வில்லியம் பால்க்னர்

வில்லியம் கியுபெர்ட் பால்க்னர் (William Cuthbert Faulkner) [1][2] (பிறப்பு செப்டம்பர் 25, 1897 மற்றும் இறப்பு சூலை 6, 1962) ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.[3] மேலும் ஆக்ஸ்போர்டு, மிசிசிப்பி மாநிலத்தை சேர்ந்தவர். பால்க்னர் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் திரைக்கதைகள் எழுதியுள்ளார். இவர் முக்கியமாக இவரது புதினங்கள் மற்றும் சிறு கதைகளுக்காக அறியப்படுகிறார். பெரும்பாலும் இவரது கதைகள், கற்பனை கவுண்டியான ஜோகனாபேடாபா கவுண்டியை நடப்பதாகவே இருக்கும். இந்த கற்பனை கவுண்டி, பால்க்னரின் வீடு அமைந்திருக்கும் லபாஃயட் கவுண்டியை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்டுள்ளது.[4] ற்

வில்லியம் பால்க்னர்
1954 ஆண்டில் பால்க்னர்
1954 ஆண்டில் பால்க்னர்
பிறப்புவில்லியம் கியுபெர்ட் பால்க்னர்
(1897-09-25)செப்டம்பர் 25, 1897
New Albany, Mississippi, U.S.
இறப்புசூலை 6, 1962(1962-07-06) (அகவை 64)
Byhalia, Mississippi, U.S.
மொழிஆங்கிலம்
தேசியம்அமெரிக்கர்
கல்வி நிலையம்மிசிசிப்பி பல்கலைகழகம்
காலம்1919–1962
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Sound and the Fury
As I Lay Dying
ஆகத்து மாதத்தின் ஒளி
Absalom, Absalom!
"A Rose for Emily"
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு(1949)

புலிட்சர் பரிசு(1955, 1963)

தேசிய புத்தக விருது(1951, 1955)
துணைவர்எஸ்டெல்லா ஓல்தாம்(1929–1962; his death)
கையொப்பம்

பால்க்னர் பொதுவாக அமெரிக்க இலக்கிய உலகில் கொண்டாடப்படும் நபராக உள்ளார். மேலும் தெற்கு கோதிக் நடையில் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அவரது படைப்புகள் 1919 ஆம் ஆண்டிற்கு முன்னரே வெளிவந்திருந்தாலும், 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டில் இடைபட்ட காலத்தில் தான் மிக அதிக அளவில் பதிப்பிற்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் வரையில் பால்க்னர் அவ்வளவாக மக்களிடம் அறியப்படாமலும் மற்றும் பிரபலமடையாமலும் இருந்தார். மிசிசிப்பியில் பிறந்தவர்களில் இதுவரையில் இவர் ஒருவர் மட்டுமே நோபல் பரிசை பெற்றிருக்கிறார். இவரது இரண்டு படைப்புகள், ஒரு பாபெல் (A Fable) (1954) மற்றும் அவரது கடைசி புதினமான தி ரிவர்ஸ் (The Reivers) (1962), கற்பனை வகையில் புலிட்சர் விருது வென்றிருக்கின்றன..1998 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள நவீன் நூலகம் என்ற பதிப்பகம், 1929 ஆம் ஆண்டு வெளிவந்த சத்தம் மற்றும் சீற்றம் (The Sound and the Fury) என்ற பால்க்னரின் புதினம், 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 புத்தகங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்தது. இது போல அவரது மற்ற படைப்புகளான நான் சாககிடக்கும்பொழுது (As I Lay Dying) (1930) மற்றும் ஆகத்து மாதத்தின் ஒளி (Light in August) (1932), அப்சலோம், அப்சலோமி ( Absalom, Absalom!) (1936) இதே போன்ற பட்டியல்களில் தோன்றி இருக்கிறது. அவரது முதல் வெளியிடப்பட்ட கதையான எமிலிக்கு ஒரு ரோஜாப் பூ (A Rose for Emily), அமெரிக்க எழுத்தாளர்கள் இதுவரை எழுதியுள்ள கதைகளில் மிகவும் பிரபலமான ஒரு படைப்பாகும்.

மரணம்

சூன் 17, 1962 ஆண்டில், பால்க்னர் குதிரை சவாரி செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் கடுமையான காயம் அடைந்தார், இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூலை 6, 1962 ஆம் ஆண்டில், 64 வது அகவையில், பைஹாலியா, மிசிசிப்பியில்[3][5] உள்ள ரைட்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ஆக்ஸ்போர்டு, புனித பீட்டர் கல்லறையில் புதைக்கப்பட்டது. இவரது கல்லறை, E.T. என்ற அடையாளக்குறியிடப்பட்ட, அடையாளம் தெரியாத குடும்ப நண்பரின் கல்லறை அருகில் அமைக்கப்பட்டுள்ளது.[6].

விருதுகள்

  • 1949 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[7] 1955 ஆம் ஆண்டில் புலிட்சர் விருது, ஒரு பாபெல் (A Fable) (1954) என்ற புதினத்திற்காக பெற்றார்.
  • 1963 ஆம் ஆண்டில் புலிட்சர் விருது, தி ரிவர்ஸ் (The Reivers) (1962) என்ற புதினத்திற்காக பெற்றார்.[8]
  • 1951 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில், இருமுறை அமெரிக்க தேசிய புத்தக விருதை கதைகளின் தொகுப்பு மற்றும் ஒரு பாபெல் (A Fable) (1954) படைப்புகளுக்காகப் பெற்றார்.[9]
  • 1987, ஆகத்து 3 ஆம் தேதி அன்று அமெரிக்க தபால் சேவை நிறுவனம், 22 சென்ட் மதிப்புள்ள தபால் தலை ஒன்றை வெளியிட்டு, பால்க்னரை கெளரவபடுத்தியது.[10]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை