வலி

வலி (Pain) என்பது உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படும் காயம், தசை மற்றும் எலும்பில் ஏற்படும் பிரச்சனை மேலும் காயம் பட்ட இடத்தில் ஏதேனும் ஒன்று படும்பொழுது ஏற்படும் பயங்கரமான வேதனையளிக்கும் ஒரு உணர்வாகும். எடுத்துக்காட்டாக கால் விரலில் அடிபடுவது, விரலில் நெருப்பில் சுட்டுக்கொள்வது, வெட்டுக் காயத்தில் அயோடின் வைத்துக்கொள்வது மற்றும் "ஃபன்னி போன் எனப்படும் முழங்கை அல்னார் நரம்புப் பகுதியில்" இடித்துக்கொள்வது போன்ற தருணங்களில் பொதுவாக ஏற்படும் இனிமையற்ற உணர்வாகும்.[1] வலி பற்றிய ஆய்விற்கான சர்வதேச சங்கம் "உண்மையான அல்லது சாத்தியமுள்ள திசுச் சேதத்துடன் தொடர்புடைய அல்லது அது போன்ற சேதத்தினால் விவரிக்கக்கூடிய ஓர் இனிமையற்ற உணர்வு அல்லது உணர்ச்சி பூர்வ அனுபவமே" வலி என வரையறுக்கிறது.[2]

நாம் அத்தகைய சேதமேற்படும் அல்லது சேதத்திற்கு வாய்ப்புள்ள சூழ்நிலையிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ள அல்லது விடுவித்துக்கொள்ளத் தூண்டுவதோடு சேதமடைந்த உடலின் பகுதி சீராகும் காலத்தில் அது மேலும் சேதமடையாமல் தடுக்கவும் எதிர்காலத்தில் அது போன்ற சேதங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.[3] இவ்வுணர்வு புற நரம்பு மண்டலத்திலுள்ள நாசிசெப்டார்களால் அல்லது புறநரம்பு அல்லது மைய நரம்பு மண்டலத்தின் சேதம் அல்லது இயக்கக் குறைபாட்டினால் தூண்டப்படுகிறது.[4] பெரும்பாலான வலிகள் வலிமிகுந்த தூண்டுதலிலிருந்து நாம் விடுபட்டு உடல் பழைய நிலையை அடைந்ததும் தீர்ந்துவிடுகின்றன, ஆனால் சில நேரங்களில் அத்தகைய தூண்டுதல்களிலிருது நாம் விடுபட்டாலும் உடல் அதன் சேதத்தைச் சரிசெய்து கொண்டது போல் தோன்றினாலும் வலி தொடர்ந்து இருக்கிறது; மேலும் சில நேரங்களில் கண்டறியக்கூடிய தூண்டுதல்கள், சேதம் அல்லது நோய்க்குறிகள் எதுவும் இல்லமலே கூட வலி இருக்கக்கூடும்.[5] சுற்றியுள்ளவர்களின் ஆதரவு, கலாச்சார அம்சங்கள், மனோவசிய ஆலோசனைகள், விளையாட்டு அல்லது போரிலான கிளர்ச்சி, கவனத் திருப்பல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றால் வலியின் செறிவும் எரிச்சலும் தணிக்கப்படலாம்.[6][7]

உடலில் எந்த ஒரு பிரச்சனையிருந்தாலும் அதை வலி ஏற்படும்போதோ அல்லது தோலில் வெளிப்படையாக ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ தான் அப்பிரச்சனையானது அந்நபரால் உணரப்படுகிறது. பொதுவாக மக்கள் மருத்துவர்களை அணுகுவதற்கு வலியே காரணமாக உள்ளது.[8] பல மருத்துவ நிலைகளில் இதுவே முக்கிய அறிகுறியாக உள்ளது, மேலும் இது ஒரு மனிதரின் வாழ்க்கைத் தரத்திலும் பொதுவான செயல்பாட்டிலும் குறுக்கிடக்கூடியதாகவும் உள்ளது.[9] உணர்வகற்றியல், உடலியக்க மீட்பியல் (ஃபிசியாட்ரி), நரம்பியல், வலிநிவாரண மருத்துவம் மற்றும் உளவியல் மருத்துவம் போன்ற மருத்துவ சிறப்புத்துறைகளில் வலி மருத்துவமே துணைச் சிறப்புப் பிரிவாக உள்ளது.[10] வலி பற்றிய ஆய்வு மற்றும் கல்வியானது சமீப காலங்களில் பல்வேறு துறைகளைத் தன்னகத்தே ஈர்த்துள்ளது. மருந்தியல், நரம்பு உயிரியல், செவிலியம், பல் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் உளவியல் போன்றவை இவற்றிலடங்கும்.

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
{{{Name}}}
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10R52
ஐ.சி.டி.-9338
நோய்த் தரவுத்தளம்9503
MedlinePlus002164
MeSHD010146

Etymology : "Pain (n.) 1297, "punishment," especially for a crime; also (c.1300) "condition one feels when hurt, opposite of pleasure," from O.Fr. peine, from L. poena "punishment, penalty" (in L.L. also "torment, hardship, suffering"), from Gk. poine "punishment," from PIE *kwei- "to pay, atone, compensate" (...)."

Online Etymology Dictionary

வகைப்பாடு

கால அளவு

பொதுவாக வலி என்பது உடல் அல்லது உள பாதிப்பு நீங்கும் வரையிலான அல்லது அதற்குக் காரணமாக இருக்கும் சேதம் அல்லது நோய்க்குறி நீங்கும் வரையிலான குறுகிய காலம் மட்டுமே நீடிக்கக்கூடியது; ஆனால் முடக்கு வாதம், புறநரம்பு மண்டலக் கோளாறு, புற்றுநோய் மற்றும் காரணம் தெரியா வலி போன்ற சில வலிமிகு நிலைகள் சில ஆண்டுகள் கூட நீடிக்கலாம். நீண்ட காலம் நீடித்திருக்கும் வலி நாள்பட்ட வலி என்றும் விரைவில் குணமாகும் வலி கூர்மையான வலி எனவும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக கூர்மையான வலிக்கும் நாள்பட்ட வலிக்கும் உள்ள வேறுபாடானது வலி ஏற்பட்டதிலிருந்து உள்ள சீரற்ற கால இடைவெளியைப் பொறுத்துள்ளது; வலி ஏற்பட்ட 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் ஆகிய இரண்டு அம்சங்களே பொதுவான குறிப்பான்களாக உள்ளன.[11] இருப்பினும் சில கோட்பாட்டாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூர்மையான வலியிலிருந்து நாள்பட்ட வலியாக மாறும் நிலைமாற்றத்திற்கான காலமாக 12 மாத கால அளவைக் கருதுகின்றனர்.[12] பிறர் 30 நாட்களுக்கும் குறைவாக உள்ள வலியை கூர்மையான வலி எனவும் ஆறு மாதங்களுக்கும் மேல் இருக்கும் வலியை நாள்பட்ட வலி எனவும் ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீடித்திருக்கும் வலியை துணைக்கூர்மை வலி எனவும் கருதுகின்றனர்.[13] நாள்பட்ட வலி க்கான மாற்று வரையறையாகும் சீரற்ற நிலையான கால அளவுகள் எதையும் பற்றிக் குறிப்பிடாத அந்த வரையறை "எதிர்பார்க்கப்படும் குணமாதல் காலத்தையும் மீறி நீடித்திருக்கும் வலி" என நாள்பட்ட வலியை வரையறுக்கிறது.[11] நாள்பட்ட வலியை "புற்றுநோய் தொடர்புடையது," "தீங்கற்றது" என இரு வகையாகப் பிரிக்கலாம்.[13]

பகுதியும் அமைப்பும்

தலைவலி, அடிமுதுகு வலி மற்றும் இடுப்பு வலி போன்று உடலின் எந்தப் பகுதியில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து வலியை வகைப்படுத்தலாம். அல்லது அதில் சம்பந்தப்பட்டுள்ள உடல் பகுதியைப் பொறுத்தும் வகைப்படுத்தலாம், அதாவது மயோஃபேசியா (எலும்புக்கூட்டு தசைகள் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள இழைமிகு கூட்டிலிருந்து உருவாகும் வலி), வாத வலி (மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உருவாகும் வலி), எரிச்சல் வலி (கைகள் அல்லது சில நேரங்களில் கால்களின் சருமத்தில் "எரிச்சலுடன்" கூடிய வலி. இது புற நரம்பு சேதத்தினால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது), நரம்பியல் வலி (நரம்பு மண்டலத்தின் ஏதேனும் பகுதியில் ஏற்படும் சேதம் அல்லது இயக்கக்கோளாறினால் ஏற்படுவது) அல்லது இரத்த நாள வலி (இரத்தக் குழாய்களிலிருந்து உருவாகும் வலி).[11]

நோய்க்காரணம் (காரணம்)

காரணத்தைப் பொறுத்து வகைப்படுத்தும் ஒரு குழப்பமான வகைப்பாட்டு எடுத்துக்காட்டு "சொமட்டோஜெனிக்" வலியை (உடலின் சுகவீனத்தினால் உருவாகும் வலி) "சைக்கோஜெனிக்" வலியிலிருந்து (மனதின் சுகவீனத்திலிருந்து உருவாகும் வலி. உடல் ரீதியான அனைத்து சோதனைகளும், படமெடுத்தல் சோதனைகளும் ஆய்வகப் பரிசோதனைகளும் செய்தும் வலிக்கான காரணத்தைக் கண்டறிய முடியாவிட்டால் இறுதியில் வலிக்கான காரணம் உளவியல் கோளாறு அல்லது உளவியல் ரீதியான நோயின் விளைவே எனக் கருதப்படுகிறது.[11]) வேறுபடுத்துகிறது. போர்ட்டினாய் சொமட்டோஜெனிக் வலியை "நாசிசெப்டிவ்" (நாசிசெப்டார்களின் செயல்படுத்தலினால் உருவாவது) மற்றும் "நியூரோப்பத்திக்" (நரம்பு மண்டல சேதம் அல்லது செயல் குறைபாட்டால் உருவாவது) என இரண்டாகப் பிரித்தார்.[14]

நாசிசெப்டிவ்

நாசிசெப்டிவ் வலிகளை மேலும் உடற்தீங்கு தூண்டுதலைப் பொறுத்து வகைப்படுத்த முடியும். அவற்றில் "வெப்ப வலி" (வெப்பம் அல்லது குளிர்ச்சி), "எந்திரவியல்" (நசுக்கம், கிழிதல் போன்றவை) மற்றும் "வேதியியல்" (வெட்டுக்காயத்தில் அயோடின் வைத்தல், கண்களில் மிளகாய்ப் பொடி படுதல்) ஆகியவை மிகவும் பொதுவான வகைகளாகும்.

நாசிசெப்டிவ் வலிகளை "மேலோட்டமானது" மற்றும் "ஆழமானது" எனவும் ஆழமான வலிகளை மேலும் "ஆழமான சோமாட்டிக்" மற்றும் "உள்ளுறுப்பு வலி" எனவும் பிரிக்கலாம். மேலோட்டமான வலிகள் சருமம் அல்லது மேலோட்டமான திசுக்களிலுள்ள நாசிசெப்டார்களின் செயல்படுத்தலினால் உருவாகின்றன. அவை கூரிய வலிகளும் தெளிவாகக் கண்டறியக்கூடியவையும் தெளிவாக இடவமைப்பு கொண்டவையும் ஆகும். சிறு காயங்களும் சிறு (முதல் நிலை) தீக்காயங்களும் மேலோட்டமான வலியை ஏற்படுத்தும் காயங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். ஆழமான சோமாட்டிக் வலிகள் தசைநார்கள், தசை நாண்கள், எலும்புகள், இரத்தக் குழாய்கள் திசுப்படலங்கள் மற்றும் தசைகள் ஆகியவற்றிலுள்ள நாசிசெப்ட்டார்களின் தூண்டுதலால் ஏற்படுகின்றன. மேலும் அவை மந்தமான, வலியேற்படுத்தும், சரியாக இடமறிய முடியாத வலிகளாக இருக்கும்; சுளுக்குகள், எலும்பு உடைதல் மையோஃபேசியல் வலி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். உள்ளுறுப்புகளில் (அங்கங்களில்) ஏற்படும் உள்ளுறுப்பு வலிகள் பொதுவாக சோமாட்டிக் வலிகளை விட அதிகம் வலிதரக்கூடியவையும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடியனவும் ஆகும். உள்ளுறுப்பு வலிகள் எளிதில் இடமறியக்கூடியனவாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் அவற்றின் இடமறிவது மிகவும் கடினமாக உள்ளது. பல உள்ளுறுப்புப் பகுதிகள் பாதிக்கப்படும் போது "குறிக்கும்" வலிகளையே உண்டாக்குகின்றன, இந்த நிகழ்வில் பாதிப்படைந்த இடத்திற்கு தொடர்பே இல்லாத இடத்திலேயே வலி உணரப்படுகிறது.[15]

நியூரோப்பத்திக்

நியூரோப்பத்திக் வலிகளை "மேற்பரப்பு சார்ந்த" வலிகள் (புற நரம்பு மண்டலத்தில் உருவாகும் வலிகள்) மற்றும் "மைய" வலிகள் (மூளை அல்லது தண்டுவடத்தில் உருவாகும் வலிகள்) எனப் பிரிக்கலாம்.[16] மேற்பரப்பு சார்ந்த நியூரோப்பத்திக் வலிகளை “எரிச்சல்,” “சிலிர்ப்பு,” “மின்னதிர்ச்சி போன்ற வலி,” “குத்தல்” அல்லது “மரத்துப்போதல் என்றெல்லாம் விவரிக்கலாம்.” [17] முழங்கை மூட்டிலுள்ள நரம்புப் பகுதியில் அடிபடும் போது நியூரோப்பத்திக் வலி ஏற்படுகிறது.

IASP பல்லச்சு வகைப்பாட்டு முறை

வலி பற்றிய ஆய்விற்கான சர்வதேச சங்கம் (IASP) மேலே கூறியவற்றில் பெரும்பாலான அம்சங்களை செயற்கை முறையில் உருவாக்கி வலி என்பதை ஐந்து வகையாக அல்லது அச்சுகளாகப் பிரித்து அதன்படி வலியை விவரிக்கப் பரிந்துரைக்கிறது: அதன் உடற்கூறியல் இருப்பிடம் (கழுத்து, அடிமுதுகு போன்றவை), சம்பந்தப்பட்ட உடல் பகுதி (வயிற்றுப்பகுதி, நரம்புகள் போன்றவை), நேரம் சார்ந்த பண்புகள் (விட்டு விட்டு வருபவை, நிலையாக இருப்பவை போன்றவை), செறிவு மற்றும் தொடங்கியதிலிருந்து அது உள்ள காலம் மற்றும் காரணம்.[18] இந்த IASP முறையை ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கு வழிகாட்டுமளவிற்கு இல்லாத ஒன்று என உல்ஃப் மற்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.[19] அறிகுறிகள் அல்லது அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களைக் கொண்டல்லாமல் வலியை உருவாக்கும் நரம்பியல் வேதியியல் இயங்குமுறையின் வகையைப் பொறுத்து வகைப்படுத்தும் கூடுதல் வகைப்பாட்டினை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர்.[11]

MPI

நாள்பட்ட வலி உள்ள ஒரு நோயாளியின் உளவியல் சமூக நிலை பற்றி மதிப்பீடு செய்வதற்காக பலப்பரிமாண வலி விவரத்தைப் (MPI) பயன்படுத்தி, ஒரு கேள்விப்பட்டியல் உருவாக்கப்பட்டது. இவ்வழியில் டர்க் (Turk) மற்றும் ருடி (Rudy)[20] ஆகியோர் நாள்பட்ட வலியுடைய நோயாளிகளின் மூன்று வகைகளைக் கண்டறிந்தனர்: "(a) செயல்பாட்டுக்கோளாறு உடைய நோயாளிகள் - இவர்களுக்கு வலியின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகத் தோன்றும், இவர்களின் வாழ்நாளில் பெரும்பகுதி இந்த வலிகள் இவர்களுக்கு இருந்ததாகக் கூறுவார்கள், இவ்வலிகளால் இவர்களுக்கு மிக அதிக அளவிலான மன அழுத்தம் உண்டாவதாகவும் கூறுவார்கள், மேலும் அவர்களின் செயல்படு தன்மை மிகவும் குறைவாகக் காணப்படும்; (b) நபர்களுக்கிடையேயான கவலைகள் கொண்ட நோயாளிகள் - தங்கள் வலி பற்றிய கஷ்டங்களுக்கு தங்களுக்கு முக்கியமான பிற நபர்கள் ஆதரவாக இல்லாததாகக் கருதி வருந்துபவர்கள்; மற்றும் (c) ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர்கள் - இவர்களுக்கு அதிக அளவில் சமூக ஆதரவு கிடைக்கிறது, மற்ற வகையினருடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு குறைந்த அளவிலான வலியினால் ஏற்படும் குறுக்கீடுகளும் அதிக செயல்படு தன்மையும் காணப்படும்."[11] டர்க் மற்றும் ஒக்கிஃபுஜி (Okifuji) ஆகியோர் நோயாளியின் சிக்கல் பற்றிய அதிகபட்ச பயன்மிக்க ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு நோயாளியைப் பற்றிய MPI விவரிப்பையும் அவர்களின் வலி பற்றிய IASP பல்லச்சு விவரத்தையும் ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர்.[11]

உடல்நலக் கவனிப்பில்

வலி - அறுதியிடலுக்கான ஓர் உதவியாக

பல மருத்துவ நிலைகளுக்கு வலி என்பது ஓர் அறிகுறியாக உள்ளது. வலி தொடங்கிய நேரம், இடம், செறிவு, அது ஏற்படும் விதம் (தொடர்ச்சியாக, விட்டு விட்டு ஏற்படுவது போன்றவை), மோசமாக்கும் (அதிகரிக்கும்) மற்றும் குறைக்கும் காரணிகள் மற்றும் பண்பு (எரிச்சல், கூரிய தன்மை போன்றவை) ஆகியவை ஒரு மருத்துவர் ஒருவரின் மறைந்துள்ள நோய் அல்லது நோய்க்குறியை அறுதியிடுவதற்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, மிக அதிக தீவிரமான நெஞ்சு வலி இருப்பது இதயத் தசைத்திசு இறப்பைக் குறிக்கலாம், அதே சமயம் இதயத்தைக் கிழிப்பது போல் உணரப்படும் நெஞ்சுவலி இருப்பது பெருந்தமனிப் பிளவைக் குறிக்கலாம்.[21][22]

இந்தக் காரணிகளின் மிகவும் நம்பத்தகுந்த அளவீடு நோயாளி கூறுவதன் உண்மையே ஆகும்; உடல் நல வல்லுநர்கள் இந்த வலிகளை குறைத்து மதிப்பிடும் போக்கே உள்ளது.[23] செவிலியத்தில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் வலிக்கான ஒரு வரையறை ஒவ்வொருவருக்கும் மாறும் அதன் இயல்பையும் நோயாளிகள் கூறுவதை நம்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் முக்கியமாகக் கருதுகிறது. இவ்வரையறையை மார்கோ மெக்காஃபி (Margo McCaffery) 1968 ஆண்டு அறிமுகப்படுத்தினார், அது: "வலி என்பது அதை அனுபவிப்பவர் எப்படியெல்லாம் அது உள்ளதாகக் கூறுகிறாரோ அதுவும், எப்போதெல்லாம் அது இருப்பதாக அவர் கூறுகிறாரோ அப்போதெல்லாம் இருப்பதும் ஆகும்".[24][25] வலியின் செறிவை மதிப்பிட, 0 முதல் 10 வரையிலான ஓர் அளவீட்டுக்குள் அமையும் ஒரு புள்ளியில் தங்கள் வலியைப் பொருத்துமாறு நோயாளியிடம் கேட்கப்படலாம். இதில் 0 என்பது வலியே இல்லாத நிலையும் 10 என்பது அவர்களுக்கு இதுவரை உண்டானதிலேயே மிகவும் மோசமாக இருந்த வலியின் நிலையுமாகும். எந்தெந்த சொற்கள் நோயாளிகளின் வலியை விவரிக்க மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதைக் குறிப்பிடும் மெக்கில் வலி கேள்வித்தாளை அவர்கள் நிரப்பிய பின்னர் வலியின் இயல்பு தீர்மானிக்கப்படும்.[9]

பேசமுடியாத நோயாளிகளின் வலிகளின் மதிப்பீடு

நோயாளியால் பேச முடியாது என்றபட்சத்திலும் அவரால் தனது வலியைப் பற்றி விவரித்துக்கூற முடியாது என்றபட்சத்திலும் உய்த்தறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகிறது, மேலும் இந்நிலையில் குறிப்பிட்ட சில நடத்தைகளை வலிகளைக் குறிப்பிடுபவையாகக் கருதி கண்காணிக்கலாம். முகத்தைச் சுளித்தல் காத்துக்கொள்வது போன்ற நடத்தைகள் வலி இருப்பதை உணர்த்தலாம், அதே போல் குரல் தொனியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வழக்கமான நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் இந்தக் காரணிகளில் அடங்கும். வலியை உணரும் நோயாளிகள் விலகிய சமூக நடத்தையைக் கொண்டிருக்கலாம், மேலும் அவர்களுக்கு பசி குறைவும் ஊட்டச்சத்து உட்கொள்ளல் குறைவும் இருக்கலாம். அசையும் போது அல்லது உடலை அசைத்து நிலையை மாற்றும் போது முனகுதல் போன்ற அடிப்படையிலிருந்து விலகும் நிலை மாற்றம் மற்றும் வரம்புக்குட்பட்ட இயக்க வரம்பு ஆகியவையும் வலியின் முக்கிய குறிப்பான்களாகும். அறிவாற்றல் இழப்பு தொடர்பான நோய்க்குறிகளைக் கொண்டுள்ளவர்கள் போன்று, குரல் இருந்தும் தங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் திறனற்ற நோயாளிகளுக்கு குழப்ப அதிகரிப்பு அல்லது கிளர்ச்சி உள்ளிட்ட முரட்டுத்தனமான நடத்தைகளின் வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு தளர்வின்மை இருப்பதை உணரலாம், அவர்களுக்கு கூடுதல் மதிப்பீடும் அவசியமாகும்.

கைக்குழந்தைகள் வலியை உணர்கின்றன. முழுப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் வலிமிகுந்த தூண்டுதல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. அவர்களால் தங்கள் வலியை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தத் தேவையான வெளிப்படுத்தும் திறன் இல்லாததால் தங்கள் அழுகையின் மூலம் அவர்களுக்குள்ள அவஸ்தையை வெளிப்படுத்துகின்றனர். பேச்சற்ற வலி மதிப்பீடு நடத்தப்பட வேண்டும். அதில் அவர்களின் பெற்றோர் இடம்பெற வேண்டும். அவர்கள் உடல்நல கவனிப்பு வல்லுநரின் கண்களுக்குப் புலப்படாத வகையிலான சிறு மாற்றங்களையும் கவனித்து அறிவர்.[26]

வலியைப் பற்றிக் கூறுவதிலுள்ள பிற தடைகள்

வயதான பெரியவர் ஒருவர் இளைஞர் ஒருவரைப் போலவே ஒரு வலிக்கு எதிர்வினையளிக்கமாட்டார். வலியை உணர்வதற்கான அவர்களது திறன் உடல்நலக் குறைவு அல்லது பல பரிந்துரைப்பு மருந்துகளைப் பயன்படுத்தியதால் பலவீனமடைந்திருக்கக்கூடும். மனத் தாழ்வினாலும் வயது முதிர்ந்தவர்கள் தங்கள் வலியைப் பற்றித் தெரியப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். இவர்கள் தாம் விரும்பும் செயல்களைச் செய்வதினால் அவர்களுக்கு துன்பம் வருவதால் அவற்றைக் கூட செய்யாமல் போக வாய்ப்புள்ளது. சுய கவனிப்புச் செயல்பாடுகள் குறைவதும் (உடை உடுப்பது, நேர்த்தியான தோற்றத்தை அமைத்துக்கொள்வது, நடப்பது போன்றவை) வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு வலி உள்ளது என்பதைக் குறிக்கலாம். தங்கள் வலியைப் பற்றித் தெரிவித்தால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிவரும் அல்லது அவர்களை அடிமையாக்கும்படியான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிவரும் என்பது போன்ற அச்சங்களாலும் அவர்கள் தங்கள் வலிகளைப் பற்றித் தெரிவிக்காமல் இருக்கக்கூடும். மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பலவீனமாக உள்ளதாகத் தோன்ற வேண்டும் என அவர்கள் விரும்பலாம், அல்லது வலையைப் பற்றி கூறுவது என்பது வெட்ககரமான செயல் எனக் கருதலாம் அல்லது தங்கள் கடந்தகால பாவங்களுக்கான தண்டனையே இந்த வலிகள் என அவர்கள் கருதலாம்.[27]

கலாச்சாரத் தடைகளினாலும் ஒருவர் தங்கள் வலியைப் பற்றிக் கூறாமல் இருக்கலாம். ஒருவர் வலியைத் தீர்த்துக்கொள்வதற்கான உதவியை நாடுவதை அவரது மத நம்பிக்கைகள் தடுக்கலாம். சில குறிப்பிட்ட வலி சிகிச்சையை அவர்கள் தங்கள் மதத்திற்கு எதிரானதாகக் கருதலாம். தங்கள் மரணம் நெருங்கிவிட்டதற்கான அடையாளமே இந்த வலி எனக் கருதியும் அவர்கள் வலியைப் பற்றி எதுவும் கூறாமல் இருக்கலாம். பலர் மருந்துக்கு அடிமையாதல் என்ற இழுக்கான நிலைக்கு பயந்து அடிமையாக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுப்பதற்காக வலிக்கான சிகிச்சையைத் தவிர்க்கின்றனர். வலி என்பதை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நம்பும் ஆசியர்கள் பலர் அவர்களுக்கு வலி உள்ளது, அவர்களுக்கு உதவி வேண்டும் என்று வெளியில் தெரிவதை மரியாதைக் குறைவாகக் கருதுகின்றனர். பிற கலாச்சாரங்களிலுள்ள மக்கள் வலியிலிருந்து உடனடியாக விடுபட அவற்றை உடனடியாக தெரியப்படுத்துகின்றனர்.[26] வலியைப் பற்றி தெரிவிப்பதில் பாலினமும் ஒரு காரணியாக பாதிக்கிறது. வழக்கமாக சமூக மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகளாலேயே பாலின வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அதன்படி பெண்களே உணர்ச்சிமிக்கவர்களாகவும் தங்கள் உணர்வுகளையும் வலிகளையும் வெளிப்படுத்துபவர்களாகவும் ஆண்கள் தங்கள் வலிகளை வெளியில் கூறாமல் இருப்பவர்களாகவும் கருதப்படுகின்றனர்.[26]

மருத்துவ சிகிச்சையும் நிர்வாகமும்

மருத்துவமானது பாதிப்பை குணமாக்குவதற்காக காயத்திற்கும் நோய்க்குறிக்கும் சிகிச்சையளிக்கிறது. சிகிச்சை மற்றும் குணப்படுத்தலின் போது, பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக வலி போன்ற மனத் தாழ்வளிக்கும் அறிகுறிகளையும் அணுகுகிறது. வலி மிகுந்த ஒரு காயம் அல்லது நோய்க்குறி சிகிச்சைக்குப் பலன் தராமல் தொடர்ந்து இருக்கும்போதும், காயம் அல்லது நோய்க்குறி சரியான பின்னும் வலி தொடர்ந்து இருக்கும்போதும், மருத்துவ அறிவியலினால் வலியின் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாதபோதும் நோயாளியின் பாதிப்பிலிருந்து அவரை விடுவிப்பதே மருத்துவரின் கடமையாகும். குறுகிய காலமே இருக்கும் வலிகளை அனஸ்த்தெட்டிக்ஸ், அனால்ஜெசிக்ஸ் மற்றும் (அரிதாக) ஆன்க்ஸியாலிட்டிக்ஸ் போன்ற மருந்துகளை வழங்கும் ஒரே மருத்துவரே நிர்வகிக்க முடியும். இருப்பினும் நீண்ட காலம் நீடித்திருக்கும் வலிகளை செயல்திறத்துடன் நிர்வகிப்பதற்கு பெரும்பாலும் வலி நிர்வாக குழு ஒன்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. வழக்கமான ஒரு வலி நிர்வாகக் குழுவில் ஒரு மருத்துவர், ஒரு மருத்துவமனை சார்ந்த உளவியலாளர், ஒரு உடற்பயிற்சி மருத்துவர், ஒரு தொழில்வழி சிகிச்சை மருத்துவர் மற்றும் ஒரு செவிலிய வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவர்.[28]

பொதுவான நடைமுறையில் அறுவை சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் போன்ற பகுதிகளில் வலிக்கான போதிய அளவிலல்லாத சிகிச்சை பரவலாகக் காணப்படுகிறது. புற்று நோய் வலி உள்ளிட்ட நாள்பட்ட வலிகளின் அனைத்து வகைகளின் நிர்வாகத்திலும் அதுமட்டுமின்றி மரண கால கவனிப்பிலும் கூட இந்நிலை காணப்படுகிறது.[29][30][31][32][33][34][35][36] பிறந்து சில வாரமே ஆன கைக்குழந்தை முதல் பலவீனமான வயோதிகர்கள் வரையிலான எல்லா வயதினருக்கும் இந்த புறக்கணிப்பின் பாதிப்பு உள்ளது.[37][38][39] ஆப்பிரிக்க ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் வெள்ளையினத்தவரைக் காட்டிலும் அதிகமாக தேவையின்றி மருத்துவர்களின் கையில் சிக்கி தவிப்பவர்களாக உள்ளனர்;[40][41] ஆண்களின் வலிகளைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்படும் வலிகளுக்குக் குறைவான கவனமே செலுத்தப்படுகிறது.[42]

தேவையின்றி அதிக மருந்துகள் பரிந்துரைத்தல் எனும் குற்றச்சாட்டு வந்துவிடுமோ என்ற மருத்துவரின் பயம் (டாக்டர் வில்லியம் இ. ஹர்விட்ஸ் (William E. Hurwitz) அவர்களின் சம்பவத்தைக் காண்க) (எனினும் இவ்வகையான குற்றச்சாட்டுகள் அரிதானவையே), ஓப்பியாய்டு மருந்துகள் வழங்குவதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி மருத்துவருக்கு போதிய புரிதல் இல்லாமல் இருப்பது[43] அல்லது வாழ்க்கைத் தரத்தைக் காட்டிலும் நோய்க்குறி உடற்சிகிச்சையியலில் அதிக கவனம் செலுத்தும் நோயின் உயிர்மருத்துவ மாதிரியையே பின்பற்றும் மருத்துவரின் போக்கு, வலி நிர்வாகத்தின் போதிய திறனின்மை[44] போன்றவையே போதிய வலி நிவாரணம் வழங்காமைக்குக் காரணமாக இருக்கலாம். கலிஃபோர்னியாவில் போதிய வலி நிவாரணம் வழங்காமல் தோல்வியுற்ற மருத்துவர்களின் மீது வெற்றிகரமாக மனித முறைகேடு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த சமீபத்திய இரு நிகழ்வுகளின் விளைவுகளால் வட அமெரிக்க மருத்துவ மற்றும் உடல் நல சமூகங்கள் தங்கள் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றத்தைப் பெற்றுவருகின்றன. கலிஃபோர்னியா மருத்துவக் குழுமம் இரண்டாவது சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவருக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தது; மருத்துவ உதவி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான ஃபெடரல் மையம், வலி நிவாரணத்திற்குக் கட்டணம் பெற்றுக்கொண்டு போதிய நிவாரணம் அளிக்கத் தவறும் மோசடி மருத்துவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது; மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வலி நிர்வாகம் பற்றிய மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் தரநிலைகள் தெளிவான குழப்பமற்ற கூற்றுகளாக வரையறுக்கப்பட்டு வருகின்றன, இதனால் உடல் நல கவனிப்பு மருத்துவர்கள் குறைவான அல்லது எந்த வலி நிவாரணமும் சமூக தரநிலைகளுக்கு இணங்கியதாக இல்லை எனக் கூறி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது[43]

நிரப்பு மற்றும் மாற்று மருத்துவம்

மக்கள் நிரப்பு மற்றும் மாற்று மருத்துவத்தை நாடுவதற்கு வலியே மிகவும் பொதுவான காரணமாகும்.[45][46] பாரம்பரிய சீன மருத்துவம் வலி என்பதைத் 'தடுக்கப்பட்ட' qi எனக் கருதுகிறது. இது மின்னோட்டத்திற்கான தடையைப் போன்றதே ஆகும். இம்மருத்துவம் அக்குபங்ச்சர் போன்ற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி காயம் சார்ந்த வலிகளைக் காட்டிலும் காயம் அல்லாத வலிகளுக்கு மிகவும் செயல்திறன் மிக்கது என நிரூபித்துள்ளது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளப்படவில்லை எனினும் அக்குபங்ச்சர் சிகிச்சை அதிக அளவிலான அகச்செனிப்பு ஓப்பியாய்டுகள் வெளிவிடத் தூண்டலாக அமைகிறது.[47] வைட்டமின் டிக்கும் வலிக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உள்ளது, ஆனால் அத்தகைய தொடர்புக்கான எலும்பு நலிவு நிகழ்வைத் தவிர்த்து கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் ஆதாரங்கள் எதுவும் இதை நம்பவைப்பதற்கு போதிய வலுவானவையாக இல்லை.[48] 2007 ஆம் ஆண்டில் 13 ஆய்வுகளை மறுஆய்வு செய்ததில், வலியைக் குறைப்பதில் மனோவசிய முறைகளுக்கு விளைவுத்திறன் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. எனினும் இந்த ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு, குழு வேறுபாடுகளைக் கண்டறிவதற்கான திறன் தொடர்பான விவகாரங்கள் எழுந்தது. மேலும் அவற்றில் பெரும்பாலானவை மருந்துப்போலி மற்றும்/அல்லது எதிர்பார்ப்புக்கான நம்பத்தகுந்த கட்டுப்பாடுகளில் தோல்வியடைந்தன. அந்த மறுஆய்வைச் செய்தவர்கள் "இந்த ஆய்வுகளின் முடிவுகள் நாள்பட்ட வலிக்கான சிகிச்சையில் மனோவசியத்தின் பொதுவான பயனுக்கான ஆதரவை வழங்கினாலும், வெவ்வேறு நாள்பட்ட வலி நிலைகளுக்கான மனோவசிய விளைவுகளைப் பற்றி முழுமையாகத் தீர்மானிக்க இன்னும் குறிப்பிடத்தக்க அளவிலான கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன" என்ற கருத்துமுடிவிற்கு வந்தனர் (ப. 283)[49] சில வலிகளுக்கு உடல் அசைவு மாற்றப் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் சிறந்த பலனைக் கொடுக்கின்றன.[50]

பரிணாமவியல் மற்றும் நடத்தையியல் பங்கு

வலி என்பது உடலின் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகும். அது வலியுண்டாக்கும் தூண்டல்களிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான தன்வய செயல்பாட்டையும், பாதிக்கப்பட்ட உடற்பகுதி குணமடையும் வரை அதைப் பாதுகாக்கவும் அது போன்ற தீங்கு தரும் சூழ்நிலைகளை எதிர்காலத்தில் தவிர்க்கவுமான மனப்பாங்கையும் வழங்குகிறது.[3][51] விலங்கு வாழ்க்கையில் இது ஒரு முக்கியப் பங்காகும். மேலும் இது ஆரோக்கியமான வாழ்வுக்கு முக்கியமானதுமாகும். வலி பற்றிய புலனுணர்வற்ற நபர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும்.[52] காரணமறியப்படா வலியானது (காயம் அல்லது நோய்க்குறி குணமடைந்த பின்னரும் நீடிக்கும் வலி அல்லது புலப்படும் காரணம் எதுவுமின்றியே உண்டாகும் வலி), வலி என்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவிகரமானது என்ற கருத்திற்கு விலக்காக இருக்கலாம். இருப்பினும் ஜான் சார்னோ (John Sarno) அது போன்ற வலி உளச்செனிம வலியாகும் என வாதிட்டு ஆபத்தான உணர்ச்சிகளை விழிப்பின்றி வைத்திருப்பதற்கான பாதுகாப்புக் கவனத் திருப்பங்களைப் பட்டியலிட்டார்.[53] சில வகை அதீத வலிகளினால் வாழ்வுக்கான நன்மை என்ன உள்ளது எனத் தெளிவாக விளங்கவில்லை (எ.கா. பல்வலி), மேலும் சில வகை வலிகளின் செறிவு (விரல் நகங்களில் அல்லது கால்விரல் நகங்களில் ஏற்படும் காயங்களால் உண்டாகும் வலி) வாழ்வுக்கான எந்த நன்மையையும் மீறியதாகவே உள்ளது.

கோட்பாடு

பிரத்யேகத்தன்மை

டேகார்ட் வழங்கிய வலியின் பாதை.

ரேனி டேகார்ட் (René Descartes) 1664 ஆம் ஆண்டின் தனது ட்ரீட்டிஸ் ஆஃப் மேன் (Treatise of Man) எனும் புத்தகத்தில் வலியின் போக்கு பற்றி விவரித்துள்ளார். "வெப்பத் துகள்கள்" (A) மெல்லிய இழையினால் (cc) மூளையிலுள்ள ஒரு வால்வுடன் இணைக்கப்பட்டுள்ள (de) சருமத்தின் ஒரு பகுதியைச் (B) செயல்படுத்துகிறது. இந்தச் செயலினால் அந்த வால்வு திறந்து, அதனால் ஒரு குழியிலிருந்து (F) விலங்கு மனப்போக்கு தசைகளின் வழியே பயணித்து அது வலியின் தூண்டுதலிலிருந்து உடலை விடுவித்து, பாதிக்கப்பட்ட உடற்பகுதியை நோக்கி தலையையும் கண்களையும் திரும்பச் செய்து, கையை அசைத்து பாதுகாப்பான விதத்தில் உடலைத் திரும்பச் செய்கிறது. வலி என்பது தீங்கிழைக்கும் தூண்டுதலினால் உருவாகி பிரத்யேகமான வலிப்பாதையைச் செயல்படுத்தும் நேரடி விளைவாகும். அப்பாதை சருமத்திலுள்ள உணர்வு ஏற்பிகளிலிருந்து மூளையிலுள்ள இழை அல்லது நரம்பிழைகளின் சங்கிலியின் வழியே சென்று மூளையிலுள்ள வலி மையத்தை அடைகிறது. இதனால் எந்திரவியல் பதில்வினை ஏற்படுகிறது என்ற இந்த மாதிரியின் அடிப்படைக் கருத்துகளே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் மத்தியக்காலம் வரை அதிகம் ஏற்கப்பட்ட கண்ணோட்டமாக இருந்தது.[54]

வகை

பிரத்யேகத் தன்மைக் கோட்பாட்டுக்கு (பிரத்யேக வலி ஏற்பி மற்றும் பாதை) முதலில் 1874 ஆம் ஆண்டு வில்ஹெம் எர்ப் (Wilhelm Erb) என்பவர் முன்மொழிந்த கோட்பாடு சவாலாக அமைந்தது. அது எந்த உணர்வு ஏற்பியின் தூண்டுதலாலும் வலியின் சமிக்ஞைகள் உருவாக்கப்படக்கூடும், ஆனால் அந்தத் தூண்டுதல் வலியை ஏற்படுத்தப் போதிய அளவில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது, மேலும் நாசிசெப்ஷன் ஏற்படுகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது தூண்டுதலின் வகையே (நேரம் மற்றும் பரப்பைப் பொறுத்த செறிவு) அன்றி ஏற்பியின் வகை அல்ல என்றும் கூறுகிறது. ஆல்ஃபிரட் கோல்ட்ஸ்கெய்டர் (Alfred Goldscheider) (1894) ஒரு கருத்தை முன்மொழிந்தார் அதன்படி, நேரம் அதிகரிக்கையில் பல உணர்வு இழைகளிலிருந்து வரும் செயல்பாடுகள் முதுகுத்தண்டில் உள்ள முதுகுப்பக்கக் கொம்புகளில் சேர்கின்றன. பின்னர் சேர்ந்துவரும் தூண்டுதல்களின் மொத்த அளவு ஏற்கக்கூடிய வரம்பைக் கடக்கும்போது வலிக்கான சமிக்ஞைகளை அனுப்பப்படுகின்றன. 1953 ஆம் ஆண்டில் வில்லெம் நூர்டென்பாஸ் (Willem Noordenbos) கண்டறிந்தார் சமிக்ஞையானது பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து அதிக விட்டம் கொண்ட பகுதியின் வழியே கொண்டு செல்லப்படுகிறது, "தொடுதல், அழுத்தம் அல்லது அதிர்வு" இழைகள் போன்றவை "வலி" இழைகள் கடத்து சமிக்ஞைகளைத் தடுக்கக்கூடும் - பெரிய இழை சமிக்ஞைக்கும் மெல்லிய இழை சமிக்ஞைக்கும் உள்ள விகிதமே வலியின் செறிவைத் தீர்மானிக்கிறது; இதனாலேயே நாம் அடி விழுந்ததும் தேய்த்துக்கொள்கிறோம். இதுவே தூண்டுதலின் வகையே (இந்த நிகழ்வில் பெரிய மற்றும் மெல்லிய இழைகளினால் ஏற்படும் தூண்டுதல்கள்) வலியின் செறிவை மாற்றியமைக்கிறது என்ற கருத்திற்கான விளக்கமாகக் கருதப்பட்டது.[55]

நுழைவாயில் கட்டுப்பாடு

இவை அனைத்தும் மெல்சாக் (Melzack) மற்றும் வால் (Wall) ஆகியோரின் "பெயின் மெக்கனிசம்ஸ்: அ நியூ தியரி" (Pain Mechanisms: A New Theory) என்ற 1965 ஆம் ஆண்டின் அறிவியல் கட்டுரை உருவாக வழிவகுத்தது.[56] அதில் அக்கட்டுரையின் ஆசிரியர்கள் பெரிய விட்டமுள்ள பகுதி ("தொடுதல், அழுத்தம், அதிர்வு") மற்றும் மெல்லிய ("வலி") இழைகள் ஆகியவை முதுகுத்தண்டிலுள்ள முதுகுப்பக்கக் கொம்பில் இரு இடங்களில் சந்திக்கின்றன எனக் கூறுகின்றனர்: அவை "டிரான்ஸ்மிஷன்" (T) செல்கள் மற்றும் "தடுக்கும்" செல்கள் ஆகியவையாகும். பெரிய இழைகள் மெல்லிய இழைகள் ஆகிய இரண்டின் சமிக்ஞைகளுமே T செல்களை கிளர்ச்சியூட்டுகின்றன. T செல்களின் வெளியீடு ஒரு குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கும் போது வலி தொடங்குகிறது. T செல்களின் செயல்படுத்தலைத் தடுப்பதே தடுக்கும் செல்களின் பணியாகும். T செல்களே வலிக்கான நுழைவாயிலாகும், தடுக்கும் செல்கள் அந்த நுழைவாயிலை மூடும் திறன் கொண்டுள்ளன. ஒரு தீங்கிழைக்கும் தூண்டுதல் நிகழ்வால் நமது பெரிய விட்டமுள்ள மற்றும் மெல்லிய இழைகள் செயல்படுத்தப்பட்டால் அவை T செல்களைக் (வலி நுழைவாயிலைத் திறக்கின்றன) கிளர்ச்சியூட்டும். அதே நேரத்தில், பெரிய விட்டமுள்ள இழைகள் தடுக்கும் செல்களைக் கிளர்ச்சியூட்டுகின்றன (இதனால் நுழைவாயில் மூடப்படுகிறது). மெல்லிய இழைகள் தடுக்கும் செல்களைச் செயல்தடுக்கின்றன (இதனால் நுழைவாயில் திறந்தபடி இருக்கிறது). ஆகவே, மெல்லிய இழை செயல்பாட்டுடன் ஒப்பிடுகையில் பெரிய இழைகளின் செயல்பாடு அதிகமாக இருப்பின் நாம் உணரும் வலி குறைவாக இருக்கும். அவர்கள் அடி விழும்போது நாம் ஏன் தேய்த்துக்கொள்கிறோம் என்பதை விளக்க ஒரு நரம்பியல் "சுற்று வரைபடத்தை" உருவாக்கினர்.[54]

பின்னர் அந்த ஆசிரியர்கள் அவர்களது கோட்பாட்டின் மிகவும் நிலைத்திருக்கும் தன்மையுடைய மற்றும் தாக்கம் மிகுந்த ஒரு கூறைச் சேர்த்தனர் : மூளையிலிருந்து முதுகுப்பக்கக் கொம்புக்கு வரும் வலி மாற்றும் சமிக்ஞை பற்றிய கருத்து. பெரிய இழைகளின் சமிக்ஞைப் போக்குவரத்தை படம் கொண்டு விளக்கினர். அது காயமடைந்த பகுதியிலிருந்து முதுகுப்பக்கக் கொம்பிலுள்ள தடுக்கும் செல்கள் மற்றும் T செல்கள் வரையிலான போக்குவரத்தை மட்டுமின்றி மூளை வரையிலான போக்குவரத்தை விளக்கியது. மூளையின் நிலையைப் பொறுத்து அவை T செல்களை மாற்றியமைக்க மீண்டும் மூளையிலிருந்து முதுகுப்பக்கக் கொம்பிற்கும் சமிக்ஞையை அனுப்பக்கூடும். இதனால் வலியின் செறிவும் மாறும். இந்த மாதிரி, வலி பற்றிய நோக்கத் தூண்டல் மற்றும் அறிதலின் விளைவை முக்கியமானதாகக் கருதத் தேவையான ஒரு நரம்பியல் அறிவியல் காரண விளக்கக் கருத்தை வழங்கியது.[54]

பரிமாணங்கள்

1968 ஆம் ஆண்டில் மெல்சாக் மற்றும் கேசி (Casey) ஆகியோர் வலியை அதன் மூன்று பரிமாணங்களைக் கொண்டு விவரித்தனர்: "உணர்வு ரீதியாக-பாகுபடுத்தல் தன்மை கொண்டது" (வலியின் செறிவு, இருப்பிடம், இயல்பு மற்றும் நீடிக்கும் கால அளவு ஆகியவற்றை உணர்வது), "பாதிக்கும்-நோக்கத் தூண்டல் தன்மை கொண்டது" (அவஸ்தை மற்றும் அதிலிருந்து தப்பிக்க முனையும் போக்கு) மற்றும் "புலனறிவுத் தன்மை கொண்ட- மதிப்பிடும் பண்பு கொண்டது" (பாராட்டு, கலாச்சார அம்சங்கள், கவனத் திருப்புதல்கள் மற்றும் மனோவசிய ஆலோசனைகள் போன்ற புலனறிவு முறைகள்).[7] வலியின் செறிவு (உணர்வு ரீதியான பாகுபடுத்தல் தன்மை கொண்ட பரிமாணம்) மற்றும் அவஸ்தை (பாதிக்கும்-நோக்கத் தூண்டல் தன்மை கொண்ட பரிமாணம்) ஆகியவை வலியுண்டாக்கும் தூண்டலின் அளவைக் கொண்டு மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் “அதிக” புலனறிதல் செயல்பாடுகள் (புலனறிவுத் தன்மை கொண்ட- மதிப்பிடும் பண்பு கொண்ட பரிமாணம்) உணரப்படும் செறிவு மற்றும் அவஸ்தையை மாற்றும் திறன் கொண்டவையாக இருக்கலாம். புலனறிதல் தொடர்பான செயல்பாடுகள் "உணர்வு ரீதியான மற்றும் பாதிக்கும் அனுபவம் ஆகிய இரண்டையுமே பாதிக்கலாம் அல்லது அவை முதல் நிலை பாதிக்கும்-நோக்கத் தூண்டல் தன்மை கொண்ட பரிமாணத்தை மாற்றியமைக்கலாம். இதனால் விளையாட்டுகள் அல்லது போரின் போது ஏற்படும் கிளர்ச்சியால் வலியின் அனைத்து பரிமாணங்களையும் தடுப்பதாகத் தெரிகிறது. ஆலோசனைகளும் மருந்துப் போலிகளும் பாதிக்கும்-நோக்கத் தூண்டல் தன்மை கொண்ட பரிமாணத்தை மாற்றியமைத்து அதனுடன் ஒப்பிடுகையில் உணர்வு ரீதியான பாகுபடுத்தல் தன்மை கொண்ட பரிமாணத்தை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறது." (ப. 432) அந்த வெளியீடு ஒரு செயலுக்கான அழைப்புடன் முடிகிறது: "உணர்வகற்றப் பகுதியினைத் தடுப்பதன் மூலம் உணர்வு ரீதியான உள்ளீட்டைத் தடுப்பது, அறுவை சிகிச்சை முறை அல்லது அதுபோன்ற முறைகளால் மட்டுமே வலிக்கு சிகிச்சையளிக்க முடியாது. வலிக்கு சிகிச்சையளிக்க நோக்கத் தூண்டலைப் பாதிக்கக்கூடிய மற்றும் புலனறிதல் காரணிகளை மாற்றியமைப்பதும் அவசியமாகும்." (ப. 435)

இன்றைய கோட்பாடு

வலியுடன் தொடர்புடைய செரிபெரல் கார்ட்டெக்ஸின் பகுதிகள்.

பிரத்யேகத் தன்மை எனப்படும் வலியானது பிரத்யேகமான வலி ஏற்பிகளிலிருந்து அதற்கேயென உள்ள வலி இழைகளின் வழியே மூளையிலுள்ள வலி மையத்திற்குச் செல்கின்றன என்ற கோட்பாடு வகைக் கோட்பாட்டிலிருந்தான சவாலை எதிர்த்துள்ளது. இருப்பினும், மூளையிலுள்ள "வலி மையமானது" மிக பரந்துவிரிந்த நரம்பியல் வலையமைப்பாக உள்ளது. உணர்வு ரீதியான எந்த ஒரு ஏற்பியின் போதிய செறிவுள்ள தூண்டலினாலும் வலி சமிஞை உருவாகக்கூடும் என்ற வில்ஹெம் எர்ப் அவர்களின் (1874) முந்தைய வகைக் கோட்பாட்டுக் கருதுகோளானது பலமாக நிராகரிக்கப்பட்டது.[57] A-டெல்ட்டா மற்றும் C மேற்பரப்பு நரம்பிழைகள் முதுகெலும்பிலுள்ள முதுகுப்பக்கக் கொம்புக்கு உடலின் நிலை பற்றிய தகவல்களைக் கொண்டு செல்கின்றன.[58] இந்த A-டெல்ட்டா மற்றும் C இழைகளில் சில (நாசிசெப்ட்டார்கள்|நாசிசெப்ட்டார்கள் ) வலிமிகு செறிவுள்ள தூண்டல்களுக்கு மட்டுமே பதில்வினை புரிகின்றன, ஆனால் பிற இழைகள் தீங்கிழைக்கும் மற்றும் தீங்கிழைக்காத தூண்டல்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை உணர்வதில்லை.[57] ஏ. டி. கிரெயிக் (A.D.Craig) மற்றும் அவரது சகபணியாளர்கள் A-டெல்ட்டா இழை வலி சமிக்ஞைகளை மட்டும் கொண்டுசெல்வதற்கென உள்ள பிரத்யேக இழைகளையும் C இழை வலி சமிக்ஞைகளை முதுகுத் தண்டு வழியே மூளையிலுள்ள தாலமஸ் வரை கொண்டுசெல்வதற்கென பிரத்யேகமாக உள்ள பிற இழைகளையும் கண்டறிந்தனர்.[59] நாசிசெப்ட்டாரிலிருந்து மூளைக்குச் செல்லும் தனிப்பட்ட பாதை ஒன்று உள்ளது. வலி தலாமஸ் பகுதியிலான தொடர்பான செயல்பாடு இன்சுலார் கார்ட்டெக்சுக்கும் (இதுவே பிற அம்சங்களுடன் நமைச்சல் மற்றும் குமட்டல் போன்ற பிற நீர்ச்சமநிலை உணர்வுகளிலிருந்து வலியைப் பிரித்தறியும் உணர்வையும் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது) அண்ட்டீரியர் சிங்குலேட் கார்ட்டெக்சுக்கும் (மற்ற அம்சங்களுடன் வலியின் நோக்கத் தூண்டல் கூறையும் இது கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது)பரவுகிறது[58]; தனிப்பட்ட விதத்தில் அமைந்துள்ள வலியும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சோமேட்டோ சென்சரி கார்ட்டெக்ஸ்களைச் செயல்படுத்துகிறது.[60][61]

நுழைவாயில் கோட்பாடு அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மெல்சாக் மற்றும் வால் ஆகியோர், முதுகுப்பக்கக் கொம்புப் பகுதியிலுள்ள நியூரான்களில் தடுக்கும் நியூரான்கள் எனக் குறிப்பிட்ட பெரும்பாலான நியூரான்கள் உண்மையில் கிளர்ச்சியூட்டும் செல்களாகவே இருந்தன்[57] மேலும் கோஜி இனூயி (Koji Inui) மற்றும் அவரது சகபணியாளர்கள் சமீபத்தில் தீங்கற்ற தொடுதல் அல்லது அதிர்வினால் ஏற்படும் வலி குறைவுக்கு செரிபரல் கார்ட்டெக்ஸ் பகுதியில் நடைபெறும் செயல்பாடே காரணமாக இருக்கலாம், மேலும் அதற்கு முதுகெலும்பு பகுதி தொடர்பான சிறிதளவு பங்களிப்பும் இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.[62] மெல்சாக் மற்றும் கேசி ஆகியோர் 1968 ஆம் ஆண்டில் வழங்கிய வலியின் பரிமாணங்களை விவரிக்கும் படம் இன்றுவரை ஒரு உத்வேகமளிப்பதாக உள்ளது, அது வலியின் செயல்பாட்டு நரம்பமைப்பியல் மற்றும் உளவியலிலான கோட்பாட்டை அமைப்பதிலும் ஆராய்ச்சிக்கான வழிகாட்டலை வழங்குவதிலும் உறுதியான உதவியாக உள்ளது.

பிரத்யேக சூழ்நிலைகள்

போலி வலி

போலி வலி என்பது ஒருவர் இழந்துவிட்ட உறுப்பு அல்லது அவையத்திலிருந்து ஏற்படும் வலி அல்லது அவருக்கு உடலியல் சமிக்ஞை எதுவும் போக வர சாத்தியமற்ற உறுப்பில் ஏற்படுவதாக உணரப்படும் வலி ஆகும். போலி கைகால் வலி என்பது உலகளவில் உறுப்பு நீக்கம் செய்துகொண்டவர்கள் மற்றும் பக்கவாதத்தினால் இரு கால்களும் செயலிழந்தவர்கள் உணர்வதாகக் கூறும் வலியாகும். போலி வலி என்பது ஒரு வகை நியூரோப்பத்திக் வலியாகும்.

பாதிப்பற்ற வலி

IASP வரையறைக்கான புதிரான சவாலில்,[2] எந்த அவஸ்தையும் சிறிதுமில்லாத நிலையில் வலி இருப்பதாக உணரவும் வாய்ப்புள்ளது என்பதை வலி அறிவியல் ஒப்புக்கொள்கிறது[2]: மடல் திறப்பு, சிங்குலாட்டமி அல்லது மார்ஃபீன் வலியகற்றம் போன்ற நிலைகளால் விளையக்கூடிய பாதிப்பற்ற வலி அல்லது வலி நீக்கம் என அழைக்கப்படும் நோய்க்குறித்தொகுப்பில் இவ்விளைவு காணப்படுகிறது. வழக்கமாக இது போன்ற நோயாளிகள், அவர்களுக்கு வலி உள்ளது எனவும் ஆயினும் அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை எனவும் கூறுகின்றனர். அவர்கள் வலி இருப்பதை உணர்கின்றனர் ஆனால் பெரும்பாலும் அல்லது முழுவதுமாக அதனால் பாதிப்படையாமல் தடுத்துக்கொள்ளும் திறன் கொண்டுள்ளனர்.[63]

வலி உணர இயலாமை

பாதுகாப்புக்கும் பாதிப்பு உள்ளதை அறிந்துகொள்வதற்கும் வலியை உணரும் திறன் மிக முக்கியமானதாகும். செயல்படும் வேகத்தில் உள்ள ஒரு விளையாட்டு வீரர் அல்லது போரில் வென்று மகிழ்ச்சியுடன் திரும்பும் போர் வீரர் போன்ற சில பிரத்யேக சூழ்நிலைகளில் வலியை உணர முடியாமல் போகலாம். இந்த நிகழ்வு இப்போது நுழைவாயில் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டல் விளக்கப்படுகிறது. இருப்பினும், முதுகெலும்பு காயம், சர்க்கரை வியாதி அல்லது அரிதாக ஹான்சென் வியாதி (தொழுநோய்) போன்ற நிலைகளினால் ஏற்படும் உடல் பலவீனத்தினாலும் இவ்வாறு வலியை உணர முடியாத நிலை ஏற்படலாம்.[64] ஒரு சில நபர்களுக்கு பிறவியிலேயே வலி உணர முடியாமை அல்லது பிறவி வலியின்மை இருக்கலாம். இது ஓர் அரிதான மரபியல் குறைபாடாகும், இது உள்ள நபர்களுக்கு அறிந்துகொள்ள முடியாத காயங்கள் மற்றும் சுகவீனங்களை வழங்குவதாகவும் உள்ளது. இந்த நிலை உள்ள குழந்தைகள் கவனக்குறைவினால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் தங்கள் நாக்கு, கண்கள், எலும்புகள், சருமம் மற்றும் தசைகளில் சேதங்களை ஏற்படுத்திக்கொள்வர். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகலாம் ஆனால் அவர்களின் எதிர்நோக்கப்படும் சராசரி ஆயுள் குறைவாகவே இருக்கும்.

உளவியல் ரீதியான வலி

சைக்கால்ஜியா அல்லது சோமாட்டோஃபாம் வலி என்றும் அழைக்கப்படும் உளவியல் ரீதியான வலி என்பது, உளவியல் ரீதியான, உணர்ச்சி ரீதியான அல்லது நடைத்தை தொடர்பான காரணிகளால் உருவாகும், அதிகரிக்கும் அல்லது நீடிக்கும் வலியாகும்.[65][66] உளவியல் ரீதியான வலியானது பொதுவாக தலைவலி, முதுகுவலி அல்லது வயிற்று வலியாக ஏற்படலாம்.[65] மருத்துவ வல்லுநர்களும் பொது மக்களும் உளவியல் ரீதியாக ஏற்படும் வலிகள் "உண்மையானவை" அல்ல என்று எண்ணுவதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் அவ்வப்போது புறக்கணிக்கப்படுகின்றனர். இருப்பினும், இவ்வகை வலிகள் பிற வலிகளைக் காட்டிலும் மிகச் சிறிதளவே உண்மையானதோ அல்லது சிறிதளவே துன்புறுத்துவதோ அல்ல என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சமூகமும் கலாச்சாரமும்

ஜியார்ஜ் காட்லின் (George Catlin) அவர்கள் கண்ட ஒக்கிப்பா விழா - சுமார் 1835 ஆம் ஆண்டு.

உடலில் தோன்றும் வலிகள் பண்டைய காலத்திலிருந்து தற்காலம் வரையில் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன அல்லது வரையறுக்கப்பட்டுள்ளன.[67] வலியின் தத்துவம் என்பது மனதின் தத்துவத்தின் ஒரு பிரிவாகும், அது உடலியல் வலிகளைப் பற்றியதாகவே உள்ளது. வலியின் மன நிலைகள் சில உடலியல் நிலைகளுடன் ஒத்ததாகவே உள்ளன என ஒப்புமையியல் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். வலி என்பது பிற மன நிலைகள், உணர்வு ரீதியான உள்ளீடுகள் மற்றும் நடத்தை தொடர்பான வெளியீடுகளுடன் அதன் இயல்பான தொடர்பையே கொண்டுள்ளது என செயல்பாட்டியலாளர்கள் கருதுகின்றனர். மத நம்பிக்கையுள்ள அல்லது பாரம்பரிய மரபுகள் வழக்கமாக ஒவ்வொரு சமூகத்திலும் உடலியல் வலியின் இயல்பு அல்லது பொருளை வரையறுக்கின்றன.[68] சில நேரங்களில் மிக அதீத நிலை நடைமுறைகள் அதிகமாகக் குறிப்பிடப்படுகின்றன: தசையை வருத்திக்கொள்ளுதல் மாற்றங்கள் செய்தல், வலிமிகு சடங்குகள், தீமிதித்தல் போன்றவை. ஒவ்வொருக்கும் இடையே வலியின் தெவிட்டு நிலை அல்லது வலி தாங்கிக்கொள்ளுதலில் மாற்றங்கள் காணப்படுகின்றன. அதற்கு மரபியல், கலாச்சார பின்புலம், இனம் மற்றும் பாலினம் ஆகியவை காரணங்களாக அமைகின்றன.

வலி நிர்வாகத்திற்கான பகிர்ந்தளிப்பு, மருந்துக் கட்டுப்பாடு, விலங்கு உரிமைகள், சித்ரவதை, வலி இணக்கம் போன்றவை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உடல் ரீதியான வலி என்பது முக்கியமான அரசியல் தலைப்பாகும் (வலிக் கற்றை, வலி உண்டாக்கி, வலிக் கதிர் போன்றவற்றையும் காண்க). உடல் ரீதியான தண்டனை என்பது ஒரு நபரைத் தண்டிக்கும் அல்லது அவரது நடத்தையை மாற்றும் நோக்கத்தில் வலியை ஏற்படுத்தும் செயலாகும். பரந்துபட்ட கண்ணோட்டத்தில் அது பொதுவாக வலியின் ஒரு பகுதியே ஆகும். அதாவது உடல் ரீதியான அந்த வலியால் துன்புறுவது என்பது கலாச்சாரம், மதம், தத்துவம் அல்லது சமூக விவகாரங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

விலங்குகளில்

ஜேன் பேப்ட்டிஸ்ட் வீனிக்ஸ் (Jan Baptist Weenix) அவர்கள் வரைந்த ரேனி டெஸ்கார்ட்டெசின் உருவப்படம் - 1647-1649

கேள்விகளைக் கேட்பதே பெரும்பாலான மனிதர்களில் வலியை மதிப்பிடுவதற்கான மிகவும் நம்பகமான முறையாகும்: இதுவரை அறியப்பட்ட எந்த உடலியல் முறைகளாலும் கண்டறிய முடியாத வலியை ஒரு நபர் அவராகவே தெரிவிக்கக்கூடும். இருப்பினும் கைக்குழந்தைகளைப் (infants) (இலத்தீன் மொழியில் infans என்பதற்கு ”பேச முடியாதவர்கள்” எனப் பொருள்) போல மனிதர்களல்லாத விலங்குகளால் வலிக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது; இதனால் மனிதர்களுக்குப் பொருந்தும் வலிக்கான வரையறுக்கும் தேர்வளவைகள் அவற்றுக்குப் பொருந்தாது. தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் இந்த சிரமத்திற்கு பல்வேறு விதங்களில் பதில்வினை புரிந்துள்ளனர். எடுத்துக்காட்டுக்கு ரேனி டெஸ்கார்ட்டெஸ் விலங்குகளுக்கு விழிப்புணர்வு இல்லை அதனால் மனிதர்கள் வலியை உணர்வதைப் போல அவை வலியை அனுபவிப்பதும் பாதிக்கப்படுவதும் இல்லை என வாதிட்டார்.[69][70] விலங்குகளுக்கான வலி நிவாரணத்தை ஒழுங்குபடுத்தும் இரு அமெரிக்க ஒன்றிய சட்டங்களை எழுதிய முதன்மையான ஆசிரியாரான, கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்னார்ட் ரோல்லின் (Bernard Rollin) என்பவர்[71] ஆராய்ச்சியாளர்கள் 1980களில் விலங்குகள் வலியை உணர்கின்றனவா இல்லையா என நிச்சயமாக ஒரு முடிவுக்கு வராமலே இருந்தனர் எனவும் 1989 ஆம் ஆண்டுக்கு முன்பு பயிற்சி பெற்ற அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களுக்கு விலங்குகளின் வலியை சற்றும் கருத்தில்கொள்ளத் தேவையில்லை என்றே கற்பிக்கப்பட்டது எனவும் எழுதுகிறார்.[72] அறிவியலாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடனான அவரது இடைசெயல்களின்போது, விலங்குகள் வலியை உணர்கின்றன என்பதை “நிரூபிக்குமாறும்” அவை வலியை உணர்கின்றன எனக் கூறுவதற்கான “அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய” அடிப்படைகளை நிரூபிக்குமாறும் அவரிடம் கேட்கப்பட்டது.[72] விலங்குகள் வலியை வேறுவிதமாக உணர்கின்றன என்ற கருத்து இப்போது சிறுபான்மை கண்ணோட்டமாகும் என கார்போன் (Carbone) எழுதுகிறார். விலங்குகளுக்கு குறைந்தபட்சம் எளிய அளவிலேனும் விழிப்புணர்வு எண்ணங்களும் உணர்வுகளும் உள்ளன என்ற விவாதத்திற்கு வலுவான ஆதரவிருப்பினும்[73] இது பற்றிய கல்வியியல் மறுஆய்வுகள் பல வகையில் புரிந்துகொள்ளத்தக்கனவாக இருந்தன, சில விமர்சகர்கள் விலங்குகளின் மனநிலையை எந்தவகையில் நம்பகமாக தீர்மானிப்பது என்று தொடர்ந்து கேள்வியெழுப்பிவருகின்றனர்.[70][74] பூச்சிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்களின் வலியை உணரும் மற்றும் துன்புறும் திறனும் தெளிவாக இல்லை.[75][76]

ஒரு விலங்குக்கு வலி உள்ளதைக் குறிப்பிட்டு அறியமுடியாது, ஆனால் உடலியல் மற்றும் நடத்தை ரீதியான பதில்வினைகளை கவனிப்பதன் மூலம் அதை அறியலாம்.[77] தற்போது வல்லுநர்கள் அனைத்து முதுகெலும்பிகளுக்கும் வலியை உணரும் திறனுள்ளது எனவும் ஆக்ட்டோபஸ் போன்ற சில முதுகெலும்பற்றவைக்கும் கூட இத்திறன் இருக்கலாம் எனவும் நம்புகின்றனர்.[78][79] பிற விலங்குகள், தாவரங்கள் அல்லது பிற இனங்களைப் பொறுத்தவரை, உடல் ரீதியாக ஏற்படும் வலியை உணரும் திறன் என்பது தற்போது அறிவியல் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட கேள்வியாகும். ஏனெனில் அவை எவ்வாறு வலியை உணர்கின்றன என விளக்கும் எந்த இயங்கு முறைகளும் இதுவரை அறியப்படவில்லை. குறிப்பாக தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் பெரும்பாலான பூச்சி இனங்களில்[80] ஏற்பிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பழ ஈக்கள் மட்டும் இதற்கு விலக்காக உள்ளன.[81]

முதுகெலும்பிகளில் அகச்செனிம ஓப்பியாய்டுகளே ஓப்பியாய்டு ஏற்பிகளை மாற்றியமைப்பதன் மூலம் வலியைத் தணிக்கும் நரம்பியல் வேதிப்பொருள்களாகும். ஓப்பியாய்டுகளும் ஓப்பியேட் ஏற்பிகளும் கிரத்தேசியாக்களில் இயற்கையாக உள்ளன, இருப்பினும் அவற்றின் இருப்பு பற்றி தற்போது எந்த முடிவுக்கும் வர முடியவில்லை,[82] அவற்றின் இருப்பைக்கொண்டு பெரிய கடல் நண்டுகள் வலியை உணரும் திறன் கொண்டுள்ளன என அறிய முடிகிறது.[82][83] இந்த நண்டுகளில் முதுகெலும்பிகளில் உள்ளது போலவே அவற்றின் வலியை ஓப்பியாய்டுகள் கடத்துகின்றன.[83] கால்நடை மருத்துவமானது உண்மையான அல்லது இருக்கும் சாத்தியமுள்ள விலங்கு வலிக்கு மனிதர்களுக்கு பயன்படுத்தும் வலி நிவாரணிகளையும் உணர்வகற்றியல்களையுமே பயன்படுத்துகிறது.[84]

மற்ற உயிரினங்கள்

உயிரினங்கள் என்ற வகையில் தாவரங்களால் உடல் தூண்டுதல்களுக்கும் சேதங்களுக்கும் எதிர்வினையாற்றித் தொடர்பு கொள்ள இயலும் என்றாலும் அவைகளால் வலி என்பதை உணர முடியாது. இதற்குக் காரணம் தாவரங்களுக்கு வலி ஏற்பிகள், நரம்புகள், நரம்பு மண்டலம், மூளை உள்ளிட்டவை கிடையாது[85] என்பதும் அதன் நீட்சியாக உணர்திறன் என்பதோ உணர்வு நிலை என்பதோ அறவே இல்லை[86] என்பதுமேயாகும். சூரிய ஒளி, புவி ஈர்ப்பு, காற்று, பூச்சிக்கடி போன்ற வெளிப்புறத் தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும் திறன் தாவரங்களுக்கு உள்ளபோதிலும், பல தாவரங்கள் செல்லுலார் மட்டத்தில் இயந்திர தூண்டுதல்களை உணர்ந்து எதிர்வினையாற்ற வல்லது என்றாலும், குறிப்பாக வில் பொறி, தொட்டாற் சுருங்கி போன்ற சில தாவரங்கள் அவற்றின் "வெளிப்படையான உணர்வுத் திறன்களுக்காக" அறியப்பட்டாலும், நரம்பு மண்டலம் இல்லாத காரணத்தால் தாரவத் திணையைச் சேர்ந்த எந்த உயிரினங்களுக்கும் வலி உள்ளிட்ட எந்த உணர்வையும் உணரும் திறன் கிடையாது.[85] இதற்கு முதன்மையான காரணம் என்னவென்றால், விலங்குகளின் பரிணாம வெற்றிகளும் தோல்விகளும் துன்பத்தை அனுபவிக்கும் திறனால் வடிவமைக்கப்பட்டிருக்கையில், தாவரங்களின் பரிணாம வெற்றிகளும் தோல்விகளும் வெறுமனே வாழ்ந்து மடிதல் என்ற இரண்டை கொண்டு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.[85]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வலி&oldid=3933145" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை