கை

கை (மரு./இலத்தீன்: manus, pl. manūs) பொதுவாக ஓர் முதனியின் கரம் அல்லது முன்னுறுப்பொன்றின் இறுதியில் இருக்கும், பொருட்களைப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதும் பல விரல்களைக் கொண்டதுமான உடலுறுப்பாகும்.கைகள் தன்னைச் சுற்றியுள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். பெரிய பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் (பெரு உந்துதிறன்) சிறு கற்களையும் பிரிக்கவும் (நுண் உந்து திறன்) இவை பயனாகின்றன. விரல்முனைகள் உடலின் மிக அடர்த்தியான நரம்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், தொடு உணர்ச்சி மூலமான பின்னூட்டம் கிடைக்கிறது;இது உடலை சரியாக இருக்கையில் வைக்கும் திறனுடையது.தொடு உணர்ச்சி என்றாலே கைகள் என்ற தொடர்பு இதனாலேயே ஏற்பட்டுள்ளது.மற்ற இரட்டை உறுப்புகளான கண்கள், காதுகள்,கால்கள் போன்று ஒவ்வொரு கையும் மூளையின் எதிர்த்தரப்பு அரைக்கோளத்தால் ஆளப்படுகின்றன. (வலது கை இடது புற மூளை அரைக்கோளத்தாலும், இடது கை வலதுபுற மூளை அரைக்கோளத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன).தனி கையினால் செய்யப்படும் செயல்களுக்கு (எழுதுவது,வரைவது) விரும்பப்படும் கையைக் கொண்டே ஒருவர் வலதுகைக்காரர் அல்லது இடதுகைக்காரர் என அழைக்கப்படுகிறார்.

கை
Hand
மனிதக் கை ஒன்றின் எக்சு-கதிர்ப் படம்
விளக்கங்கள்
சிரைdorsal venous network of hand
நரம்புUlnar, median, radial nerves
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Manus
MeSHD006225
TA98A01.1.00.025
TA2148
FMA9712
உடற்கூற்றியல்

அறிவியலில் கை எனப்படுவது யாது?

கை, Paolo Monti

பல பாலூட்டிகளும் பிற விலங்குகளும் கையைப் போன்றே பற்றிக்கொள்ளும் புற உறுப்புகளை,(நாய் போன்றவற்றின் பாத நகங்கள்,பறவைகளின் வளைந்த நகங்கள்)கொண்டிருந்தாலும் அவையெல்லாம் அறிவியலில் கைகளாகக் கருதப்படுவதில்லை. முதனிகளிடையே மட்டுமே கைகள் அமைந்துள்ளன. கைகளுக்கு எதிரெதிரான கட்டைவிரல்கள் இருக்கும்.

மனிதர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே (பிறவிக்குறையாக கூடுதல் கைகள் இருக்கலாம்),[1] உள்ளன. மனிதக் குரங்குகளுக்கும் குரங்குகளுக்கும் சிலநேரங்களில் அவற்றின் கால் விரல்கள் நீண்டிருப்பதாலும், கால் கட்டை விரல்கள் எதிர்த்திருப்பதாலும் கைகளைக் கொண்டு செய்யும் செயல்களைக் கால்களாலும் செய்ய முடிவதாலும் நான்கு கைகள் கொண்டவையாக விவரிக்கப்படுகின்றன. சில மனிதக்குரங்குகளின் கால்விரல்கள் மனிதர்களுடைய கைவிரல்களை விடப் பெரியவை.[2]

உயிர்கள் உருவான வரலாற்றை ஆராயும் உடற்கூறு அறிஞர்கள் கை என்ற சொல்லை முன்னுறுப்பொன்றில் விரல்கள் ஒட்டியுள்ளதைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர். காட்டாக மூன்று விரல்கள் உடைய பறவைகளின் கைக்கும் இரண்டு விரல்கள் கொண்ட டினோசர் கைக்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்வதைக் கூறலாம்.[3]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
hands
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளியிணைப்புகள்

கை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கை&oldid=3551451" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை