இந்திய வெளியுறவுக் கொள்கை

இந்தியா (அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு) பாலத்தீனம், திரு ஆட்சிப்பீடம் நியுவே உட்பட 201 நாடுகளுடன் முழுமையான தூதர்-வழித் தொடர்புகளைக் கொண்டுள்ளது.[note 1][1] வெளியுறவு அமைச்சு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்குப் (foreign relations of India) பொறுப்பான அரசு நிறுவனம் ஆகும். உலகின் மூன்றாவது பெரிய இராணுவச் செலவு, இரண்டாவது பெரிய ஆயுதப் படை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகியவற்றுடன் இந்தியா ஒரு முக்கிய பிராந்திய சக்தியும், வளர்ந்து வரும் வல்லரசுமாகும்.[2][3]

வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, இந்தியப் பண்ணுறவாண்மையின் முக்கிய நோக்கங்களில் இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பது, பிற மாநிலங்களுடனான நட்புறவை மேம்படுத்துதல், "வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு" தூதரக சேவைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.[4] அண்மைய தசாப்தங்களில், இந்தியா ஒரு விரிவான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தது. ஏனைய கிழக்காசிய நாடுகளுடன் மிகவும் விரிவான பொருளாதார, மூலோபாய உறவுகளை உருவாக்குவதற்கு சார்க், கீழ்த்திசை கவனக் குவிப்புக் கொள்கை ஆகியவை மூலம் அண்டை நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமையைக் கொண்டுள்ளது. இந்தியா மூலோபாய தெளிவின்மைக் கொள்கையையும் பராமரித்து வருகிறது, அதில் அதன் "முதலில் பயன்படுத்தக்கூடாது" என்ற அணுசக்திக் கொள்கை, உருசிய-உக்ரைனியப் போரில் அதன் நடுநிலை நிலைப்பாடு ஆகியவை அடங்கும்.

ஐக்கிய நாடுகள் அவை, ஆசிய வளர்ச்சி வங்கி, பிரிக்ஸ், ஜி-20 போன்ற பல பன்னாட்டு அரசு அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இவ்வமைப்புகள் வளர்ந்துவரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் முக்கிய பொருளாதார இடமாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[5] அணிசேரா இயக்கத்தின் நிறுவன உறுப்பினராக இந்தியா ஒரு முக்கிய செல்வாக்கை செலுத்துகிறது.[6] கிழக்காசிய உச்சிமாநாடு,[7] உலக வணிக அமைப்பு,[8] அனைத்துலக நாணய நிதியம்,[9] ஜி8+5[10] போன்ற பிற பன்னாட்டு அமைப்புகளிலும் இந்தியா முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க பங்கைக் கொண்டுள்ளது.[11] ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி,e சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிலும் இந்தியா உறுப்பினராக உள்ளது. முன்னாள் பிரித்தானியக் குடியேற்ற நாடாக, இந்தியா பொதுநலவாய அமைப்பிலும் உறுப்பினராக பிற பொதுநலவாய நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணுகிறது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை