வடக்கு மக்கெதோனியா

(மக்கெடோனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடக்கு மக்கெதோனியா அல்லது வடக்கு மசிடோனியா (North Macedonia; மக்கதோனியம்: Северна Македонија) (2019 இற்கு முன்னர் மக்கெதோனியா), அதிகாரபூர்வமாக வடக்கு மக்கெதோனியக் குடியரசு என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது 1991 ஆம் ஆண்டில் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. நிலம்சூழ் நாடான வடக்கு மக்கெதோனியாவின் வடமேற்கில் கொசோவோ, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் பல்காரியா, தெற்கில் கிரேக்கம், மேற்கில் அல்பேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன.[8] இது மக்கெதோனியாவின் பெரிய புவியியல் பகுதியின் சுமார் மூன்றில் ஒன்றாகும். தலைநகரும் மிகப்பெரிய நகரமான ஸ்கோப்ஜே நாட்டின் 2.06 மில்லியன் மக்களில் சுமார் கால் பங்கினரைக் கொண்டுள்ளது. குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் தெற்கு சிலாவிக் மக்களான மக்கெதோனிய இனத்தவர்கள். அல்பேனியர்கள் சுமார் 25% சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களுடன், துருக்கியர், ரோமானி, செர்பியர், பொசுனியர், அரோமானியர் ஆகியோரும் உள்ளனர்.

வடக்கு மக்கெதோனியக் குடியரசு
Republic of North Macedonia
Република Северна Македонија (மக்கெதோனியம்)
Republika e Maqedonisë së Veriut (அல்பானியம்)
கொடி of வடக்கு மக்கெதோனியா
கொடி
சின்னம் of வடக்கு மக்கெதோனியா
சின்னம்
நாட்டுப்பண்: Денес над Македонија
("இன்று மக்கெதோனியாவின் மேல்")
அமைவிடம்: வடக்கு மக்கெதோனியா  (green) ஐரோப்பியக் கண்டத்தில்  (dark grey)  —  [Legend]
தலைநகரம்ஸ்கோப்ஜே
42°0′N 21°26′E / 42.000°N 21.433°E / 42.000; 21.433
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
  • அதிகாரபூர்வ
    பிராந்திய மொழிகள்
இனக் குழுகள்
(2002)
  • 64.2% மக்கெதோனியர்[2]
  • 25.2% அல்பானியர்
  • 3.9% துருக்கியர்
  • 2.7% உரோமானியர்
  • 1.8% செர்பியர்
  • 0.8% பொசுனியர்
  • 0.5% அரோமானியர்
  • 0.9% ஏனயோர் / குறிப்பிடாதோர்
மக்கள்
  • மக்கெதோனியர்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு
• அரசுத்தலைவர்
இசுடீவோ பெந்தரோவ்சுக்கி
• பிரதமர்
ஒலிவர் இசுபசோவ்சுக்கி
சட்டமன்றம்பேரவை
வரலாறு
• விடுதலை அறிவிப்பு
யுகோசுலாவியாவில் இருந்து
8 செப்டம்பர் 1991
• ஐநாவில் இணைவு
8 ஏப்ரல் 1993
• பிரெசுப்பா தீர்மானம்
12 பெப்ரவரி 2019
பரப்பு
• மொத்தம்
25,713 km2 (9,928 sq mi) (145-வது)
• நீர் (%)
1.9
மக்கள் தொகை
• 2019 மதிப்பிடு
2,077,132[3]
• 2002 கணக்கெடுப்பு
2,022,547[2]
• அடர்த்தி
80.1/km2 (207.5/sq mi) (122-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2019 மதிப்பீடு
• மொத்தம்
$33.822 பில்.[4]
• தலைவிகிதம்
$16,253[4]
மொ.உ.உ. (பெயரளவு)2019 மதிப்பீடு
• மொத்தம்
$12.383 பில்லியன்[4]
• தலைவிகிதம்
$6,143[4]
ஜினி (2018)positive decrease 31.9[5]
மத்திமம்
மமேசு (2018) 0.759[6]
உயர் · 82-வது
நாணயம்மாசிடோனிய தெனார் (MKD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
திகதி அமைப்புநாநா/மாமா/ஆஆஆஆ (கிபி)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+389
இணையக் குறி
  • .mk
  • .мкд

மக்கெதோனியா பெயர் சர்ச்சை

  கிரேக்கத்தின் வடக்கில் மக்கெதோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)
  வடக்கு மக்கெதோனியக் குடியரசு (இளம் சிவப்பு நிறம்)

1992ல் யுகோசுலாவியா உடைந்த பிறகு மக்கெதோனியா விடுதலை பெற்றது முதல், மக்கெதோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரேக்க நாட்டுடன் இருந்து வந்தது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரேக்க நாட்டின் வடக்கு பகுதி மக்கெதோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மக்கெதோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரேக்கம், மக்கெதோனியாவுடன் பிணக்கு கொண்டிருந்தது. இதனால் மக்கெதோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.

30 ஆண்டு சர்ச்சைக்கு பிறகு, கிரேக்கத்தின் அண்டை நாடான மக்கெதோனியா "வடக்கு மக்கெதோனியா" எனப் பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் 2018 சூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்தது.[9][10] எட்டு மாதங்களின் பின்னர் நாட்டின் பெயர் வடக்கு மக்கெதோனியக் குடியரசு என மாற்ரப்பட்டது.[11][12] 2020 மார்ச் 20 இல் நேட்டோ அமைப்பில் இணைந்து கொண்டது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வடக்கு_மக்கெதோனியா&oldid=3227822" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை