சுகார்த்தோ

சுகார்த்தோ (Suharto அல்லது Soeharto, (ஜூன் 8, 1921 - ஜனவரி 27, 2008) இந்தோனேசியாவின் முன்னாள் இராணுவத் தலைவரும் அதிபருமாவார். 1967 இலிருந்து 1998 வரை இந்தோனேசியாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவியிலிருந்த அரசியற் தலைவராவார்.

சுகாத்தோ
இந்தோனேசியாவின் 2வது அதிபர்
பதவியில்
மார்ச் 12, 1967 – மே 21, 1998
முன்னையவர்சுகர்னோ
பின்னவர்யூசுப் ஹபீபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 8, 1921 (1921-06-08) (அகவை 102)
கெமுசுக், யோகியாகார்த்தா
இறப்புசனவரி 27, 2008(2008-01-27) (அகவை 86)
ஜகார்த்தா, இந்தோனீசியா
தேசியம்இந்தோனீசியர்
அரசியல் கட்சிகோல்கார்
துணைவர்சித்தி ஜர்தீனா
தொழில்இராணுவம்

இந்தோனீசியாவின் முதலாவது ஜனாதிபதி சுகர்னோவிடமிருந்து இராணுவத் தலையீட்டின் மூலமும் உள்நாட்டுக் குழப்பங்க்களீன் மத்தியிலும் சுகார்த்தோ ஆட்சியைக் கைப்பற்றினார். தனது 30 ஆண்டுகால ஆட்சியில், சுகார்த்தோ ஒரு காத்திரமான மத்திய அரசாங்கத்தை இராணுவ வழிமுறைக்களில் அமைத்தார். அவரது நிலையான அரசியற் கொள்கை மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அவருக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டது[1]. ஆனாலும் இவரது ஆட்சிக் காலத்தில் மில்லியன் கணக்கில் கம்யூனீஸ்டுக்களும் சீன இந்தோனேசியர்களும் கொல்லப்பட்டனர்[2]. கம்யூனிஸ்டுகள், மற்றும் சீனர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன[3].

ஆனாலும் 1990களில் நாட்டின் பொருளாதார நிலைமை மந்தமடையத் தொடங்கியது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாட்டு ஆதரவு குறையத் தொடங்கிற்று. உள்நாட்டுக் குழப்பங்களின் மத்தியில் மே 1998இல் தனது அதிபர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுகார்த்தோ&oldid=3245149" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை