புதிய சைபீரியத் தீவுகள்

உருசியத் தீவு

புதிய சைபீரியத் தீவுகள் (The New Siberian Islands உருசியம்: Новосиби́рские Oстрова, ஒ.பெ Novosibirskiye Ostrova; Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.) எனப்படுபவை உருசியாவிலுள்ள சாகா குடியரசின் வடக்கே, லாப்டேவ் கடலுக்கும் கிழக்கு சைபீரியக் கடலுக்கும் இடையில் கிழக்குச் சைபீரியக் கடற்கரையின் வடக்கில் அமைந்துள்ளத் தீவுக்கூட்டங்கள்.

புதிய சைபீரியத் தீவுகள்
உள்ளூர் பெயர்:
புதிய சைபீரியத் தீவுகள் is located in உருசியா
புதிய சைபீரியத் தீவுகள்
புதிய சைபீரியத் தீவுகள்
புதிய சைபீரியத் தீவுகள் (ரஷ்யா)
புவியியல்
அமைவிடம்லாப்டேவ் கடலுக்கும் கிழக்கு சைபீரியக் கடலுக்கும் இடையில்
ஆள்கூறுகள்75°16′N 145°15′E / 75.267°N 145.250°E / 75.267; 145.250
தீவுக்கூட்டம்புதிய சைபீரியத் தீவுகள்
பரப்பளவு29,900 km2 (11,500 sq mi)
உயர்ந்த ஏற்றம்374 m (1,227 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை2 (2017) கோதெல்னித் தீவில்

வரலாறு

நபுதிய சைபீரியத் தீவுகளின் நிலப்படம், (பிலிப் வாண்டர்மேலன், "ஆசிய ரஷியாவின் நிலப்படம்", 1820). புங்கே நிலம் அப்போது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே ஃபத்யேவ்ஸ்கிய் தீவும் கோதெல்னித் தீவும் தனியாகக் கருதப்பட்டன

புதிய சைபீரியத் தீவுகள் இருப்பதைப் பற்றிய முதல் செய்தி பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாகவ் பெர்மியாகவ் என்ற கோசக் இனத்தவரால் வெளிக்கொண்டு வரப்பட்டது. 1712 ஆம் ஆண்டில், எம். வாகின் தலைமையிலான ஒரு கோசக் பிரிவு பெரிய லியாகவ்ஸ்கித் தீவை அடைந்தது.

1809-10 ஆம் ஆண்டில் யாகவ் சண்ணிகோவ் மற்றும் மத்வேய் கெடென்ஷ்த்ரோம் ஆகியோர் புதிய சைபீரியத் தீவுகளுக்கு ஒரு நிலவரைபடம் வரையும் நோக்கில் பயணித்தனர். 1811 ஆம் ஆண்டில் கோதெல்னிக்கு வடக்கே ஒரு "புதிய நிலம்" காணப்பட்டதாக சண்ணிகோவ் அறிவித்தார். இது ஜெம்ல்யா சண்ணிகோவா அல்லது சண்ணிகோவ் நிலம் என்ற கட்டுக்கதையாக அறியப்பட்டது.[1] 1886 ஆம் ஆண்டில், துருவப்பகுதி ஆய்வாளரும் விஞ்ஞானியுமான எட்வர்ட் டோல், நவசிபீர்ஸ்க்குத் தீவுகளுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட போது, ​​கோதெல்னி தீவுக்கு வடக்கே அறியப்படாத ஒரு நிலத்தைக் கண்டதாக எண்ணினார். இது ஜெம்ல்யா சண்ணிகோவா என்று அழைக்கப்படும் நிலம்தான் என்று அவர் யூகித்தார்.[1]

டோல் 1892 வசந்த காலத்தில் இத்தீவுக் குழுவிற்கு ஒரு கோசக் மற்றும் மூன்று உள்ளூராட்களுடன் மீண்டும் சென்றார். அவர் நாய்களால் இழுத்துச்செல்லப்பட்ட ஸ்லெட்களில் பனிக்கட்டிக்கு மேல் பயணித்து பெரிய லியாகோவ்ஸ்கிய் தீவின் தெற்கு கடற்கரையை அடைந்தார்.[1] இந்த தீவின் தெற்கு கடற்கரையில், பின் பனியூழிக்காலப் படிவுகளை வெளிப்படுத்தும் வகையில் நன்கு பாதுகாக்கப்பட்ட எலும்புகள், தந்தங்கள், கரி முதலியவற்றுடன் 40 மீட்டர் (130 அடி) உயரமான கடல் பாறைகளுக்குள் ஒரு மரத்தையும் கண்டார். இந்த படிவுகள் நிலையான உறைபனியால் உறுதிப்படுத்தப்பட்டு 200,000 ஆண்டுகளில் படிப்படியாகக் குவிக்கப்பட்டுள்ளன.[2][3][4]

செப்டம்பர் 2014 இல், ரஷ்யக் கடற்படை 1993 முதல் கைவிடப்பட்ட ஒரு சோவியத் கால கடற்படை தளத்தை மீண்டும் நிறுவியது.[5]

புவியியல்

ரஷ்யாவிற்குள் நவசிபீர்ஸ்க்குத் தீவுகள் அமைந்துள்ள இடம்.

புதிய சைபீரியத் தீவுகள் அல்லது அன்சூ தீவுகளின் (острова Анжу, சாகா: Анжу арыылара) நிலப்பரப்பு சுமார் 29,000 சதுர கிமீ ஆகும்.

  • கோதெல்னி தீவு (о. Коте́льный) 11,700 சதுர கிமீ
    • ஃபத்யேவ்ஸ்கிய் தீவு (о. Фадде́евский) 5,300 சதுர கிமீ. புங்கே நிலம் (земля́ Бу́нге) 6,200 சதுர கிமீ எனப்படும், சில வேளைகளில் கடலுள் மூழ்கிவிடும், இந்நிலப்பரப்பு கோதெல்னி தீவையும் ஃபத்யேவ்ஸ்கிய் தீவையும் இணைக்கிறது. புங்கே நிலத்தின் வடமேற்கு கடற்கரைக்கு மிக அருகில் இரண்டு சிறிய தீவுகள் உள்ளன:
      • ஜெலேஸ்னிகவ் தீவு (Ostrov Zheleznyakova), வடமேற்கு முனையிலிருந்து வலதுபுறம் அதன் கிழக்கே, மாதர் தீவு (Ostrov Matar). இரண்டு தீவுகளின் நீளமும் சுமார் 5 கி.மீ.
  • நனோஸ்னி தீவு 76.283 ° N 140.416 ° E என்பது கோதெல்னி மற்றும் புங்கேவால் உருவாக்கப்பட்ட வடக்கு விரிகுடாவின் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. சி-வடிவம் கொண்ட இத்தீவு நான்கு கி.மீ நீளம் மட்டுமே கொண்டது, புதிய சைபீரியத் தீவுக்குழுவின் வடகோடியில் அமைந்துள்ள வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
  • நோவய சிபீர் (о. Но́вая) 6,200 சதுர கிமீ
  • பெல்கோவ்ஸ்கி தீவு (о. Бельковский) 500 சதுர கிமீ

தெற்கே சைபீரிய முதன்மைநிலப்பகுதிக்கு அருகில் லியாகோவ்ஸ்கிய் தீவுகள் (6,095 சதுர கி.மீ) உள்ளன:

  • பெரிய லியாகோவ்ஸ்கிய் தீவு (о. Большо́й Ля́ховский) 4,600 சதுர கிமீ
  • சிறிய லியாகோவ்ஸ்கிய் தீவு (о. Ма́лый Ля́ховский) 1,325 சதுர கிமீ
  • ஸ்தல்போவய் தீவு (о. Столбово́й) 170 சதுர கிமீ
  • சிம்யோனவ்ஸ்கிய் தீவு (о. Семёновский) 0 சதுர கிமீ (இப்போது நீரில் மூழ்கியுள்ளது)

பரப்பளவில் சிறிய, டி லாங் தீவுகள் (228 சதுர கிமீ) நோவய சிபீரின் வடகிழக்கில் அமைந்துள்ளன.

  • ஜனெட் தீவு (о. Жанне́тты)
  • ஹென்றியேட்டா தீவு (о. Генрие́тты)
  • பென்னட் தீவு (о. Бе́ннетта)
  • வில்கீட்ஸ்கி தீவு (கிழக்கு சைபீரியக் கடல்) (о. Вильки́цкого)
  • ஜோகவ் தீவு (о. Жо́хова)

புதிய சைபீரியத் தீவுகள் தாழ்வானவை. அவற்றின் மிக உயர்ந்த இடம் பென்னட் தீவில் அமைந்துள்ளது, இதன் உயரம் 426 மீ.

புதிய சைபீரியத் தீவுகள், கடைசி பனிப்பாறை உயர்காலத்தில் (Late Weichselian Epoch) சைபீரியாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையில் கடைசி பனியூழிக்கால "பெரிங்கியா" பகுதியின் வடக்கு பகுதியில் பரவியிருந்த பெரிய ஆர்க்டிக் சமவெளிக்குள் பல குன்றுகளாக உருவாகியிருந்தன. இத்தீவுகள் ஆர்க்டிக் பெருங்கடல், கிழக்கு சைபீரியக் கடல், மற்றும் லாப்தேவ் கடல்களின் பகுதிகளுக்கு கீழே முன்பு பெரிய ஆர்க்டிக் சமவெளியாக இருந்து இப்போது மூழ்கியுள்ள, சுமார் 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலப்பகுதியின் எஞ்சியுள்ள இடங்களைக் குறிக்கின்றன, இந்த சமவெளியின் மிகப் பெரிய அளவில், இதன் கடல் மட்டம் இக்காலக்கடல் மட்டத்திலிருந்து 100-120 மீ கீழே இருந்துள்ளது, மேலும் கடற்கரை அதன் தற்போதைய நிலைக்கு 700 முதல் 1000 கிலோமீட்டர் வடக்கே அமைந்திருந்தது. இந்த சமவெளி கடைசி பனியூழி அல்லது கடைசி பனிப்பாறை காலத்தின் போது விரிவான பனிப்பாறைப்படிவுக்கு உட்படுத்தப்படவில்லை, ஏனெனில் இது வடக்கு ஐரோப்பிய பனிப்பட்டையின் மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளது. கி.மு 17,000 முதல் 24,000 வரையிலான கடைசி பனிப்பாறை உயர்காலத்தின் கடுங்குளிர் துருவ காலநிலையின் போது, அருகிலுள்ள டி லாங் தீவுகளில் சிறிய செயலற்ற பனிக்கட்டிகள் உருவாகின. இந்த பனிக்கட்டிகளின் துண்டுகள் ஜனெட், ஹென்றியேட்டா மற்றும் பென்னட் தீவுகளில் உள்ளன. சிறிய சாய்வு மற்றும் பனியரிப் பள்ளப் பனிப்பாறைகளின் தடயங்கள் புதைக்கப்பட்ட தரைபனிப்படிவ உருவில் ஜோகவ் தீவில் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆரம்ப-இடை ஹாலசீன் எனப்படும் தற்காலத்தில் 7,000 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள், பெரிய ஆர்க்டிக் சமவெளி (நவசிபீர்ஸ்க்கு மற்றும் பிற தனித் தீவுகளைத் தவிர) கடலில் மூழ்கியது.[6][7][8]

நிலவியல்

டிக்பி[9] மற்றும் பின்னாட்களில் வந்த வெளியீட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, இந்த தீவுக்கூட்டம் மடிப்பு மற்றும் பூமிப்பிளவாலான படிவுகளையும் முன்காம்ப்ரிய காலம் முதல் பிலயசீன் காலம் வரையிலான வயதுடைய தீப்பாறைகளையும் கொண்ட கலவையான பாறைகளை உள்ளடக்கியது. லியாகவ்ஸ்கிய் தீவுகள் முன்காம்ப்ரிய காலத்து மடிப்பு மற்றும் பூமிப்பிளவாலான உருமாற்ற பாறைகளின் கூட்டத்தையும்; உயர் பாலியோசோயிக் முதல் டிராசிக் காலம் வரையான களிப்பாறைகள்; ஜுராசிக் முதல் கீழ் கிரெட்டேசியஸ் கால டர்பிடைட்டுகள்; கிரெட்டேசியஸ் கால கிரானைட்டுகள்; மற்றும் ஓபியோலைட்டுகளைக் கொண்டிருக்கின்றன. அன்சூ தீவுகள் மிகவும் மடிப்பு மற்றும் பூமிப்பிளவாலான ஆர்டோவிசிய டெவோனிய சுண்ணாம்புக் கற்கள், டோலமைட்டுகள், மணற்கற்கள், களிப்பாறைகள், எரிமலைக்குழாய் அடுக்கு மற்றும் தீப்பாறைகள்; மேல் பாலியோசோயிக் முதல் டிராசிக் கால மணற்கற்கள் மற்றும் களிப்பாறைகள்; ஜுராசிக் காலம் முதல் குறைந்த கிரெட்டேசியஸ் காலம் வரையான டர்பிடைட்டுகள்; மற்றும் மேல் கிரெட்டேசியஸ் முதல் பிலயசீன் மணற்கற்கள் மற்றும் களிப்பாறைகள் ஆகிய பாறைக் கூட்டங்களைைக் கொண்டிருக்கின்றன. டி லாங் தீவுகள் ஆரம்பகால பாலியோசோயிக், இடைக்கால பேலியோசோயிக், கிரெட்டேசியஸ் மற்றும் புதுவெழு கால படிவப்பாறைகள் மற்றும் தீப்பாறைகள் (பெரும்பாலும் பாசால்ட்) போன்ற பாறைகளைக் கொண்டுள்ளன. இந்த படிவ, உருமாற்ற மற்றும் தீப்பாறைப் பாறைகள் ஒரு மீட்டரின் ஒரு பகுதியிலிருந்து 35 மீட்டர் (115 அடி) வரை தடிமனாக இருக்கும் தளர்வான பிலிஸ்டோசீன் மற்றும் ஹாலசீன் காலப்படிவுகளால் உறையிடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.[10][11]

புதிய சைபீரியத் தீவுகளைப் பற்றி வெளியிடப்பட்ட சில ஆரம்பகால ஆவணங்கள், அவற்றை மற்ற ஆர்க்டிக் தீவுகளைப் போலவே (எ.கா. ராங்கல் தீவு) கிட்டத்தட்ட அல்லது முற்றிலும் மாமத் எலும்புகள் மற்றும் தந்தங்களால் அல்லது பனி, மணல் மற்றும் பிற அழிந்துபோன பெருவிலங்குகளின் எலும்புகள் போன்றவற்றால் ஆனவை என்று தவறாக விவரிக்கின்றன என்று டிக்பி[9] குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணங்களில் சில நவசிபீர்ஸ்க்குத் தீவுகளுக்கு ஒருபோதும் வந்திராத நபர்களால் வணிகர்கள், பயணிகள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் பெற்ற விவரங்களைக் கொண்டு எழுதப்பட்டன (எ.கா. டி. காத் விட்லி),[12] மற்ற கட்டுரைகள் புவியியல் அல்லது பிற அறிவியல் முறைகளில் பயிற்சி பெற்றிராத ஆய்வாளர்களாலும் தந்த வேட்டைக்காரர்களாலும் எழுதப்பட்டன. தொழில்முறை புவியியலாளர்கள், புவியியல் வல்லுநர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட நவசிபீர்ஸ்க்குத் தீவுகளின் புவியியல் பற்றிய விரிவான ஆய்வுகளின் மூலம் இத்தகைய அறிக்கைகள் கற்பனையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன.[2][11][13][14]

தந்தப் படிமங்கள்

எட்வார்ட் வி. டோல் தனது புதிய சைபீரியத் தீவுகள் பற்றிய குறிப்பில்,[15] நவசிபீர்ஸ்க்குத் தீவுகள் புதைபடிவ தந்தங்கள் புதைந்திருப்பதிலும் பாதுகாப்பதிலும் தனித்துவமானது "இது போன்ற ஒரு அற்புதமான பாதுகாப்பு, எவ்வாறெனில் இங்கு காணப்படும் தந்தங்களை மிகச் சிறந்த மற்றும் தூய்மையான தந்தங்களிலிருந்து வேறுபடுத்த முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். புதைபடிவ தந்தங்கள் கணிசமான மற்றும் பொருளாதார அளவில் குறிப்பிடத்தக்க குவியல்களாக இத்தீவுகளில் பொதிந்துள்ளன. அண்மை காலத்தில் தந்தம், மாமூத் மற்றும் பிற எலும்புகளுடன், கடற்கரைகள், வடிகால் பகுதிகள், மற்றும் ஆற்றுப் படுகைகளில் காணப்படுகின்றன.

இந்த தீவுகளில் காணப்படும் மாமத் தந்தங்களுடன் ஏராளமான எலும்புகள், எலும்புக்கூடுகள், மாமத், காண்டாமிருகம், கஸ்தூரி-எருது மற்றும் பிற பெருவிலங்குகளும் நிலத்தடி உறைபனியால் பாதுகாக்கப்பட்டும் அவற்றால் அவை மூடப்பபட்டும் உள்ளன.[2][10][13][16] நிலையான உறைபனி தொடர்ந்து ஏற்படும் பின் ப்ளீஸ்டோசீன் லோயஸ், பனிஈர மணற்சரிவு, குளம் மற்றும் ஓடைப்படிவுகளால் உருவாகிறது. எலும்புகள், தந்தங்கள் மற்றும் தாவரங்களின் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, அவற்றின் மேல் மூடப்பட்ட படிவகளின் ஒளியியல் முறையிலான காலக்கணிப்பு, மற்றும் தொடர்புடைய முற்றா நிலக்கரின் யுரேனியம்-தோரிய காலக்கணிப்பு ஆகியவை, அவை சுமார் 200,000 ஆண்டுகளாகக் குவிந்திருப்பதை நிரூபிக்கின்றன. ஃபத்யேவ்ஸ்கிய், கோதெல்னி மற்றும் நவசிபீர்ஸ்க்குத் தீவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 87 மாமத் தந்தங்கள் மற்றும் எலும்புகளின் திசுக்களில் இருந்து பெறப்பட்ட கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பின் மூலம் அவை தற்காலத்துக்கு முன்பு 9470 ± 40 முதல் 50,000 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளன.[17]

காலநிலை

இத்தீவுகளின் தட்பவெப்பநிலை ஆர்க்டிக் காலநிலையைக் கொண்டது, மேலும் கடுமையானது. ஆண்டின் ஒன்பது மாதங்கள் இவை பனியால் மூடப்பட்டிருக்கும்.

  • ஜனவரியில் சராசரி வெப்பநிலை: −28 °C முதல் −31 °C வரையிருக்கும்
  • ஜூலை மாதத்தில் வெப்பநிலை: கடற்கரைகளில் ஆர்க்டிக்கின் பனிக்கட்டி நீர், வெப்பநிலையை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் வகையில் உதவுகிறது. சராசரி அதிகபட்ச வெப்பநிலை +8 °C முதல் +11 to °C வரையும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை -3 °C முதல் +1 °C வரையும் இருக்கும். தீவுகளின் உட்புறத்தில் ஜூலை மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை +16 to °C முதல் +19 °C மற்றும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை +3 °C முதல் +6 °C வரையுமிருக்கும்.
  • மழைப்பொழிவு: வருடத்திற்கு 132 மி.மீ வரையிருக்கும்

நிலையான உறைபனி மற்றும் நிலத்தடி உறைபனி மிகப் பரவலாகக் காணப்படுபவை. தீவுகளின் மேற்பரப்பு ஆர்க்டிக் தூந்திரத் தாவரங்கள் மற்றும் ஏராளமான ஏரிகளால் மூடப்பட்டுள்ளது. தீவுகளைச் சுற்றியுள்ள பெருங்கடல் ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. வெப்பமான ஆண்டுகளில், ஜூலை முதல் அக்டோபர் வரை கடல்வழிப் பயணத்திற்கு குறைந்தகாலம் திறந்திருக்கிறது. குளிர்ந்த ஆண்டுகளில், தீவுகள் கோடைகாலத்திலும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும்.

துருவ இரவுக் கால நிலைமை நவம்பர் முதல் பிப்ரவரி வரை நிகழும், மாறாக, கோடை மாதங்களில் சூரியன் அடிவானத்திற்கு மேலே மறையாமல் தொடர்ந்து இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், கோதெல்னித் தீவு
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)-7.2
(19)
-3.3
(26.1)
-4.8
(23.4)
0.3
(32.5)
6.2
(43.2)
22.7
(72.9)
25.1
(77.2)
20.2
(68.4)
11.8
(53.2)
1.8
(35.2)
-2.5
(27.5)
-3.1
(26.4)
25.1
(77.2)
உயர் சராசரி °C (°F)-26.1
(-15)
-26.4
(-15.5)
-24.2
(-11.6)
-16.9
(1.6)
-6.2
(20.8)
1.4
(34.5)
5.7
(42.3)
4.3
(39.7)
0.3
(32.5)
-8.1
(17.4)
-18.2
(-0.8)
-23.8
(-10.8)
−11.5
(11.3)
தினசரி சராசரி °C (°F)-29.3
(-20.7)
-29.7
(-21.5)
-27.5
(-17.5)
-20.3
(-4.5)
-8.6
(16.5)
-0.4
(31.3)
2.9
(37.2)
2.1
(35.8)
-1.2
(29.8)
-10.7
(12.7)
-21.5
(-6.7)
-27.0
(-16.6)
−14.3
(6.3)
தாழ் சராசரி °C (°F)-32.6
(-26.7)
-32.9
(-27.2)
-30.9
(-23.6)
-24.2
(-11.6)
-11.4
(11.5)
-2.1
(28.2)
0.6
(33.1)
0.2
(32.4)
-3.0
(26.6)
-13.7
(7.3)
-24.8
(-12.6)
-30.3
(-22.5)
−17.1
(1.2)
பதியப்பட்ட தாழ் °C (°F)-44.9
(-48.8)
-49.9
(-57.8)
-46.1
(-51)
-46.2
(-51.2)
-28.6
(-19.5)
-14.9
(5.2)
-6.0
(21.2)
-9.2
(15.4)
-18.6
(-1.5)
-40.2
(-40.4)
-40.2
(-40.4)
-45.0
(-49)
−49.9
(−57.8)
பொழிவு mm (inches)7
(0.28)
5
(0.2)
6
(0.24)
8
(0.31)
9
(0.35)
17
(0.67)
26
(1.02)
23
(0.91)
23
(0.91)
16
(0.63)
7
(0.28)
7
(0.28)
154
(6.06)
ஈரப்பதம்82828283879090919088848286
சராசரி மழை நாட்கள்0000.118151590.40049
சராசரி பனிபொழி நாட்கள்15161615221681122261816201
சூரியஒளி நேரம்071472831971781681004414001,138
Source #1: Pogoda.ru.net[18]
Source #2: NOAA (sun 1961–1990)[19]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை