பீட்டர் அண்டுக்கே

ஆத்திரிய புதின எழுத்தாளர்

பீட்டர் அண்டுக்கே (Peter Handke பீட்டர் ஆண்ட்கே; பிறப்பு: 6 திசம்பர் 1942) ஓர் ஆத்திரிய புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக எழுத்தாளர். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசை வென்றார்.[1]

பீட்டர் அண்டுக்கே
Peter Handke
2006 இல் அண்டுக்கே
2006 இல் அண்டுக்கே
பிறப்பு6 திசம்பர் 1942 (1942-12-06) (அகவை 81)
கிரிஃபன், ஆத்திரியா
தொழில்
  • புதின எழுத்தாளர்
  • நாடகாசிரியர்
கல்விகிராசு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்
கையொப்பம்

வாழ்க்கைக் குறிப்பு

இளமை

அண்டுக்கேயும் அவரின் தாய் காரிந்தியன் சுலோவீனும் சோவியத் ஒன்றியம் பிடித்தாண்ட பெர்லினின் பாங்கோவ் என்னும் பகுதியில், அண்டுக்கேவுக்கு 2 முதல் 6 அகவை வரை, 1944-1948 வரை வாழ்ந்தார்கள். இவருடைய தாய் காரிந்தியன் சுலோவீன் 1971 இல் தற்கொலையுண்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு அண்டுக்கே கனவுகளையும் தாண்டிய துயரம் என்ற புகழ்பெற்ற கதையை எழுதினார். பின்னர் ஆத்திரியாவில் உள்ள கிரிஃபன் என்னும் ஊருக்குப் பெயர்ந்தார்கள்.[2]

1954 இல் அண்டுக்கே ஆண் சிறுவர்களுக்கான, தங்கிப்படிக்கும், தனியார் பள்ளியாகிய "மரியானம்" கத்தோலிக்கப் பள்ளியில் சேர்ந்தார். இப்பள்ளி ஆத்திரியாவின் தென்கோடியில் உள்ள கார்த்தன் மாவட்டத்தில் சங்கிது வைத்து அன்தெர் கிளான் என்னும் இடத்தில் தான்சென்பெர்கு கோட்டையில் உள்ளது. இப்பள்ளியின் செய்தியிதழான இஃபேக்கல் என்பதில்தான் முதன்முதலாக எழுதினார். 1959 இல் இவர் கிளாங்கன்பூர்ட்டுக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பின்னர் 1961 இல் சட்டவியல் படிப்பை கிராசு பல்கலைக்கழகத்தில் தொடங்கினார்.[3].

பரிசுகளும் விருதுகளும்

  • 1973: கியோர்கு புயூக்குனர் பரிசு
  • 1987: விலேன்சியா அனைத்துலக இலக்கியப் பரிசு
  • 2000: பிரதர்சு காரிச்சு விருது
  • 2002: அமெரிக்கா இலக்கிய விருது
  • 2008: பாயர் நுண்கலைக்கான மன்றத்தின் குரோசர் இலக்கியப் பரிசு
  • 2009: பிரன்சு காஃபுக்கா பரிசு
  • 2012: முயுலைமர் நாடகப் பரிசு
  • 2014: அனைத்துலக இபுசென் விருது[4][5]
  • 2018: நெசுத்திராய் நாடகப் பரிசு[6]
  • 2019: இலக்கிய நோபல் பரிசு[1]

படைப்புகளின் பட்டியல்

நூற்பட்டியல்

திரைப்படங்கள்

அண்டுக்கே திரைப்பட இயக்குநர் விம் வெண்டெர்சு என்பாருடன் ஒத்துழைத்து The Goalie's Anxiety at the Penalty Kick என்னும் திரைப்படத்துக்கு எழுதினார். வெண்டர்சுக்காக The Wrong Move என்பதற்கு திரைவசனம் எழுதினார். வெண்டர்சின் "Wings of Desire என்பதற்கும் The Beautiful Days of Aranjuez என்பதற்கும் திரைக்கதை எழுதினார். இவரே The Left-Handed Woman, The Absence ஆகிய திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பீட்டர்_அண்டுக்கே&oldid=2813393" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை