ஐரோப்பா (நிலவு)

ஐரோப்பா (Europa, /jʊˈrpə/[11] (Jupiter II), என்பது வியாழக் கோளின் 66 நிலவுகளில் ஆறாவதாக அருகிலிருக்கும் நிலவு ஆகும். கலீலியோவால் 1610இல் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நான்கு நிலவுகளில் மிகச் சிறியதாக இருப்பினும் சூரியக் குடும்பத்தில் மிகப்பெரும் கோள்/துணைக்கோள்களில் ஒன்றாகும். 1610ஆம் ஆண்டு கலீலியோ கண்ட அதே நேரத்தில்[1] தனிப்பட்டு சைமன் மாரியசும் கண்டறிந்திருக்கலாம். தொடர்ந்த நூற்றாண்டுகளில் புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலமும் 1970களிலிருந்து துழாவு விண்கலங்கள் மூலமாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பா
இயல்பான வண்ணத்தில் ஐரோப்பாவின் பின்புற அரைக்கோளம். வலதுபுறக் கீழே குறிப்பாகத் தெரியும் பள்ளம் பிவிll எனப் பெயரிடப்பட்டுள்ளது; அடர்வண்ணத்தில் தோன்றும் பகுதிகள் ஐரோப்பாவின் முதன்மை நீர்ப்பனிக் கட்டிகளாலான மேற்புறத்தை உடையன. இதனடியில் கூடிய கனிமங்கள் உள்ளன. செப்டம்பர் 7, 1996ஆம் ஆண்டு கலீலியோ விண்கலத்தால் படமெடுக்கப்பட்டது.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கலீலியோ கலிலி
சைமன் மாரியசு
கண்டுபிடிப்பு நாள் சனவரி 8, 1610[1]
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்ஜூபிடர் II
காலகட்டம்சனவரி 8, 2004
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 664 862 km[3]
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி676 938 km[3]
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் 670 900 km[4]
மையத்தொலைத்தகவு 0.009[4]
சுற்றுப்பாதை வேகம் 3.551181 d[4]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 13.740 km/s[4]
சாய்வு 0.470° (to Jupiter's equator)[4]
இது எதன் துணைக்கோள் வியாழன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 1569 km (0.245 புவிs)[4]
புறப் பரப்பு 3.09×107 km2 (0.061 Earths)[5]
கனஅளவு 1.593×1010 km3 (0.015 Earths)[5]
நிறை 4.80×1022 kg (0.008 Earths)[4]
அடர்த்தி 3.01 g/cm3[4]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்1.314 m/s2 (0.134 g)[3]
விடுபடு திசைவேகம்2.025 km/s[3]
சுழற்சிக் காலம் Synchronous[6]
அச்சுவழிச் சாய்வு 0.1°[7]
எதிரொளி திறன்0.67 ± 0.03[8]
மேற்பரப்பு வெப்பநிலை
   Surface
சிறுமசராசரிபெரும
~50 K [9]102 K125 K
தோற்ற ஒளிர்மை 5.29 (opposition)[8]
பெயரெச்சங்கள் ஐரோப்பாவின்
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 0.1 µPa (10-12 bar)[10]

புவியின் நிலவைவை விட சற்றே சிறியதான ஐரோப்பா சிலிக்கேட் பாறைகளால் ஆனது; கருப்பகுதியில் இரும்பு இருக்கலாம். இதன் பலம் குன்றிய வளி மண்டலத்தில் முதன்மையானதாக ஆக்சிசன் உள்ளது. பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு சூரிய மண்டலத்திலேயே மிகவும் பள்ளம் மேடற்றது. இந்தப் பரப்பில் பிளவுகளும் கோடுகளும் உள்ளபோதும் பெருவாய்கள் குறைவு. இத்தகைய வழவழப்பான மேற்பரப்பினால் இதனடியே நீரால் அமைந்த கடல் இருக்கலாம் எனவும் புவிக்கப்பாலான வாழிடமாக இருக்கலாம் எனவும் கருதுகோள்கள் நிலவுகின்றன.[12] இந்தக் கருதுகோள்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு நகர்தல் போலவே கோள் ஈர்ப்பு விசை சார் அலையோட்டத்தால் இந்தக்கடல் நீர்ம நிலையிலேயே உள்ளதாகவும் முன்மொழிகின்றன.[13]

1989ஆம் ஆண்டு விண்ணேற்றப்பட்ட கலிலியோ விண்கலம் திட்டம் மூலமாக ஐரோப்பாவாக் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கிட்டியுள்ளன. இந்த நிலவை அருகில் பறக்கும் விண்கலங்களே கண்டிருந்தாலும் இதன் சுவாரசியமான கூறுகள் பல புத்தாய்வுத் தேடுதல் திட்டங்களுக்கு வித்திட்டுள்ளன. ஐரோப்பாவிற்கான அடுத்த திட்டமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் வியாழனின் பனிநிலவு புத்தாய்வுக் கலம் (JUICE) 2022இல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.[14]

கண்டுபிடிப்பும் பெயரிடலும்

ஐரோப்பா நிலாவானது 8 ஜனவரி 1610 அன்று கலீலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டு சைமன் மாரியசால் பெயரிடப்பட்டது. ஐரோப்பா என்பது கிரேக்கத் தொன்மவியலைச் சேர்ந்த போனீசியன் உயர்குடிப் பெண்ணின் பெயராகும். அவள் சூசுவுடன் நட்புக்கொண்டு கிரீட் பிரதேசத்தின் அரசியானாள்.

ஐரோப்பா வியாழனின் ஏனைய மூன்று துணைக்கோள்களான ஐஓ, கனிமிடு, காலிஸ்டோ ஆகியவற்றுடன் சேர்த்து கலீலியோ கலிலியால் 1610 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க

வியாழனின் நிலாக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐரோப்பா_(நிலவு)&oldid=3824711" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை