வெள்ளி ஆக்சைடு

வெள்ளி ஆக்சைடானது (Silver(I) oxide) Ag2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது ஒரு நுண்ணிய துகள்களால் ஆன கருமை அல்லது அடர் பழுப்பு நிறமுடைய  சேர்மம் ஆகும். இது மற்ற வெள்ளி சேர்மங்களைத் தயாரிக்கப்  பயன்படுகிறது.

வெள்ளி ஆக்சைடு
Silver(I) oxide structure in unit cell
Silver(I) oxide powder
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) ஆக்சைடு
வேறு பெயர்கள்
வெள்ளி துரு, அர்ஜெண்டியஸ் ஆக்சைடு, வெள்ளி மோனாக்சைடு
இனங்காட்டிகள்
20667-12-3 Y
ChemSpider7970393 N
EC number243-957-1
InChI
  • InChI=1S/2Ag.O/q2*+1;-2 N
    Key: NDVLTYZPCACLMA-UHFFFAOYSA-N N
  • InChI=1S/2Ag.O/q2*+1;-2
    Key: NDVLTYZPCACLMA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்Image
ம.பா.தsilver+oxide
பப்கெம்9794626
வே.ந.வி.ப எண்VW4900000
SMILES
  • [O-2].[Ag+].[Ag+]
பண்புகள்
Ag2O
வாய்ப்பாட்டு எடை231.74 g·mol−1
தோற்றம்கருப்பு/பழுப்பு கனசதுர படிகங்கள்
மணம்Odorless[1]
அடர்த்தி7.14 கி/செமீ3
உருகுநிலை 300 °C (572 °F; 573 K) ≥200 °செ-இல் இருந்து சிதைகிறது
0.013 கி/லி (20 °செ)
0.025 கி/லி (25 °செ)[2]
0.053 கி/லி (80 °செ)[3]
கரைதிறன் பெருக்கம் (Ksp) of AgOH
1.52·10−8 (20 °செ)
கரைதிறன்காடி, ஆல்கலி (காரம்) ஆகியவற்றில் கரையக்கூடியது
மதுசாரத்தில்கரைவதில்லை[2]
−134.0·10−6 செமீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்புகன சதுரம்
புறவெளித் தொகுதிPn3m, 224
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−31 கியூல்/மோல்[4]
நியம மோலார்
எந்திரோப்பி So298
122 யூல்/மோல்·கெல்வின்[4]
வெப்பக் கொண்மை, C65.9 யூல்/மோல்·கெல்வின்[2]
தீங்குகள்
GHS pictogramsGHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal wordDanger
H272, H315, H319, H335[5]
P220, P261, P305+351+338[5]
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
2.82 கி/கிகி (எலிகள், வாய்வழி)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு

இலித்தியம் ஐதராக்சைடை மிக நீர்த்த வெள்ளி நைட்ரேட்டு கரைசலுடன் வினைப்படுத்தி தயாரிக்கப்பட்ட வெள்ளி(I)ஆக்சைடு

வெள்ளி(I) ஆக்சைடு வெள்ளி நைட்ரேட்டின் நீர்க்கரைசலுடன் கார ஐதராக்சைடின் நீர்க்கரைசலை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த வினைக்கு விரும்பத்தகுந்த ஆற்றலியல் உதவுவதால் அதிக அளவிலான வெள்ளி ஐதராக்சைடு தேவைப்படுவதில்லை:

2 AgOH → Ag2O + H2O (pK = 2.875)

அமெரிக்க காப்புரிமை எண் 20050050990 நுண்மையாக துாளாக்கப்பட்ட கடத்தும் தன்மையுள்ள நிரப்பும் பசையை தயாரிக்க உதவும் வெள்ளி ஆக்சைடின்  தயாரிப்பு முறையை விவரிக்கிறது.  

அமைப்பு மற்றும் பண்புகள்

வெள்ளி ஆக்சைடு (Ag2O) நேர்கோட்டு வடிவத்தையும் இரு-அச்சு வடிவத்தில் கொண்டு நான்முகி ஆக்சைடுகளால் இணைக்கப்பட்ட வெள்ளியை மையத்தில் கொண்டுள்ளது. இது தாமிர ஆக்சைடுடன் ஒத்த வடிவத்தைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தை சிதைக்கும் கரைப்பான்களில் கரைகிறது. இது Ag(OH)2−  ஐ உருவாக்குவதாலும் ஒத்த நீராற்பகுப்பு விளைபொருட்களை உருவாக்குவதாலும் நீரில் சிறிதளவு கரையும் தன்மையுடையது. [சான்று தேவை] இது அமோனியாவில் கரைந்து கரையக்கூடிய வழிப்பொருட்களைத் தருகிறது. [சான்று தேவை]Ag2O இன் களியானது அமிலத்தால் எளிதில் தாக்கப்படுகிறது.:

Ag2O + 2 HX → 2 AgX + H2O


HX = HF, HCl, HBr, அல்லது HI, HO2CCF3. இது கார குளோரைடுகளுடன் வினைப்பட்டு தொடர்புடைய கார ஐதராக்சைடைக் கரைசலில் விட்டுவிட்டு வெள்ளி குளோரைடு வீழ்படிவைத் தருகிறது.[6][7]

மற்ற வெள்ளி சேர்மங்களைப் போல, வெள்ளி ஆக்சைடானது ஒளிஉணர் தன்மையுடையது. இது 280 °செ வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தப்படும் போது சிதைவடைகிறது.[8]

பயன்பாடுகள்

இந்த ஆக்சைடானது வெள்ளி-ஆக்சைடு மின்கலங்களில் வெள்ளி (I,III) ஆக்சைடாக, Ag4O4 பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியலில், வெள்ளி ஆக்சைடானது ஒரு மிதமான ஆக்சிசனேற்றியாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இது ஆல்டிகைடுகளை கார்பாக்சிலிக் அமிலங்களாக ஆக்சிசனேற்றம் செய்கிறது. இந்த வினைகளில் தேவைப்படும் நேரங்களில் வெள்ளி நைட்ரேட்டையும் கார ஐதராக்சைடுகளையும் உடனுக்குடன் வினைபுரியச்செய்து கிடைக்கும் வெள்ளி ஆக்சைடு சிறப்பான முடிவுகளைத் தருகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெள்ளி_ஆக்சைடு&oldid=3849295" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை