புவியீர்ப்பு முடுக்கம்

இயற்பியலில், ஈர்ப்பு முடுக்கம் அல்லது புவியீர்ப்பு முடுக்கம் (gravitational acceleration) என்பது இழுவை ஏதுமற்ற வெற்றிடம் ஒன்றில் ஒரு பொருள் வீழ்ச்சி அடையும் போது அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் ஆகும். இது ஈர்ப்பு விசையால் ஏற்படுத்தப்படும் ஒரு நிலையான வேக அதிகரிப்பாகும். பொருட்களின் திணிவுகள் அல்லது கலவைகளைப் பொருட்படுத்தாமல், அனைத்துப் பொருட்களும் ஒரே விகிதத்தில் வெற்றிடத்தில் முடுக்கி விடப்படுகின்றன.[1]

மேற்பரப்பில் ஒரு நிலையான புள்ளியில், புவியின் ஈர்ப்பின் அளவு புவியீர்ப்பு மற்றும் புவியின் சுழற்சியின் மையவிலக்கு விசை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவால் விளைகிறது.[2][3] பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு புள்ளிகளில், குத்துயரம், நிலநேர்க்கோடு, நிலநிரைக்கோடு ஆகியவற்றைப் பொறுத்து சுயாதீன வீழ்ச்சி முடுக்கம் 9.764 முதல் 9.834 மீ/செ2 (32.03 முதல் 32.26 அடி/செ2) வரை இருக்கும்.[4] ஒரு வழக்கமான நிலையான மதிப்பு சரியாக 9.80665 மீ/செ2 (32.1740 அடி/செ2) என வரையறுக்கப்படுகிறது. இந்த மதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாட்டின் இடங்கள் புவியீர்ப்பு முரண்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. மேலுதைப்பு அல்லது இழுவை போன்ற பிற விளைவுகள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

உலகளாவிய விதியுடனான தொடர்பு

நியூட்டனின் உலகளாவிய ஈர்ப்பு விதி எந்த இரண்டு பொருட்களுக்கிடையேயும் ஒரு ஈர்ப்பு விசை உள்ளது என்று கூறுகிறது. இதன் சமன்பாடு பின்வருமாறு:

இங்கு , என்பன இரண்டு பொருட்களின் திணிவுகள் ஆகும், என்பது ஈர்ப்பியல் மாறிலி, என்பது அவற்றின் இடைத்தூரம்.

பூமி, சூரியன், நிலா மற்றும் கோள்களின் ஒப்பீட்டு ஈர்ப்பு

பொருள்புவியின் ஈர்ப்பின்
பெருக்கம்
மீ/செ2அடி/செ2குறிப்புகள்100மீ வீழ்ச்சிக்கு எடுக்கும் நேரமும்
அதிகபட்ச வேகமும்
ஞாயிறு27.90274.18990.85 செ843 km/h (524 mph)
புதன்0.37703.70312.157.4 செ98 km/h (61 mph)
வெள்ளி0.90328.87229.114.8 செ152 km/h (94 mph)
புவி19.806732.174[a]4.5 செ159 km/h (99 mph)
நிலா0.16551.6255.3311.1 செ65 km/h (40 mph)
செவ்வாய்0.38953.72812.237.3 செ98 km/h (61 mph)
சியரீசு0.0290.280.9226.7 செ27 km/h (17 mph)
வியாழன்2.64025.9385.12.8 செ259 km/h (161 mph)
ஐஓ0.1821.7895.8710.6 செ68 km/h (42 mph)
ஐரோப்பா0.1341.3144.3112.3 செ58 km/h (36 mph)
கனிமீடு0.1451.4264.6811.8 செ61 km/h (38 mph)
கலிசுட்டோ0.1261.244.112.7 செ57 km/h (35 mph)
சனி1.13911.1936.74.2 செ170 km/h (110 mph)
டைட்டன்0.1381.34554.41412.2 செ59 km/h (37 mph)
யுரேனசு0.9179.0129.64.7 செ153 km/h (95 mph)
டைட்டானியா0.0390.3791.2423.0 செ31 km/h (19 mph)
 ஒபெரோன்0.0350.3471.1424.0 செ30 km/h (19 mph)
நெப்டியூன்1.14811.2837.04.2 செ171 km/h (106 mph)
டிரைட்டன்0.0790.7792.5616.0 செ45 km/h (28 mph)
புளூட்டோ0.06210.6102.0018.1 செ40 km/h (25 mph)
ஏரிசு0.08140.82.6(அண்ணளவு)15.8 செ46 km/h (29 mph)

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை