101955 பென்னு

சிறுகோள்

101955 பென்னு (101955 Bennu)[10] என்பது அப்பல்லோ கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரிம-வகை சிறுகோள் (asteroid) ஆகும். இது 1999 செப்டெம்பர் 11 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது புவியைத் தாக்கவல்ல இரண்டாவது பெரிய விண்பொருளாக பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் மூலம் இனங்காணப்பட்டுள்ளது.[11] 22-ம் நூற்றாண்டில் இச்சிறுகோள் புவியைத் தாக்குவதற்கு 2700-இல்-1 வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[12] அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் ஒசைரிசு-ரெக்சு விண்கலம் இச்சிறுகோளை இலக்கு வைத்தே அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இவ்விண்கலம் சிறுகோளின் மாதிரிகளை மேலதிக ஆய்விற்காக பூமிக்கு எடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[13][14][15][16]

101955 பென்னு
101955 பென்னுவின் ரேடார் படிமம் (நன்றி: அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம், JPL)[1][2]
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) லிங்கன் புவிக்குக் கிட்டவான சிறுகோள் ஆய்வு
கண்டுபிடிக்கப்பட்ட இடம் லிங்கன் ஆய்வுகூடம் ETS
கண்டுபிடிப்பு நாள் 11 செப்ப்டம்பர் 1999
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் பென்னு
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 101955 பென்னு
வேறு பெயர்கள்[3]1999 RQ36
சிறு கோள்
பகுப்பு
அப்பல்லோ · புவியருகு · PHA
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை1.3559 AU (202.84 Gm)
சூரிய அண்மை நிலை 0.89689 AU (134.173 Gm)
அரைப்பேரச்சு 1.1264 AU (168.51 Gm)
மையத்தொலைத்தகவு 0.20375
சுற்றுப்பாதை வேகம் 1.20 yr (436.65 d)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 28,000 metres per second (63,000 mph)
சராசரி பிறழ்வு 101.7039°
சாய்வு 6.0349°
Longitude of ascending node 2.0609°
Argument of perihelion 66.2231°
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 246±10 m[1]
நிலநடுக்கோட்டு ஆரம் 275±10 m[1]
நிறை 6.0×1010 kg[5] to 7.76×1010 kg
அடர்த்தி 1.26 ± 0.070 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்10 micro-g[6]
சுழற்சிக் காலம் 4.288 h (0.1787 d)
அச்சுவழிச் சாய்வு 176 ± 2°[7]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.046[8]
மேற்பரப்பு வெப்பநிலை
   Kelvin[9]
   Fahrenheit
சிறுமசராசரிபெரும
236259279
-34.66.842.8
Spectral typeB[8]
விண்மீன் ஒளிர்மை 20.9

101955 பென்னுவின் சராசரி விட்டம் அண்ணளவாக 492 மீட்டர்கள் ஆகும். அரிசிபோ வானிலை ஆய்வுகூடத்தின் வான்கோள் ரேடார், கிளாட்ஸ்டன் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் ஆகியவை இச்சிறுகோளை மிகத்துல்லியமாக ஆராய்ந்து வருகிறது.[1][2][17] பென்னு சிறுகோள் பம்பரத்தை ஒத்த கிட்டத்தட்ட நெட்டுருளை வடிவத்தை ஒத்தது.[12]

2018 திசம்பர் 3 இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் இரண்டு ஆண்டுகள் பறப்பின் பின்னர் பென்னுவை அடைந்தது.[18] இது சிறுகோளைச் சுற்றிவந்து, அதன் மாதிரிகளை சேகரிக்கத் தகுந்த இடங்களைத் தேர்ந்தெடுக்க பென்னுவின் மேற்பரப்பை விரிவாக ஆராய்ந்து. இதன் ஆய்வுகள் பென்னுவின் திணிவு, மற்றும் அதன் பரம்பலைக் கணிக்க ஆய்வாளர்களுக்கு உதவின.[19]

2019 சூன் 18 இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் மென்னுவின் மேற்பரப்பில் இருந்து 600 மீட்டர் தூரத்தை அணுகியதாக நாசா அறிவித்தது.[20]

2020 அக்டோபர் 20 இல், இவ்விண்கலம் தனது நீட்டிக்கக்கூடிய கைகளைக் கொண்டு பென்னுவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி மாதிரிகளைச் சேகரித்தது.[21]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பென்னு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=101955_பென்னு&oldid=3935485" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை