வடக்கு வியட்நாம்

வடக்கு வியட்நாம் (North Vietnam) நாட்டின் அலுவல் பெயர் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு ஆகும்; இது வியட்நாம் மொழியில் வியட்நாம் தான் சூ சோங் கோவா எனப்படுகிறது.[a] வடக்கு வியட்நாம் தென்கிழக்காசியாவில் 1945 முதல் 1976 வரை அமைந்திருந்த நாடாகும். முழுவதும் இடம்பெற்ற ஆகத்துப் புரட்சியை அடுத்து, பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் கனோய் நகரில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு எனும் பெயரில் அதை ஒரு பொதுவுடைமை அரசாக வியட்நாமியப் புரட்சித் தலைவர் ஓ சி மின் அறிவித்தார்.. பிரான்சு தன் குடியேற்றத்தை உறுதிப்படுத்தவே, பிரான்சுக்கும் ஓ சி மின் தலைமையில் இருந்த வியட்மின் அமைப்புக்கும் (. "வியட்நாம் விடுதலைக் குழுவுக்கும்") இடையே போர் மூண்டது. வியட்நாம் விடுதலைக் குழு என்பது வியட்நாமின் தேசியக் குழுக்களின் கூட்டமைப்பாகும். பெரும்பாலும் இவை பொதுவுடைமை அணிகளால் ஆனவை. வியட்நாம்1946 ஜனவரி 1 இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 மார்ச்சு 2 இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் பாவோ தாய் நாட்டின் அதிஉயர் அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 11 இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1951 பிப்ரவரி 1 இல் பொதுவுடைமையாளர்கள் இலாவோ தோங் (தொழிலாளர்) கட்சியை உருவாக்கி அறிவித்தனர்.இதனால் வியட்மின் அமைப்பில் இருந்த பொதுவுடைமை சாராதார் எண்ணிக்கை படிப்படியாக மட்டுபட்டது.[9]

வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு[a]
Việt Nam Dân chủ Cộng hòa
1945–1976
கொடி of வடக்கு வியட்நாம்
கொடி
சின்னம் of வடக்கு வியட்நாம்
சின்னம்
குறிக்கோள்: "Độc lập – Tự do – Hạnh phúc"
("தற்சார்பு; விடுதலை; மகிழ்ச்சி")
நாட்டுப்பண்: "Tiến Quân Ca"
("படை அணிவகுப்பு")
தென்கிழக்காசியா வடக்கு வியட்நாமின் அமைவிடம்
தென்கிழக்காசியா வடக்கு வியட்நாமின் அமைவிடம்
பேசப்படும் மொழிகள்வியட்நாமியம் (அதிகாரபூர்வம்)
சமயம்
எதுவுமில்லை
அரசாங்கம்ஒருமுக மார்க்சிய-இலெனினிய ஒரு-கட்சி அரசு
கட்சி தலைவர்
முதல் செயலாளர்
 
• 1945–1956
துருவோங் சின்
• 1956–1960
ஓ சி மின்
• 1960–1976
இலே துவான்
அரசுத்தலைவர் 
• 1945–1969
ஓ சி மின்
• 1969–1976
தொன் துக் தாங்
பிரதமர் 
• 1945–1955
ஓ சி மின்
• 1955–1976
பாம் வான் தொங்
வரலாற்று சகாப்தம்பனிப்போர் · வியட்நாம் போர்
• குடியரசாக அறிவிப்பு
செப்தம்பர் 2 1945
• வியட் மின் அனோயினுல் மீள்நுழைவு
அக்டோபர் 10, 1954
• மக்கள் இராணுவம் ஓ சி மின் நகரினுள் நுழைவு
ஏப்ரல் 30, 1975
• வடக்கு, தெற்கு வியட்நாம் ஒன்றிணைவு
சூலை 2 1976
பரப்பு
1960157,880 km2 (60,960 sq mi)
1974157,880 km2 (60,960 sq mi)
மக்கள் தொகை
• 1960
15916955
• 1974
23767300
நாணயம்தொங்
முந்தையது
பின்னையது
பிரெஞ்சு இந்தோசீனா
வியட்நாம் பேரரசு
நியூவென் வம்சம்
வியட்நாம்
தற்போதைய பகுதிகள் வியட்நாம்

1946 முதல் 1954 வரையிலான காலகட்டத்தில் வியட்மின் வியட்நாமின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் கட்டுபாட்டில் கொணர்ந்தது. 1954 இல் பிரான்சை வெற்றிகண்டதும், ஜெனீவா உடன்படிக்கையினால் (1954) பிரான்சுக்கும் வியட்மின் படைக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து, வியட்நாம் விடுதலை பெற்றது. ஜெனீவா உடன்படிக்கை வியட்நாமை வடக்கு, தெற்குப் பகுதிகளாக இரண்டாகப் பிரித்தது. எனவே 1956 ஜூலையில் "வியட்நாமை ஒருங்கிணைக்க வியட்நாம் முழுவதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது."[10] வடக்குப் பகுதி வடக்கு வியட்நாம் எனவும் தெற்குப் பகுதி தென்வியட்நாம் அல்லது வியட்நாம்குடியரசு எனவும் வழங்கப்பட்டது.

ஜெனீவா உடன்பாட்டை நடைமுறைபடுத்தல், இந்தியா, கனடா, போலந்து ஆகிய நாடுகளின் பன்னாட்டுக் குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. மாறாக "ஐக்கிய நாட்டவையின் மேற்பார்வையில் நேர்மையாக நடத்தும் பொதுத் தேர்தல் வழியாகவே தொடர்ந்து வியட்நாம் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும்" என அறிவித்தது."[11] வியட்நாம் குடியரசின் முதன்மை அமைச்சர் 1955 ஜூலையில் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் பொதுத் தேர்தலில் தெற்கு வியட்நாம் அதாவது அன்றைய வியட்நாம் குடியரசு கலந்து கொள்ளாது என அறிவித்தார் . மேலும் அவர் தெற்கு வியட்நாம் ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதால் அதற்கு தெற்கு வியட்நாம் கட்டுபடாது எனவும் கூறினார்.[12]

தேர்தல்வழி ஒற்றுமை தோல்வியுறவே, வியட்நாமின் மக்களாட்சிக் குடியரசு நாட்டை ஒருங்கிணைக்க வியட்நாம் போரைத் தொடங்கி 1955முதல் 1975 வரை நட்த்தியது. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாம் வியட் காங் கிளர்ச்சிப் படை அணிகளும் சோவியத் ஒன்றியம், சீனா ஆதரவில் தெற்கு வியட்நாம் படையுடன் போரிட்டது. ஐக்கிய ஆமெரிக்காவும் பொதுவுடைமை எதிர்ப்பு படைகளும் தென்கொரிய இரண்டாம் குடியரசும் ஆத்திரேலியாவும் தாய்லாந்தும் சில சிறுகுழுக்களும் இணைந்து போரிட்டன. வடக்கு வியட்நாம் கம்போடியாவிலும் இலாவோசிலும் செயல்பட்ட பொதுவுடைமையாளரோடு அமெரிக்கச் சார்பு அரசுகளுக்கு எதிராகப் போரிட(1953–70) ஒத்துழைத்தது. வியட்நாம் மக்களாட்சிக் குடியர்சுப் படைகளும் வியட் காங்கும் வியட்நாம் குடியரசை 1976 இல் வீழ்த்தியதும் போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் வியட்நாம் சமவுடைமைக் குடியரசாக ஒருங்கிணைந்தன.

ஓ சி மின் தலைமைக் குடியரசு (1945–69)

குடியரசு அறிவிப்பு

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வடக்கு_வியட்நாம்&oldid=3712765" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை