ஒருமுக அரசு

ஒருமுக அரசு (unitary state) ஒரே அதிகாரமையத்தைக் கொண்ட அரசு அல்லது நாடு ஆகும்; இதில் நடுவண் அரசிடம் அனைத்து அதிகாரங்களும் குவியப்படுத்தப்பட்டிருக்கும். ஏதேனும் நிர்வாகப் பிரிவுகள் இருப்பினும் அவை நடுவண் அரசு பகிரும் அதிகாரத்தை மட்டுமே செயலாக்க இயலும். உலகின் பெரும்பாலான நாடுகள் ஒருமுக அரசைக் கொண்டுள்ளன. 193 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு வகிக்கும் 193 நாடுகளில் 165 நாடுகளில் ஒருமுக அரசுமுறையே நிலவுகின்றது.

  ஒருமுக அரசுகள்
வட்டார ஒன்றிணைப்பு அல்லது பிரிவினைக்கான வழிமுறை

ஒருமுக அரசுகளுக்க எதிராக கூட்டரசு நாடுகள் (கூட்டாட்சிகள்) அமைந்துள்ளன.

ஒருமுக அரசுகளில் நடுவண் அரசால் உள்தேசிய அலகுகள் உருவாக்கப்படலாம் அல்லது கலைக்கப்படலாம்; அவற்றின் அதிகாரங்கள் விரிவாக்கப்படலாம் அல்லது குறுக்கப்படலாம்.அரசியல் அதிகாரம் ஒப்படைவு மூலமாக உள்ளாட்சிகளுக்கு எழுத்துருச் சட்டம் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் நடுவண் அரசே உச்ச அரசாக விளங்கும்; ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை இரத்தாக்குவதோ கட்டுப்படுத்துவதோ நடுவண் அரசால் இயலும்.

பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து இராச்சியம் ஒருமுக அரசிற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இசுக்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து பகுதிகளுக்கு தன்னாட்சி உரிம அதிகாரங்களை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பகிர்கின்றது; இருப்பினும் அந்த நாடாளுமன்றம் தன்னிட்சையாக சட்டமியற்றி இந்த அதிகாரப் பகிர்வுகளை மாற்றவோ இரத்து செய்யவோ இயலும். (இங்கிலாந்திற்கு தனியான ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் ஏதுமில்லை).[1] பல ஒருமுக அரசுகளில் எந்த பகுதிக்குமே தன்னாட்சி வழங்கப்படுவதில்லை. இத்தகைய நாடுகளில் உட்தேசிய வட்டாரங்கள் தங்களுக்கான சட்டங்களை இயற்ற முடியாது. இவற்றிற்கு காட்டாக அயர்லாந்து குடியரசு, நோர்வே உள்ளன.[2]

மாறாக கூட்டாட்சி நாடுகளில், உள்தேசிய அரசுகள் தங்கள் அதிகாரங்களை நடுவண் அரசுடன் சரிசமனான நிலையில் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி பகிர்ந்து கொண்டுள்ளன; இந்த அதிகாரப் பகிர்வில் மாற்றங்கள் தேவைப்படின் இரு அரசுகளின் ஒப்புதலும் தேவையாகின்றது. இதன்மூலம் உள்தேசிய அலகுகளின் இருத்தலும் அதிகாரங்களும் தன்னிட்சையாக நடுவண் அரசால் மாற்றவியலாது.

ஒருமுக அரசுகளின் பட்டியல்

ஒருமுக குடியரசுகள்

ஒருமுக மன்னராட்சிகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்

மக்கள்தொகை அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்

பரப்பளவு அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒருமுக_அரசு&oldid=3928397" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை