கனிமீடு

கனிமீடு (Ganymede) என்பது வியாழனின் மிகப்பெரிய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளும் ஆகும். அறியப்பட்டுள்ள துணைக்கோள்களில் காந்தப் புலம் கொண்ட கோளாக வியாழனின் நிலவாகிய கனிமீடு கருதப்படுகிறது. வியாழனின் ஏழாவது இயற்கைத் துணைக்கோளாகவும் அதனிடமிருந்து மூன்றாம் இடத்திலும் கனிமீடு இடம்பெற்றுள்ளது. இதன் விட்டம் 5,268 km (3,273 mi) ஆகவுள்ளது. புதனை விட அளவில் 8% பெரியதான கனிமீடு நிறையில் 45% மட்டுமே கூடுதலாக உள்ளது.[12] சனிக் கோளின் இரண்டாவது மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனை விட இதன் விட்டம் 2% பெரியது ஆகும். அறியப்பட்ட அனைத்து துணைக்கோள்களில் இதுவே மிக அதிக நிறை கொண்ட கோளாகும். பூமியைச் சுற்றிவரும் நிலவைப் போல கனிமீடு 2.02 மடங்கு அதிக நிறையை கொண்டிருக்கிறது.[13] கனிமீடு வியாழன் கோளை அதன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி நிறைவு செய்யத் தோராயமாக ஏழு நாட்கள் பிடிக்கின்றன. ஐரோப்பா, ஐஓ ஆகிய நிலவுகளுடன் கனிமீடு 1:2:4 என்ற விகிதத்தில் அலை மண்டல ஒத்திசைவு கொண்டுள்ளது.

கனிமீடு
True-color image taken by the Galileo probe
கலீலியோ ஆளில்லா விண்கலம் எடுத்தனுப்பிய சோவியன் அரைக்கோளத்திற்கு எதிரான கனிமீடு படம்; வரிப்பள்ளங்கள் மற்றும் வலது மேற்புரத்தில் வெள்ளையான வடதுருவ உச்சி ஆகியன பனிக்கட்டி நீரால் நிறைந்துள்ள வெள்ளை வெளிச்சப் பகுதிகள்.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கலீலியோ கலிலி
கண்டுபிடிப்பு நாள் சனவரி 7, 1610[1][2][3]
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்வியாழன் III
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 1,069,200 km[b]
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி1,071,600 km[a]
அரைப்பேரச்சு 1,070,400 km[4]
மையத்தொலைத்தகவு 0.0013[4]
சுற்றுப்பாதை வேகம் 7.15455296 d[4]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 10.880 km/s
சாய்வு 0.20° (to Jupiter's equator)[4]
இது எதன் துணைக்கோள் வியாழன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2634.1 ± 0.3 km (0.413 Earths)[5]
புறப் பரப்பு 87.0 million km2 (0.171 Earths)[c]
கனஅளவு 7.6 × 1010 km3 (0.0704 Earths)[d]
நிறை 1.4819 × 1023 kg (0.025 Earths)[5]
அடர்த்தி 1.936 g/cm3[5]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்1.428 m/s2 (0.146 g)[e]
விடுபடு திசைவேகம்2.741 km/s[f]
சுழற்சிக் காலம் synchronous
அச்சுவழிச் சாய்வு 0–0.33°[6]
எதிரொளி திறன்0.43 ± 0.02[7]
மேற்பரப்பு வெப்பநிலை
   K
சிறுமசராசரிபெரும
70[9]110[9]152[10]
தோற்ற ஒளிர்மை 4.61 (opposition)[7]
4.38 (in 1951)[8]
பெயரெச்சங்கள் Ganymedian, Ganymedean
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் trace
வளிமண்டல இயைபு ஆக்சிசன்[11][i]

சிலிக்கேட்டுப் பாறைகள் மற்றும் பனிக்கட்டி நீரும் தோராயமாக சம அளவில் சேர்ந்து கனிமீடு உருவாகியுள்ளது.[14] அதிகளவு இரும்பு, திரவ உள்ளகம் மற்றும் உட்புறப் பெருங்கடல் ஆகிய அடையாளங்களுடன் முற்றிலும் வேறுபடுத்தப்பட்ட துணைக்கோளாகக் கனிமீடு காணப்படுகிறது.[15][16][17][18] இதன் நிலப்பகுதி இரண்டு பிரதான வகைகளால் ஆக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகள் வயதுடைய விண்கல் வீழ் பள்ளங்களால் நிறைந்திருக்கும் இருள் பகுதி முதலாவது வகையாகும். கோளின் முக்கால் நிலப்பகுதி இவ்வகை மேற்பரப்பினால் ஆக்கப்பட்டுள்ளது, எஞ்சியுள்ள பகுதி இரண்டாவது வகையான வெளிச்சப் பரப்பு நிலப்பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. சிறிதளவு வயது குறைந்த இப்பகுதி வரிப்பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான நீட்சிகளால் ஆன குறுக்குவெட்டுகளால் ஆக்கப்பட்டதாகும். இத்தகைய இயல்பற்ற புவியியல் நிலப் பகுதிக்கான காரணம் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், வெப்ப ஏற்ற இறக்கத்தின் விளைவுகளால் மேல் தட்டில் நிகழ்ந்துள்ள செயல்பாடுகளே இதற்குரிய காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது[5].

கனிமீடின் காந்தப்புலம், ஒருவேளை அதனுடைய திரவ இரும்பு உள்ளகத்தின் வெப்பச் சலனச் செயல்பாட்டின் மூலம் உருவாகியிருக்கலாம். விண்பொருளுக்கு அருகில் இருக்கும் காந்தப்புலம் வியாழனின் அபரிமிதமான காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு மறைந்திருக்கலாம். அங்கு உண்டாகும் குழப்பமான காந்தப்புலக் கோடுகளுக்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம். இதன் மெல்லிய ஆக்சிசன் வளிமண்டலத்தில் தனி ஆக்சிசன், ஆக்சிசன், ஓசோன் ஆகிய வாயுக்கள் அடங்கியுள்ளன. அணு ஐதரசன் வாயுவும் சிறிதளவு இவ்வளிமண்டலத்தின் பகுதிப்பொருளாக இருக்கிறது. கனிமீடின் வளிமண்டலத்தில் அயனிமண்டலம் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் அறியப்படவில்லை.

முதன் முதலாக கலீலியோ கலிலி 1610 சனவரி 7 இல் கனிமீடு துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.[1][2][3] இதன் பின்னர் வானியலாளர் சைமன் மாரியசு இத்துணைக்கோளுக்கு புராணப் பெயரான கனிமீடு என்ற பெயரைச் சூட்டினார். கனிமீடு என்பது கிரேக்கக் கடவுள்கள் மற்றும் சியுசு ஆகியோருக்கு விருந்தில் குடிகலம் பரிமாறுபவரின் பெயராகும். பயோனிர் 10 விண்கலம் தொடங்கி பிற விண்கலங்களால் கனிமீடு துணைக்கோளை நெருங்கி ஆராயமுடிந்தது. ஆளில்லா விண்ணாய்வியான வாயேஜர் இதனுடைய உருவ அளவுகளையும் அதேவேளையில் நாசாவின் கலீலியோ விண்கலம் கனிமீடின் காந்தப்புலத்தையும் அதிலுள்ள பெருங்கடலையும் கண்டறிந்தது.சோவியன் அமைப்பின் அடுத்தக்கட்ட ஏவுகணைத் திட்டம், 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் மூலம் ”வியாழனின் பனிக்கட்டி நிலவு தேட்டக்கலம்“ (JUICE) அனுப்பிவைத்து ஆராயும் திட்டமாகும். கலீலியோ விண்கலத்தின் மூன்று பனிக்கட்டி நிலவு பயணங்களுக்குப் பின்னர் ஆளில்லா விண்கலத்தை கனிமீடின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.[19]

கண்டுபிடிப்பு மற்றும் பெயரிடல்

சனவரி 7, 1610 ஆம் ஆண்டில் கலீலியோ கலிலி வியாழன் கோளுக்கு அருகில் உற்றுநோக்கி அங்கு மூன்று விண்மீன்கள் இருப்பதாக நம்பினார். அவைகளே பின்னர் கனிமீடு, காலிசுடோ மற்றும் ஐரோப்பா (நிலவு) மற்றும் ஐஓ விடமிருந்து ஒளியைக் பெற்றுக்கொண்ட ஒரு நிலவு என்பனவென்று கருதப்படுகிறது. அடுத்தநாள் இரவு அவை அங்கிருந்து நகர்ந்துவிட்டன என்பதையும் கண்டார். ஒவ்வொன்றையும் இவர் தனித்தனியாக பார்த்திருந்தாலும் சனவர் 13 தேதியன்றுதான் முதன்முதலாக நான்கையும் ஒரேநேரத்தில் கண்டார். சனவரி 15 நாளில்தான் அவை வியாழனை சுற்றும் பொருட்கள் என்ற முடிவுக்கு கலீலியோ வந்தார்[1][2][3]. தொடர்ந்து அந்நிலவுகளுக்கு பெயரிடும் உரிமையைக் கோரினார். அவற்றிற்கு காசுமியன் விண்மீன் என்று பெயரிட நினைத்து இறுதியாக மெடிசியன் விண்மீன் என்று பெயர் சூட்டினார்.[20]

உருவ அளவு ஒப்பீடு பூமி, நிலா, மற்றும் கனிமீடு.

மெடிசி குடும்பத்து நிலவுகள் என்ற பெயரை மாற்றி ஒவ்வொரு நிலவுக்கும் தனித்தனியாகப் பெயரிடுமாறு பிரெஞ்சு வானியலாளர் நிக்கோலசு – கிளாடு பேப்ரைடு பைரெசு பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை ஏற்கப்படவில்லை[20]. பின்னர், கலீலியன் செயற்கைக் கோள்களைப் பார்த்த சைமன் மாரியசு இவற்றுக்கான பெயரிடும் உரிமையைக் கோரி முயற்சித்தார்[21]. வியாழனின் சனி , வியாழனின் வியாழன் (இதுதான் கனிமீடு) , வியாழனின் வெள்ளி , வியாழனின் புதன் என்றெல்லாம் அவர் பெயர் சூட்டினார். அவருக்கு இதைத் தவிர வேறு பெயர்கள் ஏதும் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் சோகன்னசு கெப்ளர் பரிந்துரையின்படி மாரியசு மீண்டும் முயன்று இவற்றுக்குப் பெயரிட்டார்[20].

கிரேக்க நாட்டின் புராணக்கதை ஒன்றில் திராய் நகரத்தின் மன்னன் திராசுவின் மூன்றாவது மகன் அழகான கனிமீடை , கழுகு உருவமெடுத்த ஜுபிடர் தன் முதுகில் சொர்கத்திற்குச் சுமந்து சென்றார் என்று கவிஞர்கள் கனிமீடின் பிரகாசமான ஒளியை வியந்து பாடியுள்ளனர்"[22]}}.இந்தப் பெயர் மற்றும் மற்ற கலீலியன் செயற்கைக் கோள்கள் யாவும் குறிப்பிட்ட சிலகாலம் வரை ஆதரவு எதனையும் பெறாமல் இருந்தன. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் அவை பொதுவான பயன்பாட்டில் இல்லை என்றே கூறவேண்டும். முன்பிருந்த வானியல் நூல்களில் வியாழன் III அல்லது வியாழனின் மூன்றாவது நிலவு என்றே கனிமீடு அதிகமாக அடையாளம் காட்டப்பட்டிருந்தது. கலீலியோவின் பெயரிடல் முறையில் ரோமன் எண் குறியீட்டு முறையில் பெயரிடல் வழக்கமாக இருந்தது. சனி கிரகத்தின் நிலவுகள் கண்டறியப்பட்ட பிறகே கெப்ளர் மற்றும் மாரியசு அவர்களின் திட்டத்தின் அடிப்படையில் வியாழனின் நிலவுகளுக்கு இவ்வாறாகப் பெயரிடப்பட்டது[20]. சொர்கத்தின் கடவுளான சியுசுவின் அன்பிற்கு உகந்தவராக கனிமீடு கருதப்பட்டது. ஐரோப்பா, ஐஓ , காலிசுடோ போல ஆணின் பெயர் சூடப்பட்ட ஒரே கலீலியன் நிலவு கனிமீடு என்பது குறிப்பிடத்தக்கது.

கி.மு 365 இல் வியாழனின் நிலவை வெற்றுக் கண்களால் கண்டதாக சீனநாட்டின் வானியல் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது[23][24]

சுழற்சி மற்றும் சுழல்பாதை

இலாப்லாசு ஒத்திசைவு கனிமிடு, ஐரோப்பா மற்றும் ஐஓ நிலவுகள்.

கலீலியன் நிலவுகளில் மூன்றாவது நிலவான கனிமீடு வியாழன் கோளை 1,07,400 கி.மீ தொலைவில் சுற்றிவருகிறது[25]. வியாழனை ஒருமுறை சுற்றிவர இதற்கு ஏழு நாட்கள் மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. மற்றக் கோள்களைப் போலவே கனிமீடும் எப்போதும் அதன் ஒரு பக்கம் வியாழனை நோக்கியே இருப்பது போல ஓதப் பூட்டலால் பூட்டப்பட்டுள்ளது.[26]. இதன் சுழல்வட்டம், ஜோவியன் கோட்டிலிருந்து, சிறிது விசித்திரமாகவும் சாய்ந்தும் உள்ளது. இவ்விசித்திரமும் சாய்வும் சூரியன் மற்றும் கோள்களின் ஈர்ப்புவிசை சலனத்தால் நூற்றாண்டு கால நேர இடைவெளிகளில் அவ்வப்போது பகுதிபகுதியாக மாறிவருகிறது. இவ்வாறான மாற்றங்களின் எல்லைகள் முறையே, 0.0009-0.0022 மற்றும் 0.05-0.32° என்ற அளவுகளில் குறிக்கப்படுகின்றன.[27]. இந்த சுற்றுப்பாதை மாறுபாடுகளால் அச்சுச் சாய்வு அதாவது சுழல் மற்றும் சுற்றுப்பாதை அச்சுக்கு இடையே உள்ள கோணம் 0° மற்றும் 0.33° என்ற போக்கில் வேறுபடுகிறது.[6].

ஐரோப்பா மற்றும் ஐஓ நிலவுகளுடன் கனிமீடு நிலவு சுற்றுப்பாதை ஒத்திசைவில் பங்கேற்கிறது. கனிமீடு வியாழனை ஒருமுறை சுற்றிவருவதற்குள் ஐரோப்பா நிலவு இரண்டு முறையும் ஐஓ நிலவு நான்கு முறையும் சுற்றி வருகின்றன.[27][28]. ஐரோப்பா நிலவின் அண்மைக் கவர்ச்சி மையமும் ஐஓ நிலவின் சேய்மைக் கவர்ச்சி மையமும் ஒரே அச்சில் வரும்பொழுது இவற்றின் சேய்மை இணையல் நிகழ்கிறது, இதேபோல் ஐரோப்பா நிலவின் அண்மைக் கவர்ச்சி மையம் கனிமீடு நிலவின் சேய்மை கவர்ச்சி மையமும் ஒரே அச்சில் வரும்பொழுது இவற்றின் சேய்மை இணையல் நிகழ்கிறது.[27] ஐஓ – ஐரோப்பா மற்றும் ஐரோப்பா – கனிமீடு நிலவுகளின் தீர்க்கரேகைகளின் மாற்றம் ஒரே விகிதத்தில் நிகழ்கிறது. இதனால் மூன்று நிலவுகளின் இணையல் சாத்தியமில்லாமல் போகிறது. சிக்கல் நிறைந்த இந்த ஒத்திசைவே இலாப்லாசு ஒத்திசைவு என்று அழைக்கப்படுகிறது.[29]

வியாழன் கோளின் சிறப்பான சிவப்பு புள்ளியும் கனிமீடு நிலவின் நிழலும்.[30]

தற்போதைய இலாப்லாசின் ஒத்திசைவு கனிமீடு சுற்றுப்பாதையின் வட்டவிலகலை உயர்த்தப் போதுமானதாக இல்லை[29]. வட்டவிலகல் மதிப்பு 0.0013 என்பது பெரும்பாலும் இவ்வாறான விலகலை உயர்த்தக்கூடிய முந்தைய ஊழி ஒன்றின் எச்சமாக இருக்கலாம்[28]. கனிமீடு சுற்றுப்பாதையின் வட்டவிலகல் சற்று புதிராகவே இருக்கிறது; இவ்விலகல் தற்பொழுது உந்தப்பட்ட விலகலில்லை என்றால், அது கனிமீடின் உள்ளகத்தில் பொங்கித்தாழும் வெப்ப சிதறல் காரணமாக நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே படிப்படியாக குறைந்து வந்ததாக இருக்க வேண்டும்[29]. அதாவது கடைசியாக பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்பாதையின் வட்டவிலகல் ஆச்சர்யம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதே இதன்பொருள் ஆகும்[29]. ஏனெனில் கனிமீடு நிலவின் சுற்றுப்பாதை வட்டவிலகல் ஒழுங்கின்மை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தது ஆகும். சராசரியாக 0.0015 என்பது இந்த சந்திரனின் பேரலை வெப்பமூட்டலுக்கு மிகவும் குறைவு ஆகும்[28]— இந்நிலவின் ஓத வெப்பம் தற்பொழுது மிகவும் குறைவாகும்[29]. ஆனாலும் கடந்த காலத்தில் கனிமீடு நிலவு ஒன்று அல்லது பல இலாப்லாசு வகை ஒத்திசைவுகளை கடந்து வந்திருக்கவேண்டும்அப்படியான நிகழ்வுகளால்தான் சுற்றுப்பாதையின் வட்டவிலகலின் மதிப்பை 0.01 – 0.02 என்ற உயர்மதிப்புக்கு உந்தமுடியும். இது அநேகமாக கனிமீடு நிலவின் உள்ளகத்தில் நிகழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பேரலை வெப்பமூட்டத்தால் ஏற்பட்டிருக்கலாம்[5][29]. இத்தகைய ஒரிரு வெப்பமூட்ட நிகழ்வுகளின் விளைவாக கனிமீடு நிலப்பகுதியில் வரிப்பள்ளங்கள் உருவாகியிருக்கலாம்[5][29].

ஐரோப்பா, ஐஓ மற்றும் கனிமீடு நிலவுகளுக்கு இடையே நிலவும் இலாப்லாசு ஒத்திசைவின் தோற்றம் குறித்து இரண்டு விதமான கருதுகோள்கள் உள்ளன. ஆதியில் இருந்தே இவ்வொத்திசைவு இருந்து சூரியக்குடும்பத்தின் ஆரம்பகாலத்தில் இருந்து தொடர்கிறது என்பது ஒருவகை கருதுகோள்;[31]. இலாப்லாசு ஒத்திசைவு சூரியக்குடும்பம் தோன்றிய பிறகு தோற்றம் பெற்று வளர்ந்தது என்று கருதுவது மற்றொருவிதமான கருதுகோள். பிந்தைய கருதுகோள் சாத்தியமானது என்பதற்கு ஆதாரமாக தொடர்ச்சியான சில நிகழ்வுகள் கூறப்படுகிறது. தன்னுடைய சுற்றுப்பாதையை விரிவடையச்செய்து ஐரோப்பாவுடன் 2:1 விகிதத்திலான ஒத்திசைவை ஏற்படுத்த வியாழனின் மீது ஐஓ நிலவு ஓதங்களை உயர்த்தியது. இதன் பின்னரும் விரிவடைதல் தொடர்ந்தது. ஆனால் சிறிதளவு கோணத் திருப்பம் ஐரோப்பா நிலவுக்கும் மாற்றப்பட்டது. சுற்றுப்பாதையில் ஒத்திசைவு ஏற்பட்டதோடு மட்டுமின்றி அது மேலும் விரிவடையவும் செய்தது. ஐரோப்பா நிலவும் கனிமீடுடன் 2:1 என்ற விகிதத்தில் சுற்றுப்பாதை ஒத்திசைவு ஏற்படும்வரை இச்செயல்பாடு தொடர்ந்தது[29] . இறுதியாக மூன்று நிலவுகள் இடையிலான ஒருங்கிணைப்பும் நகர்வு விகிதங்களும் ஒத்திசைக்கப்பட்டு இலாப்லாசு ஒத்திசைவுக்கு உட்பட்டன[29]

இயற்பியல் பண்புகள்

கட்டமைப்பு

கனிமீடு நிலவு சித்தரிப்பு - மைய்யமாக 45° மேற்கு தீர்க்கரேகை , (மேல்) பெர்ரின் மற்றும் ( கீழே) நிக்கல்சன் பகுதிகள் ,(மேல் வலது) எரிமலை வாய் திராசு மற்றும் (கீழ் இடது) சிசுடியும் உள்ளன).

கனிமீடு நிலவின் சராசரி அடர்த்தி 1.936 கி/செ.மீ 3 என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ சம அளவில் பாறையும் பனிக்கட்டி வடிவில் நீரும் இந்நிலவைக் கட்டமைத்துள்ளன என்பதையே மேற்கண்ட அளவீடு உணர்த்துகிறது[5]. மொத்த நிறைக்கும் பனிக்கட்டிக்கும் இடையிலான நிறை பின்னம் 46–50% ஆகும். இது காலிசுடோவின் நிறை பின்னத்தை விட சிறிது குறைவாகும்[32].இங்கு கூடுதலாக அம்மோனியா போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளும் இருக்கக்கூடும்[32][33]. இந்நிலவின் பெரும்பகுதியாக உள்ள பாறைகளின் துல்லியமான இயைபு அறியப்படவில்லை. ஆனால் அநேகமாக அவை எல்/எல்.எல் வகை சாதாரண வேதி எரிகல் லுக்கு நெருக்கமான வகையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வகைப் பாறையில் இரும்பின் மொத்த அளவு குறைவாகும். அதாவது குறைவான உலோக இரும்பும் எச் வகை எரிகல்லைவிட மிகுதியான இரும்பு ஆக்சைடு தாதுவும் கொண்ட பாறை வகையாக இது அடையாளம் காட்டப்படுகிறது. கனிமீடின் இரும்புசிலிக்கான் எடை விகிதம் 1.05–1.27 ஆகவும் சூரிய நிறை விகிதம் கிட்டத்தட்ட 1.8 ஆகவும் காணப்படுகிறது[32].

கனிமீடின் எதிர் சோவியன் அரைக்கோளம் – கலீலியோ பகுதியின் இருண்ட பகுதிகள், ( வலது ) மற்றும் மாரியசு பகுதி ( இடது ) இவ்விரண்டையும் பிரிக்கும் உருக்கு சல்கசு. உமிழப்பட்ட பனிக்கட்டி உருவாக்கிய ஓசிரிசு எரிமலை வாயின் பிரகாசமான கதிர்கள்.( கீழே )

கனிமீடு நிலவின் தரைப்பகுதி எங்கும் பனிக்கட்டி நீர் நிறைந்துள்ளது. பெரும்பான்மை அல்லது முழுவதுமாக 43% [34]எதிரொளிதிறன் தன்மையும் 50 – 90% [5] நிறை பின்ன மதிப்பும் கொண்டதாக இத்தரைப்பகுதி காணப்படுகிறது. கோளில் பனிக்கட்டி நீரின் இருப்பை அகச்சிவப்புக் கதிர் களின் அண்மை அகச்சிவப்புப் பகுதியின் 1.04, 1.25, 1.5, 2.0 மற்றும் 3.0 மை.மீ[34] அலைநீளங்கள் உறுதி செய்கின்றன. வரிப்பள்ளங்கள் நிரம்பிய தரைப்பகுதி பிரகாசமாகவும் அடர்த்தியான இருள் பகுதிகளை விட அதிகமான பனிக்கட்டியாலும் உருவாகியுள்ளது[35]. கலீலியோ விண்கலம் மூலம் பெறப்பட்ட அண்மை அகச்சிவப்புப் பகுதி மற்றும் புறஊதா கதிர் நிறமாலையியல் உயர்தர ஆய்வு முடிவுகள், இதன் தரைப்பகுதியில் கார்பன் டை ஆக்சைடு, கந்தக டைஆக்சைடு, சயனோசன், ஐதரசன் சல்பேட்டு மற்றும் பலவகையான கரிமச் சேர்மங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன[5][36] . மக்னீசியம் சல்பேட்டு (MgSO4), சோடியம் சல்பேட்டு (Na2SO4) ஆகிய வேதிச்சேர்மங்கள் கனிமீடு நிலவின் தரைப்பகுதியில் காணப்படுகின்றன என்று கலீலியோ விண்கல முடிவுகளும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது[26][37] ஆகும். இவ்வுப்புகள் அங்குள்ள பெருங்கடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[37]

கனிமீடின் மேற்பரப்பு சமச்சீரற்று காணப்படுகிறது. முன்புறமாகத் தெரியும் அரைக்கோளம் பின்புற அரைக்கோளத்தைவிட</ref> பிரகாசமாக இருக்கிறது[34]. ஐரோப்பா நிலவிலும் இதேநிலை காணப்படுகிறது ஆனால் காலிசுடோவில் இதற்கு எதிரான நிலை காணப்படுகிறது[34]. கனிமீடின் பின்புற அரைக்கோளத்தில் கந்தக டைஆக்சைடு மிகுந்திருப்பதாகத் தோன்றுகிறது. இதன் துருவப்பகுதிகளில் கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் காண முடியவில்லை[36][38] என்றாலும், இவ்வாயுப் பரவல் அரைக்கோளத்தின் ஒத்தமைவின்மை எதையும் விளக்கவில்லை[39][40]. ஒரேஒரு விண்கல் வீழ் பள்ளத்தைத் தவிர கனிமீடின் பிற பள்ளங்கள் எதுவும் கார்பன்டை ஆக்சைடு வாயு மிகுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்த அம்சமும் கனிமீடை காலிசுடோவில் இருந்து வேறுபடுத்துகிறது[38].

உள் கட்டமைப்பு

கனிமீட் நிலவு இரும்பு (II) சல்பைடு – இரும்பு உள்ளகம் மற்றும் சிலிக்கேட்டு மூடகத்தால் ஆக்கப்பட்டு முழுவதுமாக வேறுபட்டுத் தோன்றுகிறது [5][41]. இதன் உள்ளமைப்பில் உள்ள உன்னதமான பல்வேறு அடுக்குகளின் தடிமன் ஒலிவைன் மற்றும் பைராக்சின் சிலிக்கேட்டுகளும் உள்ளக கந்தகத்தாலும் ஆனவையென்று ஊகிக்கப்படுகிறது[32][41][42]

நிலத்தடியில் கடல்கள்

அள்வீடுகளின் அடிப்படையில் வரையப்பட்ட கனிமீடு நிலவின் உட்கட்டமைப்பு - குறுக்கு வெட்டுத் தோற்ற்ம்

கனிமீடு நிலவின் நிலப்பகுதியில் மேல் கீழாக உள்ள இரண்டு பனிக்கட்டி அடுக்குகளுக்கு இடையில் ஒரு தடிமனான பரப்பாக கடல் இருக்கலாம் என்று 1970 களில், நாசா விஞ்ஞானிகள் ஊகித்தார்கள்[5][16][41][43]. 1990 களில் நாசாவின் கலிலியோ விண்கலம் கனிமீடுக்கு அருகில் பறந்து இந்நிலவில் கடல் இருப்பதை உறுதிப்படுத்தியது. இக்கடல் வெவ்வேறு நிலை பனிக்கட்டி கடல் அடுக்குகளால் ஆனவொரு தொகுப்பு என்றும் பாறை மூடகத்திற்கு அடுத்ததாக மட்டும் கீழே குறைவான திரவ அடுக்காக கடல் உள்ளது என்றும் கருதப்படுகிறது[16][16][17][18][44]. நீரின் வெப்ப இயக்கவியல் மற்றும் ஆதன் வேதியுப்பு விளைவுகள் ஆகிய எதார்த்தமான வேதிப்பண்புகளின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உயிரினத்தின் தோற்றதிற்கு நீர் – பாறை இடையிலான தொடர்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். 800 கிலோ மீட்டர் ஆழங்கொண்ட கடல் அடிபரப்பு பனிநீர் இடைமுகத்தைவிட 40 கெல்வின் வெப்பநிலை அதிகமாகவுள்ள வெப்பச்சலனமற்ற கடல் பகுதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. கனிமீடின் நிலத்தடியில் பெருங்கடல் இருப்பதையும் அதன் துருவ ஓளியின் நகர்வுக்கும் அப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் அளவீடுகள் எவ்வாறு உதவின என்று விஞ்ஞானிகள் மார்ச்சு 2015 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கனிமீடின் துருவ ஒளியையும், அதன் காந்தப்புலத்தையும் ஒரு பெரிய உப்புநீர் பெருங்கடல் பாதிப்பதாகக் கருதப்படுகிறது[45][46].

உள்ளகம்

ஒட்டுமொத்த சூரியக் குடும்பப் பருப்பொருட்களில் கனிமீடு நிலவு குறைவான நிலைமத் திருப்புத்திறன் கொண்டுள்ளது. கலிலியோ விண்கலம் கண்டறிந்த திரவநிலையில் மிகுந்திருக்கும் இரும்புநிக்கல் உள்ளகம் கனிமீடின் அகநிலை காந்தப்புலத்திற்கான காரணத்தினை விளக்குகிறது. அதிக மின் கடத்துதிறன் பெற்றுள்ள திரவ இரும்பின் வெப்பச்சலனம் , காந்தப்புலம் உருவாகும் முறையை விளக்குவதற்கான பொருத்தமான மாதிரியாகும் கனிமீடு உள்ளகத்தின் அடர்த்தி 5.5 – 6 கி/செ.மீ 3 மற்றும் சிலிக்கேட்டு மூடகத்தின் அடர்த்தி 3.4 – 3.6 கி/செ.மீ 3 ஆகும்[32][41][42]. உள்ளகத்தின் ஆரம் 500 கி.மீ ஆகவும் அதன் உள்வெப்பம் 1500 – 1700 கெல்வின் ஆகவும், அழுத்தம் 10 பாசுக்கல்[41] ஆகவும் இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

மேற்பரப்பின் சிறப்பியல்புகள்

நிக்கல்சன் இருள் பிரதேசத்தையும் அதைகாட்டிலும் இளையதான வெளிச்சப் பிரதேசத்தையும் பிரிக்கும் கூர்மையான எல்லை – இறுதியான அர்பாசிய வரிப்பள்ளப் பிரகாசமான நிலப்பரப்பின் கீறல்கள்.
கலிலியோ விண்கலம் எடுத்த கனிமீடு நிலவின் பின் அரைக்கோளத்தின் மேம்படுத்தப்பட்ட வண்ணப்படம்.[47] வலதுபுறம் தாசுமேட்டம் கிண்ணக்குழியின் முக்கியக் கதிர்கள், மேல் வலதுபுறத்தில் எர்செப்பு கிண்ணக்குழி வெளியேற்றிய கதிர்கள், கீழ் இடதுபுறம் இருண்ட நிக்கல்சன் பிரதேசத்தின் ஒரு பகுதி மற்றும் இதன் மேல் வலது புறத்தில் சூழ்ந்துள்ள அர்பாசிய வரிப்பள்ள கீறல்கள்.

கனிமீடு நிலவின் மேற்பரப்பு இரண்டு வகையான நிலப்பரப்புகளின் கலவையாக உள்ளது: மிகப் பழமையானதும் அதிகளவு கிண்ணக்குழிகளால் ஆக்கப்பட்ட இருண்ட பகுதிகளைக் கொண்டிருப்பது ஒருவகையாகும். இரண்டாவது வகை இவற்றைவிட வயது குறைந்தவை ஆனால் பழமையான வெளிச்சப்பகுதிகள், இவற்றில் கரடுமுரடான நீட்சிகளும் வரிப்பள்ளங்களும் காணப்படுகின்றன. மேற்பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இருண்ட நிலப்பரப்பு களிமண் மற்றும் கரிமவேதியியல் பொருட்களைக் கொண்டிருக்கிறது. இவையே பல்வேறு தாக்கங்களால் உருண்டு திரண்டு வியாழனின் துணைக்கோள்களாக உருப்பெற்றன என்று இக்கலவையின் பகுதிப்பொருட்கள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன.

கனிமீடின் வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாவதற்கு தேவையான வெப்ப இயக்கவியல் வழிமுறை கோள் அறிவியல் துறையில் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. வரிப்பள்ள நிலப்பரப்பு என்பது இயற்கையின் முக்கியமான மேலோட்டு நிலவியல் என்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன [5]. பனி எரிமலை ஏதேனும் அங்கு இருந்திருந்தாலும் வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாக்கத்தில் அதன் பங்கு மிகக் குறைவேயாகும்[5]. கனிமீடின் பனிப்பாறை அடுக்குகளில் புறச்சக்திகள் ஏற்படுத்திய வலிமையான அழுத்தம் , மேலோட்டு நிலவியல் மாற்றச் செயல்பாடுகளை முன்னெடுக்க அவசியமானதாகவும் முற்காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய வெப்ப ஏற்ற இறக்க அலை நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டும் இருந்திருக்கும். ஒருவேளை இத்துணைக்கோளில் இதனால் நிலையற்ற சுற்றுப்பாதை ஒத்திசைவு ஏற்பட்டிருக்கலாம்[5][48]. பனிக்கட்டியின் நெகிழ்ச்சியான ஏற்ற இறக்கச் செயல்பாடுகளால் கோளின் உட்புறம் சூடாகி பாறை அடுக்கில் கீறல்கள் தோன்றியிருக்கலாம். இதனால் நில விரிசல்கள், பாறைப் பிளவுகள் மற்றும் பிளவிடைப் பள்ளங்களின் நகர்வுகள் நிகழ்ந்திருக்கும். இவை 70 சதவீத பண்டைய இருள் நிலப்பகுதிகளை அழித்திருக்கக்கூடும்[5]. வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாக்கம் , கோளின் உள்ளக உருவாக்கத்துடனும் தொடர்பு கொண்டதாக இருந்திருக்க வேண்டும்[5]. கனிமீடின் உள்ளகத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த வெப்ப ஏற்ற இறக்க அலை இயக்கங்கள் விளைவாக பனிக்கட்டி நிலை மாற்றங்களைச் சந்தித்தும் வெப்ப விரிவு காரணமாகவும் இக்கோளின் அளவு 1 முதல் 6 சதவீதம் வரை விரிவடைந்திருக்கலாம். அடுத்துவந்த ஆழமான பரிணாம மாற்றங்களின் போது, மெல்லிய சுடு நீர் ஊற்றுகள் புகையாக உள்ளகத்தில் இருந்து மேற்பரப்பு நோக்கி உயர்ந்திருக்கும். இதனால் மேற்புற பாறை அடுக்கில் உருச்சிதைவு நிகழ்ந்திருக்கலாம்[49]. கோளுக்குள் நடைபெறும் கதிரியக்க வெப்பமே அதிலுள்ள கடலின் ஆழம் வரைக்குமான வெப்ப மாறுபாடுகளின் பங்களிப்பிற்குப் பொருத்தமான வெப்ப ஆதாரமாக உள்ளது. கடந்த காலத்தில் இருந்திருக்க கூடிய சுற்றுப்பாதை ஒழுங்கின்மையால் உண்டான அலை இயக்க மூலங்களில் இருந்து பெறப்பட்ட வெப்பத்தின் அளவு தற்போது கதிரியக்க வெப்பமூட்டலால் கிடைக்கும் வெப்பத்தின் அளவைக்காட்டிலும் கணிசமான வெப்ப ஆதாரமாக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சி மாதிரிகள் கண்டறிந்துள்ளன[50].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கனிமீடு&oldid=3788716" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை