ஜாக்கஸ் தெரிதா

ஜாக்கஸ் தெரிதா (/ʒɑːk ˈdɛr[invalid input: 'ɨ']də/; பிரெஞ்சு மொழி: [ʒak dɛʁida]; ஜாக்கி ஏலி தெரிதா;[1] 15ம் திகதி ஜூலை மாதம் 1930ம் ஆண்டு பிறந்தார். அவர் இறந்த நாள் அக்டோபர் 9, 2004. இவர் தலைசிறந்த பிரெஞ்சு பின்-அமைப்பியல் சிந்தனையாளர். இவர் பிரெஞ்சு அல்ஜீரியாவில் பிறந்தார். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். ஜாக்கஸ் தெரிதா பொருட்குறி பகுப்பாய்வு எனப்படும் கட்டவிழ்ப்பு (Deconstruction) கொள்கையை வகுத்தவர் ஆவார். இவர் பின்-அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ தத்துவம் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராவார்.[2]

ஜாக்கஸ் தெரிதா
பிறப்புஜாக்கி ஏலி தெரிதா[1]
(1930-07-15)சூலை 15, 1930
எல் பியர், பிரெஞ்சு அல்கேரியா
இறப்புஅக்டோபர் 9, 2004(2004-10-09) (அகவை 74)
பாரிஸ், பிரான்சு
காலம்20th-century philosophy
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிகான்டினென்டல் தத்துவம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Deconstruction · Différance · Phallogocentrism · Free Play · Archi-writing · Metaphysics of presence
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • ரிசார்ட் ரொட்ரி · போல் டி மான் · பெர்னார்ட் ஸ்டிச்ளீர் · ஜீன்-லக் நான்சி · பில்லிபே லகோ-லபர்த் · எர்னஸ்டோ லக்லா · சந்தால் மவுபேயின் · ஜூடித் பட்லர் · ஜூலியா கிரிச்டேவா · லூயி அல்தூசர் · பீட்டர் எயசிமன் · கயாட்ரி ஸ்பிவக் · ஜோன் கபுடோ · மாரியோ கோபிக் · அவிடல் ரோனில்லி · காதேரீன் மலபோ · கொப்ரி கார்ட்மன் · ஜே. ஹில்லிஸ் மில்லர் · ஹரோல்ட் ப்லூம் · மார்டின் ஹக்லாந்து · சைமன் கிலேண்டிநிங் · ராபர்ட் மக்கிலியோல

தெரிதாவின் சிந்தனைப் படைப்புகளும் ஆய்வுகளும்

தெரிதா 40க்கும் அதிகமான ஆய்வு நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பல உரைகளையும் ஆற்றியுள்ளார். மனித பண்பாட்டியல் துறை, சமூக அறிவியல், மெய்யியல், இலக்கியம், சட்டம்,[3][4][5] மானிடவியல்,[6] வரலாற்று ஆய்வியல்,[7] மொழியியல்,[8] சமூக-மொழிவியல்,[9] உளப்பகுப்பியல், அரசியல் கோட்பாட்டியல், பெண்ணியம், பால்வகையியல் போன்ற எண்ணிறந்த துறைகளில் இவருடைய ஆழ்ந்த தாக்கம் உணரப்பட்டுள்ளது.

மேலும் தெரிதாவின் சிந்தனை ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இது குறிப்பாக இருப்பியல், அறவியல், அழகியல், விளக்கவியல், மொழிமெய்யியல் போன்ற துறை ஆய்வுகளில் தெரிகிறது.

தெரிதாவின் சிந்தனைத் தாக்கம் கட்டடவியல், இசையியல்,[10] கலை,[11] கலை விமர்சனம் ஆகிய துறைகளிலும் காணப்படுகிறது.[12]

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜாக்கஸ்_தெரிதா&oldid=3788319" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை