புசான்
புசான் (Busan, 부산 or 釜山, அலுவல்முறையாக புசான் பெருநகரம்) தலைநகரம் சியோலுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரும் பெருநகரமாகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 3.6 மில்லியன் ஆகும்.[1] பெருநகரப் பகுதியில் அண்மித்த ஊர்களையும் சேர்த்து, மக்கள்தொகை ஏறத்தாழ 4.6 மில்லியனாக உள்ளது. இது தென்கொரியாவின் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக விளங்குகிறது; சரக்குப் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது மிகுந்த போக்குவரத்துமிக்க துறைமுகமாக விளங்குகிறது.[3] கொரிய நாவலந்தீவின் தென்கிழக்குக் கோடியில் இந்த நகரம் அமைந்துள்ளது. நக்டோங் ஆற்றுக்கும் சுயோங் ஆற்றுக்கும் இடையேயுள்ள குறுகிய பள்ளத்தாக்குகளில் நகரத்தின் நெரிசலானப் பகுதிகள் அமைந்துள்ளன. நிர்வாகத்திற்காக இது ஓர் சிறப்பு நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புசான் பெருநகரப் பகுதி 15 மாவட்டங்களாகவும் ஒரே கவுன்டியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
புசான் 부산시 | |
---|---|
பெருநகர் பகுதி | |
புசான் பெருநகரம் | |
transcription(s) | |
• அங்குல் | 부산광역시 |
• Hanja | 釜山廣域市 |
• Revised Romanization | Busan Gwangyeoksi |
• McCune-Reischauer | Pusan Kwangyŏksi |
தென்கொரியாவின் நிலப்படத்தில் புசான் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது | |
நாடு | தென் கொரியா |
மண்டலம் | இயோங்னம் |
மாவட்டங்கள் | 15 |
அரசு | |
• வகை | மேயர்-நகரமன்றம் |
• மேயர் | சு பியங்-சூ (சேனுரி கட்சி) |
• மன்றம் | புசான் பெருநகர மன்றம் |
• தேசிய பிரதிநிதி - தேசிய சட்டமன்றம் | 18 / 299 18 / 245 பட்டியல்
|
பரப்பளவு[1] | |
• பெருநகர் பகுதி | 767.35 km2 (296.28 sq mi) |
மக்கள்தொகை (2012)[2] | |
• பெருநகர் பகுதி | 3,590,101 |
• அடர்த்தி | 4,700/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 8,174,702 |
• Dialect | Gyeongsang |
அஞ்சல் குறியீடு | 600-010, 619-963 |
தொலைபேசி குறியீடு | (+82) 051 |
மலர் | ஆக்கத்திசு மலர் |
மரம் | ஆக்கத்திசு |
பறவை | நீள் சிறகு கடற்பறவை |
இணையதளம் | busan.go.kr (ஆங்கிலம்) |
புசானில் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏபிஈசி 2005 கொரியா போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. 2002 உலகக்கோப்பை காற்பந்து நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏலத்தில் பங்கேற்றது.[4]
புசானில் கொரியாவின் நீண்ட கடற்கரையான ஏயுண்டே கடற்கரையும் நீண்ட ஆறான நக்டோங் ஆறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. உலகின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, சின்செகே சென்டம் நகர் இங்குதான் அமைந்துள்ளது.[5]
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
- புசான் பெருநகர அரசு
- புசான் நகரம்
- புசானைப் பற்றி முழுமையாக பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம் – அலுவல்முறை கொரிய சுற்றுலா வழிகாட்டித் தளம்
- புசான்வெப்