மாக்னசு கார்ல்சன்

நார்வே நாட்டு சதுரங்க ஆட்டக்காரர்

இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் (Sven Magnus Øen Carlsen, பிறப்பு: நவம்பர் 30, 1990)[1] ஒரு நோர்வே சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது.

மாக்னசு கார்ல்சன்
Magnus Carlsen
2019 இல் கார்ல்சன்
பிறப்புசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன்
30 நவம்பர் 1990 (1990-11-30) (அகவை 33)
தோன்சுபர்க், நோர்வே
நாடுநோர்வே
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2004)
உலக வாகையாளர்2013–இற்றை
பிடே தரவுகோள்2856 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2882 (மே 2014)
தரவரிசைஇல. 1 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைஇல. 1 (சனவரி 2010)
வலைத்தளம்
magnuscarlsen.com/en/

இவர் ஐந்து தடவைகள் உலக சதுரங்க வாகையாளராகவும், மூன்று தடவைகள் உலக விரைவு சதுரங்க வாகையாளராகவும், ஐந்து தடவைகள் உலக பிளிட்சு சதுரங்க வாகையாளராகவும் விளங்கியுள்ளார். முதன்முதலில் 2010 இல் பிடே உலகத் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார். மேலும் காரி காஸ்பரோவிற்கு அடுத்தபடியாக உலகில் தமது காலத்தில் அதிக மதிப்பிடப்பட்ட வீரராக உள்ளார். இவரது உச்ச மதிப்பீடு 2882 என்பது பாரம்பரிய சதுரங்க வரலாற்றில் மிக உயர்ந்ததாகும். அத்துடன் பாரம்பரிய சதுரங்கத்தில் மேல் மட்டத்தில் மிக நீண்ட கால ஆட்டமிழக்காதவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.[2]

சதுரங்க மேதையான கார்ல்சன் தனது 13-ஆவது அகவையில் டாட்டா கோரசு தொடரின் சி பிரிவில் முதலிடம் பெற்றார். பின்னர் சில மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றார். 15-ஆவது அகவையில் நோர்வே சதுரங்க வாகையாளரானார். 18-ஆவது அகவையில் 2800 என்ற மதிப்பீட்டைக் கடந்து, மிக இளவயதில் இந்த மதிப்பீட்டைப் பெற்ற சாதனையாளரானார். தனது 19-ஆவது அகவையில், பிடே உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்று, இளவயதில் முதலிடம் பெற்றவர் என்ற பெயரைப் பெற்றார்.

கார்ல்சன் உலக சதுரங்க வாகையாளராக 2013 போட்டியில் விசுவநாதன் ஆனந்தை வென்றார். 2014 இல் ஆனந்தை மீண்டும் வென்று பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதே ஆண்டில் உலக விரைவு வாகையாளர், பிளிட்சு வாகையாளர் பட்டங்களையும் வென்று மூன்று உலகப் பட்டங்களை ஒரே ஆண்டில் பெற்று சாதனை படைத்தார். இம்மூன்று பட்டங்களையும் மீண்டும் அவர் 2019 இல் பெற்றார். 2016 இல் செர்கே கரியாக்கின், 2018 இல் பாபியானோ கருவானா, 2021 இல் இயன் நெப்போம்னியாட்சி ஆகியோரை வென்று உலக சதுரங்க வாகையாளர் பட்டங்களைத் தக்கவைத்துக் கொண்டார்.

ஒரு இளைஞனாக அவரது தாக்குதல் பாணியால் அறியப்பட்ட கார்ல்சன், பின்னர் ஒரு உலகளாவிய வீரராக வளர்ந்தார். எதிராளிகள் தனக்கு எதிராகத் தயார்படுத்துவதை மிகவும் கடினமாக்குவதற்கும், விளையாட்டுக்கு முந்தைய கணினிப் பகுப்பாய்வின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் அவர் பல்வேறு திறப்புகளைப் பயன்படுத்தி விளையாடுகிறார். சதுரங்க ஆட்டம் ஒன்றில் நடுப்பகுதி ஆட்டமே தனக்கு மிகவும் பிடித்த பகுதியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.[3] அவரது நிலைப்பாட்டின் தேர்ச்சியும் இறுதி ஆட்டத்திறனும் முன்னாள் உலக வாகையாளர்களான பாபி பிசர், அனத்தோலி கார்ப்பொவ், காப்பாபிளான்க்கா, வசீலி சிமிசுலோவ் ஆகியோருடன் ஒப்பிட முடிகிறது.

உலக வாகையாளர்

உலக வாகையாளர் 2013

தமிழ்நாடு, சென்னையில் 2013 நவம்பர் 9 முதல் 22 வரை கார்ல்சன் உலக வாகையாளர் ஆனந்தை எதிர்கொண்டு, 6½–3½ என்ற கணக்கில் வென்று புதிய உலக வாகையாளரானர்.[4]

உலக சதுரங்கப் போட்டி 2013
தரம்ஆட்டம் 1
9 நவ.
ஆட்டம் 2
10 நவ.
ஆட்டம் 3
12 நவ.
ஆட்டம் 4
13 நவ.
ஆட்டம் 5
15 நவ.
ஆட்டம் 6
16 நவ.
ஆட்டம் 7
18 நவ.
ஆட்டம் 8
19 நவ.
ஆட்டம் 9
21 நவ.
ஆட்டம் 10
22 நவ.
ஆட்டம் 11
24 நவ.
ஆட்டம் 12
26 நவ.
புள்ளிகள்
 விசுவநாதன் ஆனந்த் (இந்தியா)2775½½½½00½½0½..
 மாக்னசு கார்ல்சன் (நோர்வே)2870½½½½11½½1½..

உலக வாகையாளர் 2014

2014 நவம்பர் 7 முதல் 23 வரை உருசியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற போட்டியில் கார்ல்சன் ஆனந்தை எதிர்கொண்டு 6½–4½ என்ற கணக்கில் ஆனந்தை வென்று உலக வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.[5]

உலக சதுரங்க வாகையாளர் போட்டி 2014
தரவரிசைஆட்டம் 1
8 நவ.
ஆட்டம் 2
9 நவ.
ஆட்டம் 3
11 நவ.
ஆட்டம் 4
12 நவ.
ஆட்டம் 5
14 நவ.
ஆட்டம் 6
15 நவ.
ஆட்டம் 7
17 நவ.
ஆட்டம் 8
18 நவ.
ஆட்டம் 9
20 நவ.
ஆட்டம் 10
21 நவ.
ஆட்டம் 11
23 நவ.
ஆட்டம் 12
25 நவ.
புள்ளிகள்
 மாக்னசு கார்ல்சன் (நோர்வே)2863½10½½1½½½½1தேவைப்
படவில்லை
 விசுவநாதன் ஆனந்த் (இந்தியா)2792½01½½0½½½½0

உலக வாகையாளர் 2016

நியூயார்க் நகரில் நடைபெற்ற 2016 உலக வாகையாளர் போட்டியில் கார்ல்சன் செர்கே கரியாக்கினை எதிர்கொண்டார். 2016 நவம்பர் 11 முதல் 28 வரை இடம்பெற்ற சுற்று 6–6 என்ற கணக்கில் சமமாக முடிவடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டிகள் நவம்பர் 30 இல் நடைபெற்றது. கார்ல்சன் 3–1 என்ற கணக்கில் வென்று உலக வாகையாளரானார்.

உலக சதுரங்க வாகையாளர் போட்டி 2016
எலோ தரம்தரம்பாரம்பரியப் போட்டிகள்விரைவுப் போட்டிகள்புள்ளிகள்
12345678910111213141516
 செர்கே கரியாக்கின் (உருசியா)27729½½½½½½½1½0½½½½006 (1)
 மாக்னசு கார்ல்சன் (நோர்வே)28531½½½½½½½0½1½½½½116 (3)

உலக வாகையாளர் 2018

2018 நவம்பர் 9 முதல் 28 வரை இலண்டனில் நடைபெற்ற உலக வாகையாளர் போட்டியில் கார்ல்சன் போபியானோ கருவானாவை எதிர்கொண்டார். 12 பாரம்பரிய போட்டிகளின் முடிவில் சுற்று சமமாக முடிவடைந்தது. வெற்றியாளரை நிர்ணயித்த விரைவுப் போட்டிகளில் கார்ல்சன் 3–0 என்ற கணக்கில் வென்று உலக வாகையாளரானார்.[6]

உலக சதுரங்க வாகையாளர் போட்டி 2018
எலோ தரம்தரம்பாரம்பரியப் போட்டிகள்விரைவுப் போட்டிகள்புள்ளிகள்
123456789101112131415
 மாக்னசு கார்ல்சன் (நோர்வே)28351½½½½½½½½½½½½1116 (3)
 பாபியானோ கருவானா (அமெரிக்கா)28322½½½½½½½½½½½½0006 (0)

உலக வாகையாளர் 2021

2021 நவம்பர் 24 முதல் திசம்பர் 12 வரை துபாயில் நடைபெற்ற உலக வாகையாளர் போட்டிகளில், கார்ல்சன் உருசியாவின் இயான் நிப்போம்னிசியை எதிர்கொண்டு 7½–3½ என்ற கணக்கில் வென்று ஐந்தாவது தடவையாக உலக வாகையாளரானார். இச்சுற்றின் ஆறாவது ஆட்டம் 5 ஆண்டுகளுக்கும் மேலான உலக சதுரங்க வாகையாளர் விளையாட்டில் முதலாவது தீர்க்கமான முடிவும், 136 நகர்வுகளில் உலக வாகையாளர் வரலாற்றில் மிக நீண்ட ஆட்டமுமாகும்.[7][8]

உலக சதுரங்க வாகையாளர் போட்டி 2021
எலோ தரம்தரம்பாரம்பரியப் போட்டிகள்புள்ளிகள்
1234567891011121314
 மாக்னசு கார்ல்சன் (நோர்வே)28561½½½½½1½11½1தேவைப்படவில்லை
 இயான் நிப்போம்னிசி (உருசியா)27825½½½½½0½00½0

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாக்னசு_கார்ல்சன்&oldid=3938415" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை