மரத் தக்காளி

மரத் தக்காளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
பேரினம்:
Solanum
இனம்:
S. betaceum
இருசொற் பெயரீடு
Solanum betaceum
Antonio José Cavanilles
வேறு பெயர்கள் [1]
  • Cyphomandra betacea (Cav.) Sendtn.
  • Cyphomandra crassifolia (Ortega) J.F. Macbr.
  • Pionandra betacea (Cav.) Miers
  • Solanum betacea Cav.
  • Solanum crassifolium Ortega
  • Solanum insigne Lowe
பழுத்த பழம்

மரத்தக்காளி அல்லது குறுந்தக்காளி (Tamarillo) என்பது உருளைக் கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பூக்கும் தாவரம் ஆகும். இது முட்டை வடிவ உண்ணத்தகு பழங்களை விளைவிக்கிறது.[2] மரத்தக்காளியானது ஒரு சிறு மரப்பயிர் ஆகும்.

பரவல்

இது பெரு நாட்டின் மலைக் கிராமங்களில் இருந்து தோன்றியது. பின்னர் அங்கிருந்து நியூசிலாந்து, பிரேசில், இந்தியா, இலங்கை நாடுகளுக்குப் பரவி பயிரிடப்படுகிறது. இதை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்றாலும் இது மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது என்பதால், சமவெளிப் பகுதிகளில் பயிரிட முடியாதது. இவை தொடர்ந்து 5, 6 ஆண்டுகள் மகசூல் தரக்கூடியன. இப்பயிர் கடல் மட்டத்தில் இருந்து 1,000 முதல் 7,500 அடி உயரமான இடங்களில் வளர்கிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், நாகாலாந்து, இமாசலப்பிரதேச மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது. தமிழ்நாட்டில் சிறுமலை, கொடைக்கானல், ஊட்டி, தாண்டிக்குடி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் விவசாயிகள் மரத்தக்காளியை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

பழம்

முட்டை வடிவப் பழங்கள் 4-10 செ. மீ நீளமுடையன. அவற்றின் நிறம் மஞ்சள் முதல் செம்மஞ்சள், சிவப்பு, ஊதா எனப் பல உள்ளன. இவை தக்காளியைப் போன்ற சுவைகொண்டதாக உள்ளன. சாதாரண தக்காளி, செடியில் இருந்து பறித்த பழம் ஒரிரு நாளில் அழுகிவிடுகின்றன. ஆனால், மரத்தக்காளி பழங்கள் 7 முதல் 8 நாட்கள் வரை சாதாரணமாக கெடுவதில்லை. குறைந்த சீதோஷ்ண நிலையில் சுமார் 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதாரண தக்காளியைப் போல் இதை அப்படியே பயன்படுத்த முடியாது. தோலை சுற்றி கசக்கும் தன்மை இருக்கும். அதனால் தோலை நீக்கிவிட்டு, பயன்படுத்துகின்றனர்.[3]

பழக்கூறு, சில முக்கிய ஆக்கக்கூறுகள்[4]
ஆக்கக்கூறு [g/100g]எல்லைஆக்கக்கூறு [mg/100g]எல்லை
நீர் அளவு81–87உயிர்ச்சத்து ஏ0.32–1.48
புரதங்கள்1.5–2.5உயிர்ச்சத்து சி19.7–57.8
கொழுப்பு0.05–1.28கல்சியதம்3.9–11.3
நார்ப்பொருள் 1.4–6.0மக்னீசியம்19.7–22.3
மொத்த அமிலம்1.0–2.4இரும்பு0.4–0.94

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamarillo
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மரத்_தக்காளி&oldid=3577993" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை