சென்சென்

சென்சென் (Shenzhen) ஆங்காங்கிற்கு உடனடி வடக்கே சீனாவின் தென்பகுதியில் குவாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். சென்சென் சீனாவின் முதல் சிறப்பு பொருண்மிய வலயமாகவும் மிகுந்த வெற்றியடைந்த திட்டமாகவும் விளங்குகின்றது. உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்போது ஓர் மாகாணத்தை விட சற்றே அதிகாரம் குறைந்த துணை மாகாண நிலை பெற்று விளங்குகின்றது.

சென்சென்
Shenzhen

深圳
துணை மாகாணம்
深圳市
குவாங்டனில் சென்சென் நகர ஆட்பகுதியின் அமைவிடம்
குவாங்டனில் சென்சென் நகர ஆட்பகுதியின் அமைவிடம்
நாடுசீனா
மாகாணம்குவாங்டங்
மாவட்டங்கள்6
சி.பொ.ம நிறுவியதுமே 1, 1980
அரசு
 • வகைதுணை மாகாண நகரம்
பரப்பளவு
 • துணை மாகாணம்2,050 km2 (790 sq mi)
 • நகர்ப்புறம்412 km2 (159 sq mi)
ஏற்றம்25 m (82 ft)
மக்கள்தொகை (2009)[1]
 • துணை மாகாணம்89,12,300
 • அடர்த்தி4,348/km2 (11,260/sq mi)
 • நகர்ப்புறம்33,07,700
 • நகர்ப்புற அடர்த்தி8,029/km2 (20,794/sq mi)
 • முதன்மை சீன மக்கள்ஹான் சீனர்கள்
இனங்கள்சென்செனர்
நேர வலயம்சீனச் சீர்தர நேரம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு755
GDP2009[1]
 - மொத்தம்CNY 820.123 பில்லியன்
USD 120.14 பில்லியன்
 - தனி நபர்CNY 92,771
USD 13,590
 - வளர்ச்சி 10.7%
ஊர்தி உரிம சட்டம் முன்னொட்டுகள்粤B
இணையதளம்(ஆங்கிலம்) sz.gov.cn
சென்சென்
"சென்சென்", சீன மொழியில்
சீனம் 深圳
சொல் விளக்கம்ஆழமான வரப்புகள்

சென்சென்னின் புதுமையான மற்றும் நவீன நகர்த்தோற்றத்திற்கு துடிப்பான பொருளாதாரமும் விரைவான வெளிநாட்டு முதலீடுகளும் காரணமாயிற்று. இது 1970களில் சீனா தனது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தி சிறப்பு பொருண்மிய வலயங்களில் "சீர்திருத்த பொருளாதார, திறந்த நிர்வாக" அமைப்பை ஏற்படுத்தியதால் நிகழ்ந்தது. இவற்றிற்கு முன்னர் சென்ச்சென் ஓர் சிற்றூராக இருந்தது. எழுபதுகளின் பிந்தைய காலங்களில் சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். US$30 பில்லியனுக்கு மேலாக தயாரிப்பு தொழிலகங்களில் முழுமையும் வெளிநாட்டு உரிமை உடைய நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் இணைந்த வெளிநாட்டு முதலீடுகளும் ஈடுபட்டுள்ளன. தற்போது கூடுதலாக சேவைத்துறையிலும் முதலீடுகள் மிகுந்து வருகின்றன. உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக சென்சென் விளங்குகின்றது.[2] தெற்கு சீனாவின் முதன்மை நிதி மையமாக விளங்குவதால் சென்சென்னில் பங்குச் சந்தையும் பல நிறுவனங்களின் தலைமையகமும் உள்ளன. சென்சென் மூன்றாவது நெருக்கம் மிகுந்த கொள்கலன் துறைமுகமாகவும் விளங்குகின்றது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சென்சென்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சென்சென்&oldid=3555821" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை