ஜான் டூயி

ஜான் டூயி(John Dewey) (/ˈdi/; அக்டோபர் 20, 1859 – சூன் 1, 1952) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி, உளவியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி ஆவார். இவரது கருத்துக்கள் கல்வியிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியவையாகும். பயனளவைக் கொள்கையின் தத்துவம் தொடர்பான முன்னோடிகளில் ஒருவராகவும் செயல்பாட்டு உளவியலின் தந்தைகளில் ஒருவராகவும் ஜான் டூயி கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொது உளவியலின் மறுபார்வை என்ற ஆய்வு நூல், இருபதாம் நூற்றாண்டில் அதிகமாக மேற்கோள் சுட்டப்பட்ட உளவியலாளர்களின் வரிசையில் ஜான் டூயிக்கு 93 ஆவது இடத்தைத் தந்துள்ளது.[1] இவர் நன்கறியப்பட்ட அறிஞர் மற்றும் முற்போக்குக் கல்விக்காகவும் தாராளமயக் கொள்கைக்காகவும் முன்னணிக் குரலாக விளங்கியவரும் ஆவார்.[2][3] மேலும், டூயி அவரது கல்வி தொடர்பான வெளியீடுகளுக்காகவும் அறிவாய்வியல், மீவியற்பியல், அழகியல், கலை, ஏரணம், சமூகவியல் கோட்பாடு, மற்றும் நன்னெறி பல்வேறு தலைப்புகளில் அவரது வெளியீடுகளுக்காகவும் நன்கறியப்பட்டவராவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான கல்விச் சீர்திருத்தவாதியும் ஆவார்.

ஜான் டூயி
Bust portrait of John Dewey, facing slightly left.
பிறப்பு(1859-10-20)அக்டோபர் 20, 1859
பர்லிங்டன், வெர்மாண்ட், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசூன் 1, 1952(1952-06-01) (அகவை 92)
நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
படித்த கல்வி நிறுவனங்கள்வெர்மாண்ட் பல்கலைக்கழகம்
ஜானஸ் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகம்
காலம்20 ஆம் நுாற்றாண்டு தத்துவம்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிநடைமுறைவாதம்
கல்விக்கழகங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
சிகாகோ பல்கலைக்கழகம்
சிகாகோ ஆய்வகப் பள்ளிகள் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
முக்கிய ஆர்வங்கள்
கல்வியியல் தத்துவம், அறிவாய்வியல், இதழியல், நன்னெறி

வாழ்வும் பணியும்

ஜான் டூயி நடுத்தரக் குடும்பத்தில் பர்லிங்டன், வெர்மாண்ட் எனுமிடத்தில் பிறந்தார்.[4] அர்ச்சிபால்ட் ஸ்ப்ராக் மற்றும் லூசினா ஆர்டீமிசியா ரிச் டூயி ஆகியோருக்குப் பிறந்த நான்கு மகன்களில் ஒருவராவார். இத்தம்பதியினருக்குப் பிறந்த இரண்டாவது மகனான முதலாம் ஜான் 1859 ஆம் ஆண்டு, ஜனவரி 17 ஆம் நாள் ஒரு துன்பியலான விபத்தொன்றில் இறந்து விட்டார். 1859 அக்டோபர் 20 ஆம் நாள், தனது மூத்த சகோதரர் இறப்பிற்கு நாற்பது வாரங்கள் கழித்து ஜான் டூயி பிறந்தார். டேவிஸ் ரிச் டூயி என்ற வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த சகோதரரைப் போன்று இவரும் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இப்பல்கலைக்கழகத்தில் 1879 ஆம் ஆண்டில், டூயி, ”டெல்டா சை” என்ற கிரேக்க எழுத்தை அடையாளமாகக் கொண்ட சமூக சகோதரத்துவ நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு பை பேட்டா காப்பா என்ற மதிப்பு மிகு கழகத்தால் பட்டதாரி ஆனார்.[5]

பென்சில்வேனியாவில் உள்ள ஆயில் நகரத்தில் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும், வெர்மாண்ட்டில் உள்ள சிறிய நகரான சார்லோட்டேயில் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றிய பிறகு, தான் தொடக்க நிலை அல்லது இடைநிலைக் கல்வியில் பணிபுரியத் தகுதியில்லாதவர் என்று முடிவு செய்தார். ஜார்ஜ் சில்வெஸ்டர் மோரிஸ், சார்லசு சான்டர்ஸ் பியர்சு, எர்பார்ட் பாக்ஸ்டெர் ஆடம்ஸ் மற்றும் ஜி. ஸ்டான்லி ஹால் ஆகியோருடன் படித்த பிறகு டூயி தனது ஆராய்ச்சி நிறைஞர் பட்டத்தை ஜான் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் புலத்திலிருந்து பெற்றார். 1884 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சில்வெஸ்டர் மோரிஸ் உதவியுடன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் புலமொன்றில் பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.(1884–88 மற்றும் 1889–94)

1894 ஆம் ஆண்டில் டூயி புதிதாக நிறுவப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் (1894–1904) தனது அறிவுசார்ந்த செய்து காண் அறிவுக் கோட்பாடானது புதிதாக உருவாகி வரும் நடைமுறைவாத தத்துவத்துடன் இணைவதைக் கண்டறிந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் நான்கு கட்டுரைகள் கற்றுக்கொடுப்பதும் அதன் பாடப்பொருளும் தொகுப்பானது அவரது கல்லூரி சகாக்களின் தலைப்புகளோடு கருத்தியல் கோட்பாடு தொடர்பான ஆய்வுகள்(1903) என்ற நூலில் வெளியானது. இந்த நேரத்தில் டூயி சிகாகோ ஆய்வகப் பள்ளிகளின் பல்கலைக்கழகம் என்ற ஒன்றை நிறுவினார். இதன் மூலமாக, கற்பித்தல் முறைகள் சார்ந்த நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு வாய்ப்பாக இருந்தது. இதன் மூலமாகப் பெற்ற முடிவுகள் கல்வியியலில் இவரது முதன்மையான படைப்பான பள்ளியும் சமுதாயமும்(1899) என்பதை உருவாக்கக் காரணமாக இருந்தது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_டூயி&oldid=3290566" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை