சுமி மாகாணம்

சுமி மாகாணம் (Sumy Oblast) உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உருசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மாகாணம். இதன் தலைநகரம் சுமி நகரம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 10,53,402 ஆகும். இதன் பிற முக்கிய நகரங்கள் கோனோடாப், ஒக்டிர்கா, ரோம்னி, சோஸ்தகா ஆகும். இம்மாகாணத்தின் 600 இடங்களில் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இது வேளாண் பயிர்களை உற்பத்தி செய்கிறது. 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது.

சுமி மாகாணம்
Сумська область
சும்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
நாடு Ukraine
தலைநகரம்சுமி
அரசு
 • ஆளுநர்டிமிட்ரோ சிவிஸ்கையி[2]
 • சுமி மாகாணச் சட்டமன்றம்64 உறுப்பினர்கள்[3] seats
 • தலைவர்விளாடிமிர் தோக்கர்
பரப்பளவு
 • மொத்தம்23,834 km2 (9,202 sq mi)
பரப்பளவு தரவரிசை16-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 1,053,402
 • தரவரிசை19-ஆம் இடம்
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு40000-41999
வட்டார குறியீடு+380-54
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-59
மாவட்டங்கள்18
நகரங்கள் (மொத்தம்)15
• மண்டல நகரங்கள்7
நகர்புற குடியிருப்புகள்20
கிராங்கள்1492
FIPS 10-4UP21
இணையதளம்sorada.gov.ua

புவியியல்

23,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாகாணத்தில் வடகிழக்கிலும், கிழக்கிலும் உருசியா, தென்மேற்கில் போல்தாவா மாகாணம், தெற்கில் கார்கிவ் மாகாணம், மேற்கில் செர்னிகிவ் மாகாணம் உள்ளது. தேஸ்னா ஆறுடன் 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

இம்மாகாணம் 18 மாவட்டங்களும், 15 நகரங்களும், 7 நகராட்சிகளும், 20 நகர்புற குடியிருப்புகளும், 1492 கிராமங்களும் கொண்டது.

சுமி மாகாணத்தின் வரைபடம்

பொருளாதரம்

இம்மாகாணத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், இயந்திரவியல் தொழிற்சாலைகள், வேளாண் இயந்திரக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், இரும்புச் சுரங்கங்கள் கொண்டது. இம்மாகாணம் 237 பெரிய அளவிலான தொழிற்சாலைகளும், 327 சிறிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டுள்ளது.

இம்மாகாணத்தின் முக்கிய விளைபொருட்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சூரியகாந்தி விதைகள், உருளைக்கிழங்கு ஆகும். மேலும் இறைச்சி, பால் பொருட்கள், முட்டை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுமி_மாகாணம்&oldid=3842742" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை