அகிரா குரோசாவா

ஜப்பானிய திரைப்பட இயக்குனர்

அகிரா குரோசாவா (Akira Kurosawa) (சப்பானிய மொழி 黒澤 明 குரோசாவா அகிரா, 黒沢 明 ஷின்ஜிடாய், 23 மார்ச், 1910 - 6 செப்டம்பர், 1998) உலகப் புகழ்பெற்ற சப்பானியக் கலைப்பட இயக்குநராவார்.1943 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.1993 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும் பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

அகிரா குரோசாவா
黒澤 明 or 黒沢 明
Akira Kurosawa

1953 இல் ஏழு சாமுராய்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அகிரா குரோசாவா
பிறப்பு(1910-03-23)23 மார்ச்சு 1910
செட்கயா, டோக்கியோ, சப்பான்
இறப்பு6 செப்டம்பர் 1998(1998-09-06) (அகவை 88)
தொழில்திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
நடிப்புக் காலம்1936 - 1993
துணைவர்யொகொ யகுச்சி (1945 - 1985;அவரின் மரணம்)
பிள்ளைகள்கசுகொ குரோசாவா
ஹிசாவ் குரோசாவா
பெற்றோர்இசாமு குரோசாவா
ஷிமா குரோசாவா
உறவினர்யு குரோசாவா (ஒஅடகர், பேத்தி), டகயுகி காடொ (நடிகர், பேரன்)

இயக்கிய திரைப்படங்கள்

  • சன்ஷிரோ சுகடா (1943)
  • த மோஸ்ட் பியூட்டிஃபுல்(1944)
  • சன்ஷிரோ சுகடா பாகம் 2 (1945)
  • த மென் ஹூ ட்ரீட் ஒன் த டைகர்ஸ் டெயில் (1945)
  • நோ ரெக்ரெட்ஸ் ஃபோர் அவர் யூத் (1946)
  • ஒன் வொண்டர்ஃபுல் சண்டே (1946)
  • ட்ரங்கன் ஏஞ்சல் (1948)
  • த குவைட் டுவல் (1949)
  • ஸ்ரே டோக் (1949)
  • ஸ்காண்டல் (1950)
  • ராஷோமொன் (1950)
  • ஹகுச்சி (1951)
  • இக்கிரு (1952)
  • த செவன் சாமுராய் (1954)
  • ரெகோர்ட் ஒஃவ் ஏ லிவிங் பீங்(1955)
  • த்ரோன் ஓஃவ் பிளட் (1957)
  • த லோவெர் டெப்த்ஸ் (1957)
  • த ஹிடன் ஃபாரஸ்ட் (1958)
  • த பாட் ஸ்லீப் வெல் (1960)
  • யோஜிம்போ (1961)
  • ட்சுபாக்கி சன்யுரோ (1962)
  • ஹைய் அண்ட் லோவ் (1963)
  • ரெட் பியர்ட் (1965)
  • டோட்சுகாடென் (1970)
  • டெர்ஷு உஷாலா (1975)
  • கஜெமுஷா (1980)
  • ரான் (1985)
  • ட்ரீம்ஸ்(1990)
  • ராப்சோடி இன் ஆகஸ்ட் (1991)
  • மடடாயோ (1993)

படங்களின் பட்டியல்

"தெர்சு உசாலா" மென்மையான உணர்வுகள் வழியாக ஆழமான நட்பையும், அந்த நட்பின் வழியாக இயற்கையின் இயல்புகளையும் பிரமாண்டங்களையும்,கருணையையும் பற்றி விரிவாக பேசுகிறது ,அதே நேரத்தில் நம்முடைய நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் தவிர்க்க முடியாமல் அழிந்து கொண்டிருக்கும் இயற்கையையும்,முதுமையின் தாங்கவியலா சிரமங்களையும் நுட்பமாக அலசுகிறது . படத்தின் கதை மிகவும் எளிமையானது.[1]

படங்களின் வெளியீடு

அகிரா குரோசாவா இயக்கிய முப்பது படங்களும் டிவிடிக்களில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அவரது படங்களின் ப்ளு-ரே தட்டுகள் வெளியிடப்படுகின்றன.[2]

மரணம்

இவர் செப்டம்பர் 6, 1998 அன்று இதயத்திசு இறப்பால் காலமானார். இவர் பெயரில் இரண்டு திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று சான் பிரான்சிஸ்கோவின் அனைத்துலக திரைப்பட விழாவில் அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளர் விருதாகவும், மற்றொன்று டோக்கியோ அனைத்துலக திரைப்பட விழாவில் அகிரா குரோசாவா விருதாகவும் வழங்கப்படுகிறது. அனகியம் பல்கலைக்கழகம் இவரது குடும்பத்தாரோடு இணைந்து அகிரா குரோசாவா திரைப்படப் பள்ளியை துவக்கி அதன் மூலம் திரைப்பட இயக்கத்துக்கான பயிற்சியை வழங்கி வருகிறது.

அகிரா குரோசாவாவின் திரைப்படங்களும் அவர் திரைப்படங்களை இயக்கும் முறையும் அவருக்கு பெரியளவு புகழை ஏற்படுத்தித் தந்தன. அதேசமயம் இவரின் திரைப்பட்ங்களுக்கு இவர் அதிகம் பொருட்செலவு செய்வதாகவும் வேறு பல விமர்சனங்களும் இவர் மேல் எழுந்ததுண்டு.

மேற்கோள்கள்

மூலங்கள்

மேலும் அறிய

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அகிரா_குரோசாவா&oldid=3860793" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை