with E27 screw in base
குமிழ்விளக்கு வடிவத்தில் தற்கால ஒளிகாலும் இருவாயி விளக்கு. அலுமினிய வெப்பக் கடத்தியையும் ஒளியை விரவும் குவிமுகத்தையும் E27 திருகாணித் தளத்தையும் கொண்டுள்ளது. நேரடியாக பயன்பாட்டு மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடியது.

1962ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டு இலத்திரனியல் கருவிகளில் இடம்பிடித்துள்ள[8] ஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன.இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் கட்புலனாகும் ஒளி, புற ஊதாக் கதிர், மற்றும் அகச்சிவப்புக் கதிர் அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.

ஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1 மிமீ2க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன.[9]

இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.

மேற்சான்றுகள்

படிப்புக்கு பரிந்துரை

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை