முப்பதாண்டுப் போர்

முப்பதாண்டுப் போர் (1618–1648) என்பது ஒரு மதப்பின்னணி கொண்ட போர் ஆகத் தொடங்கியது. இது முக்கியமாக ஜெர்மனியிலேயே இடம்பெற்றாலும் பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள் இதில் ஈடுபட்டிருந்தன. புனித ரோமானிய பேரரசர் பெர்டினாண்ட் இரண்டாம் போமியா குடிமக்களின் மதம் சார்ந்த உரிமைகளை குறைக்க முயன்ற போது, புராட்டஸ்டன்ட் மக்களிடையே ஏற்பட்ட கிளர்ச்சியின் மூலம் முப்பது ஆண்டுகள் போர் (1618-48) தொடங்கியது. இந்தப் போரில் ஐரோப்பாவின் முக்கிய சக்திகளான, சுவீடன், பிரான்சு, இசுபெயின் மற்றும் ஆஸ்திரியா ஆகியவற்றையும் செருமானிய மண்ணில் போர் தொடுக்கும் பிரச்சாரங்களை நடத்தி உள்ளிழுத்துக் கொண்டது. இந்தப் போரினால் ஏற்பட்ட வீழ்ச்சியானது மத்திய ஐரோப்பாவின் மத மற்றும் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது, பழைய உரோமானிய கத்தோலிக்கப் பேரரசிடம் குவிக்கப்பட்டிருந்த அதிகார மைய அரசியலிலிருந்து விடுபட்டு தனித்த இறையாண்மையைக் கொண்ட மாநிலங்களின் சமூகத்திற்கு வழிவகுத்தது.[8] புனித ரோமப் பேரரசில் புரட்டஸ்தாந்தினருக்கும், கத்தோலிக்கருக்கும் இடையிலான போராகத் தொடங்கிய இப்போர் படிப்படியாக முழு ஐரோப்பாவும் தழுவிய அரசியல் போராக வளர்ச்சியுற்றது. முப்பதாண்டுப் போர், ஐரோப்பிய அரசியல் முன்னிலைக்காக போர்பொன்-ஹப்ஸ்பர்க் போட்டியின் தொடர்ச்சியாகும். இந்த அரசியல் போட்டி பிரான்சுக்கும், ஹப்ஸ்பர்க் அரசுகளுக்கும் இடையே மேலும் சண்டைகளை உருவாக்கியது.கூலிப்படை வீரர்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களின் ஒரு பகுதியாக அறியப்பட்ட இந்த யுத்தம் வெஸ்ட்பேலியாவின் அமைதியை உருவாக்கிய தொடர்ச்சியான ஒப்பந்தங்களுடன் முடிவடைந்தது.

முப்பதாண்டுப் போர்

வெஸ்ட்பேலியா அமைதிக்குப் பின்னான ஐரோப்பாவின் நிலப்படம், 1648. புனித ரோமப் பேரரசுக்கு உட்பட்ட சிறிய ஜேர்மன் நாடுகள் சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
நாள்1618 –1648
இடம்ஐரோப்பா (முதன்மையாக ஜேர்மனி)
வெஸ்ட்பேலியா அமைதி
  • ஹப்ஸ்பர்க்கின் உயர்நிலை குறைக்கப்பட்டது
  • போர்பொன் வம்ச எழுச்சி
  • சுவீடியப் பேரரசின் எழுச்சி
  • புனித ரோமப் பேரரசில் அதிகாரப் பரவல்
பிரிவினர்
சுவீடன் சுவீடன்

 பொகேமியா
டென்மார்க் டென்மார்க்-நார்வே[1]
இடச்சுக் குடியரசு இடச்சுக் குடியரசு
பிரான்சு[2] France
சக்சனி
Electoral Palatinate
இங்கிலாந்து[3]
டிரான்சில்வேனியா
ஹங்கேரிய anti-Habsburg rebels[4]

 புனித உரோம இராச்சியம்[5]
  • கத்தோலிக்க லீக்
  • அப்சுபக் முடியாட்சி ஆஸ்திரியா
  • பவேரியா பவேரியா
  • ஹங்கேரிய இராச்சியம்[6]
  • குரோசியா[7]

எசுப்பானியா எஸ்பானியப் பேரரசு

தளபதிகள், தலைவர்கள்
பொகேமியா Frederick V

சுவீடன் Earl of Leven
சுவீடன் Gustav II Adolf 
சுவீடன் Johan Baner
இடச்சுக் குடியரசு Maurice of Nassau
இடச்சுக் குடியரசு Piet Pieterszoon Hein
பிரான்சு Cardinal Richelieu
பிரான்சு Louis II de Bourbon
பிரான்சு Vicomte de Turenne
டென்மார்க் Christian IV of Denmark
Bernhard of Saxe-Weimar
Johann Georg I of Saxony
Gabriel Bethlen

புனித உரோமைப் பேரரசு Johann Tserclaes, Count of Tilly 

புனித உரோமைப் பேரரசு Albrecht von Wallenstein
புனித உரோமைப் பேரரசு Ferdinand II
புனித உரோமைப் பேரரசு Ferdinand III
புனித உரோமைப் பேரரசு Franz von Mercy 
புனித உரோமைப் பேரரசு Johann von Werth
பவேரியா Maximilian I
எசுப்பானியா Count-Duke Olivares
எசுப்பானியா Ambrogio Spinola
எசுப்பானியா Cardinal-Infante Ferdinand

பலம்
~495,000,
150,000 சுவேடுகள்,
20,000 டேனியர்,
75,000 டச்சு,
~100,000 ஜேர்மானியர்,
150,000 பிரெஞ்சு
~450,000,
300,000 எஸ்பானியர்,
~100-200,000 ஜேர்மானியர்

பெரும்பாலும் கூலிப்படைகளின் மூலமே இடம்பெற்ற இப் போரினால் ஏற்பட்ட முக்கிய தாக்கம் முழுப் பகுதிகளிலுமே ஏற்பட்ட பேரழிவுகள் ஆகும். பஞ்சம், நோய்கள் என்பனவற்றினால் ஜெர்மானிய நாடுகளிலும், கீழ் நாடுகளிலும், இத்தாலியிலும் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. போரில் பங்கு பெற்ற பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின. போரை உருவாக்கிய சில பிணக்குகள் தீர்க்கப்படாமலேயே நீண்ட காலம் தொடர்ந்தன.

போரின் தொடக்கம்

செருமானிய லூதரனியம் லூதரனியர்கள் மற்றும் கத்தோலிக்கர்களிடையே நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஐந்தாம் சார்லசு, புனித ரோமானிய பேரரசர் கையெழுத்திட்ட ஆசுபெர்க்கின் அமைதி ஒப்பந்தம் (1555) டயட் ஆஃப் இசுபேயெரின் முடிவுகளை உறுதி செய்தது.[9]

  • 224 செருமானிய மாநிலங்களின் ஆட்சியாளர்கள், தங்கள் பகுதிக்கான மதத்தை (லூத்தரன் அல்லது கத்தோலிக்கம்) தேர்ந்தெடுக்கலாம். அந்தப் பகுதி குடிமக்கள் அதைப் பின்பற்றும் முடிவையோ அல்லது வெளியேறும் முடிவையோ எடுக்கலாம். (”யாருடைய ஆளுகைப் பகுதியோ, அவருடைய மதம்” (Cuius regio, eius religio) என்ற இலத்தீன் மொழிப் பதத்தின் படியான கொள்கை).
  • இளவரசர்-ஆயர்களின் ஆட்சிப்பகுதி மற்றும் கத்தோலிக்க திருச்சபை குருமார்கள் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகள் மட்டும் கத்தோலிக்க மாநிலங்களாகவே தொடர விலக்களிக்கப்பட்டன. லூத்தரன்களாக மாறிய இளவரசர் உடன் ஆயர்கள் அவர்களின் ஆளுகைப்பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும்.
  • 1552 ஆம் ஆண்டின் பாசசு அமைதி உடன்படிக்கையின்படி (Peace of Passau) கத்தோலிக்க திருச்சபையில் இருந்து எடுத்திருந்த பகுதியை லூத்தரர்கள் வைத்திருக்க முடியும்.

ஆசுபெர்க்கின் அமைதி உடன்படிக்கை போர் பதற்றத்தினை ஒரு தற்காலிக முடிவுக்கு கொண்டு வந்த போதிலும்கூட, அடிப்படையில் இருந்த மதங்களுக்கிடையேயான சச்சரவுகளைத் தீர்த்துவைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் செருமனி பின்பற்றிய சீர்திருத்தத் திருச்சபைகளின் ஒரு பிரிவான கால்வினிசத்தால் இப்பிரச்சனை இன்னும் சிக்கலானதாக மாறியது.[10] இந்நிலை அப்பகுதிக்கு மூன்றாவது பெரிய நம்பிக்கை கோட்பாட்டை சேர்த்தது, ஆனால் ஆசுபெர்க் அமைதி உடன்படிக்கையின் விதிகளால் அதன் நிலைப்பாடு எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படவில்லை, கத்தோலிக்கம் மற்றும் லூதரனியம் மட்டுமே இரு பெரும் பிரிவுகளாக இருந்தன.[11][12]

புனித ரோம சாம்ராஜ்யத்திற்கு அருகிலுள்ள நாடுகளின் ஆட்சியாளர்களும் முப்பதாண்டுப் போரின் உருவாக்கத்திற்குக் காரணங்களைப் பங்களித்துள்ளனர்:

  • தனது பேரரசின் மேற்குப் பகுதிகளில் இருந்த சுபானிய நெதர்லாந்தின் பிரதேசங்கள் மற்றும் இத்தாலிக்குள் இருந்த மாநிலங்கள் ஆகியவை நிலத்தால் சுபானிய சாலைகளால் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் சுபெயின் செருமனியின் மீது நாட்டம் கொண்டிருந்தது. 1560 களில் இசுபானிசின் மேலாதிக்கத்திற்கு எதிராக டச்சுக்காரர்கள் கலகம் செய்ய ஆரம்பித்ததன் விளைவாக டச்சுப்புரட்சிக்கு வழிவகுத்தது. மிகவும் காலம் கடந்து 1609 ஆம் ஆண்டில் தான் சமாதான உடன்படிக்கைக்கு வர இது காரணமாய் அமைந்தது.
  • பிரான்சு நாடானது ஆசுபர்க்கின் இரண்டு மாநிலங்களான சுபெயின் மற்றும் புனித ரோமானியப் பேரரசு ஆகியவற்றால் ஏறத்தாழ சூழப்பட்டிருந்தது. இதன் காரணமாக பயத்திற்குள்ளாகி, தனது அதிகாரத்தை வெளிப்படுத்த ஆர்வமாகி பலவீனமான செருமானிய மாகாணங்களுக்கெதிராக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இத்தகைய பேரரசுவாதம் மதவாதத்தை முந்திச்சென்று போரில் கத்தோலிக்க பிரான்சு புரோத்தஸ்தந்து பக்கமாக சேர்ந்திட வழிவகை செய்தது.
  • சுவீடன் மற்றும் டென்மார்க்-நார்வே போன்றவை பால்டிக் கடலோரமாக உள்ள வடக்கு செருமனியின் மாகாணங்களின் மீது நாட்டம் கொண்டிருந்தனர்.

வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்

பதினேழாம் நுாற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த முப்பதாண்டுப் போர் 1648 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதற்கு முன்னதாக நான்காண்டு கால அளவிற்குப் போரில் ஈடுபட்டு வந்த நாடுகளான புனித உரோமைப் பேரரசு, பிரான்சு மற்றும் சுவீடன் ஆகியோர் சமரசத்திற்கான கலந்துரையாடலை செருமனியின் ஓசுனாப்ருயூக் (Osnabrück) மற்றும் மியூன்சிட்டர் (Münster) ஆகிய நகரங்களில் நடத்தி வந்தனர். இதன் விளைவாக, புனித உரோமைப் பேரரசு]], எசுப்பானியா, பிரான்சு, சுவீடன் அரசுகள், டச் குடியரசு, மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் 15 மே 1648 இல் ஓசுனாப்ருயூக்கிலும், 24 அக்டோபர் 1648 இல் மியூன்சிட்டரிலும் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களே வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் ஆஸ்திரியாவிடமிருந்து சுவிசுக்கும், சுபெயினிடமிருந்து நெதர்லாந்திற்கும் சுதந்திரம் கிடைக்க உதவியது. ஜெர்மன் பிரதமர்கள் தங்கள் சுயாட்சியை பாதுகாத்துக் கொண்டனர். சுவீடன் தனது ஆளுகைக்கான நிலப்பகுதியையும், ரொக்கமாக பணத்தையும் சம்பாதித்தது, பிராண்டன்பேர்க் மற்றும் பவேரியா ஆகியவையும் கூட இலாபத்தை ஈட்டின. மேலும் பிரான்சானது அல்சாசே லோரைனின் பெரும்பகுதியைப் பெற்றது. ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க மறுபிறப்புக்கான சாத்தியம் எப்போதும் மறைந்துவிட்டது. புராட்டஸ்டன்டிசம் உலகில் நீடிப்பதற்கான வாய்ப்பு உருவானது.[13]

முப்பதாண்டுப் போரின் சமூக மற்றும் பொருளாதார தாக்கம்

முப்பதாண்டுப் போரின் சமூக மற்றும் பொருளாதார தாக்கமானது ஐரோப்பா முழுவதும் வெவ்வேறுபட்ட நிலைகளில் காணப்பட்டது. ஐரோப்பாவின் சில பகுதிகளில், குறிப்பாக ஜெர்மனியில், முப்பதாண்டுப் போர் ஒரு அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெர்மனியின் பெரும்பகுதி பஞ்சம் மற்றும் பொருளாதார அழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், போரில் இருந்து வெளியேறிய மாகாணப் பகுதிகள் ஒப்பீட்டளவில் தீங்கிழைக்கப்படாத நிலையுடன் காணப்பட்டன. லீப்சிக், ஆம்பர்க் மற்றும் டேன்சிக் உள்ளிட்ட சில நகரங்கள் உண்மையில் போரில் இருந்து பலன் அடைந்தன எனலாம்.இந்த விடயத்தில் வரலாற்றாசிரியர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிகின்றனர். ஒரு பிரிவினர் முப்பது ஆண்டுகள் போர் ஜெர்மனி மீது பேரழிவை ஏற்படுத்தியது என்றும் அதன் முந்தைய கால வளமையான பொருளாதாரத்தை தரைமட்டத்திற்குக் கொண்டு வந்து விட்டதாகவும், மற்றும் முப்பது ஆண்டுப் போர் ஜெர்மனியை அழிவின் விளிம்பிற்கே கொண்டுவந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

சில வரலாற்றாசிரியர்கள் ஜெர்மனியின் முன்னேற்றம் போரின் தாக்கத்தால் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டதாக வாதிடுகின்றனர். வேளாண்மை, பொருளாதாரம், மக்கள் தொகை, கலாச்சாரம் ஆகியவை பாழாக்கப்பட்டதாலும், வேளாண்மையில் தேக்கநிலை ஏற்பட்டதாலும், தொழில், கலை மற்றும் வணிகம் ஆகியவை பலவீனப்படுத்தப்பட்டதாலும் இத்தகையதொரு நிலை ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கருதுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், ஜெர்மனியின் சில நகரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டே விட்டன.[14]

இராணுவ மோதல்களின் பல நாடுகள் பலவீனமடைந்த நிலையில் விதிவிலக்காக வளமான பொருளாதாரப் பயனடைந்த பல நாடுகளான டச்சு குடியரசு இருந்தது. சுவீடன் போன்ற சில நாடுகள், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த காரணத்திற்காக வழங்கப்பட்ட பங்களிப்புகளைக் கொண்டு நீண்டகாலமாக தங்கள் படைகளின் நிதி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள முடிந்தது. மற்றவர்கள் வரிவிதிப்புகளையும் சார்ந்து குறைவான அளவில் இத்தகைய முயற்சிகளில் வெற்றி பெற்றார்கள். உதாரணமாக, பிரான்சு, 1630 மற்றும் 1640 களில் உள்நாட்டு வருவாயிலிருந்து அதன் வருமானத்தை இரட்டிப்பாக்க முடிந்தது. எவ்வாறாயினும், மிகப் பெரிய நிதி அழுத்தம் பிரான்சில் தொடர்ச்சியான மக்கள் கிளர்ச்சிகளைத் தூண்டியது, இது வரிவிதிப்பு அதிகரிக்கப்படுவதை தடுப்பதுடன், இறுதியாக 1648-1652 ஆம் ஆண்டுகளில் பொருளாதார நொடிப்பு (திவாலாகும்) நிலை மற்றும் உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தது.[15]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முப்பதாண்டுப்_போர்&oldid=3791656" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை