2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2021 ICC Men's T20 World Cup) என்பது 7-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3][4] இதன் போட்டிகள் 2021 அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமானிலும் நடைபெற்றன.[5][6] 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் வெற்றி பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நடப்பு வாகையாளராக இருந்தது.[7][8]

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
நாட்கள்17 அக்டோபர் – 14 நவம்பர் 2021
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேறு நிலை
நடத்துனர்(கள்) UAE

 Oman

(இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் கீழ்)
வாகையாளர் ஆத்திரேலியா (1-ஆம் தடவை)
இரண்டாமவர் நியூசிலாந்து
மொத்த பங்கேற்பாளர்கள்16[1]
மொத்த போட்டிகள்45[2]
தொடர் நாயகன் டேவிட் வார்னர்
அதிக ஓட்டங்கள் பாபர் அசாம் (303)
அதிக வீழ்த்தல்கள் வனிந்து அசரங்கா (16)[a]
அலுவல்முறை வலைத்தளம்t20worldcup.com
2016
2022

7-வது உலகக்கிண்ணப் போட்டிகள் 2020 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக இருந்தது,[9][10][11] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இப்போட்டித் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) 2020 சூலையில் அறிவித்தது.[12][13][14] 2021ஆம் ஆண்டு இத்தொடரை இந்தியா நடத்தவிருப்பதாகவும், 2022 நடக்கவிருக்கும் இத்தொடரின் அடுத்தப் பதிப்பை ஆஸ்திரேலியா நடத்தும் எனவும் ஐசிசி அறிவித்தது.[15] ஆனாலும், 2021 ஜூன் மாதத்தில், 2020 இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்தது.[16] இத்தொடர் 2021 அக்டோபர் 17 இல் தொடங்கியது,[5] இறுதிப்போட்டி 2021 நவம்பர் 14-இல் நடைபெற்றது.[17] முதல் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெற்றன.[18]

நியூசிலாந்து அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் விளையாட முதலாவதாகத் தகுதி பெற்றது.[19] இ20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நியூசிலாந்து விளையாடியது.[20] அடுத்த அரையிறுதியில், ஆத்திரேலியா, பாக்கித்தானை 5 இலக்குகளால் வென்று, இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[21] ஆத்திரேலியா 2010 உலகக்கோப்பைக்குப் பின்னர் இறுதிப் போட்டியில் முதற் தடவையாக விளையாடியது.[22] இறுதிப் போட்டியில், ஆத்திரேலியா நியூசிலாந்தை 8 இலக்குகளால் வென்று தமது முதலாவது இ20 உலகக்கோப்பையை வென்றது.[23] மிட்ச்செல் மார்சு ஆட்ட நாயகனாகவும்,[24] டேவிட் வார்னர் சுற்றின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.[25]

அணிகளும் தகுதியும்

31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 6 அணிகளும் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதுகின்றன. அதிலிருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.

தகுதி பெற்ற விதம்நாள்நிகழ்விடம்மொத்த அணிகள்அணிகள்
நடைபெறும் நாடு10 பிப்ரவரி 20151  இந்தியா
ஐசிசி இருபது20 வாகை
(தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்)
31 திசம்பர் 2018பல்வேறு9 பாக்கிஸ்தான்
ஆஸ்திரேலியா
 இங்கிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 நியூசிலாந்து
 மேற்கிந்தியத் தீவுகள்
ஆப்கானிஸ்தான்
 இலங்கை
 வங்காளதேசம்
2019 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள்

11 அக்டோபர்–

3 நவம்பர் 2019

ஐக்கிய அரபு அமீரகம்6  நெதர்லாந்து
 பப்புவா நியூ கினி
 அயர்லாந்து
 நமீபியா
ஸ்காட்லாந்து
 ஓமான்
மொத்தம்16

நிகழிடங்கள்

17 ஏப்ரல் 2021 இல் இந்தப் போட்டிகளின் நிகழிடங்களை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபை முன்வைத்தது.[26] பெங்களூரு, சென்னை, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களும் இறுதிப்போட்டி நடைபெறும் இடமாக அகமதாபாத்தும் அறிவிக்கப்பட்டன.[27]

எனினும் 2021 சூன் 28-இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி, கோவிட் 19 பெருந்தொற்று நிலை காரணமாக இந்தப் போட்டித் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும் முடிவை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைக்கு அறிவித்தார்.[28] தொடக்கச் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெறும்.[29][30] 2021 சூன் 29 இல், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இந்த நிகழிட மாற்றத்தை உறுதிப்படுத்தியது.[31] இந்தப் போட்டித் தொடர் பின்வரும் நான்கு மைதானங்களில் நடைபெற்றன: துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், சேக் சையது துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்.[32]

ஐக்கிய அரபு அமீரகம் ஓமான்
துபாய்சார்ஜாஅபுதாபிமஸ்கட்
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்சைகு சாயிது துடுப்பாட்ட அரங்குஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்
கொள்ளளவு: 25,000[33]கொள்ளளவு: 27,000[34]கொள்ளளவு: 20,000[35]கொள்ளளவு: 3,000[36]
ஐ.அ.அமீரகத்தில் நிகழிடங்கள்
ஓமானில் நிகழிடங்கள்

முதல் சுற்று

குழு A

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  இலங்கை3300063.754சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி
2  நமீபியா321004−0.523
3  அயர்லாந்து312002−0.853
4  நெதர்லாந்து303000−2.460
மூலம்: icc-cricket.com


18 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
106 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
107/3 (15.1 நிறைவுகள்)
மேக்ஸ் ஓ'தவுத் 51 (47)
கெர்ட்டிசு காம்பர் 4/26 (4 நிறைவுகள்)
காரெத் டிலானி 44 (29)
பீட்டர் சீலார் 1/14 (2.1 நிறைவுகள்)
அயர்லாந்து 7 இழப்புகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கெர்ட்டிசு காம்பர் (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • கெர்ட்டிஸ் காம்ஃபர், இ20ப போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக மும்முறை எடுத்த முதல் வீரரானார்.[37]
  • கெர்ட்டிஸ் காம்ஃபர் (அயர்.) இ20ப போட்டிகளில் அடுத்தடுத்த நான்கு பந்துகளில் நான்கு மட்டையாளர்களை வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளரானார்.[38]

18 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நமீபியா 
96 (19.3 நிறைவுகள்)
 இலங்கை
100/3 (13.3 நிறைவுகள்)
கிரைக் வில்லியம்ஸ் 29 (36)
மகீஷ் தீக்சனா 3/25 (4 நிறைவுகள்)
பானுக்க ராசபக்ச 42* (27)
ஜெஜெ சிமித் 1/7 (1 நிறைவு)
இலங்கை 7 இழப்புகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: மகேசு தீக்சன (இல)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

20 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
164/4 (20 நிறைவுகள்)
 நமீபியா
166/4 (19 நிறைவுகள்)
மேக்ஸ் ஓ'தவுத் 70 (56)
ஜான் பிரைலிங்க் 2/36 (4 நிறைவுகள்)
நமீபியா 6 இழப்புகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), லாங்டன் ருசரே (சிம்)
ஆட்ட நாயகன்: டேவிட் வைஸ் (நமீ)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நமீபியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

20 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
171/7 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
101 (18.3 நிறைவுகள்)
வனிந்து அசரங்கா 71 (47)
யோசு லிட்டில் 4/23 (4 நிறைவுகள்)
ஆண்ட்ரூ பால்பிர்னி 41 (39)
மகீசு தீக்சனா 3/17 (4 நிறைவுகள்)
இலங்கை 70 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டியின் முடிவையடுத்து இலங்கை அணி, சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது.[39] நெதர்லாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது.[40]

22 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
125/8 (20 நிறைவுகள்)
 நமீபியா
126/2 (18.3 நிறைவுகள்)
பவுல் ஸ்டேர்லிங் 38 (24)
சான் பிரைலிங்க் 3/21 (4 நிறைவுகள்)
செரார்டு எராசுமசு 53* (49)
கர்ட்டிசு காம்பர் 2/14 (3 நிறைவுகள்)
நமீபியா 8 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), அலீம் தர் (பாக்)
ஆட்ட நாயகன்: டேவிட் வைஸ் (நமீ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டியின் முடிவையடுத்து இலங்கை அணி, சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது,[41] அயர்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது.[42]

22 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
44 (10 நிறைவுகள்)
 இலங்கை
45/2 (7.1 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மேன் 11 (9)
லகிரு குமார 3/7 (3 நிறைவுகள்)
குசல் பெரேரா 33* (24)
பிராண்டன் குளோவர் 1/12 (3 நிறைவுகள்)
இலங்கை 8 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: லகிரு குமார (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

குழு B

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1 ஸ்காட்லாந்து3300060.775சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி
2  வங்காளதேசம்3210041.733
3  ஓமான்312002−0.025
4  பப்புவா நியூ கினி303000−2.655
மூலம்: icc-cricket.com


17 அக்டோபர்
14:00
ஆட்டவிவரம்
பப்புவா நியூ கினி 
129/9 (20 நிறைவுகள்)
 ஓமான்
131/0 (13.4 நிறைவுகள்)
அசாத் வாலா 56 (43)
சீசான் மக்சூத் 4/20 (4 நிறைவுகள்)
ஜத்திந்தர் சிங் 73* (42)
ஓமான் 10 இழப்புகளால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), கிறிசு காஃபனி (நியூ.)
ஆட்ட நாயகன்: சீசான் மக்சூத் (ஓமா.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அயான் கான், காசியப் பிரஜாபதி ஆகிய இரண்டு ஓமான் அணி வீரர்களும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.

17 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிவரம்
ஸ்காட்லாந்து
140/9 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
134/7 (20 நிறைவுகள்)
கிறிஸ் கிரீவ்ஸ் 45 (28)
மகதி அசன் 3/19 (4 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 38 (36)
பிராட் வீல் 3/24 (4 நிறைவுகள்)
ஸ்காட்லாந்து 6 ஓட்டங்களால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கிரீவ்ஸ் (ஸ்கா)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்.), தனது இ20ப போட்டிகளில் 108-வது மட்டையாளரை வீழ்த்தியதன் மூலம் இ20ப வரலாற்றில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் புரிந்தார்.[43]

19 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
ஸ்காட்லாந்து
165/9 (20 நிறைவுகள்)
 பப்புவா நியூ கினி
148 (19.3 நிறைவுகள்)
ரிச்சி பெரிங்டன் 70 (49)
கபுவா மொரேயா 4/31 (4 நிறைவுகள்)
நார்மன் வனுவா 47 (37)
ஜோசு டேவி 4/18 (3.3 நிறைவுகள்)
ஸ்காட்லாந்து 17 ஓட்டங்களால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ரிச்சி பெரிங்டன் (ஸ்கா)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

19 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
153 (20 நிறைவுகள்)
 ஓமான்
127/9 (20 நிறைவுகள்)
முகம்மது நயிம் 64 (50)
பிலால் கான் 3/18 (4 நிறைவுகள்)
ஜத்திந்தர் சிங் 40 (33)
முசுத்தாபிசூர் ரகுமான் 4/36 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 26 ஓட்டங்களால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

21 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
181/7 (20 நிறைவுகள்)
 பப்புவா நியூ கினி
97 (19.3 நிறைவுகள்)
மகுமுதுல்லா 50 (28)
அசாத் வாலா 2/26 (3 நிறைவுகள்)
கிப்லின் தொரிகா 46* (34)
சகீப் அல் அசன் 4/9 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 84 ஓட்டங்களால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இ20ப போட்டிகளில் ஓட்டங்கள் அடிப்படையில் வங்களாதேச அணி பெற்ற மிகப்பெரும் வெற்றி இதுவாகும்.[44]
  • இப்போட்டியின் முடிவையடுத்து, வங்காளதேச அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது,[45] பப்புவா நியூ கினி அணி தொடரில் இருந்து வெளியேறியது.[46]

21 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஓமான் 
122 (20 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
123/2 (17 நிறைவுகள்)
அக்கீப் இலியாசு 37 (35)
ஜோசு டேவி 3/25 (4 நிறைவுகள்)
கைல் கோட்சர் 41 (28)
பயசு பட் 1/26 (3 நிறைவுகள்)
இசுக்காட்லாந்து 8 இலக்குகளால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: ஜோசு டேவி (இசுக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டியின் முடிவையடுத்து, இசுக்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது,[47] ஓமான் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.[48]

சூப்பர் 12

தகைமைநாடு
நடத்தும் அணி  இந்தியா
தர வரிசை  ஆப்கானித்தான்
 ஆத்திரேலியா
 இங்கிலாந்து
 நியூசிலாந்து
 பாக்கித்தான்
 தென்னாப்பிரிக்கா
 மேற்கிந்தியத் தீவுகள்
முதல் சுற்று  வங்காளதேசம்
 நமீபியா
 இசுக்காட்லாந்து
 இலங்கை

குழு 1

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  இங்கிலாந்து5410082.464வெளியேறு நிலைக்குத் தகுதி
2  ஆத்திரேலியா5410081.216
3  தென்னாப்பிரிக்கா5410080.739
4  இலங்கை523004−0.269
5  மேற்கிந்தியத் தீவுகள்514002−1.641
6  வங்காளதேசம்505000−2.383
முதலாவது ஆட்டம்(கள்) 23 அக்டோபர் 2021 அன்று விளையாடப்படும். மூலம்: icc-cricket.com


23 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
118/9 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
121/5 (19.4 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 35 (34)
ஆன்ரிச் நோர்ட்சி 2/21 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), நிதின் மேனன் (உந்)
ஆட்ட நாயகன்: ஜோஷ் ஹேசல்வுட் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

23 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
 இங்கிலாந்து
56/4 (8.2 நிறைவுகள்)
கிறிஸ் கெயில் 13 (13)
எடில் ரசீட் 4/2 (2.2 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 24* (22)
அக்கீல் ஒசைன் 2/24 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மேற்கிந்தியத் தீவுகளின் ஓட்டங்கள் இ20ப உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் ஐசிசி முழு உறுப்புரிமை கொண்ட அணியொன்றின் ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.[49]

24 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
171/4 (20 நிறைவுகள்)
 இலங்கை
172/5 (18.5 நிறைவுகள்)
முகம்மது நயீம் 62 (52)
சமிக்கா கருணாரத்தின 1/12 (3 நிறைவுகள்)
இலங்கை 5 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), யொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: சரித் அசலங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்) இ20ப ஆண்கள் உலகக்கோப்பைப் போட்டிகளில் அதிக இலக்கைக் கைபற்றி (தனது 40வது இலக்கு) சாதனை படைத்தார்.[50]

26 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
 தென்னாப்பிரிக்கா
144/2 (18.2 நிறைவுகள்)
எவின் லூயிசு 56 (35)
துவைன் பிரிட்டோரியசு 3/17 (2 நிறைவுகள்)
எய்டென் மார்க்ரம் 51* (26)
அக்கீல் ஒசைன் 1/27 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆன்ரிச் நோர்ட்சி (SA)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

27 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
124/9 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
126/2 (14.1 நிறைவிவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 29 (30)
தைமல் மில்சு 3/27 (4 நிறைவுகள்)
ஜேசன் ராய் 61 (38)
நாசும் அகமது 1/26 (3 நிறைவுகள்)
இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: நிதின் மேனன் (Indஇந், லாங்டன் ருசெரே (சிம்)
ஆட்ட நாயகன்: ஜேசன் ராய் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

28 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
154/6 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
155/3 (17 நிறைவுகள்)
குசல் பெரேரா 35 (25)
ஆடம் சாம்பா 2/12 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ஆடம் சாம்பா (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

29 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
 வங்காளதேசம்
139/5 (20 நிறைவுகள்)
நிக்கோலஸ் பூரன் 40 (22)
சோரிஃபுல் இசுலாம் 2/20 (4 நிறைவுகள்)
லிதன் தாஸ் 44 (43)
ஜேசன் ஹோல்டர் 1/22 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 3 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுஸ்டாக் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: நிக்கோலஸ் பூரன் (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • உரொசுட்டன் சேசு (மேஇ) தனது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினார்.

30 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
இலங்கை 
142 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
146/6 (19.5 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 72 (58)
துவைன் பிரிட்டோரியசு 3/17 (3 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 4 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ஜொயெல் வில்சன் (மேஇ), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: தப்ரைசு சம்சி (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இ20 உலகக்கோப்பைப் போட்டியில் வனிந்து அசரங்கா இலங்கையின் முதலாவது ஆட்ரிக்கைப் பெற்றார்.[51]

30 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
125 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
126/2 (11.4 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 71* (32)
ஆஷ்டன் அகார் 1/15 (2.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: கிரிஸ் ஜோர்டான் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

1 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
163/4 (20 நிறைவுகள்)
 இலங்கை
137 (19 நிறைவுகள்)
இங்கிலாந்து 26 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுஸ்டாக் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜோஸ் பட்லர் (இங்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[52]
  • வனிந்து அசரங்கா (இல) தனது 50-வது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[53]

2 நவம்பர்
14:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
84 (18.2 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
86/4 (13.3 நிறைவுகள்)
மகெதி சாசன் 27 (25)
ஆன்ரிச் நோர்ட்சி 3/8 (3.2 நிறைவுகள்)
தெம்ப பவுமா 31* (28)
தஸ்கின் அகமது 2/18 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 6 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: காகிசோ ரபாடா (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவில் வங்காளதேசமும் இலங்கையும் அரையிறுதியில் விளையாடத் தகுதி இழந்தன.[54]

4 நவம்பர்
14:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
73 (15 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
78/2 (6.2 நிறைவுகள்)
சமீம் ஒசைன் 19 (18)
ஆடம் சாம்பா 5/19 (4 நிறைவுகள்)
ஆரோன் பிஞ்ச் 40 (20)
சொரிஃபுல் இசுலாம் 1/9 (1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ஆடம் சாம்பா (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆடம் சாம்பா (ஆசி) இ20ப போட்டிகளில் தனது முதலாவது ஐந்து-இலக்குகளைக் கைப்பற்றினார்.[55]

4 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
189/3 (20 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
169/8 (20 நிறைவுகள்)
சர்தி அசலங்க 68 (41)
ஆன்ட்ரே ரசல் 2/33 (4 நிறைவுகள்)
இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), லாங்டன் ருசெரே (சிம்)
ஆட்ட நாயகன்: சரித் அசலங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டியின் முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதியில் விளையாடும் தகுதியை இழந்தது.[56]

6 நவம்பர்
14:00
ஆட்டவிபரம்
 ஆத்திரேலியா
161/2 (16.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

6 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
189/2 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
179/8 (20 நிறைவுகள்)
மொயீன் அலி 37 (27)
காகிசோ ரபாடா 3/48 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 10 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ராசி வான் டெர் டசென் (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • காகிசோ ரபாடா தென்னாப்பிரிக்காவுக்காக முதலாவது இ20ப ஹாட்ரிக்கைப் பெற்றார்.[57]
  • இவ்வாட்டத்தின் முடிவை அடுத்து இங்கிலாந்தும், ஆத்திரேலியாவும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.[58] தென்னாப்பிரிக்கா வெளியேறியது.[59]

குழு 2

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  பாக்கித்தான்55000101.583வெளியேறு நிலைக்குத் தகுதி
2  நியூசிலாந்து5410081.162
3  இந்தியா5320061.747
4  ஆப்கானித்தான்5230041.053
5  நமீபியா514002−1.890
6  இசுக்காட்லாந்து505000−3.543
முதலாவது ஆட்டம்(கள்) 24 அக்டோபர் 2021 அன்று விளையாடப்படும். மூலம்: icc-cricket.com


24 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
இந்தியா 
151/7 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
152/0 (17.5 நிறைவுகள்)
பாக்கித்தான் 10 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: சகீன் அஃப்ரிடி (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்ற் பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இது இந்தியாவுக்கும் பாகித்தானுக்கும் இடையே நடைபெற்ற 200-வது பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும்.[60]

25 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
190/4 (20 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
60 (10.2 நிறைவுகள்)
நஜிபுல்லா சத்ரன் 59 (34)
சபியான் சரீப் 2/33 (4 நிறைவுகள்)
சியார்ச் முன்சி 25 (18)
முஜீப் உர் ரகுமான் 5/20 (4 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 130 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பவுல் வில்சன் மாசி)
ஆட்ட நாயகன்: முஜீப் உர் ரகுமான் (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முஜீப் உர் ரகுமான் (ஆப்) இ20ப போட்டிகளில் தனது முதலாவது ஒரே ஆட்டத்தில் ஐந்து-இலக்குகளைக் கைப்பற்றினார்.[61]

26 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
134/8 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
135/5 (18.4 நிறைவுகள்)
டாரில் மிட்ச்செல் 27 (20)
அரிசு ரவூஃப் 4/22 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: மைக்கல் கோ, ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஆரிசு ரவூஃப் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • டிம் சௌத்தி (நியூ) இ20ப போட்டியில் தனது 100-வது இலக்கைக் கைப்பற்றினார்.[62]

27 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
109/8 (20 நிறைவுகள்)
 நமீபியா
115/6 (19.1 நிறைவுகள்)
மைக்கேல் லீசுக் 44 (27)
ரூபென் திரம்பெல்மான் 3/17 (4 நிறைவுகள்)
ஜேஜே சிமித் 32* (23)
மைக்கேல் லீசுக் 2/12 (2 நிறைவுகள்)
நமீபியா 4 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுசுடாக் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரூபென் திரம்பெல்மான் (நமீ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

29 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
147/6 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
148/5 (19 நிறைவுகள்)
பாபர் அசாம் 51 (47)
ரஷீத் கான் 2/26 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கிறைசு பிரவுண் (நியூ), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஆசிப் அலி (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆட்ட எண்ணிக்கைகளின் அடிப்படையில், ப20இ போட்டிகளில் 100 இலக்குகளைக் (53) கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரஷீத் கான் (ஆப்) ஏற்படுத்தினார்.[63]

31 அக்டோபர்
14:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
160/5 (20 நிறைவுகள்)
 நமீபியா
98/9 (20 நிறைவுகள்)
முகம்மது சாஹ்ஷாட் 45 (33)
சான் ஈட்டன் 2/21 (4 நிறைவுகள்)
டேவிட் வைஸ் 26 (30)
ஹமீட் ஹசன் 3/9 (4 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 62 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: நவீன்-உல்-அக் (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

31 அக்டோபர்
18:00
ஆட்டவிபரம்
இந்தியா 
110/7 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
111/2 (14.3 நிறைவுகள்)
டாரில் மிட்ச்செல் 49 (35)
ஜஸ்பிரித் பும்ரா 2/19 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: இந்தர்பிர் சோதி (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
189/2 (20 நிறைவுகள்)
 நமீபியா
144/5 (20 நிறைவுகள்)
டேவிட் வைஸ் 43* (31)
இமாத் வசிம் 1/13 (3 நிறைவுகள்)
பாக்கித்தான் 45 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: முகம்மது ரிஸ்வான் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[64]

3 நவம்பர்
14:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
172/5 (20 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
156/5 (20 நிறைவுகள்)
மார்ட்டின் கப்டில் 93 (56)
சஃபியான் சரீப் 2/28 (4 நிறைவுகள்)
மைக்கேல் லீசுக் 42* (20)
டிரென்ட் போல்ட் 2/29 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 16 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்டில் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மார்ட்டின் கப்டில் (நியூ) இ20ப போட்டிகளில் 3,000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[65]
  • இப்போட்டியின் முடிவை அடுத்து இசுக்காட்லாந்து அரையிறுதியில் விளையாடும் தகுதியை இழந்தது.[66]

3 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
இந்தியா 
210/2 (20 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
144/7 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 74 (47)
கரீம் ஜனத் 1/7 (1 நிறைவுகள்)
கரீம் ஜனத் 42* (22)
முகம்மது சமி 3/32 (4 நிறைவுகள்)
இந்தியா 66 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

5 நவம்பர்
14:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
163/4 (20 நிறைவுகள்)
 நமீபியா
111/7 (20 நிறைவுகள்)
கிளென் பிலிப்சு 39* (21)
பெர்னார்டு சோல்ட்சு 1/15 (3 நிறைவுகள்)
மைக்கேல் வான் லிங்கென் 25 (25)
டிம் சௌத்தி 2/15 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 52 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), பவுல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் நீஷம் (நியூ)
  • இவ்வாட்ட முடிவை அடுத்து நமீபியா அரையிறுதியில் விளையாடும் தகுதியை இழந்தது.[67]

5 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
85 (17.4 நிறைவுகள்)
 இந்தியா
89/2 (6.3 நிறைவுகள்)
சியார்ச் முன்சி 24 (19)
முகம்மது சமி 3/15 (3 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 50 (19)
மார்க் வாட் 1/20 (2 நிறைவுகள்)
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

7 நவம்பர்
14:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
124/8 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
125/2 (18.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), லாங்டன் ருசெரே (சிம்)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (NZ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரஷீத் கான் (ஆப்) தனது 400-வது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[68]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[69] ஆப்கானித்தான் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்தியா அரையிறுதியில் விளையாடத் தகுதியை இழந்தது.[70]

7 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
189/4 (20 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
117/6 (20 நிறைவுகள்)
பாபர் அசாம் 66 (47)
கிறிசு கிரீவ்சு 2/43 (4 நிறைவுகள்)
ரிச்சி பெரிங்டன் 54* (37)
சதாப் கான் 2/14 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 72 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

8 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
நமீபியா 
132/8 (20 நிறைவுகள்)
 இந்தியா
136/1 (15.2 நிறைவுகள்)
ரோகித் சர்மா 56 (37)
சான் பிரைலிங்க் 1/19 (2 நிறைவுகள்)
இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கிரிசு பிரவுண் (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விராட் கோலி இந்தியாவின் தலைவராக தனது 50-வது இ20ப போட்டியில் விளையாடினார்.[71]

வெளியேறு நிலை

 அரையிறுதிஇறுதி
         
   இங்கிலாந்து166/4 (20 நிறைவுகள்) 
   நியூசிலாந்து167/5 (19 நிறைவுகள்) 
      நியூசிலாந்து172/4 (20 நிறைவுகள்)
     ஆத்திரேலியா173/2 (18.5 நிறைவுகள்)
   பாக்கித்தான்176/4 (20 நிறைவுகள்)
   ஆத்திரேலியா177/5 (19 நிறைவுகள்) 

அரையிறுதி

10 நவம்பர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
166/4 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
167/5 (19 நிறைவுகள்)
மொயீன் அலி 51* (37)
ஜேம்ஸ் நீஷம் 1/18 (2 நிறைவுகள்)
தரில் மிட்செல் 72* (47)
லியாம் லிவிங்சுடன் 2/22 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: தரில் மிட்செல் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

11 நவம்பர்
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
176/4 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
177/5 (19 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 49 (30)
சதாப் கான் 4/26 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: மேத்தியு வேட் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி

14 நவம்பர்
18:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
172/4 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
173/2 (18.5 நிறைவுகள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: மிட்செல் மார்ஷ் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

தரவுகள்

சுற்றில் அதிக ஓட்டங்களை எடுத்தவர்: பாபர் அசாம் (303), அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்: வனிந்து அசரங்கா (16).

அதிக ஓட்டங்கள்

ஆட்ட வீரர்ஆட்டங்கள்இன்னிங்சுஓட்டங்கள்சராசரிSRHS100504கள்6கள்
பாபர் அசாம்6630360.60126.257004285
டேவிட் வார்னர்7728948.16146.7089*033210
முகம்மது ரிஸ்வான்6628170.25127.7279*032312
ஜோஸ் பட்லர்6626989.66151.12101*112213
சரித் அசலங்க6623146.20147.1380*02239
மூலம்: கிரிக்கின்ஃபோ[72]

அதிக இலக்குகள்

ஆட்ட வீரர்ஆட்டங்கள்இன்னிங்சுகள்இலக்குகள்நிறிவுகள்Econ.சரா.BBIS/R4-இல.5-இல
வனிந்து அசரங்கா6616305.209.753/911.200
ஆடம் சாம்பா7713275.8112.075/1912.401
டிரென்ட் போல்ட்771327.46.2513.303/1712.700
சகீப் அல் அசன்6611225.5911.184/912.010
ஜோஷ் ஹேசல்வுட்7711247.2915.904/3913.010
மூலம்: கிரிக்கின்ஃபோ[73]

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை